PDA

View Full Version : யாழ்ப்பயணம்அன்புரசிகன்
25-06-2011, 09:47 AM
மத்தியகிழக்கிலிருந்து வெளிக்கிட்டதிலிருந்து இன்னும் யாழ்ப்பாணம் செல்லவில்லை. அங்கு நிலமை சரியில்லை என்று பெற்றோரும் அனுமதித்ததில்லை. இனி யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று நினைத்து அந்த ஆசையை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருந்தேன். நாளும் கைகூட நான் பிறந்த ஊருக்கு வந்தாயிற்று. என்னமோ சினிமாவில் காட்டுவது போல் யாழ்நகர பேரூந்து தரிப்பிடத்திலிருந்து அந்த சொகுசு பேரூந்திலிருந்து இறங்கும் போது மிகவும் பழகிப்போன மண்வாசனை ஒன்று விதமான புத்துணர்ச்சி தந்தது. அக்கம்பக்கத்திலுள்ள தேனீர்க்கடைகளில் தேனீரை “டிங் டிங்” என்ற ஒலி மற்றும் சாம்பிராணி வாசைனைகளில் இரவு முழுவதுமான பிரயாணக்களைப்பு கலைந்தது. அதே பூபாலசிங்கம் கடையில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தார் மகிந்த. (பத்திரிக்கையில்) பழைய ஞாபகத்தில் கடையில் சென்று என் கண்களை உலாவவிடுகிறேன். ராணிக்காமிக்ஸ் லயன் காமிக்ஸ் ஏதாவது தென்படுகின்றனவா என்று. ஓரிரண்டு பழைய புத்தகங்கள் தென்படுகின்றன.

அண்ணை… அந்த புத்தகம் இரண்டையும் தாங்கோ

என்றுவிட்டு இரண்டாயிரம் ரூபாய்த்தாளை நீட்டுகிறேன்.

தம்பி முதலாவது வியாபாரம். மாத்தினகாசாத்தாங்கோ.. என்னட்ட சில்லறை இல்லை.

என்று சற்றே சோகமாக சொல்கிறார்.

அப்ப அந்த ரண்டையும் எடுத்துவைக்கிறீங்களோ நான் பிறகு வந்து வாங்குறன்…

தம்பி ஊருக்கு கனகாலத்துக்குப்பிறகு வாறியள் போல. இந்த ரண்டு புத்தகமும் 7-8 வருசமா இங்க தான் கிடக்கு. நீங்களே கொண்டு போங்கோ. பிறகு வரேக்க காசத்தாங்கோ.

என்றுவிட்டு எடுத்து தருகிறார். புத்தகத்தை சுருட்டி காற்சட்டை பையில் சொருகிவிட்டு தெல்லிப்பளை பேரூந்தை தேடுகிறேன். புறப்பட ஆயத்தமாகவும் நான் அவசரமாக சென்று ஏறுகிறேன். பிள்ளையார் பாட்டுடன் பேரூந்தை ஓட்ட ஆரம்பிக்கிறார். புழுதியை கிளப்பிக்கொண்டு காங்கேசன்துறை வீதியில் பயணிக்கிறது.

தம்பி எங்க இறக்கம் ?

என்று கேட்க்க ரொட்டியாலடி என்கிறேன்.

அண்ணை.. உங்களிட்ட ரண்டாயிரம் மாத்த இருக்கோ? என்று வினவ தனது இறப்பர் பையை திறக்கிறார். அதிலிருந்து ஒரு ஆயிரத்தையும் சில நூறு ரூபாத்தாள்களையும் எடுத்து பற்றுச்சீட்டு புத்தகத்தில் சொருகி நான் கொடுத்த இரண்டாயிரத்தை அந்த பையில் வைக்கிறார். பின் எனது மீதியை தந்துவிட்டு பின்னோக்கி செல்கிறார். காலை ஓரிரண்டு பாடசாலை மாணவர்கள் தான் அங்குமிங்குமாக இருந்தார்கள். யன்னல் வளியாக கைகளை நீட்டி கொண்டு விளையாடிக்கொண்டே வந்தார்கள்.

