PDA

View Full Version : பிரதர்.. பாஸ்போட் வாங்கிட்டேன் பிரதர்.த.ஜார்ஜ்
07-07-2011, 04:45 PM
ராதாகிருஷ்ணன். வகுப்பில் அவன்தான் லீடர். முண்டகண்ணும்,முன்தள்ளிய பல்லுமாக.. பய செம படிப்பாளி. ஆயிரம்பேர் கூட்டத்திலும் தனி தீவுபோல இருப்பான். யாரும் அவனை தொட்டு பேசுவது அவனுக்குப் பிடிக்காது. நெற்றியில் திருநீறு, குங்குமப்பொட்டு வைத்து சாமிசிலை போல இருப்பான்.

‘பாரு அவனப் பாரு.எப்படி படிக்கிறான்னு பாரு. டாண் டாண்னு எப்படி பதில் சொல்றான் பாரு’வாத்தியார் பல நேரம் அவனைக் காட்டியே எங்களை அடிப்பதில் ,மொத்தமாக வெறுப்புக்குள்ளானான். சமயத்தில் அவனே பாடம் நடத்த சொல்லிவிட்டு , கேள்வி கேட்க வைத்து, வழக்கம்போல் பதில் தெரியாத என்னை பிரம்பால் அடிக்க வைப்பார் வாத்தியார்.[அவருக்கு வயித்துபோக்கு வந்து நாசமாபோக….]

வேண்டுமென்றே எங்களை மாட்டவைத்து அடிவாங்க வைப்பான்.[வாத்தியாருக்கு ‘போலீஸ்’னு பட்டபேர் வச்சதை போட்டு குடுத்துட்டான்ல] தொடைக்கிடையில் கை வைத்து வலியை ஜீரணிக்க நாங்க தவித்துக் கொண்டிருக்கையில் ‘கெக்கெ கெக்கெ’னு சிரிப்பான். அதுக்கு பிறகுதான் ஒருத்தன் அடிவாங்கிறத பார்த்து சிரிக்க வைக்கிற காமெடி காட்சிகள் சினிமாவில் அறிமுகமாச்சி.

ஒருமுறை வலைவீசி ஆள் பிடிக்கிற ஒரு கும்பல் பள்ளியில் மலிவு பதிப்பு பைபிள் வினியோகிக்க.. இவன் மட்டும் அவங்க முன்னாலேயெ கிழிச்சி எறிஞ்சான். அப்படி தீவிர மத பற்று.

அப்பேர்பட்டவனை சமீபத்தில் பார்த்தபோது வெள்ளை வேட்டியும், வெள்ளை ஜிப்பாவும் அணிந்திருந்தான். கையில் பைபிள். ஆச்சரிய்த்துடன் “டேய் ராதா.. நீயாடா’ என்ற என்னை கருணையுடன் பார்த்தான். தேவதூதனே இறங்கிவந்த மாதிரியிருந்தது. ‘பிரதர் நான் இப்ப ஜோசப் கிருஷ்னன். இரட்சிக்கப்பட்டுட்டென்லா ’ என்றான் ஏதோ பாஸ்போட் வாங்கிய தோரணையில்.

சிவா.ஜி
07-07-2011, 05:47 PM
அடப்பாவி....இவன் எத்தனை ரூபாய்க்கு விலைபோனான்...?

அக்னி
07-07-2011, 06:39 PM
வேறு மதத்திலிருந்து இன்னொரு மதம் மாறுவதைக் கூட ஏற்றுக் கொள்ளுவேன்.
ஆனால், ஒரே மதத்திலிருந்துகொண்டு அதே மதத்திற்குள் இன்னொரு பிரிவிற்குள் மதம் மாறுவதை எப்படிச் சொல்லுவது?!?
அம்மாவை மாற்ற முடியாது என்பதை உணராத புத்திசிகாமணிகள்...

இது ஒரு பொழப்பாவே போச்சுதே...

நாஞ்சில் த.க.ஜெய்
08-07-2011, 06:08 PM
இக்கரைக்கு அக்கறை பச்சை ...

arun
09-07-2011, 02:44 AM
என்ன கொடுமை சார் இது காலத்தில் கோலம் அவனையும் மாற்றி இருக்கிறது

ஜெய் சொன்னது போல் இக்கரைக்கு அக்கரை பச்சை

ஓவியன்
09-07-2011, 05:56 AM
ஒருவருடைய மதம் சார்ந்த ஈடுபாடு அவர், அவரது தனிப்பட்ட சுதந்திரம் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடுமில்லை, ஆனால் அந்த சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவானது என எல்லோரும் மனதில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

நல்லதோர் சம்பவ பகிர்வுக்கு மிக்க நன்றி ஜார்ஜ்..!!

Ravee
10-07-2011, 03:29 AM
ம்ம்ம் சின்ன புள்ளதனமா முடிவு எடுத்துட்டார். கடை பிடிக்கும் தத்துவங்களில் மாற்றம் செய்வதால் கடவுள்கள் மாறப்போவதில்லை. வேஷத்தை மாற்றியதில் அடுத்தவரை குழப்பாமல் அவருக்கு ஒரு தெளிவு பிறந்தால் சரி ... :icon_ush:

த.ஜார்ஜ்
10-07-2011, 07:54 AM
அடப்பாவி....இவன் எத்தனை ரூபாய்க்கு விலைபோனான்...?

வேறு மதத்திலிருந்து இன்னொரு மதம் மாறுவதைக் கூட ஏற்றுக் கொள்ளுவேன்.
ஆனால், ஒரே மதத்திலிருந்துகொண்டு அதே மதத்திற்குள் இன்னொரு பிரிவிற்குள் மதம் மாறுவதை எப்படிச் சொல்லுவது?!?
அம்மாவை மாற்ற முடியாது என்பதை உணராத புத்திசிகாமணிகள்...

இது ஒரு பொழப்பாவே போச்சுதே...

இக்கரைக்கு அக்கறை பச்சை ...

என்ன கொடுமை சார் இது காலத்தில் கோலம் அவனையும் மாற்றி இருக்கிறது

ஜெய் சொன்னது போல் இக்கரைக்கு அக்கரை பச்சை

ஒருவருடைய மதம் சார்ந்த ஈடுபாடு அவர், அவரது தனிப்பட்ட சுதந்திரம் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடுமில்லை, ஆனால் அந்த சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவானது என எல்லோரும் மனதில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

நல்லதோர் சம்பவ பகிர்வுக்கு மிக்க நன்றி ஜார்ஜ்..!!ம்ம்ம் சின்ன புள்ளதனமா முடிவு எடுத்துட்டார். கடை பிடிக்கும் தத்துவங்களில் மாற்றம் செய்வதால் கடவுள்கள் மாறப்போவதில்லை. வேஷத்தை மாற்றியதில் அடுத்தவரை குழப்பாமல் அவருக்கு ஒரு தெளிவு பிறந்தால் சரி ... :icon_ush:

நன்றி