PDA

View Full Version : என் அப்பாவின் நினைவாக



Ravee
27-06-2011, 09:26 AM
http://prodigalthought.files.wordpress.com/2011/05/father-and-son1.jpg


என் அப்பாவின் நினைவாக



இதோ நீங்கள் சென்று

இருபது வருடங்கள் போய் விட்டது

ஆனாலும்

என்னுடனேயே இருக்கிறிர்கள்

ஆமாம்

என் செயல் ஒவ்வொன்றிலும்

உங்களை நான் பார்கிறேன்

ஒரு தந்தையாய் இன்று

எனக்கு கிடைத்த மரியாதை

அது உங்களோடு இருந்த காலத்தில்

நான் கற்ற பாடங்கள்

நான் இழந்த மதிப்பு

அது என்னுடன் நீங்கள்

இல்லாமல் போனதால் ஏற்ப்பட்ட விபத்து

அய்யா எங்கிருந்தாலும்

என்னை வழி நடத்துங்கள்

உங்கள் வழியில் நான்

கீதம்
27-06-2011, 09:37 AM
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

பெருமைக்குரிய தகப்பனார்க்கு என் வந்தனம்.

KAMAKSHE
27-06-2011, 10:11 AM
http://prodigalthought.files.wordpress.com/2011/05/father-and-son1.jpg


என் அப்பாவின் நினைவாக



இதோ நீங்கள் சென்று

இருபது வருடங்கள் போய் விட்டது

ஆனாலும்

என்னுடனேயே இருக்கிறிர்கள்

ஆமாம்

என் செயல் ஒவ்வொன்றிலும்

உங்களை நான் பார்கிறேன்

ஒரு தந்தையாய் இன்று

எனக்கு கிடைத்த மரியாதை

அது உங்களோடு இருந்த காலத்தில்

நான் கற்ற பாடங்கள்

நான் இழந்த மதிப்பு

அது என்னுடன் நீங்கள்

இல்லாமல் போனதால் ஏற்ப்பட்ட விபத்து

அய்யா எங்கிருந்தாலும்

என்னை வழி நடத்துங்கள்

உங்கள் வழியில் நான்
அப்பாவின் நினைவில் வந்து விழுந்தவை அழகான வரிகள்.

sarcharan
27-06-2011, 10:13 AM
அப்பா அப்பா தான்... வேறென்ன சொல்ல...

Nivas.T
27-06-2011, 10:16 AM
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

என்பது என் தாரக மந்திரம்

நாஞ்சில் த.க.ஜெய்
27-06-2011, 01:28 PM
தந்தையின் சொல் வார்த்தை அவருடைய அனுபவங்களின் தொகுப்புகள்....
உண்மையான வரிகள் ...

த.ஜார்ஜ்
27-06-2011, 04:31 PM
கொடுத்து வைத்தவர் நீங்கள்...!

Ravee
28-06-2011, 09:15 AM
கொடுத்து வைத்தவர் நீங்கள்...!

கொடுத்துவைக்காதவன் நான் ஜார்ஜ் ., அதுதான் பாதியில் இந்த பிரிவு .......

அக்னி
28-06-2011, 09:45 AM
கைப்பிடித்து அழைத்து வந்த
பிடி நழுவினால்...

இந்த இழப்பை பதின்ம வயதின் இறுதியில் நானும் கொண்டேன்.

மறக்காத நினைவை நினைவுபடுத்திவிட்டீர்கள்...

lenram80
28-06-2011, 12:37 PM
என்றோ நான் எழுதிய கவிதை இது....

கீழே திடீரென விழுந்த நான் சொன்னேன் "அப்பா!"
தாத்தா கூட முதுகை பிடித்துக் கொண்டு
உட்காரும் போதும் சொல்வது "அப்பா!"
"அப்பா" என்பது மந்திரச் சொல்லா?
வயது வித்தியாசம் இல்லாமல்
வலிமையை கொடுக்கும் வசிகரச் சொல்லா?

உனக்கு எப்படி முதுகுவலி வந்தது என்று எனக்குத் தெரியும்!
குடும்ப பாரத்தைச் சுமந்து கொண்டு, சுத்துவதென்றால் சும்மா இல்லை!
ஒவ்வொரு அப்பாக்களும் "செக்கிழுக்கும் செம்மல்கள்!"
கண் முன்னே வாழும் காந்திகள்!

சூரியனில் கூட மழை பெய்யுமா?
நான் பார்த்தேனே!
அக்கா திருமணத்தின் போது, உன் கண் கலங்கியதை!

சந்திரனில் கூட புல் முளைக்குமா?
நான் பார்க்கிறேனே!
உன் முகத்தில் முடிகள்!

நீ சொன்ன அறிவுரைகளை எழுதி
வைக்காததால் இதிகாசமாகவில்லை!

நீ சொல்லும் அறிவுரைகள் கேட்காவிட்டால்
வாழ்வில் பிரகாசமில்லை!

Ravee
28-06-2011, 01:16 PM
கைப்பிடித்து அழைத்து வந்த
பிடி நழுவினால்...

இந்த இழப்பை பதின்ம வயதின் இறுதியில் நானும் கொண்டேன்.

மறக்காத நினைவை நினைவுபடுத்திவிட்டீர்கள்...


என்றோ நான் எழுதிய கவிதை இது....

நீ சொல்லும் அறிவுரைகள் கேட்காவிட்டால்
வாழ்வில் பிரமாசமில்லை!


தந்தையின் சொல் வார்த்தை அவருடைய அனுபவங்களின் தொகுப்புகள்....
உண்மையான வரிகள் ...


தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

என்பது என் தாரக மந்திரம்


அப்பா அப்பா தான்... வேறென்ன சொல்ல...


அப்பாவின் நினைவில் வந்து விழுந்தவை அழகான வரிகள்.


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

பெருமைக்குரிய தகப்பனார்க்கு என் வந்தனம்.


ஒரு குடும்பத்துக்கு அப்பா என்பவர் கப்பலை வழி நடத்தி செல்லும் மாலுமி போல ... அவரை இடையில் இழந்துவிட்டால் .... குடும்பம் என்ற கப்பலை கரை சேர்க்க எத்தனை விலை கொடுக்க வேண்டி வருகிறது ... இழப்பின் வலியை உணர்ந்தவர்களுடன் என் உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்கிறேன்.