PDA

View Full Version : மனைவிஐரேனிபுரம் பால்ராசய்யா
28-06-2011, 06:45 AM
குடும்பச்செலவுக்கு ருபாய் ஐம்பதாயிரம் லோண் வேண்டுமென்றும் அதை மாதம்தோறும் மூவாயிரம் வீதம் பிடித்தம் செய்துகொள்ளும்படியும் கேட்டு கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள் வாகினி.

``கம்பெனியுல லோண் கேட்குற அளவுக்கு அப்படி என்ன உனக்கு கஷ்டம்!’’ அவளுடன் வேலை பார்க்கும் தோழி திவ்யா கேட்டாள்.

``கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோண வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.!’’ யதார்த்தமாய் சொன்னாள் வாகினி.

``என்னடி சொல்ற?’’ திவ்யா புரியாமல் கேட்டாள்.

``இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் வந்தப்போ நான் வாங்கற சம்பளம் என் வீட்டுக்காரர் வாங்கற சம்பளத்த விட ஆயிரம் ரூபா அதிகம். அவர விட நான் அதிக சம்பளம் வாங்குறது தெரிஞ்சா அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடும்,. என் சம்பளத்துலயிருந்து மூவாயிரம் பிடித்தம் போக மீதி சம்பளம் என் பேங்குல கிரிடிட் ஆச்சுன்னா அது அவர் வாங்கற சம்பளத்த விட குறைவு அதான் லோணுக்கு அப்ளை பண்றேன்!.

தனது கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக்கூடாது என விரும்பும் வாகினியின் நல்ல மனத்தை அதிசயமாகப் பார்த்தாள் திவ்யா.

Nivas.T
28-06-2011, 06:54 AM
மிக அருமையான கதை

நல்ல கருத்து

பாராட்டுகள் பால்ராசய்யா

நாஞ்சில் த.க.ஜெய்
28-06-2011, 08:00 AM
நல்ல புரிந்துணர்வும் புத்திசாலித்தனமும் கொண்ட மனைவி ..அருமையான கதை ...தொடருங்கள் தோழர் ....

sarcharan
28-06-2011, 08:44 AM
அது சரி அவரது கணவர் பே-ஸ்லிப்பை பார்ப்பது இல்லையோ?

M.Jagadeesan
28-06-2011, 08:54 AM
நல்ல கருத்துள்ள கதை! பாராட்டுக்கள்.

அக்னி
28-06-2011, 08:54 AM
ஒரு பக்கக் கதைகளின் கருத்துச் செறிவு என்றுமே வியப்புக்குரியது.

இக்கதையும் வியக்க வைக்கின்றது.

அடிக்கடி மன்றத்தில் உங்கள் படைப்புக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் ஐ.பா.ரா. அவர்களே...

தாமரை
28-06-2011, 09:36 AM
1. என்னுடைய சம்பளம் முழுசும் எங்கப்பா அம்மாவுக்கு அனுப்பிடுவேன் என்று கறாராக கண்டிஷன் போடும் பெண்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனைவியா என்று யோசிக்க வைக்கிறது.

2. கணவனின் ஈகோவைச் சமாளிக்க 50000 ரூபாய்க்கு வட்டி கட்டும் அநியாயம் பார்த்தால் பாவமா இருக்கு.

கீதம்
28-06-2011, 09:42 AM
கதை ரொம்ப நல்லா இருக்கு. பாராட்டுகள்.1. என்னுடைய சம்பளம் முழ்சும் எங்கப்பா அம்மாவுக்கு அனுப்பிடுவேன் என்று கறாராக கண்டிஷன் போடும் பெண்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனைவியா என்று யோசிக்க வைக்கிறது.

2. கணவனின் ஈகோவைச் சமாளிக்க 50000 ரூபாய்க்கு வட்டி கட்டும் அநியாயம் பார்த்தால் பாவமா இருக்கு.

