PDA

View Full Version : அவசர வேலை! - குமுதம் (6-7-2011) இதழில் வெளிவந்ததுக.கமலக்கண்ணன்
30-06-2011, 10:49 AM
அவசர வேலை!

''ஏங்க நம்ம குழந்தைய பள்ளிக்கூடம்
அழைச்சிட்டு போய் புத்தகம் வாங்கிக்
கொடுத்துட்டு ஆபீஸ் போங்க' என்று
சொன்னாள் நீலா

''போடி எனக்கு ஆபிஸ்ல அவசரமான வேலை
இருக்கு. டைம் ஆயிடுச்சி. நீ போய்ட்டு வா' என்று சொல்லி
விட்டு அலுவகத்திற்கு கிளம்பினான் ராஜன்.

''ஆமாம் பிள்ளையின் பாட புத்தகத்தை வாங்கிக்
கூட முடியாமல் அப்படி என்ன ஆபீஸ்
வேலையே போங்க' என்று எரிச்சலாய் சொன்னாள் நீலா

சிறிது நேரத்தில், நீலா சமையலை முடித்துவிட்டு
குழந்தையை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று,
புத்தகங்கள் வாங்க வரிசை நின்று கொண்டிருந்தாள்.

அப்போது ராஜனின் முதலாளி மனைவியும் அவரது
குழந்தைகளும் பள்ளியிலிருந்து வெளியே வந்தார்கள்.
பின்னாடியே, முதலாளியின் குழந்தைகளின் புத்தகங்களைத்
தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்தான் ராஜன்.

அவன் முன் முன்னாடி போய் நின்றாள் நீலா. 'இதுதான்
அவசரமான வேலையா ? ' என்று கேட்டாள்.

ராஜனால் பதிலே பேச முடியாமல் பேய் முழி
முழித்தான்

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_5th-F.jpg

Ravee
30-06-2011, 11:01 AM
அட எல்லாம் தலை விதி .... என்ன செய்யுறது கமலகண்ணன் .......:lachen001:

க.கமலக்கண்ணன்
30-06-2011, 11:13 AM
உங்களின் முதல் பின்னூட்டத்திற்கும் உங்களின் பாராட்டிற்கும் மிக்க நன்றி..

பூமகள்
30-06-2011, 12:51 PM
பாராட்டுகள் அண்ணா... அவசர வேலை - தொழில் பக்தி என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்..

அவர் கணவர் என்ன வேலை செய்தார் என்று சொல்லவில்லையே.. ஆக வாசகர் கையில் மீதியை அறீயச் செய்யும் யுக்தி நன்று..

தொடருங்கள்.. வாழ்த்துகள்... :)

M.Jagadeesan
30-06-2011, 12:54 PM
சிறுகதையானாலும் மனதைத் தொட்டது.

sarcharan
30-06-2011, 12:56 PM
தாய்க்கு தவிடு இடிகாதவன் தம்புரானுக்கு இரும்பு இடிப்பன்னு ஒரு பழஞ்சொல் உண்டு..

க.கமலக்கண்ணன்
30-06-2011, 01:44 PM
நன்றி தங்கையே... அவர் முதலாளியின் குழந்தைகளின் பின்னால் வருகிறார் என்றால், அவர் முதலாளியின் தனி உதவியாளர் என்று தானே அர்த்தம். இல்லையா தங்கையே...

நன்றி பல உங்களுக்கு M.Jagadeesan


நன்றிகள் பல உங்களுக்கு sarcharan

Nivas.T
30-06-2011, 02:31 PM
கருத்துள்ள கதை
மிக அருமை
வாழ்த்துக்கள்

கீதம்
30-06-2011, 11:45 PM
ராஜன் தான் வாங்கும் சம்பளத்துக்கு நியாயமாக வேலை செய்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். அல்லது அவரை அலுவலக வேலை மட்டுமல்லாது வீட்டு வேலைகளுக்கும் முதலாளி நியாயமற்ற முறையில் பயன்படுத்துகிறார் என்றும் சொல்லலாம். எப்படி இருந்தாலும் ராஜனிடம் தவறு இல்லை. அப்படி முதலாளி சொல்லைத் தட்டாமல் அடிபணிந்து வேலை செய்வதால்தான் முதலாளியின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தன் குழந்தையையும் இவரால் படிக்கவைக்க முடிகிறது. அதை நினைத்து நீலா பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

இதுவே முதலாளியாக இல்லாமல் வேறு நண்பராகவோ உறவினராகவோ இருந்திருந்தால் வீட்டுக்கு வந்ததும் ராஜனின் கதை கந்தல்தான்.:)

சிறிய கதைக்குள் நிறைய செய்திகள் சொல்லி விழிவிரிய வைக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்.

க.கமலக்கண்ணன்
01-07-2011, 06:20 AM
நன்றிகள் பல உங்களுக்கு Nivas.T...


ஆமாம் கீதம் ஒரு வரியில் பல செய்திகளை உள்ளடக்க வேண்டும்...

நீங்கள் சொன்னது முழுக்க முழுக்க உண்மை ஒளித்திருக்கிறது. நீலா உண்மையாகவே பெருமைபட்டுக் கொள்ளலாம்.

அப்படி கஷ்டப்பட்டுதானே நீலாவுக்கும் குழந்தைகளுக்கும் அனைத்தையும் அவனால் செய்ய முடிகிறது.

