PDA

View Full Version : குதிரை அறியுமா என் மனதை ?



Ravee
03-07-2011, 01:06 AM
https://lh3.googleusercontent.com/-V1ETsu2YGzs/TnF7TuWfxrI/AAAAAAAAA0o/i8QnpKc6qr8/narwhal-unicorn.jpg

குதிரை அறியுமா என் மனதை?

கனவில் வந்தன

நார்வேலும், யுனிகானும்

காதல் செய்தன

கட்டிக்கொண்டன

கன்னத்தோடு கன்னம்

ஒட்டி கொண்டன

என்ன மாதிரி கலவி இது என்றேன்

பொருந்துமா உங்கள் உறவு என்றேன்

குதிரை சிலுப்பிக்கொண்டது

குருடனே நிமிர்ந்து பார்

கொம்புகளே எம் பொருத்தம் என்றது

கொம்புகள் பொருந்தினால் போதுமா

நீயோ கடற்கரையில்

அதுவோ கடலின் ஆழத்தில் என்றேன்

குதிரை சிரித்தது ..... வாழ்வில் நம்பிக்கை வை

வானம் வளைந்து கொடுக்கும்

பார் வானவில்லை

கடலுக்கும் கரைக்கும் பாலமாய் என்றது...

வானம் வளைந்தது உண்மைதான்

வாழ்விருக்கும் வரை வளைந்திருக்குமா

குதிரைக்கு சொந்தம் என்பதால்

குடி கொண்ட கேள்வி என் மனதில்

குதிரை அறியுமா என் மனதை ?


https://lh4.googleusercontent.com/-Mhq0IO8zpQI/TnF7kjoY6yI/AAAAAAAAA0s/1A-QXhrUOuk/Unicorn1.jpg

கருணை
14-09-2011, 09:54 PM
வாழ்வில் நம்பிக்கை வை

வானம் வளைந்து கொடுக்கும்

பார் வானவில்லை

கடலுக்கும் கரைக்கும் பாலமாய் என்றது...


இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு, எல்லாமே நம்பிக்கையில் தானே இருக்கிறது.

Ravee
15-09-2011, 04:19 AM
வாழ்வில் நம்பிக்கை வை

வானம் வளைந்து கொடுக்கும்

பார் வானவில்லை

கடலுக்கும் கரைக்கும் பாலமாய் என்றது...


இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு, எல்லாமே நம்பிக்கையில் தானே இருக்கிறது.


நம்பிக்கையை மீறிய அசாதாரணங்கள் நடக்கும் சில நேரம் ... :redface: உறவுகள் கவலை படுவது அதனை கருதிதான் .... :frown: