PDA

View Full Version : விளக்கம் தேவை

raj7003
28-06-2011, 08:27 AM
நான் சில நாட்களுக்கு முன்பு பழனி பாபா அவர்களின் பேச்சு கேட்டேன், அதில் கம்பன் அயோக்கியன், தமிழ் இன துரோகி என அவர் குறிப்பிட்டார், ஏன் அவர் அப்படி சொன்னார் கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடும் என்று சொல்கிறார்கள், கம்பன் என்ன தமிழ் இன துரோம் செய்தார் - யாரும் தொிந்தால் சொல்லுங்கள்

M.Jagadeesan
28-06-2011, 08:43 AM
பழநிபாபா பெரிய தமிழ் அறிஞரா? கம்பனைக் குறைசொல்ல அவருக்கு என்ன தகுதி உள்ளது?

sarcharan
28-06-2011, 08:45 AM
ராமாயாணத்தை மொழிபெயர்த்தாரே அதனாலோ?

தாமரை
28-06-2011, 09:31 AM
நான் சில நாட்களுக்கு முன்பு பழனி பாபா அவர்களின் பேச்சு கேட்டேன், அதில் கம்பன் அயோக்கியன், தமிழ் இன துரோகி என அவர் குறிப்பிட்டார், ஏன் அவர் அப்படி சொன்னார் கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடும் என்று சொல்கிறார்கள், கம்பன் என்ன தமிழ் இன துரோம் செய்தார் - யாரும் தொிந்தால் சொல்லுங்கள்

அவர் பேச்சைக் கேட்ட உங்களுக்கே காரணம் தெரியலைன்னா கேட்காத எங்களுக்கு எப்படிங்க தெரியும்?
:D:D:D:D

நாஞ்சில் த.க.ஜெய்
28-06-2011, 09:36 AM
யாருங்க அந்த பழனி பாபா ...அவர் ஆற்றிய தமிழ் தொண்டினை பற்றி அறிந்தவர் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ..குறை கூறி பெயர் வாங்கிய நக்கீரன் பரம்பரையில் வந்த பேரறிஞரோ ...மனம் அவரை பற்றி அறிய துடிக்கிறதே....

Nivas.T
28-06-2011, 09:48 AM
யாருங்க அந்த பழனி பாபா ...அவர் ஆற்றிய தமிழ் தொண்டினை பற்றி அறிந்தவர் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ..குறை கூறி பெயர் வாங்கிய நக்கீரன் பரம்பரையில் வந்த பேரறிஞரோ ...மனம் அவரை பற்றி அறிய துடிக்கிறதே....

வேண்டாம் ஜெய்

பிறகு நக்கீரரையும் தமிழின துரோகி என்று அவர் கூறிவிட்டால் நாம் என்ன செய்வது? :confused::icon_ush::D

நாஞ்சில் த.க.ஜெய்
28-06-2011, 10:18 AM
அதுவும் சரிதான் தோழர் ...தமிழில் இருக்கும் ஒரு சில நற்புலவர்களையும் இவர்கள் போன்றவர்களுக்காக ஒப்பிட்டு நம்மை நாமே தரம் தாழ்த்தி கொள்வதுபோலாகிவிடகூடாது ...

ஆதி
28-06-2011, 11:35 AM
அவர் சொன்னதற்கு காரணம் இதுவாக இருக்கலாம், இராமாயணம் ஆரியர்களை உயர்த்தியும், திராவிடர்களை தாழ்த்தியும் எழுதப்பட்ட நூலென்றொரு பேச்சுண்டு, அதனால் அவர் அப்படி பேசியிருக்கலாம்..

திராவிட இயக்கங்கள் துவங்கப்பட்ட காலங்களில் இந்த பேச்சுக்கள் பரவலாக இருந்தன...

M.Jagadeesan
28-06-2011, 11:46 AM
ராமாயாணத்தை மொழிபெயர்த்தாரே அதனாலோ?

.தவறு. கம்பர் வால்மீகி இராமாயணத்தை வழி நூலாகக் கொண்டு புதிய காவியம் படைத்தார். மொழிபெயர்க்கவில்லை.

raj7003
28-06-2011, 11:50 AM
அவர் சொன்னதற்கு காரணம் இதுவாக இருக்கலாம், இராமாயணம் ஆரியர்களை உயர்த்தியும், திராவிடர்களை தாழ்த்தியும் எழுதப்பட்ட நூலென்றொரு பேச்சுண்டு, அதனால் அவர் அப்படி பேசியிருக்கலாம்..

திராவிட இயக்கங்கள் துவங்கப்பட்ட காலங்களில் இந்த பேச்சுக்கள் பரவலாக இருந்தன...

”” தாமரை
மன்ற ஆலோசகர்
பண்பட்டவர் மற்றும்
நாஞ்சில் த.க.ஜெய் அவர்களுக்கு

இது தான் சறியென்று நினைக்கிறேன். மேலும்

நெட்டில் பழனி பாபாவைப் பற்றி பார்தத்தில் மன்றத்தினர் தவறாக எடுத்துக் கொள்ள கூடாது. மதம் சம்பந்தமானது என்று. தயவு செய்து இந்த லிங்கில் பழனி பாபாவை தெறிந்து கொள்ளுங்கள் www.palanibaba.in. நான் கேட்ட ஆடியோ நெட்டில் பார்த்தது. அதில் அவர் இரண்டொரு வார்த்தை மட்டும் கூறினார். நாளை அந்த ஆடியோவை அப்லோடு செய்கிறேன்.

