PDA

View Full Version : குரோமில் புதிய அகராதி நீட்சி



neechalkaran
09-07-2011, 02:52 AM
பிரவுசரில் உலாவிக் கொண்டு இருக்கையில் புரியாத வார்த்தைகளுக்கு உடனே பதில் கிடைக்க வேண்டுமா? அதுவும் ஆங்கிலம் அல்லது தமிழ் வார்த்தைகளுக்கு உலவியிருந்து பதில் கிடைக்க வேண்டுமா? அப்படியென்றால் மேலே படியுங்கள் உங்களுக்காக கூகிள் குரோமின் புதிய நீட்சி...

ஆங்கில பிளாக்கோ அல்லது நாளிதழோ தமிழ் பிளாக்கோ நாளிதழோ இனி புரியாத வார்த்தைகளை பிரவுச்சரிலிருந்தே தேடலாம். முக்கியமாக எல்லா தளங்களிலும் பயன்படுத்தும் வகையிலான அகராதி நீட்சி. இதை குரோம் உலாவியில் பதித்துக் கொண்டால் வேண்டிய வார்த்தைகளுக்கு வேண்டிய முக்கிய அகராதிகள் மூலம் அர்த்தங்களும் விளக்கங்களும் பெறலாம்.

http://3.bp.blogspot.com/--aMx2GHgYWk/The_TZTKydI/AAAAAAAAApk/jMB07bIMKts/s1600/namma_dictionary.JPG


https://chrome.google.com/webstore/detail/bfedcmeccmihgmcbdkagngglhcklkgih?hl=ta

வேண்டிய வார்த்தைகளை select செய்து வலது சொடுக்கிட்டால் எழு தமிழ் மற்றும் ஆங்கில அகராதிகள் காட்டப்படும் அதில் அதேனும் ஒன்றை தேர்வு செய்து பொருள் கொள்ளலாம்.

இதனை நிறுவுவது மிக சுலபம், குரோம் பிரவுசர் மூலம் இன்ஸ்டால் பட்டனை தட்டினால் மட்டும் போதும். இனி குரோமில் அகராதிகள் சேர்ந்துவிடும்

ஓவியன்
09-07-2011, 08:16 AM
ஆகா நீங்கள் கூரோமில் நீந்தும் நீச்சல் காரனா...?? :), செய்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி உபயோகமாக இருந்தது.

Nivas.T
09-07-2011, 08:20 AM
பயனுள்ள தகவலுக்கு நன்றி

நாஞ்சில் த.க.ஜெய்
09-07-2011, 02:16 PM
பயனுள்ள புதிய தகவல் ..நன்றி தோழர்

rajkulan
16-04-2013, 04:51 AM
நன்றி, நல்ல தகவல்..