PDA

View Full Version : Do not you know?



ஆதவா
21-06-2011, 10:44 AM
ஆங்கிலம் இங்கிலாந்து ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யங்களிலும் எழுந்தன மற்றும் Northumbria என்ற Anglian இடைக்கால பேரரசின் செல்வாக்கின் கீழ் தென் கிழக்கு ஸ்காட்லாந்து ஆக இருந்தது என்ன பரவுகின்றன என்று ஒரு மேற்கு ஜெர்மானிய மொழி உள்ளது. மத்தியில் 20 ஆம் நூற்றாண்டின் பொருளாதார, அரசியல், இராணுவ, அறிவியல், கலாச்சார, மற்றும் காலனித்துவ பிரிட்டிஷ் எம்பயர் வழியாக 18 ஆம் நூற்றாண்டின் கிரேட் பிரிட்டன் மற்றும் ஐக்கிய ராஜ்யம் செல்வாக்கு, மற்றும் ஐக்கிய நாடுகள் தொடர்ந்து, அது பரவலாக சுற்றி விரட்டியடிக்கப்பட்டனர் வருகிறது உலகில், சர்வதேச சொற்பொழிவின் முக்கிய மொழியாக இருக்கும், மற்றும் பல பகுதிகளில் lingua franca என்ற பயன்படுத்த வாங்கினார். இது பரவலாக அத்துடன் பல உலக நிறுவனங்கள் போலவே, இரண்டாவது மொழியாக கற்று மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல காமன்வெல்த் நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்தப்படுகிறது. இது மாண்டரின் சீன மற்றும் ஸ்பானிஷ் பிறகு, உலகின் மூன்றாவது மிக இயல்பான பேச்சு மொழி உள்ளது.

வரலாற்று ரீதியாக, ஆங்கிலம் மொழிகள் மற்றும் வட்டார இணைவு தொடங்கியது, இப்போது கூட்டாக 5 ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய (ஆங்கிலோ சாக்சன்) குடியேறிகள், கிரேட் பிரிட்டன் கிழக்கு கடற்கரைக்கு கொண்டு அவை பழைய ஆங்கிலம், என - பெயர் பெறப்படும் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் கோணங்களின். சில வடிவத்தில் லத்தீன் கிரிஸ்துவர் திருச்சபையின் மற்றும் ஐரோப்பிய அறிவார்ந்த வாழ்க்கை lingua franca ஏனெனில் ஆங்கில வார்த்தைகள் ஒரு கணிசமான, லத்தீன் வேர்கள் அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்படுகின்றன. மொழி மேலும் 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் வைகிங் படையெடுப்புகள் காரணமாக நார்ஸ் மொழி தாக்கம் இருந்தது.

11 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நார்மன் கைப்பற்றும் நார்மன்-பிரஞ்சு இருந்து பலமான கடன்கள் உயரும் கொடுத்தது, மற்றும் சொல்லகராதி மற்றும் எழுத்து மரபுகளை இப்போது மத்திய ஆங்கிலம் ஆகிவிட்டார் என்ன காதல் மொழிகளை நெருக்கமான உறவு மேலோட்டமான தோற்றத்தை கொடுக்க தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து தெற்கில் தொடங்கியது கிரேட் Vowel மாற்று மத்திய ஆங்கிலம் நவீன ஆங்கிலம் எழுச்சி குறி என்று வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.

வரலாறு முழுவதும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் குறிப்பிடத்தக்க சீரழிவு காரணமாக, நவீன ஆங்கிலம் ஒரு மிக பெரிய சொற்களை கொண்டிருக்கிறது. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் இல்லை பல தொழில்நுட்ப அல்லது வழக்கு சொற்கள், அல்லது பல வார்த்தை வகுப்புகள் சொந்தமானது என்று வார்த்தைகள் உட்பட 250,000 தெளிவான வார்த்தைகள், மேல் பட்டியலிடுகிறது.

என்னங்க ஒண்ணும் புரியலையா.... இவன் எப்பவும் இப்படித்தான் ஏதோ த்துவத்த எழுதறேன்னு என்ன எழுதுனாலும் பிரியாதுடான்னு சொல்லிட்டு எஸ்ஸாயிடாதீங்க.... மேட்டர் இல்லாம நான் எப்பவும் எழுதமாட்டேன்!!

ஆங்கிலம்தான் தமிழர்களின் மாற்றாந்தாய் மொழி.. அல்லது தாய்மொழி. எல்லாருக்கும் பேச விருப்பம்தான், ஆனால் பேசமுடிகிறதா என்றால் இல்லை.... அட்லீஸ்ட் என்னைப் போல தத்துபித்துகள் ஏதோ படித்தாவது புரிந்து கொள்ளலாமென்றால் ஆங்கிலத்தைப் படித்தாலே வாந்தி வந்துவிடுகிறது... நல்லவேளையாக இணையத்தின் கடவுள் கூகிளார் தமிழ் டூ ஆங்கிலம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.. இப்போது பிறந்த குழந்தை நிலையிலிருக்கும் இந்த வசதி இன்னும் பல நிலைகள் கடந்து மிக அருமையான நிலையை அடையும் என்பது உறுதி!!

http://translate.google.com/

வாழ்க கூகிள், வளர்க தமிழ்

பின் குறிப்பு : மேற்கோள் காட்டப்பட்டிருந்தது கூகில் வழி மொழிமாற்றம் செய்யப்பட்டது...

