PDA

View Full Version : யாருகிட்டயும் சொல்லிராதீங்க.த.ஜார்ஜ்
05-07-2011, 04:49 PM
வழக்கமாக ,மிகச் சரியாக, கடைசி நேரத்தில் அலுவலகம் போய் சேர்கிற எனது வண்டிக்கு வாகன நிறுத்துமிடத்தில் இடம் கிடைப்பதில்லை. நெருக்கடி. தாறுமாறாக நிறுத்திவைக்கப் பட்டிருக்கும் வண்டிகள். வேறு வழியில்லை. பெரும்பாலும் என் இருசக்கர வாகனம் வெயிலில்தான் காயும்.

இன்று அப்படியில்லை. இடமிருந்தது. இருந்த இடைவெளியில் கொண்டுபோய் நிறுத்தினேன். அந்த நெருக்கடியில் ‘சைடு ஸ்டாண்ட்’ போட்டால் பக்கத்து வண்டி இடித்தது. சலிப்புடன் பிரதான தாங்கியில் வண்டியை நிறுத்தினேன்.

பின்னால் வந்த எட்வர்ட் ‘நீங்களும் மாறிட்டீங்களா?’என்று சிரித்தான். ‘மெயின் ஸ்டாண்ட்ல வண்டியை விட்டிருக்கீங்க?’

“அதனால என்ன?”
“அப்ப உங்களுக்கு விசயமே தெரியாதா. சைடுல விட்டா சாக்காப்சர் கெட்டுருமாமே?”
“எனக்கு தெரியாதே.. யாரு சொன்னா”
“பெஸ்கிதான் நேத்து சொன்னார்.”

அப்போதுதான் கவனித்தேன். எல்லா வண்டிகளும் நிமிர்த்தி நேராக நிறுத்தப்பட்டிருந்தது. அதனால்தான் கூடுதலாக இடவசதி வந்திருக்கிறது.

வண்டியைப் பற்றி இந்த சூட்சுமம் தெரியாமல் இத்தனை காலம் பக்கவாட்டிலேயே நிறுத்தி பாழாக்கி விட்டேனோ?. அதிர்வுறிஞ்சியை [?] பரிசோதிக்க வேண்டும்.

கேன் டீனில் பெஸ்கியை பார்த்து அந்த விசயம் உண்மையா என்று கவலையோடு விசாரித்தால் சிரித்தார். மெல்ல என்னை தனியே தள்ளிக் கொண்டு போய் கிசுகிசுத்தார்.“யாருகிட்டயும் சொல்லிராதீங்க. அப்படி நம்ப வச்சதாலதான் எல்லாவனும் வண்டிய ஒழுங்க விடறான். என் வண்டி வைக்க இடம் கிடைக்குது.”
எல்லா நம்பிக்கையிலும் ஏதோ ஒரு பலன் இருக்கதான் செய்கிறது போலும்.

Narathar
05-07-2011, 05:05 PM
அருமையான கருத்தை அனாயசமாக சொல்லிவிட்டுப்போகின்றது உங்கள் பதிவு!
வாழ்த்துக்கள்!

nellai tamilan
05-07-2011, 06:54 PM
இவ்வளவு எளிமையாக ஒரு கருத்தை நகைச்சுவையோடு சொன்னமைக்கு நன்றி நண்பரே....

ஒரு சின்ன சதேகம் நான்கு சக்கர வண்டியை எப்படி வைப்பீர்கள் சாய்த்தா?

தாமரை
06-07-2011, 12:34 AM
வெள்ளந்தி மனுஷப்பயமக்கா நீர்.. யாரு என்ன சொன்னாலும் நம்பறீரே...
அப்பசரி அடுத்த சந்திப்பில கதை சொல்ல ஒரு மைக் கிடைச்சிருச்சிங்கோ!!!

:lachen001::lachen001::lachen001::lachen001:

நாஞ்சில் த.க.ஜெய்
06-07-2011, 06:02 AM
இது போன்று சில வேலைகள் செய்தால் தான் காரியம் ஆகும் என்பதை மிக சரியாக புரிந்து கொண்டிருக்கிறார் உங்கள் தோழர் ஜார்ஜ் அவர்களே...

த.ஜார்ஜ்
06-07-2011, 09:53 AM
அருமையான கருத்தை அனாயசமாக சொல்லிவிட்டுப்போகின்றது உங்கள் பதிவு!
வாழ்த்துக்கள்!

நன்றி நண்பரே.

த.ஜார்ஜ்
06-07-2011, 09:55 AM
இவ்வளவு எளிமையாக ஒரு கருத்தை நகைச்சுவையோடு சொன்னமைக்கு நன்றி நண்பரே....

ஒரு சின்ன சதேகம் நான்கு சக்கர வண்டியை எப்படி வைப்பீர்கள் சாய்த்தா?

இப்படிக் கேட்டால் காரை வைத்துக் கொள்ள முடியாது என்றுதான் சொல்லவருகிறது.:D

த.ஜார்ஜ்
06-07-2011, 09:58 AM
வெள்ளந்தி மனுஷப்பயமக்கா நீர்.. யாரு என்ன சொன்னாலும் நம்பறீரே...
அப்பசரி அடுத்த சந்திப்பில கதை சொல்ல ஒரு மைக் கிடைச்சிருச்சிங்கோ!!!