அடேய்.. உங்களுக்கு எத்தினதரம் சொல்லுறது. கையை சுருட்டி வை என்று சினந்துகொண்டு முன்பக்கமாக வந்தார்.

தம்பி ஊருக்கு புதுசோ? என்று கேட்க்க இல்லை அண்ண. பழசு. ஆனா கனகாலத்துக்குப்பிறகு வாறன். என்றேன். வெளிநாடு போல கிடக்கு. அவனவன் ஹையேஸ் பிடிச்சுக்கொண்டு வீட்டுவாசலில வந்து இறங்குறான். நீ என்னன்டா…. என்றார். நான் புன்முறுவலுடன் இருக்க ஓட்டுனர் சொன்னார். அதுவும் பரவாயில்லை. தம்பி நல்லா பொலிஞ்சு வந்திருக்கு. கொஞ்சமாவது வேர்க்கட்டும். என்றார்.

அது பரம்பரையண்ணா… நான் என்ன பண்றது…. …

மருதனார்மடம் சந்தை , இராமநாதன் கல்லூரி என கடந்து எனது இறங்கவேண்டிய தரிப்பிடம் வந்ததும் இறங்கினேன். அப்படியே அம்மம்மா வீட்டுக்கு போய் படலையை திறக்கவும் சித்தி

என்னடா நடந்தே வாறாய்? ஊர் கெட்டுக்கிடக்கு. நீ வாறது இன்நேரத்துக்கு எல்லாருக்கும் போயிடும். பிறகு எல்லாம் பிரச்சனை என்றார்.

வந்ததும் வராததுமா ஏன் அவன கொட்டுறாய். விடு. வாறது வரட்டும் என்று அம்மம்மா சொல்லிக்கொண்டு என் முதுகில் தடவினார். அதே பழய பாசம்…

குளித்துவிட்டு அருகிலிருந்த கோயிலில் வணங்கிவிட்டு ஊர்புதினம் எல்லாம் பேசினோம். அவற்றில் அநேகமானவை அடிவயிற்றில் புளி கரைப்பவையே. வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் வீட்டில் ஆயுதங்களுடன் வந்து பணம் பறிப்பது தான். சரி வாறது வரட்டும் என்ன செய்வது என்று. அன்று இரவும் ஒருவித பயம். திடீர் என்று வந்தால் என்ன செய்வது? காசு இருந்தாலாவது கொடுக்கலாம். சரி வரட்டும். கையிலிருக்கும் மோதிரத்தை கொடுப்போம். ஆனால் அதற்காக இவ்வளவு சிரத்தை எடுத்து வந்திடுவாங்களா?... அப்படியே தூங்கியாகிவிட்டது. நினைத்தது போலவே அன்றிரவு வெள்ளை நிற சிறுரக பேரூந்து வாசலில் வந்துநின்றது. முகமூடி அணிந்த 4 பேர் மளமளவென இறங்கி வந்தார்கள். அதில் இரண்டு பேரின் கையில் துப்பாக்கி. வீட்டிலிருக்கும் அனைவரையும் கட்டிப்போட்டுவிட்டு எனது பிரயாணப்பையை கிழறினார்கள். என்னை ஒரு யன்னலில் கட்டிவிட்டிருந்தார்கள்.

சொன்னா நம்புங்கோ.. என்னட்ட அவ்வளவு பணம் காசு இல்ல. இந்த மோதிரம் தான். நான் இப்ப தான் வெளிநாட்டுக்கு போனான்.

எவ்வளவோ சொல்லியும் நம்பவில்லை. அப்போது யாரோ ஒருவர் பின்புறமாக எனது கட்டை கழற்றிவிட்டு ஒரு துப்பாக்கியை கையில் சொருகிவிட்டு

இனி நீயாச்சு. உன்ர திறமையாச்சு என்றுவிட்டு நகர்ந்துவிடுகிறான். அது பழகிய குரல்…..

