PDA

View Full Version : உதட்டு உலகம்

inban
05-07-2011, 02:23 AM
ஒரு முத்தம் நீ வைக்க
உயிர் சத்தம் போடுதடி
மறுமுறையும் வேண்டுமென்று
மெய் பிதற்றிப் பாடுதடி

திரு உதட்டைத் தின்னவேண்டும்
தேகம் எங்கும் தங்கவேண்டும்
உருவில்லா ஒரு ஆசை
உயிர் கரையில் மோதுதடி

சிரிப்பதுவும் சினுங்குவதும்
செவ்விதழின் மொழிகள் என்றால்
சிதைப்பதுவும் வதைப்பதுவும்
எம்மொழி நீ சொல்லடியோ

காது மடல் கீழிருந்து
கனியுதடு பாதை தேட
சாது போலத்தானிருந்து
சாதித்தப் பூங்கொடியே

பாராத உன் விழிதான்
உயிர் பார்த்த விந்தைதனை
யாரிடம் நான் இயம்புவதோ
எங்கிருந்து தொடங்குவதோ

உலகமதை மறந்துவிட்டேன்
உதட்டிடம்தான் விழுந்துவிட்டேன்
உதடுதான் உலகமென
ஓர்ந்து நானும் உணர்ந்து கொண்டேன்
-இன்பன்

கீதம்
09-07-2011, 09:20 AM
உதட்டிடம் தடுக்கி விழுந்து எழுமுன் எழுந்த கவிதை இது என்பதை ஒவ்வொரு வரியிலும் தென்படும் கிறக்கமே பறைசாற்றுகிறது. மயக்கம் தெளிந்தபின்னும் ஒரு உதட்டு உலகம் உள்ளது. அது அதட்டு உலகம். அதிலிருந்து தப்பும் வழியையும் இப்போதே ஆய்ந்தறிந்துகொள்ளுங்கள்.:)

Ravee
10-07-2011, 02:36 AM
போதையாகும் நண்பர்கள் பலரை பார்த்து இருக்கிறேன் .... முதலில் எல்லாம் சவுண்டாதான் இருக்கும் ..... அப்புறம் கிர் அடிச்சு ஒரு தலைவலி வரும் பாருங்க ..... அதை அனுபவிக்குறவன் பக்கத்தில் இருந்தால் தெரியும் சேதி ............. அது போலத்தான் இதுவும் .... நினைவுகள் நிஜமாகும் போது பின்விளைவுகள் ...... சொல்லி புரியாது .....அனுபவ பாடம் படிங்க .

ஆஹா , கொல்லி மலை எங்கெல்லாம் நினைவுக்கு வருது ... :lachen001:

inban
10-07-2011, 04:51 PM

நண்பரே உதட்டின்மீது எப்போது மோகம் தீர்ந்துபோகுமோ அப்போதே தீர்ந்திடுவான் இன்பன்.
உயிரின் ஒவ்வொரு செல்லிலும் உட்க்கார்ந்து கொண்டு உதடு படிக்கும் கீதமிருக்கிறதே அதுதான் என்னை எல்லாவற்றையும் விட முதலாவதாக எழுதுகோல் எடுக்கவைக்கிறது ...ஹிஹி ஹிஹி http://www.tamilmantram.com/vb/images/icons/icon10.gif

jaffer
10-10-2011, 06:18 AM
செம போதையான உதட்டு கவிதை - உதட்டு மேல் உள்ள போதை மட்டும் எப்பவுமே போவதில்லை

seguwera
10-10-2011, 08:36 AM
உங்கள் உதட்டோவியம் அருமை நண்பரே

vseenu
10-10-2011, 08:37 AM
சிரிப்பதுவும் சினுங்குவதும்
செவ்விதழின் மொழிகள் என்றால்
சிதைப்பதுவும் வதைப்பதுவும்
எம்மொழி நீ சொல்லடியோ
இன்பனின் அருமை கவிதை வரிகள்.வாழ்த்துக்கள்