:lachen001::lachen001::lachen001::lachen001:

ஆமா அடிக்கடி இங்க மழை பெய்யுது. [நான் சரியா புரிஞ்சுகிட்டேனா...?:D:D:D:D ]

த.ஜார்ஜ்
06-07-2011, 10:01 AM
இது போன்று சில வேலைகள் செய்தால் தான் காரியம் ஆகும் என்பதை மிக சரியாக புரிந்து கொண்டிருக்கிறார் உங்கள் தோழர் ஜார்ஜ் அவர்களே...

சில ஒழுங்குகளை நாம இப்படிதான் செய்துகிட்டு இருக்கமோ?

aren
06-07-2011, 01:00 PM
நல்ல ஐடியாவாத்தான் இருக்கு

arun
09-07-2011, 02:53 AM
என்னத்த செய்ய இது மாதிரி எதுனா சொன்னா தான் பய புள்ளைங்க கேக்குறாய்ங்க ! ! :D :D :lachen001: :lachen001:

கௌதமன்
09-07-2011, 06:25 PM
நாங்க கொஞ்சம் டெக்னிக்கலா சொல்லுவோமுல்ல. சைடு ஸ்டாண்ட் போட்டா பேட்டரி சீக்கிரம் வீக் ஆயிருமுன்னு.

innamburan
09-07-2011, 10:18 PM
பாயிண்ட் மேட், ஜார்ஜ்! நான் கூட ஒரு அடாவடி செஞ்சேன். கேட்டா தான் சொல்லலாம்!

Ravee
10-07-2011, 02:40 AM
ஜார்ஜ் அண்ணா சைடில வண்டிய விட்டா சாக்அப்சர் கெடாது கன்னம்தான் பழுத்து போகும் .... :lachen001:

மன்மதன்
10-07-2011, 10:52 AM
சாப்பிட்ட தட்டுல தண்ணி ஊத்தி வைக்கலேன்னா வயிறு காஞ்சி போயிடும்னு கேள்விப்பட்டிருக்கேன்..அது போல இது..நல்ல ஐடியா..:)

ஓவியன்
10-07-2011, 11:41 AM
அடடே உங்களுக்குத் தெரியாதா ஜார்ஜ், மெயின் ஸ்டாண்டுல வண்டியை நிறுத்தினா மெயின் ஸ்டாண்டு கெட்டுப் போயிருமே.......... !!! :eek:

த.ஜார்ஜ்
10-07-2011, 04:15 PM
நாங்க கொஞ்சம் டெக்னிக்கலா சொல்லுவோமுல்ல. சைடு ஸ்டாண்ட் போட்டா பேட்டரி சீக்கிரம் வீக் ஆயிருமுன்னு.

நல்ல ஐடியாவாத்தான் இருக்கு

:lachen001:

த.ஜார்ஜ்
10-07-2011, 04:17 PM
அடடே உங்களுக்குத் தெரியாதா ஜார்ஜ், மெயின் ஸ்டாண்டுல வண்டியை நிறுத்தினா மெயின் ஸ்டாண்டு கெட்டுப் போயிருமே.......... !!! :eek:

ஜார்ஜ் அண்ணா சைடில வண்டிய விட்டா சாக்அப்சர் கெடாது கன்னம்தான் பழுத்து போகும் .... :lachen001:

ஆளாளுக்கு என்னென்னமோ சொல்லி இப்படி பயமுறுத்தக் கூடாது.[ நான் வண்டிய வித்திரலாம்னு இருக்கேன்.]

த.ஜார்ஜ்
10-07-2011, 04:20 PM
என்னத்த செய்ய இது மாதிரி எதுனா சொன்னா தான் பய புள்ளைங்க கேக்குறாய்ங்க ! ! :D :D :lachen001: :lachen001:
ஆமால்ல..

பாயிண்ட் மேட், ஜார்ஜ்! நான் கூட ஒரு அடாவடி செஞ்சேன். கேட்டா தான் சொல்லலாம்!
அதையும்தான் சொல்லுங்களேன்.கேட்போம்.

சாப்பிட்ட தட்டுல தண்ணி ஊத்தி வைக்கலேன்னா வயிறு காஞ்சி போயிடும்னு கேள்விப்பட்டிருக்கேன்..அது போல இது..நல்ல ஐடியா..:)

கடைபிடிச்சி பாருங்க.

சேவியர்
12-07-2011, 05:34 PM
நல்ல ஏமாந்திட்டிங்க

innamburan
12-07-2011, 08:25 PM
ஒரு பிரான்ச் ஆபீசை பத்தி, ஜார்ஜ், தினந்தோறும் கம்ப்ளையிண்ட். ஒண்ணும் சரியா வரல்லே. சொல்லாமக்கொள்ளாம அந்த ஊருக்கு போனேன். ஆபீஸ்லே நான் தான் பாஸ். ஆனா, அவங்களுக்கு அடையாளம் தெரியாது. வாசல் சைக்கிள்ஸ்டாண்டில் எல்லாம் கோணா மாணா. எல்லா சைக்கிளையும் நான் வீழ்த்தினேன். சண்டைக்கு வந்தாஹ. எல்லாருக்கும் ஒரு சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்துட்டு அன்னிக்கே ஊருக்கு போய்விட்டேன். ஆபீஸ்லே சொல்லல்லை. அதனாலெ, நோ சஸ்பெண்ட்டு! ஒரு பத்து நாள் பயந்து கிடந்த அவங்க, அப்ரம் கம்ப்ளைண்ட் அனுப்பறதே இல்லை. அடாவடியா இது?