PDA

View Full Version : .ஹோட்டல் சாப்பாடும் வீட்டு சாப்பாடும்.M.Jagadeesan
08-07-2011, 10:56 AM
பக்கத்து ஊரில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்று இருந்தேன். திருமணம் முடிந்து சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தேன். சற்று தூரத்தில் என் நண்பன் குமார் வந்துகொண்டு இருந்தான். நான் அவனைப் பார்த்தேன். ஆனால் அவன் என்னைப் பார்க்கவில்லை. திடீரென்று அங்கிருந்த ஒரு வீட்டினுள் நுழைந்தான். நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றால் அந்த வீடு ஒழுக்கமுள்ளவர்கள் போகக்கூடாத வீடு. அவன் வருகைக்காகக் காத்திருந்தேன். அரைமணி நேரம் கழித்து வந்தான். பேருந்து நிறுத்தத்தில் என்னைக் கண்டதும் தீயை மிதித்தவன் போலத் திடுக்கிட்டான்.

குமார் என்னைப் பார்த்து,

" என்ன சங்கர்! இந்தப் பக்கம்?" என்று கேட்டான்.

" ஒரு கல்யாணத்தில் கலந்து கொள்ள வந்தேன்; ஆமாம் குமார்! நீ எதுக்கு இந்த ஊருக்கு வந்தே?"

" நானும் ஒரு கல்யாணத்தில் கலந்து கொள்ளத்தான் வந்தேன்." என்று குமார் சொன்னபோது அவன் குரலில் ஒரு தடுமாற்றம் தெரிந்தது.

" குமார்! பொய் சொல்லாதே! நீ எங்க போயிட்டு வரேன்னு எனக்குத் தெரியும்; நீ அந்த வீட்டுக்குள்ளாற போனத நான் பாத்துக்கிட்டுத்தான் இருந்தேன்; என்ன ஆச்சு உனக்கு? கல்யாணம் ஆகி ஒரு வருஷம்தானே ஆகுது; அதுக்குள்ளாற இப்படியா? "

சங்கர்! உங்கிட்ட சொல்றதுக்கு என்ன? அவளுக்கும் எனக்கும் ஒத்து வரல. எண்ணி ஆறு மாசம்தான் குடித்தனம் நடத்துனோம்; அவ ரொம்ப பிடிவாதக்காரி; ஆடம்பரமா வாழணும்னு நினைக்கிறா; அது என் சம்பளத்துக்கு ஒத்துவராது.சின்னசின்ன விஷயத்துக்கு எல்லாம் சண்டை போடுறா. ஒருநாள் சண்டை முத்திப்போய் கைய நீட்டிட்டேன். அன்னிக்கி கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்குப் போனவதான்;; ஆறு மாசம் ஆகுது. நானும் மனுஷந்தானே? எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கத்தானே செய்யும்? அதான் இப்படி."

" தப்பு குமார்! கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு அவங்க போனா நீ இப்படி வந்துடறதா? உம் பொண்டாட்டிய சமாதானம் பண்ணி வீட்டுக்கு கூட்டி வந்திருக்கணும்; குடும்பம் நடத்தியிருக்கணும்; ஆறு மாசமா என்ன பண்ணினே? நீ ஆம்பிள; நினைச்ச இடத்துக்குப் போலாம் வரலாம்; இதையே ஒரு குடும்பப் பொண்ணு செஞ்சா நம்ம சமுதாயம் அத ஏத்துக்குமா? கற்பு ரெண்டு பேருக்கும் பொதுவானதுதான்.

கற்புநிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

அப்படின்னு பாரதியார் பாடியிருக்காரே! உனக்குத் தெரியாதா?"

" சங்கர்! நீ கல்யாணம் ஆகாதவன்; எதுவும் பேசுவே! கல்யாணம் ஆனவனுக்குத்தான் பிரிவோடகஷ்டம் தெரியும் ; உனக்குத் தெரியாது

" இரவுநேரம் பிறரைப் போலே
என்னையும் கொல்லும்; துணை
இருந்தும் இல்லை என்று போனால்
ஊர் என்ன சொல்லும்?"

அப்படின்னு ஒரு கவிஞர் பாடியிருக்கார்; அது உனக்குத் தெரியுமா?

" ஊர் எதுவும் சொல்லாது. கண்ட இடத்துக்குப் போய் வியாதி வாங்கிகிட்டு வந்தாத்தான் ஊர் உன்னப் பத்திக் கேவலமாப் பேசும். ஹோட்டல் சாப்பாடு ஒரு நாளைக்கு சாப்பிட்டா நல்லாத்தான் இருக்கும்; தொடர்ந்து சாப்பிட முடியுமா? வீட்டுல ரசம் சாதம் சாப்பிட்டாலும் அதுல இருக்குற நிம்மதியும் சுவையும் ஹோட்டல் சாப்பாட்டுல வருமா?"

சங்கரின் பேச்சைக் கேட்ட குமார் அமைதியாக இருந்தான்.

தம்இல் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

என்பது குறள்.

பொருள்: தனக்கு உரியவளைத் தழுவுதலால் பெறுகின்ற இன்பமானது, தமது வீட்டின் கண் இருந்து அவள் சமைத்த உணவை அனைவரும் பகிர்ந்து உண்ணுதலை ஒக்கும்.

