PDA

View Full Version : "விருப்பமில்லா இரவுகளின் நீளம் கொடுமையானது "krishna1988
05-07-2011, 11:28 PM
என் வாழ்நாளில் நான் போக கூடாத உயிரே போனாலும் போகவே கூடாத ஒரு இடமாய் எப்போதும் கருதுவது வைத்தியசாலைதான் மருந்து வாடை .நோயாளர்களின் முனகல் ., நர்சுகளின் அலட்டல் , டாக்டர்களின் முகம் , கொடூர முதுமை அல்லது முதுமையை கொடூரமாக்கிக்கொண்டவர்கள் , மரணத்துக்காய் காத்திருக்கும் மனிதர்களின் விரக்தி புன்னகை, , ஊசி வலிக்காய் அண்டம் சிதற கத்தும் குழந்தைகளின் அழுகை என்று வைத்தியசாலை அநியாயத்துக்கு மிரட்டுகிறது என்னை (இவை எனக்கு எப்போதும் ஒட்டாது என்று ஆரம்பத்திலேயே தெரிந்ததலோ என்னவோ அப்பாவின் ஆசைப்படி வைத்தியர் ஆக எனக்கு ஒரு பொறி அளவு எண்ணம் கூட வரவில்லை)
பல முறை அப்பாவுக்கு துணையாய் கொழும்பு ஆதார வைத்தியசாலையில் என் இரவுகளை நான் கழித்திருக்கிறேன் ... வாழ்நாள் முழுதும் மருந்தே உணவாகிப்போன அவருக்கு வைத்தியசாலை ஒன்றும் புதிதல்ல ஆனால் அங்கிருந்த ஒவ்வொரு நொடியையும் பல்லை கடித்துக்கொண்டு (அப்பாவுக்காக ) நான் சகித்துக்கொண்ட நாட்கள் இனிதிரும்பவே கூடாது என்றும் யாருக்கும் வரக்கூடாது என்றும் தினம் இரவுகளில் நினைப்பதுண்டு

உண்மையில் இப்போதெல்லாம் நேரம் நகரும் வேகம் கற்பனைக்கும் எட்டுதில்லை .... எப்படி நேரமானது என்றுகூட ஸ்தம்பிக்கிறேன் ஆனால் வைத்தியசாலைகளில் நான் கழித்த நொடிகள் மட்டும் ஏன் அவ்வளவு நீளமாய் இருந்தது ????
இன்றளவு வாழ்க்கையில் குறைந்த வேகத்தில் நேரத்தின் பயணம் அந்த வைத்தியசாலைகளில் தான் நான் உணர்ந்திருக்கிறேன் "

தாமரை
06-07-2011, 12:36 AM
தனிமையில் மடியும் காலங்களை விட
பூத்த ரோஜா முகம் கொண்ட செவிலியர் உடனிருக்கும் மருத்துவமனை இரவுகள்
மிக மிகச் சின்னதுதான்..

நாஞ்சில் த.க.ஜெய்
06-07-2011, 06:25 AM
வலியையும் வேதனையையும் அருகில் இருந்து காணும் போது ஏற்படும் வருத்தம் அங்கிருக்கும் இரவுகளின் தூரத்தை அதிகரித்து விடும் ...அங்கு ஒரு நாள் இருப்பவர்கள் நிலை இப்படியென்றால் அங்கிருக்கும் செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் நிலை....

த.ஜார்ஜ்
06-07-2011, 10:04 AM
தனிமையில் மடியும் காலங்களை விட
பூத்த ரோஜா முகம் கொண்ட செவிலியர் உடனிருக்கும் மருத்துவமனை இரவுகள்
மிக மிகச் சின்னதுதான்..

ரோஜா முகம் கொண்ட செவிலியர் இல்லாத மருத்துவமனையில் மாட்டிக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது.

M.Jagadeesan
06-07-2011, 01:01 PM
ஒரு மனிதன் போகக்கூடாத இடங்கள்
1 . வைத்திய சாலை
2 . காவல் நிலையம்
3 . நீதி மன்றம்
4 . சிறைச்சாலை
5 . இருமனப் பெண்டிர் வாழும் இல்லங்கள்
6 . மது விற்பனை செய்யும் இடங்கள் ( டாஸ்மார்க் )
7 . சூதாடும் இடங்கள்.

lolluvathiyar
06-07-2011, 02:57 PM
கிருஷ்னா சொன்னது போல மருத்துவமனை கொஞ்சம் நெருடும் விசயம் தான். முன்பு எல்லாம் எனக்கும் சில நெருடல்கள் ஏற்பட்டிருக்கிறது. இப்ப இதெல்லாம் பழகிபோச்சு. வயசாடிருச்சல்ல ஏற்றுகொள்ளும் மனபான்மை வந்து விட்டது

krishna1988
08-07-2011, 07:06 PM
ஒரு விடயத்தை தெளிவாகவும் வருத்தத்துடனும் தெரிவிக்கிறேன் நான் பார்த்த எந்த தாதியும் முக மலர்ச்சியோடு இருந்ததில்லை
அதற்கு அவர்களின் வேலை பலுவும் காரணம் ஆனால் நோயாளிகளின் ரட்சகர்களே அவர்கள் தான் எனவே கொஞ்சம் முக மலர்ச்சியை காட்டுவது நல்லது .......

arun
09-07-2011, 02:50 AM
ஆம் தாங்கள் சொல்வது சரியே நோயற்றே வாழ்வே குறைவற்ற செல்வம் !

sarcharan
11-07-2011, 04:16 PM
ரோஜா முகம் கொண்ட செவிலியர் இல்லாத மருத்துவமனையில் மாட்டிக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது.


நைசா ஒரு நக்கல் பிட்ட போட்டுட்டீங்க

innamburan
12-07-2011, 06:52 AM
எந்த இடத்தைத் தான் குறை சொல்லமுடியாது? பள்ளியில்: கல்வி வாட்டுகிறது. கோயிலில்: செருப்பை காணோம்! சினிமா: கூத்தடிக்கிறார்கள். தொலைக்காட்சி: தொல்லைக்காட்சி! மடம்: மடையனானோம்! வைத்தியசாலை: ரோஜாமுகம் இருக்கட்டும். நாலு பேருக்கு ஆறுதல் சொல்ல முடியும்; வியாதி தணியலாம்.
எதையும் நல்ல மனதுடன் அணுகினால், என்றும் சுகம்.