சட சடவென எனது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டுகள் வந்தவர்களை பதம்பார்த்தது. நாலாமவரை நோக்கி துப்பாக்கியை நீட்டியபோது ஓ… என்று குரல். அதுவும் பெண்குரல். அருகில் சென்று மூகமூடியை நீக்கினால் அழகான பெண் ஒருத்தி…

யார் நீ என்று கேட்டபோது செத்துக்கிடந்த ஒருவரை காட்டி அவரது மனைவி. அழுதுகொண்டே சொன்னாள்.
அறிவில்ல??? பிள்ளைகள் இருக்கோ???
இல்ல. வயித்தில…
வாயும் வயுறுமா இருந்துகொண்டு இந்தவேலைக்கெல்லாம் வாறியே…. என்று எரிந்து தள்ளினேன். சரி வா… உன்னை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டுவிடுகிறேன். சித்தி நீங்கள் பொலீசுக்கு போன்பண்ணி சொல்லுங்கோ. நான் இவள விட்டுட்டு வாறன் என்றுவிட்டு அந்த கர்ப்பிணியை அழைக்க

பயத்தில கால் நடுங்குது. நடக்க முடியாமலிருக்கு. என்றாள். கை தாங்கலாக அவர்களது வாகனத்தை நோக்கி அழைத்துச்செல்கிறேன். அப்போது எனது மற்ற சித்தியும் அம்மம்மாவும் பேசிக்கொள்கிறார்கள்.

இந்தப்பிள்ள மதிக்கு எவ்வளவு தோதா இருக்கும். என்று அந்த பெண்ணின் காதுபட சொல்கிறார்கள். அவளை இருக்கையில் அமர்த்திவிட்டு வந்து சித்திக்கு கோபத்தில் சொல்கிறேன்.

அவளே புருசன பறிகுடுத்திட்டு சோகத்தில நிக்கிறாள். இப்ப இந்த கதை உங்களுக்கு தேவையோ ?...

என்று… அப்போ அம்மா என்னை தட்டி எழுப்பினார்.

என்னடா?? கனவா என்று???

ம் ......... நான் இன்னமும் அவுஸில் தான்……………….
அந்த பழகிய குரல் விராடனது…

பாரதி
25-06-2011, 10:01 AM
அழகான ஊர்ப்பயணத்தில் ஆரம்பித்து, கனவில் முடிந்த கலக்கல் (!).:lachen001:

Nivas.T
25-06-2011, 10:27 AM
:eek::eek::eek: கனவில நீங்க மூனுபேர துப்பாகியால சுட்டீங்க???????? இத நாங்க நம்பனும்??????? :confused::D:D:D

அன்புரசிகன்
25-06-2011, 10:33 AM
:eek::eek::eek: கனவில நீங்க மூனுபேர துப்பாகியால சுட்டீங்க???????? இத நாங்க நம்பனும்??????? :confused::D:D:D

ஏனுங்க... இதிலும் மோசமானதெல்லாம்
கனவில் செஞ்டிருக்கேன்... நான் சுட்டது இங்கே ஹைலைட் இல்ல. என்னை விட்டிட்டு மதியை பற்றி யோசிச்சுக்கொண்ண்டு இருகினம் என்று...

Nivas.T
25-06-2011, 11:36 AM
ஏனுங்க... இதிலும் மோசமானதெல்லாம்
கனவில் செஞ்டிருக்கேன்... நான் சுட்டது இங்கே ஹைலைட் இல்ல. என்னை விட்டிட்டு மதியை பற்றி யோசிச்சுக்கொண்ண்டு இருகினம் என்று...

மதி இந்த பாவத்துக்கு நான் ஆளாக மாட்டேன் :D:D

ஆதி
25-06-2011, 11:53 AM
மதிக்கு தோதா இருக்கும் என்ற போதுதான் இது கனவென புரிந்தது :)

Ravee
25-06-2011, 12:02 PM
சுடப்பட்ட அந்த மூணு பேரும் யாரூஊஊஉ .... அக்னி, ஓவியன் இன்னோர்த்தர் யாரு நிவாஸா :eek: ???

