PDA

View Full Version : காகிதப் பந்துகள்



M.Jagadeesan
25-06-2011, 02:19 AM
கசக்கி எறிந்த காகிதப் பந்துகளால்
குப்பைக் கூடை நிரம்பி வழிந்தது.

கவிதை எழுதும் ஆசை வந்தது
மனம்
கம்பனைப் போல எழுத நினைத்தது.

எதுகை மோனைகள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை
எழுதிய கவிதைகள் எதுவும் பிடிக்கவில்லை.
கசக்கி எறிந்த காகிதப் பந்துகளால்
குப்பைக் கூடை நிரம்பி வழிந்தது.

வெண்பா இலக்கணம் வெறுப்பைத் தந்தது
கலிப்பா இலக்கணம் கவலையைத் தந்தது
கெஞ்சிப் பார்த்தும் வஞ்சிப்பா வரவில்லை
ஆசிரியப் பாவோ அரைகுறை ஆனது.
கசக்கி எறிந்த காகிதப் பந்துகளால்
குப்பைக் கூடை நிரம்பி வழிந்தது.

என்ன செய்வதென்று சொல்லத் தெரியாமல்
கண்ணை மூடிநான் சிந்திக்கும் வேளையிலே
தேனினும் இனிய தேவகானம் ஒன்று
தெருவில் இருந்து தவழ்ந்து வந்தது.

நட்டநடு நிசியினிலே நந்தலாலா! ஒரு
நாடகந்தான் நடக்குதடா நந்தலாலா!
கிட்டசென்று பார்க்கையிலே நந்தலாலா!
கிறுகிறுத்துப் போனேனே நந்தலாலா!

சொந்தமிலாப் பொருளையெல்லாம் நந்தலாலா! மனம்
சொந்தமாக்கிக் கொள்ளுதடா நந்தலாலா!
எந்தநிலை சென்றாலும் நந்தலாலா! நீ
வந்தவழி மறவாதே நந்தலாலா!

உரிமையுள்ள பொருளெல்லாம் நந்தலாலா! நீ
உதறினாலும் போகாது நந்தலாலா!
உடும்பாகப் பிடித்தாலும் நந்தலாலா!
உரிமையற்றது தங்காது நந்தலாலா!

கடனாகப் பெற்றதுதான் நந்தலாலா! அந்தக்
கடவுளிடம் பெற்றதுதான் நந்தலாலா!
குடத்தைவிட்டுப் போகுமுன்னே நந்தலாலா!
குணத்தைமட்டும் காத்திடுவாய் நந்தலாலா!'

தெருவோரப் பாடகனைக் கேட்ட பின்னால்
தெளிவான சிந்தனை என்னுள் பிறந்தது
கவிஞன் என்பவன் கருவிலே பிறக்கின்றான்
காகிதங்களால் கவிஞனை உருவாக்க இயலாது.
கசக்கி எறிந்த காகிதப் பந்துகளால்
குப்பைக் கூடை நிரம்பி வழிந்தது.

Nivas.T
25-06-2011, 06:44 AM
உண்மை உண்மை முற்றிலும் உண்மை

பிரமாதம் போங்க

ஜானகி
25-06-2011, 06:51 AM
ஆகா....! கசக்கி எறிந்த காகிதமும் கவி பாடுகிறதே......அருமை ! தத்துவம் பேசுகிறதே ! தொடரட்டும்.....

கீதம்
25-06-2011, 08:59 AM
கசக்கி எறிந்த காகிதப் பந்துகளால்
குப்பைக்கூடை நிரம்பி வழிந்தது.
நெஞ்சக்கூடை நிரம்பியதாலே
கொஞ்சுங்கவியும் மன்றில் வழிந்தது.

அருமை. பாராட்டுகள் ஐயா.

கருணை
25-06-2011, 02:37 PM
நட்டநடு நிசியினிலே நந்தலாலா! ஒரு
நாடகந்தான் நடக்குதடா நந்தலாலா!
கிட்டசென்று பார்க்கையிலே நந்தலாலா!
கிறுகிறுத்துப் போனேனே நந்தலாலா!

சொந்தமிலாப் பொருளையெல்லாம் நந்தலாலா! மனம்
சொந்தமாக்கிக் கொள்ளுதடா நந்தலாலா!
எந்தநிலை சென்றாலும் நந்தலாலா! நீ
வந்தவழி மறவாதே நந்தலாலா!

உரிமையுள்ள பொருளெல்லாம் நந்தலாலா! நீ
உதறினாலும் போகாது நந்தலாலா!
உடும்பாகப் பிடித்தாலும் நந்தலாலா!
உரிமையற்றது தங்காது நந்தலாலா!

கடனாகப் பெற்றதுதான் நந்தலாலா! அந்தக்
கடவுளிடம் பெற்றதுதான் நந்தலாலா!
குடத்தைவிட்டுப் போகுமுன்னே நந்தலாலா!
குணத்தைமட்டும் காத்திடுவாய் நந்தலாலா!'


இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு

M.Jagadeesan
25-06-2011, 02:42 PM
நன்றி கருணை.