PDA

View Full Version : தாலாட்டு பாடவா ?



krishna1988
05-07-2011, 11:17 PM
வலிக்கிறது .....
என்ன என்ன வலிக்கிறது .....
நினைக்க் நினைக்க நெஞ்சு விம்மி வெடிக்கிறது ....
என்ன அவசரம் உனக்கு ...

வெட்டிப்பயளிவன்
வெறும் பயலிவன்
கடைசிவரை அப்படித்தான் என்று நீயாய் முடிவேடுத்தாயோ

இவன் உழைப்பில் எனக்கு உப்பிடுவான் என்று
ஊரெல்லாம் பேசிவைத்துவிட்டு ..
என் உதிரத்தில் உப்பில்லாமல் ஆக்கிவிட்டு
எங்கே கரைந்து போனாயோ

தகப்பன் மட்டுமா நீ எனக்கு
தங்கத்தின் தங்கம் அல்லவே
அப்பன் அல்ல நீ எனக்கு அதையும் தாண்டி..
பொன்னல்லவே நீ ?
தந்தை பெயர் மட்டுமா சுமந்தாய்
மனதில் குழந்தையாய் சுமந்த தாய் அன்றோ ?

உதவியாய் ஒன்று உன்னிடம்
எனக்கொரு குழந்தையாய் நீ வர உனக்கொரு தந்தையாய்
நான் தாலாட்டு பாடவா ?
மருஜென்மத்திலேனும் நான் தாலாட்டுப்பாட வா ....

கீதம்
09-07-2011, 09:13 AM
தந்தைக்கோர் தாலாட்டு! இருப்பவர்களின் அருமை இருக்கும்வரை நமக்குப் புரிவதே இல்லை.

எழுத்துப்பிழைகளைக் களைந்தால் கவிதை இன்னும் ஏற்றம் பெறும். வரிகளில் சேதமிருந்தாலும், வலியைச் செதுக்கியவிதம் அருமை.

செல்வா
15-07-2011, 01:10 PM
தாலாட்டுப் பாடவா? என்று தலைப்பு கேட்டாலும்
உண்மையில் தாலாட்டுப் பாட வா... என்று அழைக்கிறது தந்தையை
உருகவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்.

என்ன என்ன - எண்ண எண்ண ?

வெட்டிப்பயளிவன் - பயலிவன் ?
முடிவேடுத்தாயோ - முடிவெடுத்தாயோ?

தங்கத்தின் தங்கம் அல்லவே - அல்லாவா(வோ)?

பொன்னல்லவே - வோ?

மரு - மறு