PDA

View Full Version : சேட்டையராஜா அரண்மனை:2ராஜாராம்
30-06-2011, 06:10 AM
சேட்டையராஜா:icon_ush: அரண்மனை....சேட்டையராஜா வழக்கம்போல் சிம்மாசனத்தில் வந்து அமர்ந்ததும் அமைச்சர்கள் ஏனோதானோ என
கடனுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டனர்.

"இன்றைய பிரச்சனை என்ன அமைச்சர்களே?",
என சேட்டையராஜா,சற்றே அலட்சியமாக கேட்டதும்.

"மன்னா நாட்டில் விளம்பரங்கள் அதிகமாகிவிட்டன.அரசியல்,ஆன்மீகம்,வியாபாரம்,கல்வி,
அனைத்திலும் அதிகமாக விளம்பரங்கள் அதிகமாகிவிட்டன.தொலைக்காட்களில் விளம்பரங்களே
பெரிதும் நேரத்தை எடுத்துக்கொள்கின்றன..",
என்று அமைச்சர் முராக் கூறியதும்,அவரைப் பின்தொடர்ந்துப் பேசிய அமைச்சர் சாரா,
"கல்யாணம் என்றாலும் விளம்பரப்பலகைகள் வைக்கிறார்கள்,
எழவு விழுந்தாலும் விளம்பர பலகைகள் வைக்கிறார்கள்.
அதுவும் நகரின் முக்கியமான மையப்பகுதியில் சாலையை அடைத்துக்கொண்டு இருக்கும்வன்னம் வைக்கிறார்கள்",
என சலித்துக்கொண்டார்.

"எழவு விழுந்தாலும் விளம்பரப்பலகை வைக்கிறார்களா?",
என மன்னர் கேட்க,

"ஆம் மன்னா...எங்கள் அன்பு நண்பனுக்கு,முதலாம் ஆண்டு நினைவஞ்சலி...இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி...என அச்சிட்டு,
அதற்கு கீழே,
இப்படிக்கு அருமைநண்பர்கள்,
"கடா"குமார்,"அலக்கு"ராஜாசேகர்,"முட்டை"ரவி,....என கேவலமான புனைப் பெயர்களையும் அதில் இணைக்கிறார்கள்.
இந்தக் கன்றாவிய,ஊரில் உள்ள, கடைகளின் வாசலிலும்,கதவுகளிலும்,பள்ளி சுவருகளிலும்,நகரின் பிரதான இடங்களிலெல்லாம்
ஒட்டி ஊரையே எழவுவீடாக ஆக்கிவிடுகின்றனர்"
என்றார் அமைச்சர் சாரா வருத்தத்துடன்.

"அடப்போயா...ங்கொயாலு,..இதுக்கே நீ இப்படி புலம்புகிறாயே,
சென்றமுறை நான் நகர்வலம் சென்றபோது,ஒருக்கிரமத்தில் ஒரு ரவுடிப்பயல எவனோ போட்டுதள்ளிட்டான்..
என் ரதத்தை நிப்பாட்டி ,அந்த இரங்கல் செய்தியை ,ரதத்தின் நாலாப்புறமும் வளைத்து வளைத்து
ஒட்டிவிட்டார்கள் சனியன்புடிச்சவனுங்க..",
என்று கூறிய சேட்டையராஜா,வெட்க்கத்தில் தலைக்குனிந்தார்.

"இதையெல்லாம்விட பெரியக்கொடுமையான விஷயம்...தொலைக்காட்சி விளம்பரங்களில் நடக்கிறது மன்னா",
என அமைச்சர் மங்குனி பம்மிக்கொண்டு கூறியதும்,

"என்னக் கொடுமை நடக்கிறது?விவரமாக சொல்லிதொலையும்",
என்று மன்னர் கேட்டார்.

"குழந்தைகள் பாலில் கலந்துக் குடிக்கும் சத்துமாவுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டாப்போட்டி
போட்டுக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள்.ஒரு நிறுவனம் தனது சத்துமாவை பாலில் கலந்துக்
குடித்தால் குழந்தைகள் 6செண்டிமீட்டர் வளருவார்கள் என்கிறது.மற்றொரு நிறுவனமோ அதன் சத்துமாவை
கலந்துக்குடித்தால் குழந்தைகள் 8செண்டிமீட்டர் வளருவார்கள் என்கிறது.பாழாய்ப்போன போலி விளம்பரங்களைப்
பார்த்துவிட்டு பெற்றோர்களும் அந்த நிறுவனங்களின் மாவினைக் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.
குழந்தைகள் அதைக் குடித்துவிட்டு கழுத்து நீண்டு,உடல் சிறுத்து ஒட்டக்சிவிங்கிப் போல் ஆகிவிடுகின்றனர்..",
எனக்கூறிவிட்டு நக்கலாய் சிரிக்க,அதைக்கண்ட மன்னர்,

"அடிங்க....இதெல்லாம் உனக்கு காமெடியாவா இருக்கு....பயபுள்ள உனக்கு கொழுப்பு ஜாஸ்தியகிடுச்சி...",
என ஒரு அதட்டுப்போட்டு அவரது நக்கலை அடக்கினார்.