உங்களின் பாராட்டுக்கு மிக்க மிக்க நன்றிகள் பல

aren
01-07-2011, 07:19 AM
நல்ல கதை கமலக்கண்ணன். என்ன செய்வது சில நேரங்களில் மனைவியின் பேச்சைக் கேட்காவிட்டாலும் முதலாளியின் பேச்சைக் கேட்க வேண்டியிருக்கிறதே.

அதே பள்ளியில்தான் தன் மகளும் படிக்கிறாள் என்று கூடவா அவருக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் தன் மகளின் புத்தகங்களையும் வாங்கி வந்திருக்கலாமே.

முதலாளி முதலிலேயே பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று சொல்லியிருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

பாராட்டுக்கள் கமலக்கண்ணன். இன்னும் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்.

innamburan
01-07-2011, 07:42 AM
கண்ணோ கமலம்! பார்வையோ கூர்!
எனக்கு பிடித்திருந்தது.

க.கமலக்கண்ணன்
01-07-2011, 08:11 AM
நல்ல கதை கமலக்கண்ணன். என்ன செய்வது சில நேரங்களில் மனைவியின் பேச்சைக் கேட்காவிட்டாலும் முதலாளியின் பேச்சைக் கேட்க வேண்டியிருக்கிறதே.

உண்மைதான் ஆரென் சூழ்நிலைகைதி இதுதான்...

உங்களின் பாரட்டுகளுக்கு மிக்க நன்றி...

உதயமாகும்போதெல்லாம் எழுதுகிறேன்...உங்களின் பாரட்டுகளுக்கு மிக்க நன்றி innamburan...

நாஞ்சில் த.க.ஜெய்
01-07-2011, 12:43 PM
அருமையான கதை ...தன் வீடெனும் கோட்டையில் ராஜா வெளியிலே சிப்பாய் இது தான் இன்றய தனியார் குழுமங்களில் தொழில் புரிபவர்கள் நிலை ....

redblack
01-07-2011, 12:50 PM
மனைவியின் பேச்சை கேக்காட்ட ஒரு நாள் சோறு தான் பறிபோகும்.

முதலாளி கிட்ட பகைச்சுட்டா ....?

ஐரேனிபுரம் பால்ராசய்யா
01-07-2011, 01:36 PM
அவசரவேலை மிக அருமை. சிறப்பு

க.கமலக்கண்ணன்
02-07-2011, 04:05 AM
உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி இனியவர்

உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி redblack

உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐரேனிபுரம் பால்ராசய்யா

சிவா.ஜி
02-07-2011, 05:23 AM
வாழ்த்துக்கள் கமலக்கண்ணன். கருத்துள்ளக் கதை. ஒருபக்கக் கதைகளிலிருந்து வெகு விரைவில் முழுச் சிறுகதை அளவுக்கு வளர வாழ்த்துக்கள்.

அக்னி
02-07-2011, 08:17 AM
நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் ஆக வேண்டும்...
ஆனால், என்ன வேடம் போட்டாலும் குரைக்க வேண்டிய நிர்ப்பந்தம்,
முதலாளிகளால் ஏற்படுத்தப்படுகின்றது...

வேலைக்காக வேலைகள் பல வேளைகளிலும்...

பாராட்டு... குமுத வெளியீட்டிற்கு வாழ்த்து...
க.க. சார்... அடிக்கடி மன்றம் வாங்களேன்...

sarcharan
02-07-2011, 11:20 AM
மனைவியின் பேச்சை கேக்காட்ட ஒரு நாள் சோறு தான் பறிபோகும்.

முதலாளி கிட்ட பகைச்சுட்டா ....?


வாழ்நாள் முழுக்க சோறே கிடைக்காது...

க.கமலக்கண்ணன்
03-07-2011, 03:50 AM
நன்றிகள் பல உங்களுக்கு சிவா.ஜி

நன்றிகள் பல உங்களுக்கு அக்னி. (தற்போது பதவி உயர்வினாலும் எனக்கு கீழ் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதாலும். முப்பரிமான வரைகலையில் தடம் பதித்ததாலும் அதனால் முதலாளி மிக அற்புதம் என்று பாராட்டியதாலும் அதை மேலும் கற்ற வேண்டியதனாலும் இன்னும் பல பொறுப்புக்கள் அதிகமானதாலும் குமுதத்தில் கதை எழுதுவதாலும் நேரம் கிடைப்பதே மிக அரிதாகி விட்டது. ஆனாலும் முயற்சி செய்கிறேன் மன்றம் அதிக வர... உங்களின் வரவேற்கு மிக்க நன்றி...)

நன்றிகள் பல உங்களுக்கு sarcharan

ஐரேனிபுரம் பால்ராசய்யா
06-07-2011, 01:03 PM
கடமை தவறாத கணவன் என்ற ஒற்றைசொல்லில் கதை நகர்ந்து அனைவருக்கும் பிடித்த கதையாகிவிட்டது. குமுதத்தில் வெளிவந்தது மற்றொரு சிறப்பு

க.கமலக்கண்ணன்
07-07-2011, 03:14 AM
உண்மைதான் கடமை சரியாக செய்தான் செய்பவனுக்கு மட்டும் அல்ல அவனை சேர்ந்தவர்களுக்கும் நல்லது.

அதனால்தான் அனைவருக்கும் ரொம்ப படித்துவிட்டது நன்றிகள் பல ஐரேனிபுரம் பால்ராசய்யா.

அனுராகவன்
07-07-2011, 05:06 PM
நன்றி அண்பரே!!
மிக நன்றாக உள்ளது........

க.கமலக்கண்ணன்
10-07-2011, 08:33 AM
நன்றி அனு உங்களின் பாராட்டுக்கு...