PDA

View Full Version : கொடுக்கல அதனால் கிடைக்கல

Ravee
29-06-2011, 07:41 PM
கொடுக்கல அதனால் கிடைக்கல

http://1.bp.blogspot.com/-ZtZZXWe6O3c/TcmtlzcM6VI/AAAAAAAAAT0/jotGOqFZ0yg/s1600/-++++++++++++++++++++++++++++++++01++6++-++1++85.jpg

கொடுக்கல அதனால் கிடைக்கல
கிடைக்கல அதனால் படைக்கல
படைக்கல அதனால் பொறுக்கல
பொறுக்கல அதனால் வெறுப்பில
வெறுப்பில அதனால் கொடுக்கல

கொடுக்கல அதனால் கிடைக்கல ......... :confused:

ஏதோ என்னால் முடிந்து

இளசு
29-06-2011, 08:50 PM
படித்தவுடன்

பின்னூட்டம் பிறருக்குக் கொடுக்கல... எனக்கும் பின்னூட்டம் கிடைக்கல..
அதனால் புதுசாய் படைக்கல... - ன்னு மன்றம் சுத்தியே மனசு போகுது..

இந்தியா அழுவதாய்க் கேலிச்சித்திரம் கண்டால் இன்னும் பெரிதாய் எண்ணச் சொல்லுது..

நீங்கதான் விளக்கணும் ரவீ..

innamburan
29-06-2011, 08:54 PM
பின்னூட்டம் இல்லையெனின் பின்னலாட்டம் எப்படி, ஐயா!

Ravee
29-06-2011, 11:41 PM
படித்தவுடன்

பின்னூட்டம் பிறருக்குக் கொடுக்கல... எனக்கும் பின்னூட்டம் கிடைக்கல..
அதனால் புதுசாய் படைக்கல... - ன்னு மன்றம் சுத்தியே மனசு போகுது..

இந்தியா அழுவதாய்க் கேலிச்சித்திரம் கண்டால் இன்னும் பெரிதாய் எண்ணச் சொல்லுது..

நீங்கதான் விளக்கணும் ரவீ..

பின்னூட்டம் இல்லையெனின் பின்னலாட்டம் எப்படி, ஐயா!

இளசு அண்ணாவின் குறும்புன்னு கேள்வி பட்டு இருக்கேன் .... அது இதுதான் போலும் ........வீட்டில ஆரம்பிச்சு நாடு வரை நாம கொடுக்கலைன்னா திரும்ப நமக்கும் கிடைக்காதுதானே அண்ணா .... :p

கீதம்
30-06-2011, 05:20 AM
கொடுக்கல அதனால் கிடைக்கல
கிடைக்கல அதனால் படைக்கல
படைக்கல அதனால் பொறுக்கல
பொறுக்கல அதனால் வெறுப்பில
வெறுப்பில அதனால் கொடுக்கல

கொடுக்கல அதனால் கிடைக்கல ......... :confused:

ஏதோ என்னால் முடிந்து வைக்கப்பட்ட சிண்டு?

நிறைய யோசிக்கணும், அப்புறம் வரேன்.:)

Ravee
30-06-2011, 05:23 AM
நிறைய யோசிக்கணும், அப்புறம் வரேன்.:)

இப்படியெல்லாம் வசனம் பேசி சிரிப்பு காட்டக்கூடாது. :lachen001: :D :lachen001:

இளசு
30-06-2011, 05:26 AM
வீட்டில ஆரம்பிச்சு நாடு வரை நாம கொடுக்கலைன்னா திரும்ப நமக்கும் கிடைக்காதுதானே அண்ணா .... :p

என்ன.. இலஞ்சமா இரவீ?:)

Ravee
30-06-2011, 05:40 AM
கொடுக்கல அதனால் கிடைக்கல

கொடுக்கல அதனால் கிடைக்கல
கிடைக்கல அதனால் படைக்கல
படைக்கல அதனால் பொறுக்கல
பொறுக்கல அதனால் வெறுப்பில
வெறுப்பில அதனால் கொடுக்கல

கொடுக்கல அதனால் கிடைக்கல ......... :confused:

முதலில் வீட்டில் இருந்து ஆரம்பிப்போம் அண்ணா ... பொறுப்பில்லாத ஒரு கணவன் பற்றியதாக இப்போது இதை பார்ப்போம்.

உரியவன் உடையவளுக்கு வீட்டு செலவுக்கு பணம் கொடுக்கவில்லை .... அதனால் பணம் கிடைக்காத காரணத்தால் உடையவள் சமைக்கவில்லை .... சாப்பிடாத காரணத்தால் பசி பொறுக்கவில்லை .... பசி பொறுக்க முடியாத காரணத்தால் உடையவன் வெறுப்பில் செல்கிறான் ... வெறுப்பில் சென்றவன் எதிலும் மனம் ஒன்றாமல் தன திறமைகளை யாருக்கும் கொடுக்கவில்லை . அவ்வாறு திறமைகளை கொடுக்காத காரணத்தால் அவனுக்கு செல்வம் கிடைக்கவில்லை ..... செல்வம் கிடைக்காத காரணத்தால் மனைவிக்கு ஆவான் பணம் கொடுக்கவில்லை ..... எனவே அவள் சமைக்கவில்லை .... இந்த சங்கிலி எங்காவது பொறுப்புணர்வுடன் கையாளப்பட்டால் பிரச்சனை தீரும்.

என்ன அண்ணா ஏதோ கொஞ்சம் பரவாயில்லையா ?

இதில் வரும் வார்த்தைகள் அனைத்தும் ஒரு சம்பவக் கோர்வையில் வரும் வார்த்தைகள் எனவே எந்த ஒரு நிகழ்வுடனும் ஒப்பிடலாம் இடைவெளிகளை நிரப்பி ..... இதில் பெரிதாய் ஒன்றும் இலக்கியதரம் கிடையாது ... ஏதோ தாமரை அண்ணா, கீதம் அக்காவின் ஆக்கங்களை பார்த்து போட்டுக்கொண்ட சூடு .......... ஆதவா, செல்வா , ஆதன், தாமரை அண்ணா மாதிரி சுப்புடுக்கள் இந்த பக்கம் வருவதை தவிர்க்கவும் ..... மீறி வந்து படித்தால் உங்களுக்கு நேரும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்லை.... :lachen001:

இளசு
30-06-2011, 05:52 AM
மிக அழகான உட்பொருள் இரவீ.. பாராட்டுகள்.

சிறுவயதில் ஏ. ஜி. கார்ட்னர் ( ஆல்ஃபா ஆஃ த ப்ளவ்) எழுதிய கட்டுரை பாடநூலில் வாசித்தது நினைவாடலில்..

காலையில் வெறுப்பில் பணிக்குக் கிளம்பும் கணவன் அந்த வெறுப்பை எப்படி எல்லாம் தூவி, சங்கிலியாய் வளரும் --- அக்கட்டுரையில்.

அந்த ஆதிவிதை நல்லதாய், மகிழ்ச்சியாய் இருந்தால், விளைவுகள் சுகமாய்....

sarcharan
30-06-2011, 05:57 AM
<b>
முதலில் வீட்டில் இருந்து ஆரம்பிப்போம் அண்ணா ... பொறுப்பில்லாத ஒரு கணவன் பற்றியதாக இப்போது இதை பார்ப்போம்.

உரியவன் உடையவளுக்கு வீட்டு செலவுக்கு பணம் கொடுக்கவில்லை .... அதனால் பணம் கிடைக்காத காரணத்தால் உடையவள் சமைக்கவில்லை .... சாப்பிடாத காரணத்தால் பசி பொறுக்கவில்லை .... பசி பொறுக்க முடியாத காரணத்தால் உடையவன் வெறுப்பில் செல்கிறான் ... வெறுப்பில் சென்றவன் எதிலும் மனம் ஒன்றாமல் தன திறமைகளை யாருக்கும் கொடுக்கவில்லை . அவ்வாறு திறமைகளை கொடுக்காத காரணத்தால் அவனுக்கு செல்வம் கிடைக்கவில்லை ..... செல்வம் கிடைக்காத காரணத்தால் மனைவிக்கு ஆவான் பணம் கொடுக்கவில்லை ..... எனவே அவள் சமைக்கவில்லை .... இந்த சங்கிலி எங்காவது பொறுப்புணர்வுடன் கையாளப்பட்டால் பிரச்சனை தீரும்.