"மன்னா..நம் அரசாங்கம் வெளியிடும் ரூபாய் நோட்டுக்களில்கூட,'ஜானு ஐ லவ் யூ,",சாந்தி ஐ லவ் யூ",என்று
சட்டத்திற்குபுறம்பாக ரூபாய் நோட்டில்கூட காதலை விளம்பரம் செய்கிறார்கள்...போக்கிரிபசங்க...",
என அமைச்சர் பண்டாரம் கூறியதும்,

"அதுக்கூட பரவாயில்லை அமைச்சரே,,,சமீபத்தில் நான் வாங்கிய ,ஒரு ,ரூபாய் நோட்டில்,
"இதை வைத்திருப்பவன் ஒரு முட்டாள்',என்று
எழுதிவைத்திருந்தான் ஒரு அயோக்கியப்யல்...அந்த நோட்டை கையில் வாங்கிய நான் மனது சங்கடப்பட்டு 4நாள்,
தூங்கவே இல்லை..",
என மன்னர் கூற,
"உன்னைப்பற்றி வெளியில் விசாரிச்சிருப்பான்...அதான் அப்படி எழுதியிருப்பான்...",
மெல்ல மனதுக்குள் பேசிக்கொண்டார் அமைச்சர் பண்டாரம்.

"நாட்டை ஆளும் மன்னருக்கு பிறந்தநாள் என்றால்,தினசரி செய்தித்தாள்களில் ஒவ்வொரு பக்கமும்,
முழுப்பக்கத்திற்கும் சம்மந்தப்பட்ட மன்னரது படத்தைப்போட்டு
'காவிரியே...கங்கையே...எங்கள் கூவமே...என வாய்க்குவந்தபடி அந்த மன்னரை வாழ்த்திவிடுகிறார்கள்
அவர்களது விசுவாசிகள்.காலையில் எழுந்ததும் அந்த கருமம்புடிச்சவைங்க
மூஞ்சியிலேதான் முழிக்கவேண்டி உள்ளது......",

"காலையில் தொலைக்காட்களில் வாஸ்துஜோதிடம்,ராசிகற்கள்,நியூமரலாஜி,நேம்மாலஜி,என்று
டுபாக்கூர் ஆசாமிகள் செய்யும் விளம்பரத்தைக் நம்பி ஏமாறிய மக்கள் அதிகம்பேர் இருக்கின்றனர் மன்னா...
இதற்கெல்லாம் தகுதியில்லாத விளம்பரமும்,விதிமுறைகள் மீறிய விளம்பரங்களும்தான் காரணம்,..",
என அமைச்சர் முரா தன் கருத்தை முன்வைத்தார்,.

"கவலைப்படாதீர்கள் இந்த முறைதவறிய விளம்பரங்களுக்கெல்லாம் கூடிய விரைவில் ஒருமுடிவுக்
கட்டிவிடுவோம்.....",
என சேட்டையராஜா அழுத்தமாக கூறிய மறுகணமே..
அரண்மனைக்குள் ஓடிவந்த மன்னரது மெய்காவலர்,

"மன்னா,,,மன்னா...தாங்கள் கூறியபடி,
உங்களது,3வது மனைவியின் 6வது குழந்தையின்,
4வது பிறந்தநாளுக்கு, டிஜிட்டல் பேனர்கள் 100அடித்து
ஊரில் ஒரு இடம்விடாமல் ஒட்டிவிட்டோம் மன்னா....
பள்ளிகள்,மருத்துவமனைகள்,ஆலயங்கள்...என ஒரு இடம்விடாமல் ஒட்டிவிட்டோம்...
இவ்வளவுயேன்...பொதுக்கழிப்பறை சுவரில்கூட ஒட்டிவிட்டோம்....",
என சந்தோஷமாக கூச்சலிட...

அதைக்கேட்ட அமைச்சர்கள்
"அட நாசமாப்போனவனே....நீயே இப்படிப்பண்ணினால் அப்புறம் மக்கள் எங்கேடா திருந்தப்போறாங்க...",
என,சேட்டையராஜாவை மனதுக்குள் சாடியபடி, வேதனையுடன் வெளியேறினர்.

