PDA

View Full Version : பாரி



M.Jagadeesan
06-07-2011, 02:02 PM
முல்லைக்கு பாரிமன்னன் தேர்கொடுக்கும் காட்சியை

முச்சந்தியில் வரைந்திருந்தான் முடவன் ஒருவன்

எல்லையில்லாக் கருணையினால், தன்னிடம் வருகின்ற

எளியோர்க்கும் வறுமையில் வாடுகின்ற புலவர்க்கும்

இல்லையென்று சொல்லாது இருப்பதை எல்லாம்

இரப்போர்க்குக் கொடுத்த பாரியின் ஓவியத்தில்

சில்லரைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன

சிந்திக்க வைத்ததே காலத்தின் கோலம்.

Nivas.T
07-07-2011, 04:22 PM
கருணை கடுகளவாவது இருப்பது கண்டு மகிழ்ச்சி

கவிதை அருமை ஐயா

மிக நன்று

ஆதி
07-07-2011, 04:29 PM
இரப்போர்க்காய் பாரி என்றும் இருக்கிறான்...

வாழ்த்துக்கள் ஐயா...

சிவா.ஜி
07-07-2011, 05:49 PM
ஆமாம்...பாரி இன்னும் சில சிதறும் சில்லறைகளில் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறான்.

வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

M.Jagadeesan
08-07-2011, 12:45 AM
நிவாஸ், ஆதன், சிவா.ஜி ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி!

கீதம்
08-07-2011, 02:02 AM
வாரி வழங்கிய பாரியின் வரைபடமும் அரைகுறையாயேனும் அவன் வயிறு நிரப்பிடும் பரிதாபம்!

வரைபடத்திலும் வாழ்கிறான் வள்ளல்! கவி நன்று. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
08-07-2011, 02:16 AM
கீதத்தின் பாராட்டுக்கு நன்றி!