PDA

View Full Version : எடுக்கப்பட்டதுKAMAKSHE
25-06-2011, 06:31 PM
டிலீட் எப்படி செய்வது எனத் தெரியவில்லை

arun
25-06-2011, 06:47 PM
வேலைக்கு செல்லும் பெண்களை பற்றி கதையாக அவர்களது கஷ்டங்களை சொல்லி இருக்கிறீர்கள் அற்புதம் கடைசி வரிகள் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது

Ravee
25-06-2011, 11:30 PM
நாடக வடிவத்தில் ஒரு கதை ... பரபரப்பாய் கதை ஆரம்பித்த வேகத்தில் முடிந்துவிட்டது .... :)

கடைசியான எண்ண ஓட்டம் எல்லோருக்கும் இயல்பானது .........வாழ்த்துக்கள்

KAMAKSHE
26-06-2011, 07:55 AM
வேலைக்கு செல்லும் பெண்களை பற்றி கதையாக அவர்களது கஷ்டங்களை சொல்லி இருக்கிறீர்கள் அற்புதம் கடைசி வரிகள் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது

படித்து விமர்சித்தமைக்கு என் நன்றிகள்

ஜானகி
26-06-2011, 02:11 PM
ரமணியின் 80 கிலோமீட்டர் வேகப் புலம்பலைக் கேட்கவேண்டியவர்கள் கேட்டு, தகுந்த மாற்றம் ஏற்படும்படி, கதையிலாவது செய்திருக்கலாமே....நிஜவாழ்வில்தான் அப்படியெல்லாம் நடக்காது.....கற்பனையிலாவது......

KAMAKSHE
26-06-2011, 03:06 PM
ரமணியின் 80 கிலோமீட்டர் வேகப் புலம்பலைக் கேட்கவேண்டியவர்கள் கேட்டு, தகுந்த மாற்றம் ஏற்படும்படி, கதையிலாவது செய்திருக்கலாமே....நிஜவாழ்வில்தான் அப்படியெல்லாம் நடக்காது.....கற்பனையிலாவது......

ஜானகி ரொம்ப ரொம்ப நன்றி. நீங்க படிச்சு விமர்சித்ததுக்கு. நீங்க சொல்றாப்பல என்னால கற்பனை பண்ண முடியல. ஏன்னா இது ரமணி மாதிரி உள்ளவங்களைப் பத்தி மட்டுந்தான் .

ஜானகி அவர்களே! அடிக்கடி செய்து அலுத்துப் போகக் கூடிய வேலைச் சுமைகளை குறைக்க யாரை என்ன செய்யச் சொல்வது?

80 ஸ்பீடுல ஓடுற அந்த பொண்ணு மொதல்ல ஆசைப்படணும் - தனக்கு 50% விடுதலையாவது வேணும்னு - செய்வாளா?

அடுத்து கணவனே புரிந்து கொண்டு உதவிக்கு வரணும் - செய்வானா?

அடுத்து படிக்கும் பெண் குழந்தைகள் அம்மாவுக்கு உதவி செய்யணும்னு மனசுல தோணினாலும் செய்யணுமே! - செய்வாங்களா?

ஒருவேளை இத்தனை பேரும் சேந்து சொன்னாலும் அந்தப் பெண் அதான் ரமணி கேக்கணுமே? - செய்வாளா?

பல பெண்கள் இந்த ரமணி மாதிரி இல்லை. நீங்க சொல்றாப்பல எத்தனையோ பெண்கள் மாறி பல சாதனைகள் செஞ்சிருக்காங்க. ஆனா ரமணி மாதிரி நிறைய, நிறைய இருக்காங்க.

சரின்னு ரமணிகளிடம் கேட்டேன் . ஒரு ரமணி - ஸ்பீடைக் கொறச்சுட்டு நான் என்ன செய்ய? வெட்டியா இருக்கவான்னு கேக்கறா? இன்னொருத்தி என் கணவருக்கு சம்பளாம் கம்மி. வேலைக்காரி வச்சு கட்டுப்படி ஆகாதுங்கறா. அடுத்த ரமணி காசு பணம் நெறய இருக்கு , ஆனா என் புருஷனுக்கு நான் செஞ்சாதான் பிடிக்குங்கறா.

இதெல்லாம் போகட்டும் . நம்ம ஊர்ல ( இந்தியாவுல ) ஸ்கூல், காலேஜ் போற பசங்களும், நாம எடுத்துக் குடுத்தாதான் சாப்பிடத் தெரிந்த ஆண்களும் இருக்கும் வரை அம்மாக்களுக்கு இந்த ஓட்டம் குறையும்னு எனக்குத் தோணலை. முக்யமா காலை வேளை டென்ஷனும் , பீ.பியும் இருக்கே! அட! அட! ( எத்தனையோ டிப்ஸ் மங்கையர் மலர் வந்துகிட்டுதான் இருக்கு ) ஆனா ரமணிகளும் , அவர்களின் கணவன்மார்களும் மனசு வச்சா மார்க்கம் உண்டு. என்னை யோசிக்க வச்சீங்க. நன்றிங்க.