அய்யோ மதிக்கு இந்த நிலைமையா....... அதுக்கு மதியையும் சேர்த்தே சுட்டு இருக்கலாம் .......:lachen001:

Nivas.T
25-06-2011, 12:19 PM
சுடப்பட்ட அந்த மூணு பேரும் யாரூஊஊஉ .... அக்னி, ஓவியன் இன்னோர்த்தர் யாரு நிவாஸா :eek: ???

அய்யோ மதிக்கு இந்த நிலைமையா....... அதுக்கு மதியையும் சேர்த்தே சுட்டு இருக்கலாம் .......:lachen001:

ஏன் இந்த கொலைவெறி?:sauer028:

என்ன மதுர மண்ணை மிதிக்க வைக்காம விட மாட்டீங்க போல :D:D

ஆதவா
25-06-2011, 01:19 PM
ரொட்டியாலடி

இதைப் படித்து சிரிசிரியென்று சிரித்தேங்க...

நான் கூட சீரியஸாப் போகுதேன்னு பார்த்தேன்...

மதி சார்... இல்லை இல்லை மதி அங்கில்!! உங்களுக்கு பொண்ணூ ரெடி!!

ஆதவா
25-06-2011, 01:20 PM
பென்ஸு : யோவ் தமிழ்ல கதை எழுதிப் பழகுங்கய்யா...

அன்பு, உங்களிடம் பென்ஸ் என்ன பேசினார்?

“ஆங்... ஆமாம்.... ஓஹோ.... ஹா.... ஹீ....” இப்படித்தானே?

ஆதவா
25-06-2011, 01:22 PM
மதிக்கு தோதா இருக்கும் என்ற போதுதான் இது கனவென புரிந்தது :)

இதுதானாய்யா உங்க டக்கு....

அவர் யாழ்பாணம் போறேன்னு சொன்னதுமே அது கனவா இருக்கும்னு மைல்டா ஒரு டவுட் வரலையா?

மதி
25-06-2011, 01:41 PM
அதெப்படி மனுசன் சொல்லிக்காம கொள்ளாம ஊருக்கு போயிருக்காரேனு பாத்தா.. நல்லா கனவு கண்டுக்கிட்டு இருக்கீரு.. ஏதாச்சும் அசினு..திரிசா... இல்லேன்னா லேட்டஸ்ட்டா வந்திருக்கறதுல ஏதாச்சும் ஒன்ன பத்தி கனவு கண்டா நல்லா இருக்கும். அதவிட்டுட்டு...

விகடன் நல்லாயிருக்காரா??

கருணை
25-06-2011, 01:56 PM
அப்போ இந்த கதையில வர எல்லோரும் நம்ம உறுப்பினர்கள்தானா .... :D

ஆதவா
25-06-2011, 02:41 PM
அதெப்படி மனுசன் சொல்லிக்காம கொள்ளாம ஊருக்கு போயிருக்காரேனு பாத்தா.. நல்லா கனவு கண்டுக்கிட்டு இருக்கீரு.. ஏதாச்சும் அசினு..திரிசா... இல்லேன்னா லேட்டஸ்ட்டா வந்திருக்கறதுல ஏதாச்சும் ஒன்ன பத்தி கனவு கண்டா நல்லா இருக்கும். அதவிட்டுட்டு...ரொம்பத்தான் ஆசைங்க உங்களுக்கு.
பரவை முனிம்மா ஓகேவா?

ஆதவா
25-06-2011, 02:43 PM
அப்போ இந்த கதையில வர எல்லோரும் நம்ம உறுப்பினர்கள்தானா .... :D

அய்யோ அய்யோ.... அவர் சொன்னதெல்லாம் உண்மைன்னு நம்பீட்டீங்க..... ஹய்யோ ஹய்யோ. :lachen001::lachen001:

கருணை
25-06-2011, 02:53 PM
அய்யோ அய்யோ.... அவர் சொன்னதெல்லாம் உண்மைன்னு நம்பீட்டீங்க..... ஹய்யோ ஹய்யோ. :lachen001::lachen001:

