PDA

View Full Version : தொலைகின்ற நினைவுகள்



sivani
25-06-2011, 07:39 AM
துடுப்பு இல்லா
ஓடம் போல்...
தூண்டுகொள் இல்லா
விளக்குப் போல்....
திசை இல்லா
பட்டம் போல்...
தேகம் இல்லா
உயிரைப் போல்....
தென்றல் வீசா
காலம் போல்....
தவிக்கிறேன் நான்!!
தனிமையில்.......
தொலைக்கிறேன்
என் நினைவுகளை!!!


தமிழோடு உயர்வோம்!!!

Nivas.T
25-06-2011, 08:29 AM
தொலைகின்ற நினைவுகள் அனைத்தும்
அழிந்ததாய் அர்த்தமில்லை
மறைந்திருக்கின்றன
மறைந்திருப்பதைப் போல் ஒளிந்திருக்கின்றன
சிலநேரம் மறையும் சிலநேரம் வளரும்
சிலநேரம் நீளும் பலநேரம் தொடரும்
என்றும் நிழல்போல் நீங்காமல்.......நம்மோடு

அழகான கவிதை பாராட்டுகள் ஷிவானி

கீதம்
25-06-2011, 08:35 AM
தவிப்பின் ரணத்தைத் தக்க உதாரணங்களுடன் காட்டிய கவிதைக்குப் பாராட்டுகள்.

கருணை
25-06-2011, 02:48 PM
இப்படி எல்லாம் அழகா வார்த்தையாய் சொல்ல தெரியாது எனக்கு. ஆனால் இது ஹாஸ்டலில் அனுபவிச்சு இருக்கேன். நான் அழுததுக்கு ஆறுதல் சொல்லிக்க பக்கத்துக்கு ரூம் போனா அங்க உள்ள பொண்ணு தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருக்கும். அப்புறம் நான் உக்காந்து அதை தூங்க வச்சுட்டு வந்து முழிச்சுகிட்டு இருப்பேன்.

sivani
10-07-2011, 03:57 PM
பாராட்டுகளுக்கு நன்றி.
தமிழோடு வாழ்வோம்! தமிழோடு வளர்வோம்!



-- தமிழோடு உயர்வோம்! --

நாஞ்சில் த.க.ஜெய்
10-07-2011, 06:08 PM
தனிமை சோகங்களின் ரணம் வடுவாக ..... பாராட்டுகள் ....

செல்வா
15-07-2011, 01:03 PM
தனிமை நினைவுகளை
மன்றி(னதி)ல் பதியுங்கள்...
கவிதைகளாய்..

வாழ்த்துக்கள்.




தூண்டுகொள்
தூண்டுகோல்?

sivani
08-08-2011, 12:46 PM
திருத்தத்திற்கு நன்றி. இனி வரும் காலங்களில் பிழைகளைத் தவிர்க்கிறேன்.



தமிழ்ப்போற்ற வாழ்வேன்!
தமிழோடு வளர்வேன்!

சிவா.ஜி
08-08-2011, 12:56 PM
வாழ்த்துக்கள் சிவானி. உங்கள் கவிதைப்பயணம் தொடரட்டும்.

g.r.senthil kumar
11-08-2011, 09:36 AM
ரொம்பவும் வெறுத்து போய் இருக்கிறீர் .....ஆனாலும் கவிதை அழகாக வந்திருக்கு ,இந்த மன்றத்திலே நாம் எல்லோரும் கூடித்தான் இருக்கிறோம் ,தவிப்பை தூக்கி கடலில் போடுங்கள் நண்பா..... வாழ்த்துக்கள்.("திகார்" இல்
இருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் ? )