PDA

View Full Version : கலைந்த பின் கண்டது ...

Ravee
12-07-2011, 02:20 PM
http://www.homestyle-accessories.co.uk/ekmps/shops/homestyleaccs/images/lkg009-smiling-angel-ornament-1400-p.jpg

கலைந்த பின் கண்டது

இறைவன் அளித்த நிர்வாணத்திற்கு
வித விதமாய் உடைகள் போட்டு
அழகு பார்த்தேன் ...

மகன் கணவன் தந்தை
மாமன் பாட்டன் என்றும்
நண்பன் எதிரி மேதை
வித்தகன் சித்தன் என்றும்

எந்த உடை உடுத்தும் போதும்
பிள்ளை காலத்தை போல
ஒரு நிறைவில்லை ...........

சந்திக்கும் ஒவ்வொருவரும்
ஒரு குறை சொன்னார்கள்
உடைகள் உடலுக்கும் உள்ளத்துக்கு
சுமையானது .... சுமைகள் சுகமில்லை

களையும் பொருட்டு கலைந்தேன்
உற்றம் சுற்றம் நட்பு வெறுப்பு
கோபம் தாபம் அன்பு ஆசை
இருப்பு இழப்பு இன்பம் துன்பம்

கலைய களைய கரைந்தேன்
உடல் மறந்து உயிர் பிரிந்தேன்
வரும் போது அழுதவன்
எல்லாம் துறந்து செல்கையில்

நிறைவு என்ற குழந்தை புன்னகை மட்டும்
கூட வரப்பார்த்தது ...................... :innocent0002:

அனுராகவன்
12-07-2011, 02:22 PM
படத்தோடு கவி அழகு...

நாஞ்சில் த.க.ஜெய்
12-07-2011, 02:31 PM
கள்ளமில்லா குழந்தையின் மனது....

தாமரை
12-07-2011, 02:33 PM
பார்ப்போம் என் கண்களுக்குப் பட்டது மத்த யாருக்காவது படுகிறதா என்று. அப்புறமா வச்சுக்கறேன்...:icon_ush:

Ravee
12-07-2011, 03:27 PM
படத்தோடு கவி அழகு...

நீங்கள் ரசித்தது உங்கள் வரிகளில் நன்றி அனு.

கள்ளமில்லா குழந்தையின் மனது....

குழந்தையின் நிர்வாணம் நாம் ரசிப்பது ... அது அழகு .... உண்மை .... வெளிப்படை ஆனது . ஆனால் நாம் வளர்ந்த பின் இந்த மூன்றும் நம்மை விட்டு போய்விடுகிறதே

Ravee
12-07-2011, 03:29 PM
பார்ப்போம் என் கண்களுக்குப் பட்டது மத்த யாருக்காவது படுகிறதா என்று. அப்புறமா வச்சுக்கறேன்...:icon_ush:

பட்டதை சுட்டிக்காட்டியதில் நன்றி அண்ணா ... உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.... :icon_b: திருத்திவிட்டேன். :)

Ravee
13-07-2011, 02:05 PM
பார்ப்போம் என் கண்களுக்குப் பட்டது மத்த யாருக்காவது படுகிறதா என்று. அப்புறமா வச்சுக்கறேன்...:icon_ush:

அண்ணா கண்ணில் பட்டது யார் கண்ணிலும் பட்டதா ???

Nivas.T
13-07-2011, 02:20 PM
இன்னும் நான் நிறைய ஆடைகளை உடுத்திப் பார்க்கவில்லை, அவற்றையும் பார்த்தப்பின் சொல்கிறேன் எனக்கும் கூட வரப் பார்க்கிறதா? இல்லையா? என்று

பார்ப்போம் என் கண்களுக்குப் பட்டது மத்த யாருக்காவது படுகிறதா என்று. அப்புறமா வச்சுக்கறேன்...:icon_ush:

பட்டதை சுட்டிக்காட்டியதில் நன்றி அண்ணா ... உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.... :icon_b: திருத்திவிட்டேன். :)

அண்ணா கண்ணில் பட்டது யார் கண்ணிலும் பட்டதா ???

:confused:

Ravee
13-07-2011, 02:27 PM
இன்னும் நான் நிறைய ஆடைகளை உடுத்திப் பார்க்கவில்லை, அவற்றையும் பார்த்தப்பின் சொல்கிறேன் எனக்கும் கூட வரப் பார்க்கிறதா? இல்லையா? என்று
:confused:

கடமை , பொறுப்புக்கள் என்ற போர்வையை போர்த்திக்கொள்ளும் போதே உங்கள் நிர்வாணத்திற்கு ஆப்பு விழ ஆரம்பித்து விடுகிறது நிவாஸ் ... :frown:

பட்டினத்தார் பாடல்களில் இதற்கு நல்ல விளக்கம் இருக்கும்.

தாமரை
13-07-2011, 02:33 PM
என் கண்ணில் பட்டதுன்னு சொன்னதுமே எல்லோரும் கலைஞ்சு போயாச்சி
அதன் பின் கண்டது ஒன்றுமில்லை
அதாங்க இரவி நிர்வாணம்.

Ravee
13-07-2011, 02:36 PM
என் கண்ணில் பட்டதுன்னு சொன்னதுமே எல்லோரும் கலைஞ்சு போயாச்சி
அதன் பின் கண்டது ஒன்றுமில்லை
அதாங்க இரவி நிர்வாணம்.