க.கமலக்கண்ணன்
09-07-2011, 03:39 AM
நீங்கள் எழுதிய கதையும் கருவும் அருமை

சொல்ல வருகின்ற செய்தியும் அருமை

சொன்ன விதமும் அருமை

ஆனால் ஒரு தனிபட்ட நிறுவனத்தை நீங்கள் சுட்டிக்காட்டி சொல்லியிருப்பது நல்லதல்ல

உங்களின் கதையோ கருத்தோ மற்றவர்களுடைய மனதை புண்டுத்தாமல் இருக்க வேண்டும்

அப்புறம்தான் நீங்கள் சொல்ல வருகின்ற கருத்து மிக ஆழமாக பதியும். இல்லையெனில்

அத்தனையும் வீண்

அதை புரிந்து கொண்டு மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்

arun
09-07-2011, 03:48 AM
எதார்த்தமான கதை அதை சொல்லிய விதம் அருமையாக இருந்தது பாராட்டுக்கள்

M.Jagadeesan
09-07-2011, 03:48 AM
தங்களுடைய பாராட்டுக்கு நன்றி! தங்களுடைய யோசனையைக் கருத்தில் கொள்கிறேன்.

M.Jagadeesan
09-07-2011, 03:53 AM
தங்கள் பாராட்டுக்கு நன்றி அருண்.

Nivas.T
09-07-2011, 09:06 AM
அழகான கதை
நல்ல கருத்து
நன்றி ஐயா

M.Jagadeesan
09-07-2011, 09:32 AM
நன்றி நிவாஸ்!

கீதம்
09-07-2011, 09:45 AM
அருமையான குறளும், அதை அழகாய் விளக்கும் சம்பவக்காட்சியும், நண்பனின் நலனில் அக்கறை கொண்ட அரும் நட்பும், பாரதி, கண்ணதாசன் பாடல்களின் மேற்கோள்களும் பொருத்தமாய் அமைந்து கருத்துக்கு மெருகூட்ட, மனதில் இனிதே ஏற்றம் பெறும் நல்ல கதை. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
09-07-2011, 09:48 AM
பாராட்டுக்கு நன்றி கீதம்.

நாஞ்சில் த.க.ஜெய்
09-07-2011, 03:36 PM
நட்பினை திருத்த முயற்சிக்கும் உண்மை நட்பின் அருமையான கதை ..

சேவியர்
09-07-2011, 05:16 PM
போங்க, நீங்க ரெம்ப நல்லா நச்சுனு சொல்லவந்த கருத்து

M.Jagadeesan
09-07-2011, 05:18 PM
பாராட்டுக்கு நன்றி ஜெய்!

சிவா.ஜி
09-07-2011, 06:30 PM
அது அந்த மாதிரியான வீடுன்னு இவனுக்கு எப்படி தெரியும்?

கதையும், கருவும் மிகப் பழசு. புதுசா ஏதாவது சொல்லுங்க ஜகதீசன்.

Ravee
10-07-2011, 03:27 AM
எல்லை மீறிய நண்பனை பற்றிய எல்லை மீறா கதை ஒன்று .... குறளுக்காக வடித்த கதை .... குறளும் பழசு .... கருவும், கதையும் பழசு .... ஆனால் கருத்து என்றைக்கும் தேவையான ஒன்றுதானே.....வாழ்த்துக்கள் ஜெகதீசன் அய்யா

M.Jagadeesan
10-07-2011, 04:35 AM
பழைய கள்ளை புதிய மொந்தையில் கொடுத்திருக்கிறேன். கள்ளும் புதிதாக இருக்கவேண்டும் என்கின்றனர் சிவா.ஜி யும், ரவியும்.

aren
10-07-2011, 09:05 AM
இந்த மாதிரியாக எடுத்துச் சொன்னால் மக்களை அப்படியே எடுத்துக்கொள்வார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

அந்த மாதிரியான தொழிலை எப்படி ஒரு பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் செய்யமுடிகிறது என்று தெரியவில்லை. ஊர் சும்மாவா இருக்கும்.

இருந்தாலும் உங்கள் கதையின் கருத்து நன்றாகவே உள்ளது. இன்னும் எழுதுங்கள்.

கௌதமன்
10-07-2011, 09:27 AM
ஹோட்டல் சாப்பாடு ஒரு நாளைக்கு சாப்பிட்டா நல்லாத்தான் இருக்கும்; தொடர்ந்து சாப்பிட முடியுமா?

ஐயா! அப்போ ஒரு நாள் மட்டுமுன்னா சாப்பிடலாமுன்னு சொல்லுறீங்களா? ....:D

M.Jagadeesan
10-07-2011, 02:08 PM
கெளதமன் ஹோட்டல் பக்கமே போனதில்லையா?

கௌதமன்
10-07-2011, 02:15 PM
கெளதமன் ஹோட்டல் பக்கமே போனதில்லையா?
நீங்க எந்த ஹோட்டலை சொல்லுறீங்க ஐயா ?

M.Jagadeesan
10-07-2011, 02:35 PM
நீங்க எந்த ஹோட்டலை சொல்லுறீங்க ஐயா ?


நீங்கள் நினைக்கிற ஹோட்டலை நான் சொல்லவில்லை; நான் சொல்வது சாப்பிடுகிற ஹோட்டலை.

கௌதமன்
10-07-2011, 03:44 PM
நீங்கள் நினைக்கிற ஹோட்டலை நான் சொல்லவில்லை; நான் சொல்வது சாப்பிடுகிற ஹோட்டலை.

அதானே பார்த்தேன். வாரத்துக்கு ஒரு நாள் நாங்க குடும்பத்தோட ஓட்டலுக்குப் போவோம், இல்லைன்னா ஓட்டல் வீட்டுக்கு வரும்.

redblack
22-07-2011, 11:32 AM
:lachen001:நமக்குன்னு ஒரு வீட்டு சாப்பாட்டை வைச்சிகிட்டா இந்த மாதிரி பிரச்சினை வராதே.

sarcharan
22-07-2011, 01:09 PM
"சின்ன"தா ஒரு ஐடியா சொல்லீட்டீங்க...