PDA

View Full Version : விடியல்



inban
05-07-2011, 02:42 AM
உதயத்தை காணாத எவனும்
அந்த நாளின்
அற்புதம்
இழந்து விடுகிறான்.

கொட்டும் மழை...
குளிர்ந்த காற்று...
துளிர்விடும் குருத்து...
மலரின் மடல்...
காணாத எல்லா கண்களையும்
காலன்
ஒருபோதும் மன்னிக்க மாட்டான்.

உச்சி வானில் ஓடும் மேகங்களை
ஒரு நிமிடம்
உள்ளத்திலே ஓட விடுங்கள்
குறைந்த பட்சம்
நோய் வராது.

எப்படி பூ மலர்கிறது
எப்படி விதை முளைக்கிறது
எங்கனம் உதயம் எழுகிறது
பார்க்காதவனுக்கெல்லாம்
கண்கள் அவசியம் இல்லை .

ஜானகி
05-07-2011, 04:08 AM
" அயோத்தியர் கோமானைக் காணாத கண் என்ன கண்ணோ, கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணோ " என அன்று பாடினார் ஒரு ஆழ்வார்.....

இயற்கையின் அழகைப் பருகாத கண் எதற்கு என்று மருகுகிறார் இன்று இவர்.....

இயற்கையில் இறைவனைக் கண்டு மகிழ்வோமாக...

Ravee
05-07-2011, 09:52 AM
எப்படி பூ மலர்கிறது
எப்படி விதை முளைக்கிறது
எங்கனம் உதயம் எழுகிறது
பார்க்காதவனுக்கெல்லாம்
கண்கள் அவசியம் இல்லை .


சத்தியமான வார்த்தைகள் ... :)

inban
05-07-2011, 12:49 PM
நன்றி நண்பர்களே.....
-இன்பன்

கௌதமன்
05-07-2011, 02:12 PM
நல்ல கவிதை!

காணப்படுகின்ற பிழைகளையும் திருத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.

M.Jagadeesan
05-07-2011, 02:57 PM
[QUOTE=ஜானகி;530353]" அயோத்தியர் கோமானைக் காணாத கண் என்ன கண்ணோ, கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணோ " என அன்று பாடினார் ஒரு ஆழ்வார்.....

ஜானகி அவர்களே ஒரு திருத்தம்.

சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ அடிகள்,

பெரியவனை, மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும், கையும், திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?

என்று பாடியுள்ளார். திருத்தம் செய்தமைக்கு மன்னிக்கவும் ஜானகி அவர்களே!

ஜானகி
06-07-2011, 05:39 AM
[QUOTE=ஜானகி;530353]" அயோத்தியர் கோமானைக் காணாத கண் என்ன கண்ணோ, கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணோ " என அன்று பாடினார் ஒரு ஆழ்வார்.....

ஜானகி அவர்களே ஒரு திருத்தம்.

சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ அடிகள்,

பெரியவனை, மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும், கையும், திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?

என்று பாடியுள்ளார். திருத்தம் செய்தமைக்கு மன்னிக்கவும் ஜானகி

அவர்களே!

திருத்தியதற்கு நன்றி.