Ravee
30-06-2011, 06:28 AM
ரா.ரா.... சே.ரா .... மு.ரா சேர்ந்து அடிக்கும் கொட்டம் தாங்கலை .... அந்த ரூபா நோட்டு மேட்டர் ...... :)

அன்புரசிகன்
30-06-2011, 06:37 AM
வெளியூருக்கு போய்வந்தபிறகு ஒருமார்க்கமான நகைச்சுவைக்கதைகளை தான் எழுதுகிறீர்கள். நடிகர் விவேக் போல் கருத்துக்கந்தசாமி ஆகிவிட்டீங்களோ???

அசத்தல். வாழ்த்துக்கள் ராரா

நாஞ்சில் த.க.ஜெய்
30-06-2011, 06:38 AM
தோழரின் சமூக நகைசுவை சமூக சாடல்கள் அவருடைய சாமூக நலன் மீதான கவனத்தை காட்டுகிறது ..

Nivas.T
30-06-2011, 06:48 AM
நல்ல கருத்துகள் ராரா, மிக அருமை

sarcharan
30-06-2011, 07:13 AM
"அடப்போயா...ங்கொயாலு,..இதுக்கே நீ இப்படி புலம்புகிறாயே,
சென்றமுறை நான் நகர்வலம் சென்றபோது,ஒருக்கிரமத்தில் ஒரு ரவுடிப்பயல எவனோ போட்டுதள்ளிட்டான்..
என் ரதத்தை நிப்பாட்டி ,அந்த இரங்கல் செய்தியை ,ரதத்தின் நாலாப்புறமும் வளைத்து வளைத்து
ஒட்டிவிட்டார்கள் சனியன்புடிச்சவனுங்க..",
என்று கூறிய சேட்டையராஜா,வெட்க்கத்தில் தலைக்குனிந்தார்.அமரர் ஊர்தியிலுமா? ஆனா விளம்பரம் அவ்வளவாக ஃபேமஸ் ஆகாதே :confused:"குழந்தைகள் பாலில் கலந்துக் குடிக்கும் சத்துமாவுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டாப்போட்டி
போட்டுக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள்.ஒரு நிறுவனம் தனது சத்துமாவை பாலில் கலந்துக்
குடித்தால் குழந்தைகள் 6செண்டிமீட்டர் வளருவார்கள் என்கிறது.மற்றொரு நிறுவனமோ அதன் சத்துமாவை
கலந்துக்குடித்தால் குழந்தைகள் 8செண்டிமீட்டர் வளருவார்கள் என்கிறது.பாழாய்ப்போன போலி விளம்பரங்களைப்
பார்த்துவிட்டு பெற்றோர்களும் அந்த நிறுவனங்களின் மாவினைக் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.
குழந்தைகள் அதைக் குடித்துவிட்டு கழுத்து நீண்டு,உடல் சிறுத்து ஒட்டக்சிவிங்கிப் போல் ஆகிவிடுகின்றனர்..",
எனக்கூறிவிட்டு நக்கலாய் சிரிக்க,அதைக்கண்ட மன்னர்,

ஆனா சீனாகாரன் வேற ஏதோ கலக்குறானாமே...:sprachlos020:

இப்பொழுது குழந்தைகள் முறை போல..:confused:

முன்னெல்லாம் உங்கள் தலைமுடி ஆறடி கூந்தல் மாதிரி வளரும் என்று விளம்பரம் செய்தார்கள்..

நானும் அதை நம்பி கிளினிக்-பிளஸ், ஆல்-கிளியர் ஷாம்பூ எல்லாம் தினம் யூஸ் பண்ணினேன். விளைவு ரஜினி ஸ்டைல் தான்..
"மன்னா..நம் அரசாங்கம் வெளியிடும் ரூபாய் நோட்டுக்களில்கூட,'ஜானு ஐ லவ் யூ,",சாந்தி ஐ லவ் யூ",என்று
சட்டத்திற்குபுறம்பாக ரூபாய் நோட்டில்கூட காதலை விளம்பரம் செய்கிறார்கள்...போக்கிரிபசங்க...",
என அமைச்சர் பண்டாரம் கூறியதும்,

என் ஃபிரண்டு குணா நாங்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் போது இரண்டு ரூபா நோட்டுல குணா- ஸ்ரீபிரியான்னு எழுதுவான். அது நினைவுக்கு வந்தது.:p

