PDA

View Full Version : இரும்பிலே ஒரு சேலை



ஷீ-நிசி
13-07-2011, 05:34 AM
செய்தி : உத்தரபிரதேசம் :மேலும் 3 சிறுமிகள் கற்பழிப்பு

இரும்பிலே ஒரு சேலை


நேற்றிரவு ஒரு கனவு

வெள்ளுடையில்,
அழுதுகொண்டிருந்தாள்;
ஒரு பெண்..

ஏன் அழுகிறாய்?!
என்ன வேண்டும் என்றேன்?

இரும்பிலே,
எனக்கொரு சேலை வேண்டும்!
கிடைக்குமா என்று கேட்டாள்....

நீ யாரென்று கேட்டேன்..

நானா?!! நான்... நான்....

பாரதமாதா


ஈகரை தளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றது இக்கவிதை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.
http://contest4.eegarai.com/p/blog-page_7751.html

தாமரை
13-07-2011, 06:21 AM
வெள்ளுடையா? கந்தலுடையா?

Nivas.T
13-07-2011, 08:03 AM
இரும்பினில் சேலை கட்டி
கனமிக்க பூட்டிட்டு
திறவுகோலை வீசி எறிந்தாலும்
வீண்தான்
இந்த கயவர்கள் மத்தியில்

தாமரை
13-07-2011, 08:33 AM
இரும்பினில் சேலை கட்டி
கனமிக்க பூட்டிட்டு
திறவுகோலை வீசி எறிந்தாலும்
வீண்தான்
இந்த கயவர்கள் மத்தியில்

பேசிப்பேசி சூடேற்றி
உருக வைத்து விடுவார்களே என்ற
உங்கள் பயம்
நியாயமானதுதான் நிவாஸ்.:icon_b:

Nivas.T
13-07-2011, 11:44 AM
பேசிப்பேசி சூடேற்றி
உருக வைத்து விடுவார்களே என்ற
உங்கள் பயம்
நியாயமானதுதான் நிவாஸ்.:icon_b:

பேச வேண்டாம் அண்ணா

பார்வைக் ஒன்றே போதும்
என்பார்கள்

வக்கிர பார்வையாளர்கள் :D

தாமரை
13-07-2011, 11:47 AM
பேச வேண்டாம் அண்ணா

பார்வைக் ஒன்றே போதும்
என்பார்கள்

வக்கிர பார்வையாளர்கள் :D

இலேசான பார்வையில்லை
இலேசர் பார்வை... :eek::eek::eek:

Nivas.T
13-07-2011, 12:01 PM
இலேசான பார்வையில்லை
இலேசர் பார்வை... :eek::eek::eek:

:lachen001::lachen001::lachen001:

Ravee
13-07-2011, 02:31 PM
ஆஹா இங்கேயுமா .... கிடைக்கிற சந்தில் சிந்து பாடுவதே அண்ணாவுக்கு கை வந்த கலை .... :lachen001:

ம்ம்ம் இரும்பை எடைக்கு போட்டு சயிட் டிஷ் வாங்கி கொள்வார்கள் நம்நாட்டு கயவர்கள் ... வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஷி .நிசி :)

ஷீ-நிசி
13-07-2011, 02:45 PM
நன்றி நண்பர்களே!

ஷீ-நிசி
13-07-2011, 02:47 PM
வெள்ளுடையா? கந்தலுடையா?

நுட்பமான கேள்வி...

வெள்ளுடை இன்னும் கந்தலுடையாகவில்லை.....

தாமரை
13-07-2011, 02:57 PM
நுட்பமான கேள்வி...

வெள்ளுடை இன்னும் கந்தலுடையாகவில்லை.....

வெள்ளுடை கந்தலாகாதவளுக்கு
ஏன்
இரும்பிலே சேலை?

ஷீ-நிசி
13-07-2011, 03:28 PM
வெள்ளுடை கந்தலாகாதவளுக்கு
ஏன்
இரும்பிலே சேலை?

கண்கள் காணும் காட்சியில் நொந்தவள்..
மனம் வெந்தவள்..
என் கனவில் வந்தவள்...

கேட்டாள் இரும்பிலே சேலை!

ஏனென்று கேள்வியெழுப்ப வக்கில்லையெனக்கு....

கௌதமன்
13-07-2011, 05:12 PM
அபயம்! அபயம் என்று குரல் கொடுத்ததால்
ஆடை கிடைத்தது பாஞ்சாலிக்கு அன்று!
அபாயம்! அபாயம் என்று கண்ணனே
ருக்மணிக்காக குரல் கொடுக்கும் பரிதாபம் இன்று!!
தேவைப்படுவது இரும்பினாலான ஆடையல்ல
இரும்பினாலான ஆயுதம்!
இது மகாத்மாவே அனுமதித்த போராட்டம்.

ஷீ-நிசி
14-07-2011, 01:09 AM
நன்றி கெளதமன்.... மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்

ஆதவா
14-07-2011, 04:54 AM
பாரத மாதாவின் புருஷனை, கொலை செய்ததாலோ என்னவோ அவள் விதவையாக இருக்கிறாள்!!!ஹ்க்
மாதாவுக்கு இரும்புச் சேலை தருவதற்குப் பதில் இரும்புச் செல்லில் போட்டிருப்பதைக் கவனிக்கவில்லையா???

