PDA

View Full Version : சிறுதுளி பெருவெள்ளம்.தாமரை
22-06-2011, 04:47 AM
தலைப்பு மட்டும் காமெடிக்காக நான் கொடுத்தது.
மற்றபடி செய்தி மூலம் தினகரன்.
80 லட்சம் காலன் வெளியேற்றம் ஒருவர் ‘ஒன்’ போனதால் நீர்த்தேக்கம் முழுதும் காலி - Dinakaran News

ஓரேகான் : குடிநீருக்கு பயன்படுத்தும் ஏரிகள், குளங்களில் ‘டூ’ போவது, குளிப்பது எல்லாம் நம்நாட்டில் சகஜம். ஆனால், சுத்திகரித்த நீர் நிரப்பப்பட்ட நீர்த்தேக்கத்தில் ஒருவர் ‘ஒன்’ போனது ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் ஒரு சொட்டு விடாமல் நீர்த்தேக்கத்தின் 80 லட்சம் காலன் நீர் வெளியேற்றப்பட்டது. இது அமெரிக்காவில்!

அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தின் முக்கிய நகரம் போர்ட்லாண்ட். அங்கு மக்களின் குடிநீருக்காக சுத்திகரிக்கப்பட்ட நீருடன் பிரம்மாண்ட நீர்த்தேக்கம் உள்ளது.

அதை யாரும் அசுத்தப்படுத்தாமல் இருக்க நீர்த்தேக்கத்தின் சுற்றுச் சுவர்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் உண்டு. நேற்று முன்தினம் அந்த கேமராக்களில் பதிவானதை அதிகாரிகள் வழக்கம்போல பார்த்தனர். அப்போது மதில் சுவர் ஏறிய ஒருவர் நீரில் சிறுநீர் கழித்தது கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து, நீர்த்தேக்கத்தில் இருந்த 80 லட்சம் காலன் நீரையும் ஒரு சொட்டு விடாமல் வெளியேற்றினர் அதிகாரிகள்.

இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறுநீர் கலந்த நீரை குடியிருப்புவாசிகளுக்கு அளிக்க மனமில்லை. எனவே, வெளியேற்றினோம். நீர்த்தேக்கம் சுத்தப்படுத்தப்பட்டு, மீண்டும் சுத்திகரித்த நீர் நிரப்பப்படும்’’ என்றார். இருந்தாலும் இது ரொம்ப ஓவர் என்று சில டாக்டர்கள் தெரிவித்தனர். ‘‘மனிதனின் சிறுநீர் தனக்கு தானே கிருமிநாசினி. அதுவும் அதிக நீரில் கலந்தால் அது நீர்த்து போய், காணாமல் போகும். ஒருவரின் சிறுநீர் கலந்ததற்காக 80 லட்சம் காலன் நீரை வீணாக்கியது அநியாயம்’’ என்றனர்.

இந்தச் செய்தியைப் படித்து விட்டு சிரிப்பதா அழுவதா ஒண்ணுமே புரியலை..

:traurig001::lachen001::traurig001::lachen001::traurig001::lachen001::confused::icon_rollout:

M.Jagadeesan
22-06-2011, 05:30 AM
சிறுநீர் கழித்தவர் கண்டிப்பாக இந்தியக் குடிமகனாகத்தான் இருப்பார்.

தாமரை
22-06-2011, 05:46 AM
சிறுநீர் கழித்தவர் கண்டிப்பாக இந்தியக் குடிமகனாகத்தான் இருப்பார்.

http://www.huffingtonpost.com/2011/06/20/josh-seater-urinates-pees-portland-oregon-water_n_880864.html

The young man, Josh Seater, told KATU-TV he'd been drinking, was with friends and thought that the reservoir was a sewage treatment plant. He said he felt guilty instantly, and then security guards arrived.

இங்கே வீடியோ இருக்கு..

உணர்ச்சி வசப்பட்டு இனிமே இப்படிப் பழி போடாதீங்க. :D:D:D:D

அன்புரசிகன்
22-06-2011, 06:21 AM
சிறுநீர் கழித்தவர் கண்டிப்பாக இந்தியக் குடிமகனாகத்தான் இருப்பார்.

வெளிநாடுகளில் இலங்கை இந்தியர்கள் இவ்வாறு செய்வதில்லை. பொதுவாக காவல்துறைக்கு நாம் பயந்தவர்களே... ஆனால் இங்கு வெள்ளையர்கள் காவல்துறையின் வாகனங்களுக்கே 1 செய்வார்கள். :D... இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல... உள்ளே 10 15 என்று போனா வெளியே 1 வராமல் என்ன செய்யும் என்று அவர்கள் தத்துவம் பேசிக்கொண்டிருப்பதால் மெல்பேர்ன் நகரில் ஏறத்தாள 30 நடமாடும் கழிப்பறைகள் கட்டவுள்ளார்கள் / கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் நாமளோ புகையிரதநிலையங்கள் பாரிய வியாபார நிறுவனங்களுக்குள் சென்று....

எங்கள் ஊரில் சொல்வார்கள். விடுகாலி காவாலி என்று. அதனிலும் மோசமானவர்கள் வெள்ளையர்கள். இந்த ஒன்றும் வியத்தகுவிடையமாக எனக்கு தோன்றவில்லை. மாற்றுவளி பார்க்காது திறந்துவிட்டிருக்கமாட்டார்கள்...

