PDA

View Full Version : சிரிப்பு....:)

கலாசுரன்
06-07-2011, 07:41 AM
*
மண் மேடுகளில் ஏறி நின்றேன்
குன்றுகள் சிரித்தன

குன்றுகளில் ஏறி நிற்கிறேன்
மலைகள் சிரிக்கின்றன

மலைகளில் ஏறி நிற்பேன்
மாமலைகள் சிரிக்கும் பிறகிந்த வானமும்

அதனால்
ஆழத்தின் முடிவற்றதொரு
பள்ளத்தாக்கில் இறங்கியிருந்து
சுவாரசியமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
*
***
கலாசுரன்

ஆதி
06-07-2011, 08:58 AM
இங்கு சிரிப்பு என்பதனை செருக்கு/கர்வம் என்றும்

குன்று,மலை,மாமலை, வானம் என்பதனை உயர்வு, உயர்ந்த, புகழின் உச்சி நிலையில் உள்ள என்றும்

ஆழத்தின் முடிவற்ற பள்ளத்தாக்கில் என்பதனை சாதார்ண இடத்தில் அல்லது அன்னாடங்காட்சி என்றும்

பொருள்படுத்தி கொண்டேன் கலாசுரன்...

ஒருவ*ர் ம*ட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்றும் வந்தால்
அமைதி என்றுமில்லை

மேலுள்ள இந்த வரிகளில் இருக்கும் 'ஒருவர்' என்பதனை படிமமாக மாற்றி கொண்டால் இந்த கவிதையில் நான் கண்டு கொண்ட பொருளுக்கு சரியாக பொருந்திவரும்..

உனக்கு கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

பாராட்டுக்கள் கலாசுரன்...

ஜானகி
06-07-2011, 10:54 AM
நம்மைப் பார்த்து பிறர் சிரிப்பாய் சிரிப்பதற்கு இடம் கொடுப்பதைவிட, பிறர் சிரிப்பாய் சிரிப்பதை நாம் பார்த்து ரசிப்பது சுவரசியமே.....

கீதம்
21-07-2011, 07:18 AM
கவிதை சொல்வது அழகு. அதற்கு ஆதனின் ஆழ்ந்த கண்ணோட்டமும், ஜானகி அம்மாவின் வித்தியாச எண்ணவோட்டமும் கண்டு வியக்கிறேன்.
யதார்த்த உலகத்தைப் பத்து வரிகளில் அடைத்துவிட்டீர்கள். பாராட்டுகள் கலாசுரன்.

பூமகள்
21-07-2011, 07:30 AM
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்..!!

முயற்சிகளுக்கு ஊக்கம் - அந்த எண்ணவோட்டம் தானே..

மடு மலையாவதும்.. மலை மாமலையாவதும்..

அதே ஓட்டம் நம்மை ஓட்டமாய் ஓடவிடாதபடி பிடித்து வைப்பதில் தான் இருக்கிறது நல்ல வாழ்க்கைப் பயணம்..

இருவேறு கோணங்களை அலசி பதிவிட்டோருக்கு பாராட்டுகள்.. கலாசுரனுக்கு வாழ்த்துகள். :)

Nivas.T
21-07-2011, 07:54 AM
ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் ஏறியதும் அதன் சிரிப்பு அடங்கிவிடுகிறதே கலாசுரன் - அதானே நமக்கு வேண்டும்.

கவிதை மிக அருமை

ஆதன் பிரமாத படுத்தும் பின்னூட்டம்

நாஞ்சில் த.க.ஜெய்
21-07-2011, 11:27 AM
நாம் நாமாக இருந்தால் பிறரது சிரிப்பும் நமக்கும் மகிழ்வினை தரும் ...தான் உயர்ந்தவன் எனும் போது பிறரது சிரிப்பு குத்தூசி குத்தபடுவதால் ஏற்படும் வலி போன்றது ...என்ற ஆழ்ந்த கருத்தினை கூறும் உங்கள் கவிதை அருமை தோழர் ...

கலாசுரன்
03-12-2011, 05:10 AM
இங்கு சிரிப்பு என்பதனை செருக்கு/கர்வம் என்றும்

குன்று,மலை,மாமலை, வானம் என்பதனை உயர்வு, உயர்ந்த, புகழின் உச்சி நிலையில் உள்ள என்றும்

ஆழத்தின் முடிவற்ற பள்ளத்தாக்கில் என்பதனை சாதார்ண இடத்தில் அல்லது அன்னாடங்காட்சி என்றும்

பொருள்படுத்தி கொண்டேன் கலாசுரன்...

ஒருவ*ர் ம*ட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்றும் வந்தால்
அமைதி என்றுமில்லை

மேலுள்ள இந்த வரிகளில் இருக்கும் 'ஒருவர்' என்பதனை படிமமாக மாற்றி கொண்டால் இந்த கவிதையில் நான் கண்டு கொண்ட பொருளுக்கு சரியாக பொருந்திவரும்..

உனக்கு கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

பாராட்டுக்கள் கலாசுரன்...

அடடா என்னவொரு கூர்மையான அவதானிப்பு ...!!