வாழ்த்துக்கள் ஷீ!

பென்ஸ்
14-07-2011, 06:52 AM
யோசிக்க வைக்கும் கவிதை ஷீ...
யோசிக்க மட்டுமெ தெரிந்த எங்களுக்கு ...

பெண் வாணிபம் இந்தியாவில் அதிகமாம்...
இரும்புக்கும் விலை...
இந்தியாளுக்கும் விலை...


பாரத மாதாவின் புருஷனை, கொலை செய்ததாலோ என்னவோ அவள் விதவையாக இருக்கிறாள்!!!ஹ்க்
மாதாவுக்கு இரும்புச் சேலை தருவதற்குப் பதில் இரும்புச் செல்லில் போட்டிருப்பதைக் கவனிக்கவில்லையா???

வாழ்த்துக்கள் ஷீ!

புரியலையே ஆதவா....
நீங்க 2G பற்றி பேசலையே..????
உ.பி. யில் போலிஸ் நிலையத்தில் வைத்துதான் ஒரு சிறுமி கற்பழிக்க பட்டு இருக்கிறாள்...
கம்பிகள் கூட குத்தும் ஆதவா...

ஆதவா
14-07-2011, 07:11 AM
புரியலையே ஆதவா....
நீங்க 2G பற்றி பேசலையே..????
உ.பி. யில் போலிஸ் நிலையத்தில் வைத்துதான் ஒரு சிறுமி கற்பழிக்க பட்டு இருக்கிறாள்...
கம்பிகள் கூட குத்தும் ஆதவா...

பார்த மாதவின் ஆடையிலிருந்து முந்தானையில் கொஞ்சம் (பாகிஸ்தான்) இடுப்பு மடிப்பில் கொஞ்சம் (வங்காளம்) பிய்த்தாகிவிட்டது. பற்றாக்குறைக்கு அடி முதல் நுனிவரையிலும் பங்கு கேட்டு நிற்கிறார்கள் பலர்!! பாவம் அவளே உடலைக் காண்பித்துக் கொண்டு நிற்கிறாள்.. அட யாராவது எதையாவது போர்த்துவார்கள் என்று பார்த்தால் எல்லாரும் அவளை விபச்சாரியாகவே பார்க்கிறார்கள்!!! ஊப்ஸ்!! வெள்ளை உடையில் நாம் வர்ணம் பூசிக் கொண்டிருக்கிறோம் பாஸ்!!

இரும்புச் செல்லில் பாரத மாதா....
தாய் முன்னே மகள் கற்பழிப்பு!

நிறைய பேர் பாரத மாதாவை கற்பழித்துவிட்டதால் அவளுக்குத் தேவை இரும்புச் சேலை அல்ல... தடுப்பூசி!!

Nivas.T
14-07-2011, 08:19 AM
நிறைய பேர் பாரத மாதாவை கற்பழித்துவிட்டதால் அவளுக்குத் தேவை இரும்புச் சேலை அல்ல... தடுப்பூசி!!

:aktion033::aktion033::icon_b:

பூமகள்
14-07-2011, 10:33 AM
வாழ்த்துகள் ஷீ...

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.. :( :frown:

ஷீ-நிசி
14-07-2011, 03:11 PM
நன்றி பென்ஸ்... ரொம்ப நாளைக்கப்புறம் உங்கள் விமர்சனம் பார்க்கிறேன்...

நன்றி ஆதவா (ரொம்ப குழப்பிகிட்டேயோன்னு நினைக்கிறேன்)

நன்றி பூமகள்....

நாஞ்சில் த.க.ஜெய்
14-07-2011, 05:55 PM
அபயம் எழுப்பிய குரலின் அபாயம் இன்றும் தெரியவில்லை வக்கிரம் பிடித்த கண்களுக்கு நாளை நமக்கும் நிகழலாம் என்று ....அருமை தோழர் ...

கீதம்
15-07-2011, 02:39 AM
கவசமிட்டேனும் கற்புநெறி காக்கமுனையும் காரிகையாய்
பரிதாபத்துக்குரிய நிலையில் பாரதமாதா!

நாட்டின் அவலத்தை நன்றாக உணர்த்தும் கவிதை.. முதல் பரிசு பெற்றதில் வியப்பில்லை. பாராட்டுகள் ஷீ -நிசி.

innamburan
15-07-2011, 06:33 AM
அவலத்தை உணர்ந்த யாம் ஆக்கத்தில் இறங்கவேண்டும், பூமகளின் எச்சரிக்கையை புரிந்து கொண்டு, கீதத்தின் மென்மையான கருத்தை மந்தில் வாங்கி, செயலில் காண்பித்து. ஒரு சிறிய வழி. பெண்களுக்கு வெளிப்படையாக, மரியாதை காட்டுங்கள். வீட்டில் உதவுங்கள். பெண்ணின் பெருமை பற்றி ஒரு நாளைக்கு ஒரு சொல். போதும்.

ஷீ-நிசி
15-07-2011, 02:31 PM
நன்றி நாஞ்சில்..

நன்றி கீதம்.. இருவரியில் மிக அழகாய் விமர்சித்திருக்கிறீர்கள்..

நன்றி innamburan அவர்களே! நீங்கள் கூறிய வழி எல்லோராலும் முடியக்கூடிய ஒன்றுதான்.. நிச்சயம் அனைவரும் செய்யலாம்...