PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூலை 9: II



innamburan
09-07-2011, 10:29 PM
அன்றொரு நாள்: ஜூலை 9: II
1955: இன்றைய தினம் லண்டனில் ஒரு அறிவிக்கை: அணுசக்தி ஆயுதங்களின் அபாய சங்கொலி: ஊதியது: பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் என்ற தத்துவ வாதியும், ஆல்பெர்ட் ஐன்ஸ்ட்டீன் என்ற விஞ்ஞானியும், ஒன்பது உலகப்புகழ் அறிவாளிகளும். அதில் கையொப்பமிட்ட சில தினங்களில் ஆல்பெர்ட் ஐன்ஸ்ட்டீன் மறைந்தார் என்பதும், ஊதிய சங்கு வீண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bertrand Russell and Albert Einstein

2001: பிரபஞ்சம் பிறந்த விதம் என்னே! என்னே! ஆன்மீகம், ஆய்வுகளும், அலசல்களும், கொடைசல்களும், கருத்துக்களும், அழுத்தமான கற்பனைகளும், ‘கல் தோன்றி மண் தோன்றா...‘கவிதைத்திறனும், லெமூரியா கண்ணோட்டங்களும் நிறந்ததல்லவா, பிரபஞ்சம் பிறந்த விதம். நாற்பது வருடங்களாக, விஞ்ஞான உலகம் ஒரு மகத்தான மோதலில் பிரபஞ்சம் உருவானதாகவும், மேட்டரும் (பொருள் என்று மொழிபெயர்க்கத் தயங்குகிறேன் - சப்ஜெக்ட்டே டிஃப்பிக்கல்ட்!) அதன் எதிர்வினையும் சம அளவிலிருப்பதாக பேசி வருகிறது; அவ்வாறு இருந்தால், ஒன்றையொன்று அழித்து, பிரபஞ்சத்தையும் ஒழித்திருக்குமே என்ற புதிர் வேறு. 2001 வருடம் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் ஆய்வாளர்கள் மேட்டரும் அதன் எதிர்வினையும் வேறு வேறு வேகத்தில் அழிந்து வருவதால், பிரபஞ்சத்தையும் ஒழித்திருக்கவில்லை என்று ஆதாரத்துடன் அறிவித்துள்ளார்கள். அவர்கள் அமைத்த ஆய்வு-இயந்திரத்தின் பெயர்: பாபர். குறிப்பால் மற்றும் உணர்த்தியதின் காரணம்:
விஞ்ஞானத்தின் கலைச்சொற்களை தமிழ்மொழியாக்கம் செய்வது எளிதல்ல. விஞ்ஞானத்தை சுருக்குவதும் கடினம்.
இன்னம்பூரான்
09 07 2011
உசாத்துணை:
http://www.pugwash.org/about/manifesto.htm

http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/9/newsid_2498000/2498637.stm