என்ன அண்ணா ஏதோ கொஞ்சம் பரவாயில்லையா ?</b>
எப்படி எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ...

<b>
இதில் வரும் வார்த்தைகள் அனைத்தும் ஒரு சம்பவக் கோர்வையில் வரும் வார்த்தைகள் எனவே எந்த ஒரு நிகழ்வுடனும் ஒப்பிடலாம் இடைவெளிகளை நிரப்பி ..... இதில் பெரிதாய் ஒன்றும் இலக்கியதரம் கிடையாது ... ஏதோ தாமரை அண்ணா, கீதம் அக்காவின் ஆக்கங்களை பார்த்து போட்டுக்கொண்ட சூடு ... :lachen001: </b>

புலிய பாத்து பூனை சூடுபோட்டுகிட்ட கதை மாதிரியா?

கொடுக்கல அதனால் கிடைக்கல
கிடைக்கல அதனால் படைக்கல
படைக்கல அதனால் பொறுக்கல
பொறுக்கல அதனால் வெறுப்பில
வெறுப்பில அதனால் கொடுக்கல

கொடுக்கல அதனால் கிடைக்கல ......... :confused:

<b>
ஏதோ என்னால் முடிந்து</b>

:confused::confused:

Ravee
30-06-2011, 06:07 AM
மிக அழகான உட்பொருள் இரவீ.. பாராட்டுகள்.

சிறுவயதில் ஏ. ஜி. கார்ட்னர் ( ஆல்ஃபா ஆஃ த ப்ளவ்) எழுதிய கட்டுரை பாடநூலில் வாசித்தது நினைவாடலில்..

காலையில் வெறுப்பில் பணிக்குக் கிளம்பும் கணவன் அந்த வெறுப்பை எப்படி எல்லாம் தூவி, சங்கிலியாய் வளரும் --- அக்கட்டுரையில்.

அந்த ஆதிவிதை நல்லதாய், மகிழ்ச்சியாய் இருந்தால், விளைவுகள் சுகமாய்....

அண்ணா ரொம்ப சந்தோசம் .... :)

நீங்கள் முதலில் குறிப்பிட்ட படைப்பாளிக்கு கிடைக்காத அங்கிகாரம் ... அதனுடனும் இதை ஒப்பிடலாம் .... ;)

இப்போது அரசியல் வாதிகளை வைத்து பார்ப்போம்.

அரசியல்வாதிகள் நல்லாட்சி கொடுக்காத காரணத்தால் ஒட்டு கிடைக்கவில்லை ... ஒட்டு கிடைக்காத காரணத்தால் புதிய ஆட்சியை படைக்கவில்லை ... தனக்கு கிடைக்காத ஒன்றை அடுத்தவன் அனுபவிப்பதை மனம் பொறுக்கவில்லை ... பொறுக்காத காரணத்தால் வெறுப்பில் செல்லும் அரசியல்வாதி மீண்டும் தொண்டர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கவில்லை. தொண்டர்கள் மத்தியில் இழந்த செல்வாக்கால் என்றுமே பதவி அவர்களுக்கு கிடைக்கவில்லை .....

இந்த கண்ணோட்டம் எப்படி இருக்கிறது.

நாஞ்சில் த.க.ஜெய்
30-06-2011, 06:25 AM
"...கிடைக்கல அதனால கொடுக்கல
கொடுக்கல அதனால கிடைக்கல .."

இதுதான் இன்றைய நிலை தோழர் ..

Nivas.T
30-06-2011, 07:02 AM
கொடுத்தால் தானே கிடைக்கும்

கொடுக்க வேண்டுமானால் எங்கிருந்து கிடைக்கும்?

நமக்கு நாமே என்பது வெறும் வார்த்தையில் மட்டும் இருந்தால் போதாது
அதை உணர்வுப் பூர்வமாக செயலபடுத்த வேண்டும்

Ravee
30-06-2011, 07:15 AM
கொடுத்தால் தானே கிடைக்கும்

கொடுக்க வேண்டுமானால் எங்கிருந்து கிடைக்கும்?

உங்க ஐ கேசில் இருந்து ...... :lachen001:

Nivas.T
30-06-2011, 07:51 AM
உங்க ஐ கேசில் இருந்து ...... :lachen001:

அதுவும் கொடுத்ததனால் கிடைத்ததுதான் :D:D:D:D