Ravee
22-06-2011, 08:43 AM
http://2.bp.blogspot.com/_K-82d8TkXH4/SX4Za8OiDVI/AAAAAAAAAKU/2ifVJYy2Kb8/s400/manneken_pis.jpg

இந்த விஷயத்துக்காக இத்தனை 80 லட்சம் காலன் தண்ணீரை வீணடித்து இருக்கிறார்கள் என்ற செய்தி நம்பும்படி இல்லை. வெள்ளையர்கள் அத்தனை சுத்தம் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை .... :frown: கூகுளை தட்டி பார்த்தேன் .... :sprachlos020: அந்த படங்களை இங்கே பிரசுரிக்க முடியாது ..... :eek: ஆத்திரத்தை அடக்கலாம் .............. இதையெல்லாம் அடக்கச்சொன்னா .... அதுவும் நிதானம் இல்லாத நேரத்தில் ..... :eek:

தாமரை
22-06-2011, 09:12 AM
அந்த டி.வி யோட பேரைக் கவனிச்சீங்களா? KATU-TV.. காட்டு டிவி..

காட்டிட்டாங்களே!!! :lachen001::lachen001::lachen001::lachen001:

ஆதவா
22-06-2011, 09:54 AM
வெளிநாடுகளில் இலங்கை இந்தியர்கள் இவ்வாறு செய்வதில்லை. பொதுவாக காவல்துறைக்கு நாம் பயந்தவர்களே... ஆனால் இங்கு வெள்ளையர்கள் காவல்துறையின் வாகனங்களுக்கே 1 செய்வார்கள். :D... இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல... உள்ளே 10 15 என்று போனா வெளியே 1 வராமல் என்ன செய்யும் என்று அவர்கள் தத்துவம் பேசிக்கொண்டிருப்பதால் மெல்பேர்ன் நகரில் ஏறத்தாள 30 நடமாடும் கழிப்பறைகள் கட்டவுள்ளார்கள் / கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் நாமளோ புகையிரதநிலையங்கள் பாரிய வியாபார நிறுவனங்களுக்குள் சென்று....

எங்கள் ஊரில் சொல்வார்கள். விடுகாலி காவாலி என்று. அதனிலும் மோசமானவர்கள் வெள்ளையர்கள். இந்த ஒன்றும் வியத்தகுவிடையமாக எனக்கு தோன்றவில்லை. மாற்றுவளி பார்க்காது திறந்துவிட்டிருக்கமாட்டார்கள்...

உங்கள் நிலையைப் பார்த்து சிப்பு சிப்பா வந்திச்சு!! இந்தியா வந்து பார்க்கச்சொல்லுங்க ஆஸ்திரேலியா காரங்கள.. ஊர்முழுக்க ஒன்ஸ் போற இடம்தான்!!

த.ஜார்ஜ்
22-06-2011, 05:29 PM
தண்ணிக்குள்ள நின்னுகிட்டு 'இருந்தா' என்ன பண்ணியிருப்பாங்கலாம்..?

innamburan
22-06-2011, 07:24 PM
தண்ணிக்குள்ள நின்னுகிட்டு 'இருந்தா' என்ன பண்ணியிருப்பாங்கலாம்..?

நோபல் பரிசு கொடுப்பார்கள்!

அன்புரசிகன்
23-06-2011, 12:26 AM
உங்கள் நிலையைப் பார்த்து சிப்பு சிப்பா வந்திச்சு!! இந்தியா வந்து பார்க்கச்சொல்லுங்க ஆஸ்திரேலியா காரங்கள.. ஊர்முழுக்க ஒன்ஸ் போற இடம்தான்!!
ஆதவா.. நம்மூரைப்பற்றி இல்லை. நம்மவர்கள் வெளிநாட்டில் என்று தான் கூறியுள்ளேன். அதற்காக எல்லா வெள்ளையர்களும் அப்படி என்று சொல்லவுமில்லை.

நம்மவர்கள் சில விடையங்களில் கில்லாடிகள். காசுக்காக எதையும் பண்ணக்கூடியவர்கள். அதுவும் இலங்கையர் என்றால் கடனட்டையை கைப்பையிலிருந்து வெளியே எடுக்கவே மாட்டார்கள். அவ்வளவு பயம். மோப்பம் பிடித்தாலே அட்டையின் முழுவிலாவாரியையும் சொல்லக்கூடிய எத்தர்கள் அதிகம் ஆதவா.... ஆக... நம்மவர்கள் குடுமி சும்மா ஆடாது.... போன ஒன்ஸூக்கே காசு கேட்க்கக்கூடியவர்கள் நம்மவர்கள். :D

M.Jagadeesan
23-06-2011, 02:49 AM
தண்ணிக்குள்ள நின்னுகிட்டு 'இருந்தா' என்ன பண்ணியிருப்பாங்கலாம்..?

ஏரியின் மட்டம் உயர்ந்திருக்குமே! அதை வைத்து அவன் சிறுநீர் கழித்திருப்பதை எளிதாகக் கண்டுபிடித்திருப்பார்கள்!.