தாமரை
28-06-2011, 02:38 PM
இதைப் பற்றிய கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய கருத்தை அழகாக அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தனது புத்தகம் பற்றிய உரையில் சொல்லி இருக்கிறார்.

http://findtamilmp3.blogspot.com/2008/10/download-arthamulla-indhu-madham.html

"சிறு வயது முதலே எனக்குத் தெய்வபக்தி உண்டு என்றாலும், சகவாச தோஷத்தால் கொஞ்ச காலம் தெய்வபக்தி இல்லாமலும் நான் இருந்தது உண்டு. தெய்வத்தை விரோதித்ததும் நிந்தித்ததும் உண்டு. தெய்வபக்தி என்பது தேவையற்ற ஒன்று என்ற கருத்திற்கு நான் உடன்பட்டு இருந்ததும் உண்டு. ஆனால் தெய்வபக்தி என்பது எனக்கு எப்போது வரத்தொடங்கிற்று என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும், அது தமிழர்களை இழிவுபடுத்துகிறது என்று ஒரு இயக்கம் முப்பதாண்டுகளுக்கு முன்னாலே துவங்கிற்று. அந்த இயக்கம் அரக்கர்கள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் எல்லாம் தமிழர்கள், ஆகவே அவர்களை இழிவுபடுத்துகிறது கம்பராமாயணம் என்று கூறிற்று. அது அந்த அரக்கர்களை மட்டும் கூறவில்லை, எந்த புராணத்தில் அரக்கன் வந்தாலும் அவன் தமிழனே என்று வாதாடத் தொடங்கியது. அரக்கனாகச் இருப்பவனெல்லாம் தமிழன் என்று அதுவே கருதிற்று. ஆகவே நாமும் கொஞ்ச காலம் அரக்கராக இருக்க வேண்டும் என்று அதுவும் விரும்பிற்று. நானும் விரும்பிக் கொஞ்ச காலம் இருந்தேன்.

அனுமன் என்று குரங்காகக் கூறப்பட்டிருப்பவனும் இவர்கள் எல்லாம் தமிழர்கள். எனவே தமிழர்கள் இழிவுபடுத்துகிறது கம்பராமாயணம். அதைக் கொளுத்த வேண்டும். எரிக்க வேண்டும் என்றெல்லாம் வாதம் எழுந்த பொழுது, அதைப்பற்றி திரு அண்ணா அவர்கள் ஏராளமாக எழுதத் தொடங்கினார்கள். கம்பனிலே எவ்வளவு ஆபாசம் இருக்கிறது என்று அவர் ஒவ்வொன்றாக அவர் எழுதத் தொடங்கியபோது, நாமும் அது பற்றி கம்பனை விமர்சிக்க வேண்டும் என்று எண்ணி கம்பராமாயணத்தை நான் படிக்க ஆரம்பித்தேன்.

அரக்கன் என்பதற்கு கம்பன் ஒரு விளக்கமே சொல்லுகின்றான். இரக்கமென்றொருபொருள் இல்லாதார் அரக்கர் என்று.

கம்பராமாயணத்தைப் படிக்கப் படிக்க, அதை விமர்சனம் செய்யவேண்டும் என்ற எண்ணம் போய், இன்னும் படிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து படித்து மனப்பாடம் செய்து வைத்த காரணத்தால், அதிலேயே மூழ்க நேர்ந்தது. அந்த இயக்கத்திலே இருந்த போதே எனக்கு இராமகாதை மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டது. கம்பனுடைய இராமகாதை மீது ஒரு உற்சாகமான, ஆவேசமான ஆசையும் ஏற்படத் தொடங்கியது. அதுமுதலே, வாழ்க்கையிலே தெய்வபக்தி என்பது தேவையானது என்ற உணர்வு தோன்றிற்று.

உணர்வு தோன்றிற்றே தவிர, தெய்வபக்தியின் விளைவு என்ன என்று என்னாலே உணர்ந்து கொள்ள முடியவில்லை.
...........................................................................................
...........................................................................................
...........................................................................................

சங்க இலக்கியத்திலேயே இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற மன்னனைக் காண்கிறோம். கரிகால்சோழன் காலத்திலேயே யாகங்களும் பூஜைகளும் தமிழ்நாட்டில் இருந்தன என்பதையும் காண்கிறோம். அப்படி இருக்க, 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தக் கம்பனைக் குறைசொல்லுவது தவறாகும்.

அதுவும் யாரைப் பற்றி குறைசொல்கிறோமோ, எதைக் கொண்டு அளவிடுகிறோமோ அதனைத் தீர ஆராய வேண்டும். மேலோட்டமாய் நாலு பாடல்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு, அதுவும் இன்னொருவர் சொன்னதை வைத்துக் கொண்டு குறை கூறுவது தவறான வழியாகும்.