PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூன் 22innamburan
21-06-2011, 06:50 PM
அன்றொரு நாள்: ஜூன் 22
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா! என்று கேட்காதீர்கள். இரண்டும் ஓருடலின் அவயவங்கள் தானே. வரலாற்று நதி கூட மேலும் கீழுமாகப் பாயக்கூடியது தான். பாருங்களேன். யான் வாழும் போர்ட்ஸ்மத் நகரவாசி சர் ஜோசையா சைல்ட் நினைவு தினமிது (1699). அவர் செல்வம் ஈட்டியது, புரட்டியது எல்லாம், சென்னையில் எனலாம். வரலாறு அறிவதின் பயன் யாதெனில், நம் முன்னோர்களின் வாழ்வியலை பற்றி புரிந்து கொள்ளலாம் என்பதே. சர் ஜோசையா சைல்ட் கிழக்கிந்திய கம்பேனியின் தூண்களில் ஒருவர் என்பதால், ஒரு பின்னணி. 1608ல் சூரத் நகரில் வணிகம் தொடங்கிய கிழக்கிந்திய கம்பேனி, 1639ல் தான் மேற்கிலிருந்து கிழக்குப்பக்கம், அதாவது தென் கிழக்குப்பக்கம் - கொரமாண்டெல் கடலோரம் - கால் வைத்தது. ஃபிரான்சிஸ் டே மதராஸ் பட்டினத்தில் (சென்னை) ஜார்ஜ் பெயரில் கோட்டையும் கொத்தளமும் அமைத்தார். சொல்லப்போனால், வெள்ளைக்காரனின் இந்திய மண்ணாசை தலை எடுத்தது, இங்கு தான். மதராஸ் மாகாணத்தின் ஜென்மம். தடபுடலாக, வணிகம், தட்டிப்பறித்தல், நாடு பிடித்தல், கடன் உடன், படையெடுப்பு, சூழ்ச்சி, வாரிசு நியமனம் என்றெல்லாம் சொத்து சேர்த்த அந்த கம்பெனி 1640 வாக்கில், கிட்டத்தட்ட திவால். கஜானா காலி. வந்த வெள்ளைக்காரன் எல்லாரும் ‘உண்டகத்துக்கு இரண்டகம்’ செய்து, (இப்போ மாதிரின்னு சொல்றது நீங்க; நான் ஒண்ணும் சொல்லலை!) கம்பெனியை அதோகதியாக்கி விட்டனர். அவதாரபுருஷராக வந்தாரையா, நம்ம சைல்ட் துரை, 1860லே. போர்ட்ஸ்மத் துறைமுகத்தில் கப்பல் தரை தட்டாது, அப்போ. தள்ளி நின்று சங்கூதும். தண்ணீர், தண்ணி, முட்டை, மீன் எல்லாம் சப்ளை செய்வது, இவரு. ‘சுண்டைக்காய் ஒரு பணம்; சுமைக்கூலி பத்துப்பணம்’ என்ற வகையில் ஓஹோன்னு சம்பாதிச்சார், முப்பது வயதிற்க்குள். அதை இந்த கம்பெனியில் முதலீடு செய்து, பெரிய மனிதரானார்; நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பெல்லாம், இங்கேயும் திருமங்கலம் மாதிரி, ஒரு சின்ன அளவுக்கு எனலாம். நம்ம ‘ஆவ்சம் அமெரிக்கா செல்வன்’ மாதிரி, இவருக்கு, தன்னிச்சை சந்தையில் (ஃப்ரீ மார்க்கெட்) அபார மோஹம்! போதாக்குறைக்கு அதற்க்குள் ஒரு பொடி வைத்தார்! காலனிகளுடன் இங்கிலாந்து தான் ஏகபோக வணிகம் என்ற ஃப்ரீ இல்லாத மார்க்கெட்டுக்கு வக்காலத்து வாங்கினார். இவர் பெருமளவில் முதல் திரட்டி, சார்லஸ் II மன்னரிடம் புதிய பிரகடனம் வாங்கி, கிழக்கிந்திய கம்பேனியை புனருத்தாரணம் செய்தார். தலைவனுக்கு எத்தனை முக்யம் பாருங்கோ. 69 வயதில் செத்தாலும் செத்தார், 1699ல்; பாண்டிச்சேரியில் ஃபிரன்ச்சுக்காரன் தண்டல் எடுத்து, இங்கிலாந்துக்காரர்களை பாடாய் படுத்தினான்.
அதெல்லாம் போகட்டும். ஏழைபங்காளன் என்று அவருக்குக் கீர்த்தி உண்டு. இல்லாட்டா, எழுதுவேனா?
இன்னம்பூரான்
22 06 2011

நாஞ்சில் த.க.ஜெய்
22-06-2011, 04:53 AM
இது ஏதோவொன்றின் மொழிபெயர்ப்பு போல் உள்ளது ...இது கூறவரும் கருத்துகள் மேலும் எதற்க்காக பதியப்பட்டது என்ற நோக்கம் தான் புரியவில்லை ஐயா...

innamburan
22-06-2011, 09:07 AM
இது மொழிப்பெயர்ப்பு அல்ல. படித்ததை உள்வாங்கி எழுதியது. இந்திய வரலாற்றில் அதிகம் சொல்லப்படாத விஷயம். இன்றைய தினத்துடன் தொடர்பு கொண்டது அவ்வளவு தான்.