வட்டி கட்டினால் பணம்தான் வீணாகும். கணவனின் ஈகோவைச் சமாளிக்காவிடில் வாழ்க்கையே வீணாகிவிடுமே.

தாமரை
28-06-2011, 09:45 AM
வட்டி கட்டினால் பணம்தான் வீணாகும். கணவனின் ஈகோவைச் சமாளிக்காவிடில் வாழ்க்கையே வீணாகிவிடுமே.

அதனாலதாங்க பாவமா இருக்குன்னு சொன்னேன்...:aetsch013::aetsch013::aetsch013:

சிவா.ஜி
28-06-2011, 12:47 PM
ரொம்ப நாளைக்கு அப்புறமா ஐ.பா.ரா அவர்களின் கருத்துள்ளக் கதை. வாழ்க்கைச் சிக்கலைத் தீர்க்க...என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது...(தாமரை சொன்ன மாதிரி...அநாவசிய வட்டி கட்டுதல் உட்பட...)

வாழ்த்துக்கள் ஐ.பா.ரா அவர்களே.

த.ஜார்ஜ்
28-06-2011, 03:44 PM
வாருங்கள் பால்றாசய்யா.. உடல் நலம் இல்லாமலிருந்ததாக கேள்விப்பட்டேன். இப்போது எப்படி இருக்கிறீர்கள்?

பூமகள்
29-06-2011, 10:15 AM
மனைவி மனம் தங்கம்..
புரிஞ்சவங்க சிங்கம்..

ஹி ஹி..

--

நல்ல கதை ஐயா. கருத்து மெய்சிலிரிக்க வைக்கிறது.. :)

sarcharan
29-06-2011, 11:54 AM
ஆரம்பிப்போம் ஒரு சங்கம்
வகிப்போம் ஒரு அங்கம்

MURALINITHISH
01-07-2011, 07:47 AM
1. என்னுடைய சம்பளம் முழுசும் எங்கப்பா அம்மாவுக்கு அனுப்பிடுவேன் என்று கறாராக கண்டிஷன் போடும் பெண்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனைவியா என்று யோசிக்க வைக்கிறது.
இப்படி சொல்வது தவறா

தாமரை
01-07-2011, 07:51 AM
இப்படி சொல்வது தவறா

புருஷன் அவன் முழுச்சம்பளத்தை அவங்க அப்பா அம்மாவுக்கு அனுப்பிடட்டும். பிள்ளை குட்டிகள் பட்டினியில் கிடக்கலாம்.:aetsch013::aetsch013::aetsch013:

ஐரேனிபுரம் பால்ராசய்யா
01-07-2011, 12:51 PM
மனைவி கதையை படித்து கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட அத்தனை இனிய இதயங்களுக்கும் நன்றி. மனைவி மீது நம்பிக்கை வைத்திருக்கும் கணவனுக்கு பே சிலிப் காட்டவேண்டும் என்ற அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன், மேலும் சில கம்பெனிகளில் லோண் கொடுத்துவிட்டு சம்பளத்தில் பிடித்தம் செய்வார்கள். கம்பெனி ஒன்றும் அதற்கு வட்டி வசூலிப்பது இல்லை. நான் வேலை பார்த்த கம்பெனியில் வட்டி எதுவும் வசூலிக்கவில்லை. வேறு கம்பெனிகளில் எப்படியோ.
ஒருவேளை அப்படி வட்டி வசூலித்தாலும் அப்படியொன்றும் அதிக தொகை வசூலிக்க மாட்டார்கள் என்பது எனது கணிப்பு. நன்றி

க.கமலக்கண்ணன்
02-07-2011, 03:01 AM
நல்ல மனைவி... கொடுத்து வைத்த கணவன்...

நல்ல கதை... கருத்துள்ள கரு...

அனுராகவன்
07-07-2011, 04:07 PM
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி உலகம் இருக்கு....