PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூலை 5:



innamburan
08-07-2011, 06:07 PM
அன்றொரு நாள்: ஜூலை 5:
தேசாபிமானம் என்றால் என்ன? நாட்டுப்பற்று அது தானா? அல்லது வேறு இலக்கா? அமெரிக்கன் வரலாற்று மன்றத்தின் இதழ் ஒன்றில் இது பற்றிய கருத்து ஒன்று. தேசாபிமானம் என்ற கோட்பாடு/நிலைப்பாடு பரவலாக வரலாற்று தளங்களில் காலூன்றியிருந்தாலும், குறிப்பிட்ட மக்கள் சமுதாயங்கங்களின் தனிசிறப்பாக, அது நிலவுவதும் அன்றாடம் தென்படுவது தான், என்கிறது அந்தக்கருத்து. ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பது நலம். ஒரு தேசத்தின் நான்கு எல்லைகளும், நாட்டுப்பற்றின் எல்லைகளும் வெவ்வேறாக இருக்கலாம். உதாரணமாக, ஸ்காட்லேண்டு, இங்கிலாந்தில் இல்லை. அவை இரண்டும் இருப்பது ஒரு நாடு - ஐக்கிய ராஜாங்கம் (யூ.கே.). தேசங்கள் (நேஷனாலிட்டி) வேறு வேறு. நான் தேசாபிமானம் என்ற சொல்லை அந்த பொருளில் பயன்படுத்துகிறேன். இன்று நான்கு தேசாபிமானங்களை பற்றி பேச்சு.
ஜூலை 5, 1295
ஸ்காட்லாந்தும், ஃபிரான்சும் இங்கிலாந்தை பொது பகையாளியாக பாவித்து செய்து கொண்ட ஒப்பந்ததின் பெயர், ‘தொன்மையான உடன்பாடு’! குழப்பங்கள் நிறைந்த அக்காலத்தில் ஸ்காட்லாந்து மன்னன் ஜான் பேலியலுக்கு மூன்று நாடுகளிலும் நில சொத்து இருந்ததாலும், இங்கிலாந்து அரசன் எட்வர்ட்டுக்கு ஃப்ரான்ஸில் சொத்து இருந்ததாலும், ஒவ்வொருவரும் ஒரு தேசத்தில் மாமன்னனாகவும், மற்றொன்றில் குறுநில மன்னனாகவும் பிரகடனங்கள். எட்வர்ட் ஒரு படி மேல் போய்,ஜான் பேலியலை அடக்கியாள துணிய, அவர் கடல் கடந்து உறவு நாடினார். கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு பிறகு, கிருத்துவ சமய கோட்பாடுகளில், கத்தோலிக்க பிரிவை விட ப்ராடஸ்டெண்ட் எனப்படும் பிரிவினை வாதத்தின் தாக்கத்தால், இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் நெருங்கத்தொடங்கின. அப்போது கூட ஸ்காட்லாந்தில், ஃபிரென்ச் கால்வின்-ப்ராடஸ்டெண்ட் மாடல். பல நூற்றாண்டுகளாக, they are different nations in one country -the United Kingdom.
இருந்தாலும், இதையும் கேட்கவேண்டும். இங்கிலாந்தின் தயவினால் தலையெடுத்த ஃப்ரென்ச் தலைவர் ஜெனெரல் டிகால், ஸ்காட்லாந்தின் எடின்பரோவில், 1942ல் பேசியது:
‘...வந்த மாத்திரமே, நமக்குள் பல நூற்றாண்டுகளாக ஆழ்ந்திருக்கும் உணர்ச்சிகரமான தொன்மையான பிணைப்பை வாழ்த்துகிறேன்... நமக்குள் அதே கவிதை மோகம், அதே சமய கோட்பாடுகள், அதே இலக்கிய ரசனை...’ (ஒரு விதத்தில் பொதுப்படையாக இருந்தாலும், he carried the day, perhaps, much to the chagrin of his host, Winston Churchill!)
05-07-1987 :
வல்லிபுரம் வசந்தன் ((ஜனவரி 1, 1966 - ஜூலை 5, 1987; கரவெட்டி, யாழ்ப்பாணம்) ஒரு தமிழீழ தேசாபிமானி. தமிழீழ விடுதலைப் புலிகளில் இயக்கத்தில் கப்டன் மில்லர் என்ற பெயரில் இயங்கினார். இவரே முதல் கரும்புலியாக 05-07-1987 அன்று யாழ்-வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் மரணமடைந்தார். கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது.
3.இந்திய திருநாட்டின் மக்களின் நலமும், மேன்மையையும் , ஒருமைப்பாட்டையும், வளர்ச்சியையும், வருங்கால சந்ததியின் செழிப்பும் கருதி, நாம் இந்திய ஆளுமையின் எல்லைகளை நாட்டுப்பற்றின் எல்லை தெய்வங்களாக மதித்து, நம்முள் உறையும் ‘நாடுகளை’ எல்லாம் மதித்து இந்திய மண்ணின் பற்றே, என் தேசாபிமானம் என்று இயங்கமுடியுமா?
4. இன்று உலகளாவிய வணிகம், புலன் பெயர்தல், இணக்கங்கள், பிணக்கங்கள், நாடு கடந்த, தார்மீகமான அபிமானங்கள் உலா வருகின்றன. இது பொருட்டு நாம் செய்ய வேண்டியது, செய்யக்கூடியது என்ன?
இன்னம்பூரான்
06 07 2011
உசாத்துணை:
http://www.electricscotland.com/france/auld_alliance.htm
http://ta.wikipedia.org/wiki/மில்லர்