ஒரு தடவை எனக்கு வித்யா கொடுத்த ஐம்பது பைசாவ கேட்டு நண்பர் வட்டம் கூத்தடிச்சது இன்னும் நினைவில் நிக்குது.:)"அதுக்கூட பரவாயில்லை அமைச்சரே,,,சமீபத்தில் நான் வாங்கிய ,ஒரு ,ரூபாய் நோட்டில்,
"இதை வைத்திருப்பவன் ஒரு முட்டாள்',என்று
எழுதிவைத்திருந்தான் ஒரு அயோக்கியப்யல்...அந்த நோட்டை கையில் வாங்கிய நான் மனது சங்கடப்பட்டு 4நாள்,
தூங்கவே இல்லை..",
என மன்னர் கூற,
"உன்னைப்பற்றி வெளியில் விசாரிச்சிருப்பான்...அதான் அப்படி எழுதியிருப்பான்...",
மெல்ல மனதுக்குள் பேசிக்கொண்டார் அமைச்சர் பண்டாரம்.ரா ரா, இதுக்கு உங்க பதில் என்ன... (அமைச்சர்) பண்டாரம் வெய்டிங்...:frown:"நாட்டை ஆளும் மன்னருக்கு பிறந்தநாள் என்றால்,தினசரி செய்தித்தாள்களில் ஒவ்வொரு பக்கமும்,
முழுப்பக்கத்திற்கும் சம்மந்தப்பட்ட மன்னரது படத்தைப்போட்டு
'காவிரியே...கங்கையே...எங்கள் கூவமே...என வாய்க்குவந்தபடி அந்த மன்னரை வாழ்த்திவிடுகிறார்கள்
அவர்களது விசுவாசிகள்.காலையில் எழுந்ததும் அந்த கருமம்புடிச்சவைங்க
மூஞ்சியிலேதான் முழிக்கவேண்டி உள்ளது......",

விடியாமூஞ்சியின்
விடியல் வாழ்த்துக்கள்!

"காலையில் தொலைக்காட்களில் வாஸ்துஜோதிடம்,ராசிகற்கள்,நியூமரலாஜி,நேம்மாலஜி,என்று
டுபாக்கூர் ஆசாமிகள் செய்யும் விளம்பரத்தைக் நம்பி ஏமாறிய மக்கள் அதிகம்பேர் இருக்கின்றனர் மன்னா...
இதற்கெல்லாம் தகுதியில்லாத விளம்பரமும்,விதிமுறைகள் மீறிய விளம்பரங்களும்தான் காரணம்,..",
என அமைச்சர் முரா தன் கருத்தை முன்வைத்தார்,.

"கவலைப்படாதீர்கள் இந்த முறைதவறிய விளம்பரங்களுக்கெல்லாம் கூடிய விரைவில் ஒருமுடிவுக்
கட்டிவிடுவோம்.....",
என சேட்டையராஜா அழுத்தமாக கூறிய மறுகணமே..
அரண்மனைக்குள் ஓடிவந்த மன்னரது மெய்காவலர்,அதுக்கும் ஒரு விளம்பரம்... யாரு மாடல்?"மன்னா,,,மன்னா...தாங்கள் கூறியபடி,
உங்களது,3வது மனைவியின் 6வது குழந்தையின்,
4வது பிறந்தநாளுக்கு, டிஜிட்டல் பேனர்கள் 100அடித்து
ஊரில் ஒரு இடம்விடாமல் ஒட்டிவிட்டோம் மன்னா....
பள்ளிகள்,மருத்துவமனைகள்,ஆலயங்கள்...என ஒரு இடம்விடாமல் ஒட்டிவிட்டோம்...
இவ்வளவுயேன்...பொதுக்கழிப்பறை சுவரில்கூட ஒட்டிவிட்டோம்....",
என சந்தோஷமாக கூச்சலிட...

மூணாவது மனைவி... ஆறாவது பிள்ளை... ஹ்ம்ம் இவருக்கு பிரத்யேகமாக வேற ஒரு விளம்பரம் அவசியம் போல...

ராஜாராம்
30-06-2011, 11:48 AM
நன்றி ஜெய் அவர்களுக்கும்,
நிவாஸ் அவர்களுக்கும்,
ரவீ அவர்களுக்கும்,
அன்புரசிகனுக்கும்,
சாராவிற்கும்.

முரளிராஜா
01-07-2011, 12:37 PM
"அதுக்கூட பரவாயில்லை அமைச்சரே,,,சமீபத்தில் நான் வாங்கிய ,ஒரு ,ரூபாய் நோட்டில்,
"இதை வைத்திருப்பவன் ஒரு முட்டாள்',என்று
எழுதிவைத்திருந்தான் ஒரு அயோக்கியப்யல்...அந்த நோட்டை கையில் வாங்கிய நான் மனது சங்கடப்பட்டு 4நாள்,
தூங்கவே இல்லை..",
என மன்னர் கூற,

ரா ரா இது உனக்கு நடந்த சம்பவம் தானே:D:D:D:D
மிகவும் அருமை ரா ரா அடுத்த உன் திரிக்காக காத்திருக்கேன்