PDA

View Full Version : அன்றொருநாள்: ஜூலை 3innamburan
03-07-2011, 05:47 AM
அன்றொருநாள்: ஜூலை 3

‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்றாள் ஒளவைப்பாட்டி. அத்துடன் புகழும் ஈட்டினார், நமது இன்றைய தலைமாந்தர் (ஜூலை 3, 1924). எடுபிடியாக 15 வயதில் தொடங்கி, தொழிலாளர் துறையில் பல பணிகளில் அனுபவம் பெற்ற பின், எகிப்தில் அரசு சார்பில் பிரதிநிதித்வம், அமைச்சரகங்களில் பல உயர்வு பதவிகள், வேவு பார்க்கும் அலுவலங்களின் மேற்பார்வை, தனியார் துறையில் தலைமை பொறுப்பு, இதழியல் அனுபவம், மலேஷியா, அமெரிக்காவில் அரசு சார்பில் பிரதிநிதித்வம், பாதுகாப்புத்துறை ஆய்வு மையத்தின் தலைமை, தேசீய பல்கலைக்கழகத்தில் உயர்பதவி என்ற ஏணிப்படிகளில் ஏறி, தன்னுடைய நாட்டின் அதிபராக, தன் 75வது வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்,

ராமேஸ்வரத்துக்கு அன்னை நேர்ந்துகொண்டு சென்ற யாத்திரையின் தவப்புதல்வன் என்று குடும்பத்தில் சொல்லிக்கொள்வார்களாம். வறுமையினால் தந்தையின் தற்கொலையும், பிற்காலம், தாயுடன் வாய்ச்சண்டை போட்டு வீட்டை விட்டு ஓடியதும், அவருடைய கசப்பான நினைவுகள். இவரது திருமணம் ஒரு திருப்புமுனை எனலாம். ஊர்மிளா என்ற வங்காளிப்பெண்ணின் குடும்பம் அண்டை, அயல் தான். எனினும், அவளின் பெற்றொர்கள் எதிர்த்ததால், 16 வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. என்னை கேட்டால், அது அவர்களின் ஆத்மபலம் என்பேன். ஆசைக்கு ஒரு பெண், இரண்டு பேத்திகள். ஆஸ்திக்கு ஒரு பிள்ளை. இவர் தமிழுலகத்துக்கு, ஒரு சிவன் மோயில் கட்டியும், ஆரம்பப்பள்ளியும், குடும்பநல ஆலோசனை மையம் தொடங்கியும் சேவை செய்துள்ளார். ‘சிங்கைவாழ் எல்லா இனமக்கள் யாவரும் என் பேட்டையை சார்ந்தவர் என்று சொன்ன இவர் தான் எஸ். ஆர். நாதன் எனப்படும் செல்லப்பன் ராமநாதன். சிங்கை ராஜாங்கத்தின் அதிபர்; இரண்டாவது அதிபர், செப்டம்பர் 1, 1999 முதல்; 2005ம் வருடம் மறு தேர்வு. வரப்போகும் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதில்லை. அது பற்றி இரு நாட்கள் முன்பு க்ளுப்தமாக ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். இணைத்துள்ளேன்; படியுங்கள்.

சிங்கையின் அரசு முறை ஆங்கில பாராளுமன்றத்தைத் தழுவியதாக இருந்தது. சிங்கை அதிபரை மக்கள் நேரடி தேர்வு செய்யும் வகையில் ஜனவரி 1991ல் அது மாற்றப்பட்டது. அதன்படி, நாட்டின் செல்வத்தையும், வளத்தையும், அரசு இயந்திரத்தின் திறனையும், நாணயத்தையும் காப்பது, அவர் கடமையே. இந்தியாவில் ஜனாதிபதி இஸ்பேட் ராஜா/ டயமண்ட் ராணி; அத்துடன் சரி. சிங்கை சிறிய தீவு நகரம். ஆட்சித்திறனும், கட்டுக்கோப்பும், சட்டத்தின் பிடியும் உலக பிரசித்தம்.

ஒரு சமயம் அங்கு நான் விமானம் மாற்றவேண்டியிருந்தது. 6 மணி நேரம் இடை வெளி. சுற்றுலா பணியாளர்கள் ஊர் சுற்றி காண்பித்தார்கள். படு சுத்தம். எங்கு பார்த்தாலும் ‘ராஃபில்ஸ்’ இது; ‘ராஃபில்ஸ்’ அது. அவர் தான் அந்த நாட்டு ஸ்தாபகர்.

இன்னம்பூரான்

03 07 2011

பி.கு. சின்ன கட்டுரை. ஆனால், போர் அடிக்குதோ? அது தான் ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி!

உசாத்துணை:

http://infopedia.nl.sg/articles/SIP_490_2004-12-23.html

http://www.istana.gov.sg/content/istana/thepresident.html

பாரதி
03-07-2011, 09:01 AM
நாதனைக்குறித்த விபரங்களுக்கு நன்றி ஐயா.
மொரிசீயஸ், ஃபிஜி, (நியூசிலாந்து?).... இப்படி நம் நாட்டவர்களின் சந்ததியினர் ஆளுமையை பார்க்கத்தான் செய்கிறோம். நம் நாட்டிலும் அப்படி ஆட்சி செய்வோர் வருவாரோ என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கத்தான் வேண்டி இருக்கிறது.