என்ன சொல்ல வரீங்க . யாரையோ கலாய்கிரீங்கன்னு தெரியுது . அது மதியா ? அப்புறம் மத்தவங்க எல்லாம் மன்றத்து உறுப்பினர் பேரா இருக்கே. :confused:

மதி
25-06-2011, 04:05 PM
ரொம்பத்தான் ஆசைங்க உங்களுக்கு.
பரவை முனிம்மா ஓகேவா?
அட.. நீங்க அவங்கள பத்தி கனவு காணுங்கன்னேன்...!! :icon_b:

த.ஜார்ஜ்
25-06-2011, 04:13 PM
நான்தான் அப்படின்னு நினைச்சிட்டிருந்தேன். நீங்களும் அப்படித்தானா? வேலைவெட்டியில்லாம தூங்கியே நேரத்தை போக்கிட்டு... அந்த பாழாய்போன கனவிலாவது நல்லது நடந்திருக்கக்கூடாதா.. [இப்பதான் மதி மனச திடப்படுத்திகிட்டு திரும்பி வந்திருக்கார். அவர மறுபடி துரத்தாம விடவே மாட்டீங்களா?]

அன்புரசிகன்
26-06-2011, 11:46 PM
வழமையாக கனவுகள் எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. ஆனால் என்னமோ இது நன்றாக ஞாபகம் இருந்தது. 2 மாதங்களுக்கு முன்னர் கண்ட கனவு. மன்றத்தில் பதிய நேரமில்லை... அதனால் தான் அன்று பதிந்தது. :D
------------------------

சுடப்பட்ட அந்த மூணு பேரும் யாரூஊஊஉ .... அக்னி, ஓவியன் இன்னோர்த்தர் யாரு நிவாஸா :eek: ???

அய்யோ மதிக்கு இந்த நிலைமையா....... அதுக்கு மதியையும் சேர்த்தே சுட்டு இருக்கலாம் .......:lachen001:

நீங்க வேற. நீங்கள் சொல்ற மூணுபேரும் அவ்வளவு துணிவா எங்க வீட்டுக்கு வந்திடுவாங்களா??? கனவிலும் அது நிகழாது.

இதுதானாய்யா உங்க டக்கு....

அவர் யாழ்பாணம் போறேன்னு சொன்னதுமே அது கனவா இருக்கும்னு மைல்டா ஒரு டவுட் வரலையா?
இன்னேரத்துக்கு நாள் யாழ்ப்பாணத்தில தான் இருந்திருக்கணும். வேலைப்பளு அது இது என்று வீட்டுக்கு போக அவங்க விடல... சீக்கிரம் கைகூடும்...

அதெப்படி மனுசன் சொல்லிக்காம கொள்ளாம ஊருக்கு போயிருக்காரேனு பாத்தா.. நல்லா கனவு கண்டுக்கிட்டு இருக்கீரு.. ஏதாச்சும் அசினு..திரிசா... இல்லேன்னா லேட்டஸ்ட்டா வந்திருக்கறதுல ஏதாச்சும் ஒன்ன பத்தி கனவு கண்டா நல்லா இருக்கும். அதவிட்டுட்டு...

விகடன் நல்லாயிருக்காரா??
அந்தப்பொண்ணும் ரொம்ப அழகாத்தான் இருந்தா...

விராடன் உங்களுக்கு அருகில் தான் இப்ப இருக்கார்.

அப்போ இந்த கதையில வர எல்லோரும் நம்ம உறுப்பினர்கள்தானா .... :D
இரண்டு பேர். ஒன்று மதி. மற்றது விராடன்/விகடன்

நான்தான் அப்படின்னு நினைச்சிட்டிருந்தேன். நீங்களும் அப்படித்தானா? வேலைவெட்டியில்லாம தூங்கியே நேரத்தை போக்கிட்டு... அந்த பாழாய்போன கனவிலாவது நல்லது நடந்திருக்கக்கூடாதா.. [இப்பதான் மதி மனச திடப்படுத்திகிட்டு திரும்பி வந்திருக்கார். அவர மறுபடி துரத்தாம விடவே மாட்டீங்களா?]
அதுக்காக இரவெல்லாம் முழிச்சுக்கிட்டிருந்தா அப்புறமா நானும் வேலை இல்லாம வெட்டியாத்தான் இருக்கணும்...

