PDA

View Full Version : ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!



வல்லம் தமிழ்
23-06-2011, 12:17 PM
கரும்புள்ளியை பெரும்புள்ளியாக்குவாய்!
பெரும்புள்ளியை முற்றுப்புள்ளியாக்குவாய்!

அசைவை அபிநயங்களாக்குவாய்!
அபிநயங்களை அசைவற்று மாற்றுவாய்!

திரையை சித்திரமாக்குவாய்!
சித்திரங்களை விசித்திரமாக்குவாய்!

ஒரு சொல்லை கவிதையாக்குவாய்!
காவியங்களை காலால் இடறுவாய்!

மனமுருக வேண்டிடில்
மனதிற்குள் சிரித்து நிற்பாய்!
இதுபோல்
உளறிக் கொட்டுவதையெல்லாம்
உட்கார்ந்து கேட்பாய்!

புன்னைநல்லூர் தாயே!
உன்னை வணங்குகிறேன்!

ஜானகி
23-06-2011, 01:17 PM
நெஞ்சத்து உணர்வுகளைக் கிளறி, லயத்துடன் வந்து விழும் உளறல்கள் தொடரட்டும்....மாரியம்மன் துணையில்....

வல்லம் தமிழ்
14-09-2011, 03:39 PM
நேரம் இருட்டாகலாம்
நீ வெளிச்சமாயிருப்பாய்...!

பாதை நீளமாயிருக்கலாம்-நீ
பக்கத்துணையிருப்பாய்...!

நடக்கும் வழியெலாம்
நீயென் கை பிடித்து
நடந்து வருவாயென்ற
நம்பிக்கை ஒன்று கொண்டே
நடந்து கொண்டேயிருக்கிறேன்-தாயே
புன்னைநல்லூர் பூமகளே!
என்
நம்பிக்கை கலையாமல்
நடந்து வா என்னோடு
எப்போதும்...!

வல்லம் தமிழ்
30-12-2011, 01:30 PM
ஆடும் கால்களில் அணிசெயும்
ஆரம் ஒலியுடன் அதிர அதிர
பாடும் பவளவாய் மலர்விரித்தென்
பாரம் தணித்திட மொழிவாய்!-தாயே!

உள்ளத்தழுக்கினை எரித்திட தீயெடுத்து
உயிருக்குள் விளக்கினை ஏற்றிவைப்பாய்!
கள்ளப்புலனைந்தும் கட்டிப்புறந்தள்ளும்
கயிறுக்குள் கருவாய் வீற்றிருப்பாய்!

பிச்சையெடுத்தேனும் இச்சை தணித்திடும்
பிறவிப் பெருங்கடலில்
மூச்சையடக்கிட மோகம்நெறித்திட
கற்றுக் கொடுத்தவளே!-தாயே!

உச்சிமலைச்சுடர் நெற்றித்திலகமாய்
ஒளிர்ந்திட வருபவளே !
நிச்சயமாய் துயர் எட்டி விரட்டிடும்
நின்பதம் சரணமம்மா!