PDA

View Full Version : நீ எனக்கு



தமிழ்குமரன்
12-12-2003, 03:17 AM
நான் உனக்கு தென்றலோ
சூறாவளியோ
நீ எனக்கு
சுவாசக்காற்று

Nanban
12-12-2003, 04:03 AM
மிக நீண்ட இடைவெளியில் வந்து, காற்றின் பண்பை சொல்லி விட்டீர்கள்......

நான் கோபக்காரணாக, துன்புறுத்துபவனாக இருப்பேன்.

ஆனால் நீ மட்டும் மென்மையான சுவாசக் காற்றாக வரவேண்டும் என்று ஆசை.......

எல்லா மனிதர்களுக்கும் சுயநலம் தான் இயக்கும் சக்தி.......

வேருடன்
மரம் பிடுங்கிப் போடும்
நீ ஒரு புயல்.

கூரை பெயர்த்து
சுவர் இடித்து
அல்லல் தரும்
நீ ஒரு சூறாவளி.

என்றாலும்
உன்னை நான்
சுவாசிப்பேன்......

இளசு
12-12-2003, 06:43 AM
நான் உனக்கு தென்றலோ
சூறாவளியோ
நீ எனக்கு
சுவாசக்காற்று


வாராமல்
பாராமல்
பேசாமல்
போனாளா..

ஏங்கிய நெஞ்சில்
இருவகை சலனம்..
நான் உனக்குத்
தென்றலா புயலா...

பொழிப்புரை இல்லா
பெண்ணின் மௌனம்..
தானே கரையும் வரை
உருகி கரையும் வரை

"நான் உன் சுவாசம்
என்றும் என்றென்றும்"

சரணம்..சரணம்.....



மீண்டும் பதிவுகள் தர ஆரம்பித்திருக்கும்
தமிழ்குமரன் அவர்களே...
என் அன்பும் வரவேற்பும் மரியாதையும்...

இ.இசாக்
12-12-2003, 06:46 AM
தமிழ்குமரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
தொடர்ந்து நிறைய கொடுங்கள்.

Nanban
12-12-2003, 06:52 AM
பொழிப்புரை இல்லா
பெண்ணின் மௌனம்..
தானே கரையும் வரை
உருகி கரையும் வரை


கரைய வேண்டியது -
மௌனமா ?
மௌனம் போர்த்து நிற்கும்
இதயமா?

தன்னாலே கரையுமா?
தண்ணீர் ஊற்றி
கரைக்க வேண்டுமா?

உருகி கரையுமா?
உடைத்து
கரைக்க வேண்டுமா?

எல்லா மயக்கங்களுக்கும்
காரணம்
உன் மௌனம் ....

உண்டு
இல்லை
இரண்டில் ஒன்று
சொல்லிவிட்டு
மௌனத்தை
அடை காத்துக் கொள்.

வாழ்வா, சாவா
போராட்டத்தில்
மௌனம் காக்காதே......

தமிழ்குமரன்
13-12-2003, 02:36 AM
வார்த்தை வர்ணஜாலம் செய்யும்
இளசு அவர்களே
நன்றி

Mano.G.
13-12-2003, 02:46 AM
குளிருக்கு இதமாய் இருப்பாய்
என நினைத்தது தப்பு
கதகதப்பாய் வந்தாய்
மனதை சுட்டு நிருபித்தாய்
நீ எனக்கு வாய்த்தது தப்பு

மனோ.ஜி

சேரன்கயல்
13-12-2003, 04:40 PM
தமிழ்குமரனின் பார்வைக்கும், வேறுவிதமாய் பார்த்த நண்பனுக்கும், அவள் மூச்சில் நின்று சரணம் பாடிய இளசுவுக்கும் பாராட்டுக்கள்...

காற்றில்லா பொழுதுகளை ஜீரணிப்பேன்...
தென்றலோ புயலோ தீண்டிக்கொண்டிரு...

இளசு
13-12-2003, 05:09 PM
மாற்றுப்பார்வையால் மெருகேற்றும் மனோஜிக்கும்
இருவரியில் அவளே ஜீவன் என்றுரைத்த இனிய சேரனுக்கும்
பாராட்டுகள்.

puppy
07-01-2004, 07:37 PM
அடடா அருமை கவிகளே....மேலும் கொடுங்கள்.........

PATCHI
07-01-2004, 08:02 PM
காற்றுக்கும் காற்றுக்கும்
கலியானம் செய்திருக்கும்
தமிழ்க் குமரனையும்..

பார்வைக்கே..பரிணாமம் தந்திருக்கும்
'கவி' இளசுவையும்..

விடைக்கொரு கேள்வியும்..
கேள்விக்கொரு விடையும்..
வழங்கியிருக்கும்.. நண்பனையும்..

சுட்டெரிக்கும் நெருப்பைக்
கொஞ்சித்தழுவிட்ட மனோவையும்..

வாழ்த்தாமல் சென்றிடுமோ...என் மனமும்..?

தமிழிற்கும்....
மெருகூட்டும்..உங்களனைவருக்கும்.... மனங்கனிந்த வாழ்த்துக்கள்.....

ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்