CEN Mark
03-07-2011, 01:48 PM
கதை கொள்ளாம். ஆனால் கதையில கூட சூழலை சரியாய் சொல்லியிருக்கலாம். கனவுன்னு சொல்லி தப்பிச்சிட்டீங்க. அதுக்கு ஏன் ஆளாளுக்கு கொலைவெறியோட சுத்துறீங்க (விமரிசனம் பண்றவங்களைச் சொல்கிறேன்)

CEN

அன்புரசிகன்
04-07-2011, 12:16 AM
கதை கொள்ளாம். ஆனால் கதையில கூட சூழலை சரியாய் சொல்லியிருக்கலாம். கனவுன்னு சொல்லி தப்பிச்சிட்டீங்க. அதுக்கு ஏன் ஆளாளுக்கு கொலைவெறியோட சுத்துறீங்க (விமரிசனம் பண்றவங்களைச் சொல்கிறேன்)

CEN
கனவுங்கிறேன். இதுல சூழல சரியாச்சொல்றதுக்கு நினைச்சதா கனவா வாறது??? வந்தத சொன்னேன். இது கதையல்ல.... கனவில் நடந்த நிசம்.

ஓவியன்
09-07-2011, 08:32 AM
அது சரி உங்கள் கட்டுக்களைக் கழற்றி, கையில் ஆயுதம் தந்த அந்த மர்ம ஆசாமி யார்..?? :confused:

prady
17-07-2011, 02:36 PM
ஊருக்குப் போனாக் கனவு வரும்தான். சனம் கதைக்கிற கதைய வச்சு கனவில ஒரு 15 படம் எடுக்கலாம்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-07-2011, 06:28 PM
கனவுலகில் காணும் கனவுகள் எல்லாம் நனவானால் வாழ்க்கை இனிக்காது ..வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஒருவனின் வாழ்வினை மாற்றுகின்றன ...அது போன்ற திருப்பம் ஏதேனும் நிகழட்டும் அவர்கள் வாழ்வில் ...

அன்புரசிகன்
18-07-2011, 03:22 AM
அது சரி உங்கள் கட்டுக்களைக் கழற்றி, கையில் ஆயுதம் தந்த அந்த மர்ம ஆசாமி யார்..?? :confused:இனி நீயாச்சு. உன்ர திறமையாச்சு என்றுவிட்டு நகர்ந்துவிடுகிறான். அது பழகிய குரல்…..
............................
அந்த பழகிய குரல் விராடனது…
அவர் சாமியா ஆசாமியா என்பதை உங்களது எண்ணத்துக்கு விட்டுவிடுகிறேன்.
----

ஊருக்குப் போனாக் கனவு வரும்தான். சனம் கதைக்கிற கதைய வச்சு கனவில ஒரு 15 படம் எடுக்கலாம்.
அப்ப இது 16வதா இல்ல 15வதா??? எத்தனையாவதோ... இந்த கனவுக்கு நான் காப்புரிமை கேட்பேன்.
(சனம் ஆயிரம் கதைக்கும். எப்படியும் ஊருக்கு போவேன்... வெகு விரைவில்)

கனவுலகில் காணும் கனவுகள் எல்லாம் நனவானால் வாழ்க்கை இனிக்காது ..வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஒருவனின் வாழ்வினை மாற்றுகின்றன ...அது போன்ற திருப்பம் ஏதேனும் நிகழட்டும் அவர்கள் வாழ்வில் ...

இப்ப இந்த தத்துவம் யாருக்கு??? அதுவும் அந்த கடசி வரி யாருக்கு??? (மதிக்கு இல்லை தானே....):lachen001::D

நாஞ்சில் த.க.ஜெய்
18-07-2011, 06:50 AM
அவருக்கு இல்லைதானே என்று கூறி மிக தெளிவாகவே அடிகோடிட்டு அவருக்குதான் என்று கூறிவிட்டீர்களே ....என்னே ஒரு பார்வை ...
....