கீதம்
27-06-2011, 12:13 AM
கதை என்பதை விடவும் இயல்பு வாழ்க்கையை மிகவும் சுவாரசியமா சொல்லியிருக்கீங்க, காமாக்ஷி. ஆனால் இந்த வேகத்தில் பயணித்தாலும் போகும் வழியில் சில சின்னச் சின்ன சந்தோஷங்களையும் தவறவிட்டுவிடாமல் ரசித்துக்கொண்டே செல்வதால்தான் வாழ்க்கை இன்னும் போரடிக்காமல் இருக்குன்னு நினைக்கிறேன்.

அழகான உண்மையான பதிவு. பாராட்டுகள் காமாக்ஷி.

KAMAKSHE
27-06-2011, 04:50 AM

நன்றிகள் கீதம். என்ன தெரியுமா? இந்த வேகமே அந்த ரசனைகளை மறக்கறதுனாலன்னு நான் நெனைக்கிறேன். ஒவ்வொருவரும் நமக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதையும் அப்பப்போ ஞாபகப் படுத்திக் கொள்ள மறப்பதால் தான் இந்த ஸ்பீடு. அதுவும் இந்த சமையல் அறையில் அம்மாவை விட்டா வேற யாரும் கிட்ட கூட நெருங்காத நிலை இன்னும் பல வீடுகளில் இருக்கே. ‘வீட்டில் காலை வேளை கடைமைகள் எல்லாம் அம்மாவுடையது’ என்பது பெண்களின் எழுதப் படாத 10 கமாண்ட்மெண்ட்ஸ் இல் ஒன்று....

sarcharan
27-06-2011, 11:19 AM
இல்லத்தரசிகளுக்கு என் வணக்கங்கள்..:)

த.ஜார்ஜ்
27-06-2011, 11:57 AM
என்னமோ வண்டிலதான் 80 ல பறக்கிராங்கன்னு நினைச்சா... யப்பா.. இந்த ஸ்பீடு தாங்காதுப்பா..

நாஞ்சில் த.க.ஜெய்
27-06-2011, 02:43 PM
செல்லும் வண்டியின் வேகம் என்பது கிலோ மீட்டர் என நினைத்தால் ஒரு சராசரி குடும்ப பெண்ணின் நிலையினை தெளிவாக கூறிய விதம் அருமை ...தொடருங்கள்...

Mathu
27-06-2011, 05:02 PM
ஆனா 10 மணிக்கு அப்புறம் பிரேக் பிரேக் பிரேக் மட்டும் தானேங்க...:)
கம்பனி கணக்குல......

என் பொண்டாட்டி நான் பாத்திரம் களுவி வைச்சா திரும்ப இளுத்து போட்டு தான் களுவிறா.... என்ன பண்ண சொல்றீங்க?
(வீட்டில வாஸ்மெசீன் இருப்பது வேறு விசையம்):confused:

KAMAKSHE
27-06-2011, 05:35 PM
நன்றிகள் தங்கள் விமர்சனத்துக்கு.

நான் குறிப்பிடுவது காலை வேளை பரபரப்பைத்தான் ... சிலருக்கு ஆபீஸ் வேலைகளும் பளுவாகத்தான் இருக்கு. நன்றிகள் தங்கள் விமர்சனத்துக்கு

நீங்க இன்னும் நல்லா பாத்திரம் தேக்க கத்துகிட்டா அவங்க திருப்பி தேக்காம இருக்க வாய்ப்பு இருக்கும்

aren
29-06-2011, 11:50 AM
ஏன் இந்தப் ப்ரஷர் என்று சில சமயங்களில் நினைப்பது உண்டு. அலுவலகத்தில் எப்படி அதிகாரியாக செயல்பட்டு மற்றவர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி அழகாக சமாளிக்கிறோம், ஆனால் வீட்டில் ஏன் அப்படி செய்ய முடியவில்லை.

காரணம்: எல்லாம் கியாரண்டியாக நமக்கு மனைவி அல்லது அம்மாவிடமிருந்து கிடைத்துவிடுகிறது என்பதாலா.

அப்படியென்றால் இதுக்கு அம்மா அல்லது மனைவிதான் காரணமோ?

இதுக்கு ஆங்கிலத்தில் செல்ஃப் இண்டுயூஸுடு ப்ரெஷர் என்பார்கள்.

பெண்களாகவே அவர்களுக்கு ஏற்படுத்திக்கொண்ட ப்ரெஷர் என்று கொள்ளலாமா.

இருந்தாலும் கதை அருமையாக உள்ளது. ஒரு வீட்டில் நடக்கும் விஷயங்களை நேரடியாக பார்த்தது போலிருந்தது.

இன்னும் நிறைய எழுதுங்கள்.

KAMAKSHE
29-06-2011, 11:55 AM

நன்றி ஆரென் அவர்களே. மேலே நான் ஜானகிக்கு எழுதிய பதிலைப் பார்த்தால் உங்கள் கேள்விகளுக்கும் விடை புரியும் என நினைக்கிறேன்.

நன்றிகள் . நேரம் கிடைத்தால் நீ எழுதிய நான் படித்து உங்கள் எண்ணம் கூறுங்கள்

MURALINITHISH
01-07-2011, 08:51 AM
பெண்களின் நிலைமை இப்படிதான் இருக்குது