மற்றும் அதை கவிதையோடு சொன்ன விதம் அருமை ..:)

பாராட்டிற்கு மிக்க நன்றி..:)

கலாசுரன்
03-12-2011, 05:12 AM
நம்மைப் பார்த்து பிறர் சிரிப்பாய் சிரிப்பதற்கு இடம் கொடுப்பதைவிட, பிறர் சிரிப்பாய் சிரிப்பதை நாம் பார்த்து ரசிப்பது சுவரசியமே.....

அது நிதர்சனமான ஓன்று தானே

நன்றி.. :)

கலாசுரன்
03-12-2011, 05:15 AM
கவிதை சொல்வது அழகு. அதற்கு ஆதனின் ஆழ்ந்த கண்ணோட்டமும், ஜானகி அம்மாவின் வித்தியாச எண்ணவோட்டமும் கண்டு வியக்கிறேன்.
யதார்த்த உலகத்தைப் பத்து வரிகளில் அடைத்துவிட்டீர்கள். பாராட்டுகள் கலாசுரன்.

நிஜ உலகின் யதார்த்தத்தை அம்சப்படுத்துவது என்பது என் கவிதை வரிகளோடு உங்கள் பின்னூட்டமும் சேர்ந்து வேலை செய்கிறது கீதம் ...:)
நன்றி.. :)

கலாசுரன்
03-12-2011, 05:16 AM
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்..!!

முயற்சிகளுக்கு ஊக்கம் - அந்த எண்ணவோட்டம் தானே..

மடு மலையாவதும்.. மலை மாமலையாவதும்..

அதே ஓட்டம் நம்மை ஓட்டமாய் ஓடவிடாதபடி பிடித்து வைப்பதில் தான் இருக்கிறது நல்ல வாழ்க்கைப் பயணம்..

இருவேறு கோணங்களை அலசி பதிவிட்டோருக்கு பாராட்டுகள்.. கலாசுரனுக்கு வாழ்த்துகள். :)

அட இதுவும் நல்லாயிருக்கே..:)

மிக்க நன்றி.. :)

கலாசுரன்
03-12-2011, 05:18 AM
ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் ஏறியதும் அதன் சிரிப்பு அடங்கிவிடுகிறதே கலாசுரன் - அதானே நமக்கு வேண்டும்.

கவிதை மிக அருமை

ஆதன் பிரமாத படுத்தும் பின்னூட்டம்

உங்கள் பின்னூட்டம் சிந்திக்க வைத்தது

சொல்ல வந்ததை இப்படிக்கூட சொல்லலாமோ?

பிரமாதப்படுத்தியமைக்கு நன்றி.. :)

கலாசுரன்
03-12-2011, 05:19 AM
நாம் நாமாக இருந்தால் பிறரது சிரிப்பும் நமக்கும் மகிழ்வினை தரும் ...தான் உயர்ந்தவன் எனும் போது பிறரது சிரிப்பு குத்தூசி குத்தபடுவதால் ஏற்படும் வலி போன்றது ...என்ற ஆழ்ந்த கருத்தினை கூறும் உங்கள் கவிதை அருமை தோழர் ...

இந்த பரிமாற்றத்திற்கு ஒரு சிறப்பு நன்றி.. :)

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-12-2011, 07:14 AM
நல்ல கவிதை. நீங்கள் சிரித்தால் தான் அவைகள் சிரிக்கின்றன. கொஞ்சம் அழுது பாருங்கள். உங்களுடன் யார் சேர்ந்து அழுகிறார்கள் என்பது தெரியும். பிற நோக்கை கவிதையில் வெளிப்படுத்தியது நன்று. பாராட்டுக்கள்.

அக்னி
03-12-2011, 12:39 PM
நான் ஏறிச்செல்ல,
அடுத்த நிலை
என்னைப்பார்த்துச் சிரிக்கின்றது...

அடுத்த நிலை
என்னை ஏளனம் செய்வதாய்
நான் மனமுடைந்து போனால்
அது என் மடமை...

அடுத்த நிலை
நான் அடுத்ததாய் அதனிடமென
சந்தோஷிப்பதாய் நான் தொடர்ந்தால்
அதற்கடுத்த நிலைகளின் சிரிப்புக்கள்
தட்டிவிடாமல் தட்டிக்கொடுக்கும்...

வித்தியாசமான கவிதைக்குப் பாராட்டுக்கள் கலாசுரன்...
வித்தியாசமான பார்வை பொதியும் பின்னூட்டங்கள் தந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்...

vasikaran.g
07-12-2011, 03:04 AM
வித்யாசமான சிந்தனை கலாசுரன் ..

கலாசுரன்
19-12-2011, 06:15 AM
நான் ஏறிச்செல்ல,
அடுத்த நிலை
என்னைப்பார்த்துச் சிரிக்கின்றது...

அடுத்த நிலை
என்னை ஏளனம் செய்வதாய்
நான் மனமுடைந்து போனால்
அது என் மடமை...

அடுத்த நிலை
நான் அடுத்ததாய் அதனிடமென
சந்தோஷிப்பதாய் நான் தொடர்ந்தால்
அதற்கடுத்த நிலைகளின் சிரிப்புக்கள்
தட்டிவிடாமல் தட்டிக்கொடுக்கும்...

வித்தியாசமான கவிதைக்குப் பாராட்டுக்கள் கலாசுரன்...
வித்தியாசமான பார்வை பொதியும் பின்னூட்டங்கள் தந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்...

இப்பின்நூட்டத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ... :)