ஹா ஹா ஹா .... தோண்டி எடுத்து வந்தேன் திரும்பவும் ஆப்பா ..... :lachen001:

Nivas.T
13-07-2011, 03:27 PM
ஹா ஹா ஹா .... தோண்டி எடுத்து வந்தேன் திரும்பவும் ஆப்பா ..... :lachen001:

இதுக்கு பெயர்தான் சொந்த செலவில் சூன்யம் :lachen001::lachen001::lachen001:

ஆதவா
14-07-2011, 05:22 AM
இங்கயும் நிர்வாணமா???

விடு ஜூட்....

Nivas.T
14-07-2011, 06:21 AM
இங்கயும் நிர்வாணமா???

விடு ஜூட்....

:eek:ஏன் ஆதவா புடிக்காதா?:icon_rollout:

ஆதவா
14-07-2011, 07:05 AM
:eek:ஏன் ஆதவா புடிக்காதா?:icon_rollout:

ஒண்ணுமில்லாத விஷயத்தை சும்மா சும்மா படிக்கவேணாம்னு பார்த்தேன்... :)

கோவாவில் இருந்த பொழுது நண்பர்களிடம் சொன்னேன்..

“மாப்ள.. அப்படியே அவுத்துட்டு அம்மணமா திரியணும்டா.. எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது.... எவனும் கேட்கக் கூடாது... எவனும் நம்மளைப் பார்த்துட்டு சிரிக்கக் கூடாது...” என்று.. ஆனால் நிர்வாணமாகப் பிறந்த நாம், நிர்வாணமாக அலைய முடியாது. நிர்வாணம் என்பது உடலளவில் மட்டுமல்ல.. மனதளவிலும் கூட இருக்க முடியாது. ஒருவிஷயத்தை மறைத்தால் கூட “மூடி மறைத்தல்” என்கிறோம். ஒரு உணர்ச்சியை மறைப்பதற்குத் திரையிடுகிறோம். ஒவ்வொரு விஷயத்தின் நிர்வாணத்தன்மையை மறைத்து மறைத்து கடைசியில் நிர்வாணம் என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விட்டோம்!!

இப்படியும் சொல்லலாம்... உரிக்க உரிக்க ஒன்றுமில்லை... வெங்காயம்... அதுமாதிரிதான்.. மனது நிர்வாணத்தன்மை அடையும் பொழுது அங்கே ஒரு விஷயமும் இருக்காது.

ரவியண்ணன் கவிதையில் இறுதியாக “நிறைவு என்ற குழந்தை(யின்) புன்னகை” கூட வரப்பார்த்தது என்று முடிந்திருக்கிறார்.. வரப்பார்த்தது என்று சொன்னதால் தப்பித்தார்...
வாழ்த்துக்கள் ரவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

Nivas.T
14-07-2011, 12:18 PM
“மாப்ள.. அப்படியே அவுத்துட்டு அம்மணமா திரியணும்டா.. எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது.... எவனும் கேட்கக் கூடாது... எவனும் நம்மளைப் பார்த்துட்டு சிரிக்கக் கூடாது...” என்று..

இந்த ஆடைகளை களைவதுதான் நிர்வாணத்தை அடையும் முதல் படி என்று நினைக்கிறேன் ஆதவா :)

Ravee
16-07-2011, 11:42 PM
இந்த ஆடைகளை களைவதுதான் நிர்வாணத்தை அடையும் முதல் படி என்று நினைக்கிறேன் ஆதவா :)

ஆடைகளை பற்றி ஆராய்ச்சி செய்தால் ....

அது சொல்கிறது

நான் உன் ரசனை,
நான் உன் கௌரவம்,
நான் உன் சுயநலம்,
நான் உன் திமிர்,
நான் உன் கர்வம்
நான் உன் ஆணவம்,
நான் உன் அடையாளம் என்று

அடையாளம் தவிர்த்து அம்மணம் ஆவாயா நீ ???

கீதம்
21-07-2011, 11:05 PM
கலைந்த பின் கண்டது கலை
கண்ட பின் களைந்தது களை
களைந்த பின் கண்டதும் கலை
கண்ட பின் கலைந்ததும் களை!

:icon_b::icon_b::icon_b:

கருணை
22-07-2011, 09:27 AM
ஏன் இப்படி நல்லாத்தானே இருந்தீங்க ... வீட்டு பக்கம் நிறைய நாய் இருக்கு ... பார்த்து போங்க அங்கிள்.

Ravee
27-07-2011, 12:49 PM
கலைந்த பின் கண்டது கலை
கண்ட பின் களைந்தது களை
களைந்த பின் கண்டதும் கலை
கண்ட பின் கலைந்ததும் களை!

:icon_b::icon_b::icon_b:
ஆஹா ஆஹா எப்படி உங்களால் முடியுது .... அக்கா ... நான் முயற்சி செய்து களைத்து பாத்தால் அது கொலையில்தான் முடியுது ....

ஏன் இப்படி நல்லாத்தானே இருந்தீங்க ... வீட்டு பக்கம் நிறைய நாய் இருக்கு ... பார்த்து போங்க அங்கிள்.

ம்ம்ம் வரும் போது பார்லி-ஜி யுடன் வருகிறேன் ... :lachen001: