PDA

View Full Version : விலை போகாத கவிதை விலை போனது

Ravee
03-07-2011, 12:45 AM
http://eluthu.com/kavithai-image/15216.gif

விலை போகாத கவிதை விலை போனது

விற்பனைக்கு வந்த போது

விலை போகாத கவிதை வரிகள்

கடலைகள் கொறித்த பின்

கவனமாய் பத்திரப்படுத்தப்பட்டன.

தொடர்ந்த கவிதை வரிகள்

தொக்கி கொள்ள மறு பக்கத்தில்

இரண்டாம் முறையும் வாங்கினான்

இன்னும் ஒரு பொட்டணம் ..... :icon_ush:

விலை போகாத கவிதை ஒன்று

விலை போனது கடலையால்

ஒரு முறையல்ல ...........இரு முறை ... :wuerg019:

M.Jagadeesan
03-07-2011, 01:09 AM
விலை போகாத கவிதை கிடைத்தது இரவிக்கு
கடலை விற்ற காசு கிடைத்தது சிறுவனுக்கு
விலை மதிப்பில்லா கவிதை கிடைத்தது எங்களுக்கு.

Ravee
03-07-2011, 01:13 AM
விலை போகாத கவிதை கிடைத்தது இரவிக்கு
கடலை விற்ற காசு கிடைத்தது சிறுவனுக்கு
விலை மதிப்பில்லா கவிதை கிடைத்தது எங்களுக்கு.

நன்றி அய்யா ....:)

கீதம்
03-07-2011, 01:46 AM
நாவலாயிருந்திருந்தால் நாளையப் பொழுதின் கவலையும் மறைந்திருக்கும் கடலை விற்கும் சிறுவனுக்கு!

எப்படி இப்படியெல்லாம்? ரொம்ப நல்லா இருக்கு ரவி.

Ravee
03-07-2011, 01:58 AM
நாவலாயிருந்திருந்தால் நாளையப் பொழுதின் கவலையும் மறைந்திருக்கும் கடலை விற்கும் சிறுவனுக்கு!

எப்படி இப்படியெல்லாம்? ரொம்ப நல்லா இருக்கு ரவி.

எதாவது எழுதனும்ன்னு உக்காந்த தோணாத வரிகள் யதார்த்தமாய் அமையும் போது அழகா இருக்கு அக்கா

innamburan
03-07-2011, 05:56 AM
அமைவது எல்லாம், ரவி, ஒரு கொடுப்பினை.

Nivas.T
03-07-2011, 07:01 AM
ரசிக்க வைக்கும் சிந்தனை

மிக அருமை

Ravee
04-07-2011, 09:31 AM
அமைவது எல்லாம், ரவி, ஒரு கொடுப்பினை.

ரசிக்க வைக்கும் சிந்தனை

மிக அருமை

கொடுத்து வைத்ததால் நான் ரசித்த சிந்தனை ..... உங்களுடன் பகிர்ந்தேன் ........... நன்றி நண்பர்களே

ஆதி
04-07-2011, 09:46 AM
இதை வாசிக்கும் போது நா.முத்துக்குமாரின் கவிதையொன்று ஞாபகத்துக்கு வருகிற*து...

பொண்டாட்டி தாலியை

அடகு வைச்சு

புஸ்தகம் போட்டேன்

XXX... .

விசிட்டிங் கார்டு மாதிரி

ஓசியில் தர வேண்டியிருக்கு

Ravee
04-07-2011, 10:05 AM
இதை வாசிக்கும் போது நா.முத்துக்குமாரின் கவிதையொன்று ஞாபகத்துக்கு வருகிற*து...

பொண்டாட்டி தாலியை

அடகு வைச்சு

புஸ்தகம் போட்டேன்

XXX... .

விசிட்டிங் கார்டு மாதிரி

ஓசியில் தர வேண்டியிருக்கு

XXX... .... :lachen001: கவிஞர் ஏன்தான் இப்படி ஒரு வரியை சேர்த்தாரோ .... அந்த அளவு நொந்து போய் இருந்திருக்கலாம்

ஆதி
04-07-2011, 11:20 AM
XXX... .... :lachen001: கவிஞர் ஏன்தான் இப்படி ஒரு வரியை சேர்த்தாரோ .... அந்த அளவு நொந்து போய் இருந்திருக்கலாம்

நவீனத்துவ இலக்கியம் என்பது மக்களின் வழக்கு மொழிகளில், மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுத முயல்வது, ஆனால் நவீனத்துவத்துக்கு தனி மொழி உருவாக்கும் எத்தனிப்பில் மக்களுக்கு புரியா வகையிலேயே நவீனத்துவவாதிகள் தம் வடிவத்தை உருவாக்குகிறார்கள்..

நா.முத்துகுமார், மனுஸ்ய புத்திரன் போன்றவர்கள் அதில் விதிவிலக்கு..

விரக்தியை, இந்த சமூகத்தின் மீதான கோபத்தை, மனதிற்குள் உள்ள வலியை, தன் வக்கற்ற நிலையை அந்த ஒரு வார்த்தை அப்பட்டமாய் பிரதிபளிதுவிடுகிறது அண்ணா..

அந்த வார்த்தையை விட வழிமையான ஒன்றை அந்த பொருத்த முடியுமா என்றால், அது சந்தேகம்தான்...

மதி
04-07-2011, 11:25 AM
அமரன் கல்யாணத்திற்கு போகும் முன் தான் இதைப்படித்தேன். அப்போது ஜானகியம்மா மற்றும் தக்ஸுடன் பேசிக்கொண்டிருந்த போது இதை சொன்னேன். அப்போது தோன்றிய கவிதை.. என்றும் ஒன்றை சொல்லை..

கடலைப் பார்த்துக் கொண்டே
கடலை போட்ட படி
கடலை சாப்பிட்ட தாளில்...

இப்படி சொல்லிட்டு இருக்கும் போதே.. தக்ஸ் சொன்னது..

"விடு.. மச்சி.. எதுக்கு வராத விஷயத்துக்கெல்லாம் கஷ்டப்பட்டுக்கிட்டு"

அவன் கவிதையை சொன்னானா.. கடலையை சொன்னானா என்று இன்னும் புரியவில்லை..!!

ஆதி
04-07-2011, 11:27 AM

இரட்டுற மொழிதலாக இருக்கலாம் மதி :)

மதி
04-07-2011, 11:27 AM
சொல்ல மறந்துட்டேன்...

ரொம்பவே கவர்ந்த வரிகள்..

"விலை போகாத கவிதை விலை போனது கடலையால்.."

பின்ன எத்தனை நாளைக்குத் தான் வைரமுத்துவையும் கண்ணதாசனையும் காப்பியடிச்சு கடலை போடறதுனு சொல்லவரீங்களா??:icon_ush::icon_ush:

மதி
04-07-2011, 11:28 AM
இரட்டற மொழிதலாக இருக்கலாம் மதி :)

அதே.. அதே..
தக்ஸுக்கும்
இரட்டுற மொழிதல்
வருகிறதே! (ஆச்சர்யக்குறி):icon_b:

ஆதி
04-07-2011, 11:33 AM
அதே.. அதே..
தக்ஸுக்கும்
இரட்டுற மொழிதல்
வருகிறதே! (ஆச்சர்யக்குறி):icon_b:

கவித.. கவித..

தக்ஸ்..

கவிஞன்.. கவிஞன்..

ரங்கராஜன்
04-07-2011, 11:38 AM
அடிங்க அப்பிரிக்கா குரங்குகளா.....

உங்க சாராயத்துக்கு நான் ஊர்காவா........

நான் தண்ணி அடிக்க ஆரம்பிச்சா, என்னவாகும் தெரியுமில்ல, கொல்லிமலை அந்த இரவை நினைத்துப்பாருங்கள்...... பயபுள்ளங்களுக்கு குளிர்விட்டு போச்சு...... வாங்கடா மூணாறுல வச்சி இருக்கேன் உங்களுக்கு......

ஆதி
04-07-2011, 11:44 AM
நான் தண்ணி அடிக்க ஆரம்பிச்சா, என்னவாகும் தெரியுமில்ல, கொல்லிமலை அந்த இரவை நினைத்துப்பாருங்கள்...... பயபுள்ளங்களுக்கு குளிர்விட்டு போச்சு...... வாங்கடா மூணாறுல வச்சி இருக்கேன் உங்களுக்கு......

இதுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம் கவிஞரே..

மச்சி, காளமேகத்தை வென்ற கால்மேகம் டா நீ....

Ravee
04-07-2011, 11:51 AM
இதுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம் கவிஞரே..

மச்சி, காளமேகத்தை வென்ற கால்மேகம் டா நீ....

ஆதன் ...அந்த காளத்தை இந்த வேழம் வென்றதா ? எப்ப ? எங்கே?

ஆதி
04-07-2011, 11:53 AM
ஆதன் ...அந்த காளத்தை இந்த வேழம் வென்றதா ? எப்ப ? எங்கே?

அதான் "கால்"ல நு சொல்லிருக்கனே அண்ணா..

ஜானகி அம்மாவுடனும், மதியுடனும் சந்திப்பில் கலந்தாடி கொண்டிருந்த போது இரட்டுற மொழிந்ததால்..

இன்றிலிருந்து நீ

காளமேகத்தை வென்ற கலமேகம் என்று அன்போடு போற்றப்படுவாய்...

Ravee
04-07-2011, 11:55 AM
அடிங்க அப்பிரிக்கா குரங்குகளா.....

உங்க சாராயத்துக்கு நான் ஊர்காவா........

நான் தண்ணி அடிக்க ஆரம்பிச்சா, என்னவாகும் தெரியுமில்ல, கொல்லிமலை அந்த இரவை நினைத்துப்பாருங்கள்...... பயபுள்ளங்களுக்கு குளிர்விட்டு போச்சு...... வாங்கடா மூணாறுல வச்சி இருக்கேன் உங்களுக்கு......

ஹையா ஒரு ஆள் சிக்கிட்டார் ..... தலை , தகஸ் ..... சபாஷ் சரியான ஜோடி

மதி
04-07-2011, 11:56 AM
"காலில்" இருந்ததாக சொல்லலியே.. அவர்களை சந்தித்தபோது நடந்தது இது..!!
காலுக்கு வேறு அர்த்தம் இருக்குதோ?

ஆதி
04-07-2011, 11:58 AM
காலுக்கு வேறு அர்த்தம் இருக்குதோ?

பப்ளிக் பப்ளிக்....

"காலில்" இருந்ததாக சொல்லலியே.. அவர்களை சந்தித்தபோது நடந்தது இது..!!

ஓ.. அப்படியா, அப்போ அடைமொழிய மாற்றனுமே...

Ravee
04-07-2011, 12:05 PM
பப்ளிக் பப்ளிக்....

ஓ.. அப்படியா, அப்போ அடைமொழிய மாற்றனுமே...

என்ன நடந்தது என்பது கால் கோவிந்தனுக்கே வெளிச்சம் ... :lachen001:

ஆதி
04-07-2011, 12:06 PM
என்ன நடந்தது என்பது கால் கோவிந்தனுக்கே வெளிச்சம் ... :lachen001:

கலமேகம் என்று மாற்றியாச்சு...

Nivas.T
04-07-2011, 01:01 PM
இப்படி சொல்லிட்டு இருக்கும் போதே.. தக்ஸ் சொன்னது..

"விடு.. மச்சி.. எதுக்கு வராத விஷயத்துக்கெல்லாம் கஷ்டப்பட்டுக்கிட்டு"

அவன் கவிதையை சொன்னானா.. கடலையை சொன்னானா என்று இன்னும் புரியவில்லை..!!

இரட்டுற மொழிதலாக இருக்கலாம் மதி :)

அதே.. அதே..
தக்ஸுக்கும்
இரட்டுற மொழிதல்
வருகிறதே! (ஆச்சர்யக்குறி):icon_b:

கவித.. கவித..

தக்ஸ்..

கவிஞன்.. கவிஞன்..

இதுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம் கவிஞரே..

மச்சி, காளமேகத்தை வென்ற கால்மேகம் டா நீ....

ஆதன் ...அந்த காளத்தை இந்த வேழம் வென்றதா ? எப்ப ? எங்கே?

அதான் "கால்"ல நு சொல்லிருக்கனே அண்ணா..

ஜானகி அம்மாவுடனும், மதியுடனும் சந்திப்பில் கலந்தாடி கொண்டிருந்த போது இரட்டுற மொழிந்ததால்..

இன்றிலிருந்து நீ

காளமேகத்தை வென்ற கலமேகம் என்று அன்போடு போற்றப்படுவாய்...

ஹையா ஒரு ஆள் சிக்கிட்டார் ..... தலை , தகஸ் ..... சபாஷ் சரியான ஜோடி

"காலில்" இருந்ததாக சொல்லலியே.. அவர்களை சந்தித்தபோது நடந்தது இது..!!
காலுக்கு வேறு அர்த்தம் இருக்குதோ?

ஓ.. அப்படியா, அப்போ அடைமொழிய மாற்றனுமே...

என்ன நடந்தது என்பது கால் கோவிந்தனுக்கே வெளிச்சம் ... :lachen001:

கலமேகம் என்று மாற்றியாச்சு...

ஐ............. எனக்கு சந்தோசமா இருக்கு :icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::D:D:D

கௌதமன்
04-07-2011, 01:25 PM
விலை போகாத கவிதையல்ல
அவன் விற்றதே கவிதையைத்தான்
கடலை இலவசம்!

Ravee
05-07-2011, 05:57 AM
ஐ............. எனக்கு சந்தோசமா இருக்கு :icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::D:D:D

சிலருக்கு பார்த்தால் பரவசம் .....இவருக்கு கேட்டாலே சந்தோசம் போல .... :p

நாஞ்சில் த.க.ஜெய்
05-07-2011, 08:51 AM
விலைபோகாத கவிதையினை விலைபேசி விற்ற சிறுவன் புத்திசாலிதான் ....

Ravee
05-07-2011, 09:20 AM
விலைபோகாத கவிதையினை விலைபேசி விற்ற சிறுவன் புத்திசாலிதான் ....

சிறுவனின் புத்திசாலித்தனம் எங்கே இதில் வந்தது ........:icon_hmm:

நாஞ்சில் த.க.ஜெய்
05-07-2011, 11:25 AM
http://eluthu.com/kavithai-image/15216.gif
இதோ இங்கிருந்துதான்...யாவரோ எழுதிய கவிதையினை பொட்டலம் கட்டி அவன் புகழ் பரப்பும் வகையில் சுண்டல் விற்றது ஒளிபடத்திலுள்ள சிறுவன் என்றால் ..அந்த புகழ் பரப்பிய சிறுவன் புத்தியுள்ளவன் தானே ....

Ravee
05-07-2011, 12:22 PM
[QUOTE=நாஞ்சில் த.க.ஜெய்;530411]http://eluthu.com/kavithai-image/15216.gif
இதோ இங்கிருந்துதான்...யாவரோ எழுதிய கவிதையினை பொட்டலம் கட்டி அவன் புகழ் பரப்பும் வகையில் சுண்டல் விற்றது ஒளிபடத்திலுள்ள சிறுவன் என்றால் ..அந்த புகழ் பரப்பிய சிறுவன் புத்தியுள்ளவன் தானே ...

காகம் இட்ட எச்சத்தில் விளைந்த மரத்தால் விளைந்த நன்மையை காகம் அறியுமா .... அது போலத்தானே இந்த சிறுவனும் .... :)

தாமரை
05-07-2011, 12:27 PM
கடலை வாங்கினால்
கவிதை இலவசம்..

இரவி உங்களுக்குப் பிஸினஸ் பிளான் கிடைச்சிருச்சி போல இருக்கே!!!

Ravee
05-07-2011, 01:14 PM
கடலை வாங்கினால்
கவிதை இலவசம்..

இரவி உங்களுக்குப் பிஸினஸ் பிளான் கிடைச்சிருச்சி போல இருக்கே!!!

கடற்கரையில் காதல் கவிதைகள் மட்டுமே வாங்கப்படும் ...:209:
.. என் கதறல் கவிதைகளை கொள்வார் யாரோ ...:eek:
எனவே அவையிலே இந்த தருமிக்கு காதல் கவிதைகள் :wub: எழுதிக்கொடுப்பவர் யாரோ ......
கண்டிப்பாக காதல் கவிதைகள் கடலை விற்பனைக்குத்தான் ... :love-smiley-008:

தாமரை
05-07-2011, 01:20 PM
கடற்கரையில் காதல் கவிதைகள் மட்டுமே வாங்கப்படும் ...:209:
.. என் கதறல் கவிதைகளை கொள்வார் யாரோ ...:eek:
எனவே அவையிலே இந்த தருமிக்கு காதல் கவிதைகள் :wub: எழுதிக்கொடுப்பவர் யாரோ ......
கண்டிப்பாக காதல் கவிதைகள் கடலை விற்பனைக்குத்தான் ... :love-smiley-008:
அதான் பழைய பேப்பர்ல கிடைக்குதில்ல.. அப்புறம் எதுக்கு எழுதி பிரிண்ட் செய்துகிட்டு...

பழைய புத்தகம் வாங்கி கவிதைகளைச் சேர்த்து... வித்துடுங்க..

காக்கை தெரியாம செய்யும் ஆனால் தெரிஞ்சே புனுகுப் பூனை..

ஹா ஹா ஹா :lachen001::lachen001::lachen001:

Ravee
05-07-2011, 02:16 PM
காக்கை தெரியாம செய்யும் ஆனால் தெரிஞ்சே புனுகுப் பூனை..

ஹா ஹா ஹா :lachen001::lachen001::lachen001:

http://www.yoism.org/images/LaughingMouse.gif http://gallery.pethobbyist.com/data/7757laughing_cat_really_good_one.gif

த.ஜார்ஜ்
05-07-2011, 04:02 PM
ரவி அந்த இரண்டாம் முறை வாங்கிய பொட்டலத்தில் சரியான அடுத்த பக்கம் இருந்ததா என்று சொல்லவேயில்லையே...[உங்கள் கவிதையை நானும் பத்திரப்படுத்தி வைக்கிறேன்..மனசுக்குள்]

த.ஜார்ஜ்
05-07-2011, 04:04 PM
கடலைப் பார்த்துக் கொண்டே
கடலை போட்ட படி
கடலை சாப்பிட்ட தாளில்...

இப்படி சொல்லிட்டு இருக்கும் போதே.. தக்ஸ் சொன்னது..

"விடு.. மச்சி.. எதுக்கு வராத விஷயத்துக்கெல்லாம் கஷ்டப்பட்டுக்கிட்டு"

அவன் கவிதையை சொன்னானா.. கடலையை சொன்னானா என்று இன்னும் புரியவில்லை..!!

ஹஹா ..ஹஹா .. சிரிப்பு சிரிப்பா வருது.

மதி
05-07-2011, 04:32 PM
ஹஹா ..ஹஹா .. சிரிப்பு சிரிப்பா வருது.
வரும்ண்ணே !!

Nivas.T
07-07-2011, 04:28 PM
சிலருக்கு பார்த்தால் பரவசம் .....இவருக்கு கேட்டாலே சந்தோசம் போல .... :p

அது என்னமோ தெரியலண்ணா தக்ஸ் சிக்குனா நமக்கு அப்டி ஒரு சந்தோசம் அதான் (பங்காளி லைட்டா)

ஆதி
07-07-2011, 04:32 PM
இந்த கவிதையின் நீதி என்னன்னா...

கடலை விற்றால் கவிதையும் விற்கலாம்..
கவிதை விற்க கடலையும் விற்கலாம்..

கட அலை கடலை
கடலை கெடலை :D

Nivas.T
08-07-2011, 10:14 AM
இந்த கவிதையின் நீதி என்னன்னா...

கடலை விற்றால் கவிதையும் விற்கலாம்..
கவிதை விற்க கடலையும் விற்கலாம்..

கட அலை கடலை
கடலை கெடலை :D

நான் இன்னும் விடலை
இருந்தும் நான் அதை தொடலை
அதனால் தான் நான் கெடலை:D:D:D:D:D

Ravee
13-07-2011, 02:03 PM
நான் இன்னும் விடலை
இருந்தும் நான் அதை தொடலை
அதனால் தான் நான் கெடலை:D:D:D:D:D

இப்படி வதக்குவது சரி படலை
இதை நான் எங்கிருந்தும் சுடலை
மறுத்தால் அனுப்பிடுவேன் தனி மடலை .......... :lachen001:

பென்ஸ்
14-07-2011, 09:06 AM
அட...

தீபாவளிக்கு கொளுத்திப் போட்டவை
வெடித்துச் சிதறியதில் கிடைத்தன
என் கையெழுத்தில் காகிதங்கள்

-----கௌதமன் (http://tamilmantram.com/vb/member.php?u=8530)

ரவி... அங்காவது விலைக்கு போனது...
இங்க கரியாய் போகுது பாருங்க...:)

கண்மணி
14-07-2011, 10:44 AM
இரவியண்ணே எனிக்கு ஒரு சந்தேகம்.. இன்னான்னா

கடலை விக்கிறவன் பழைய பேப்பரையும் புத்தகத்தையும் எடைக்கு வாங்கினப்பவே கவிதை வித்துப் போச்சி தானே.. அப்புறம் எப்படி விலைபோகாத கவிதேன்னு சொல்றீங்கோ?

ஆதி
14-07-2011, 10:54 AM
இரவியண்ணே எனிக்கு ஒரு சந்தேகம்.. இன்னான்னா

கடலை விக்கிறவன் பழைய பேப்பரையும் புத்தகத்தையும் எடைக்கு வாங்கினப்பவே கவிதை வித்துப் போச்சி தானே.. அப்புறம் எப்படி விலைபோகாத கவிதேன்னு சொல்றீங்கோ?

கண்மணியக்காவை பதிவு போட வைத்த, ரவியண்ணாவுக்கு நன்றி...

கண்மணியக்கா வந்தாச்சுல்ல, இனி ஒரே கடி மழைதான்

Ravee
14-07-2011, 11:11 AM
இரவியண்ணே எனிக்கு ஒரு சந்தேகம்.. இன்னான்னா

கடலை விக்கிறவன் பழைய பேப்பரையும் புத்தகத்தையும் எடைக்கு வாங்கினப்பவே கவிதை வித்துப் போச்சி தானே.. அப்புறம் எப்படி விலைபோகாத கவிதேன்னு சொல்றீங்கோ?

அட இது மறுபதிப்புன்னுதான் வச்சுகோங்களேன் ...:lachen001:

கண்மணி
14-07-2011, 11:14 AM

முதல் பதிப்போட விலை மைனஸ்..
அதாவது ஒரு வெள்ளைத்தாள் விலை 50 பைசான்னா கவிதை எழுதின பின்னாடி 2 பைசாவுக்குப் போட்டிருப்பீங்க. அது முதல் மதிப்பு..

இப்போ கடலையோட விலை 2 ரூபான்னா.. இது மறுமதிப்பு.. நீங்க மறு பதிப்பு போடலே.. வேற யாரோ மறு மதிப்பு போட்டு விட்டாங்க.

Ravee
14-07-2011, 11:14 AM
கண்மணியக்காவை பதிவு போட வைத்த, ரவியண்ணாவுக்கு நன்றி...

கண்மணியக்கா வந்தாச்சுல்ல, இனி ஒரே கடி மழைதான்

அட அண்ணனுக்கு ஜே போட்டோம் அக்காவுக்கு ஜெ ஜெ போடுவோம் ....... என்ன ஆதன் அப்புறம் கடி மழை எல்லாம் கனி மழை ஆகிடும் ....

கண்மணி
14-07-2011, 11:16 AM
அட அண்ணனுக்கு ஜே போட்டோம் அக்காவுக்கு ஜெ ஜெ போடுவோம் ....... என்ன ஆதன் அப்புறம் கடி மழை எல்லாம் கனி மழை ஆகிடும் ....

ஜெஜெ எல்லாம் அம்மாவுக்குப் போடுங்கோ.. அக்காவுக்கு ஓ போடுங்கோ

Nivas.T
14-07-2011, 12:05 PM
இரவியண்ணே எனிக்கு ஒரு சந்தேகம்.. இன்னான்னா

கடலை விக்கிறவன் பழைய பேப்பரையும் புத்தகத்தையும் எடைக்கு வாங்கினப்பவே கவிதை வித்துப் போச்சி தானே.. அப்புறம் எப்படி விலைபோகாத கவிதேன்னு சொல்றீங்கோ?

முதல் பதிப்போட விலை மைனஸ்..
அதாவது ஒரு வெள்ளைத்தாள் விலை 50 பைசான்னா கவிதை எழுதின பின்னாடி 2 பைசாவுக்குப் போட்டிருப்பீங்க. அது முதல் மதிப்பு..

இப்போ கடலையோட விலை 2 ரூபான்னா.. இது மறுமதிப்பு.. நீங்க மறு பதிப்பு போடலே.. வேற யாரோ மறு மதிப்பு போட்டு விட்டாங்க.

ஜெஜெ எல்லாம் அம்மாவுக்குப் போடுங்கோ.. அக்காவுக்கு ஓ போடுங்கோ

:eek: :confused:ஆஹா சிங்கம் களமிறங்கிடுச்சா............?????????? :D

பென்ஸ்
14-07-2011, 02:22 PM
ஜெஜெ எல்லாம் அம்மாவுக்குப் போடுங்கோ.. அக்காவுக்கு ஓ போடுங்கோ

அக்கா பேரு பன்னிர் செல்வங்களா???

ஷீ-நிசி
14-07-2011, 03:25 PM
வாவ்... சூப்பர்... ரொம்ப அழகா இருக்கு வரிகள்!

கண்மணி
14-07-2011, 04:55 PM
அக்கா பேரு பன்னிர் செல்வங்களா???

இல்ல சேட்டா.. ஓமனாகுட்டி!!:lachen001::lachen001::lachen001:

Ravee
16-07-2011, 11:26 PM
:eek: :confused:ஆஹா சிங்கம் களமிறங்கிடுச்சா............?????????? :D

இது உருமாறிய சிங்கி .... :lachen001:

Ravee
16-07-2011, 11:30 PM
முதல் பதிப்போட விலை மைனஸ்..
அதாவது ஒரு வெள்ளைத்தாள் விலை 50 பைசான்னா கவிதை எழுதின பின்னாடி 2 பைசாவுக்குப் போட்டிருப்பீங்க. அது முதல் மதிப்பு..

இப்போ கடலையோட விலை 2 ரூபான்னா.. இது மறுமதிப்பு.. நீங்க மறு பதிப்பு போடலே.. வேற யாரோ மறு மதிப்பு போட்டு விட்டாங்க.

சன் டிவி சக்செனாவை மனசில வச்சுகிட்டு சொல்லுறீங்களா ... :lachen001:

Ravee
16-07-2011, 11:33 PM
வாவ்... சூப்பர்... ரொம்ப அழகா இருக்கு வரிகள்!

நன்றி ஷி.நிசி .... :)