சிவா.ஜி
21-06-2011, 11:39 AM
அப்ப இது அகராதி மாதிரியில்ல....பெரிய கட்டுரையையே மொழியாக்கம் செய்ய முடியுமா? (ஆனா இங்கு கொடுக்கப்பட்டிருக்குமாறு மொழிமாற்றமிருந்தால்...அவ்ளோதான்...இன்னும் வளரட்டும்)

தகவலுக்கு நன்றி ஆதவா.

Nivas.T
21-06-2011, 11:54 AM
கொஞ்சம் கஷ்டமா இருக்கு பழகிட்டா நல்லாருக்கும்னு தோணுது பாக்கலாம் :)

தாமரை
21-06-2011, 01:51 PM
நானும் முதல்ல ஒரு கவிதையோட ஒரு வரியை எடுத்துப் போட்டேன்

பிழியும் விழியும் வழியும்

அதை ஆங்கிலத்தில் மொழி மாற்றியபோது
Weekend option exract
அதையே தமிழில் மறுபடி மாற்றிய பொழுது

வார விருப்பத்தை பிழி

என்று வந்தது..

இது நிஜமாவே கீதம் அக்கா இங்க வார (வருகிற) விருப்பத்தைப் பிழிந்து விடும் என நினைக்கிறேன். அப்ப மொழிமாற்றி சரியாக வேலை செய்யுதா இல்லைத் தவறாக வேலை செய்யுதா?

ஆதவா
21-06-2011, 03:18 PM
எனக்கென்னவோ இப்படி மொழிபெயர்த்து மொழிபெயர்த்தால் கவிதைகளின் அர்த்தம் சரியாகப் புரிந்துவிடும் என்று நினைக்கிறேம் :D

ஓவியன்
21-06-2011, 03:29 PM
அட இது நன்றாக இருக்கே, அதுதாங்க தாமரை அண்ணாவின் கவிதைக்கான மொழி பெயர்ப்பு. :)

தகவலுக்கு நன்றி ஆதவா, இப்போதுதானே தவழ ஆரம்பித்திருக்கிறார்கள் வெகுவிரைவில் இந்த சேவை இன்னமும் மேம்பட தமிழார்வலர்கள் கூகிளுடன் கைகோர்த்தால் நல்லது.

ஓவியன்
21-06-2011, 03:30 PM
எனக்கென்னவோ இப்படி மொழிபெயர்த்து மொழிபெயர்த்தால் கவிதைகளின் அர்த்தம் சரியாகப் புரிந்துவிடும் என்று நினைக்கிறேம் :D

Translated and understood well the meaning of this serpent that translates ninaikkirem poetry. :lachen001::lachen001:

அக்னி
21-06-2011, 03:38 PM
"தமிழ் தந்தது என் நாவுக்குத் துடிப்பு..,
தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

இந்த எனது கையெழுத்தை ஆங்கிலத்தில் மாற்றிப் பார்த்தேன்.
"Tamil and got beat for my novel ..,
To give it to my Tamil uyirppu tamilmanram ..! "
இப்படி வந்தது.

அதை அப்படியே தமிழில் மாற்ற,
"என் நாவலின் தோற்கடித்தது தமிழ் மற்றும் கிடைத்தது ..,
என் தமிழ் uyirppu tamilmanram கொடுக்க வேண்டும் ..! "
இப்படி வந்தது.

However welcomed the initiative.
Mistakes in this translation as soon etirparppom kalaiyapperum.
அட... ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து, இதைத்தான் சொல்கின்றேன்.
எப்படியாகிலும் இந்தத் தொடக்கம் வரவேற்கத்தக்கது.
விரைவில் இந்த மொழிமாற்றத் தவறுகள் களையப்பெறும் என எதிர்பார்ப்போம்.

அக்னி
21-06-2011, 03:41 PM
இந்த சேவை இன்னமும் மேம்பட தமிழார்வலர்கள் கூகிளுடன் கைகோர்த்தால் நல்லது.

ஓவியரே, எனக்கும் தமிழார்வம் இருக்கின்றது. ஆனால் நான் கைகோர்த்தால் என்னவாகும் தெரியுமா...
ஆங்கிலமும் அப்புறம் அவ்வளவுதான். :D

ஆங்கிலம் அல்லது பிழையற மொழிமாற்றம் செய்யும் மொழி தெரிந்த தமிழார்வலர்கள் கைகோர்க்கட்டும்.

ஓவியன்
21-06-2011, 03:48 PM
அதெல்லாம் பிரச்சினையில்லை வேணும்னா கூகிளுடன் கைகோர்த்துப் பாருங்கள் எல்லாம் நன்றாகவே நடக்கும். :)

அக்னி
21-06-2011, 03:56 PM
ஏனுங்க ஓவியன், கணினித் தமிழ் வளர்ச்சியில் அப்படியென்ன ஆத்திரம்...

innamburan
21-06-2011, 05:25 PM
ஒரு கணினி மிஷின் ரஷ்ய மொழியில் அவர்களின் இஷ்டப்பட்ட உணவு ஆகிய கெவியர், குடி ஆகிய வோட்காவை பற்றி ஒரு ஷோக்கு, ஜோக்கு:
ஆங்கிலம்: " The spirit is willing; the flesh is weak."(ஆன்மீகம்)
ரஷ்யனில் (உங்களுக்காக ஆங்கிலத்தில்) "The vodka is great; the caviar is rotten." (downright லெள்கீகம்!)
இன்னம்பூரான்
21 06 2011

நாஞ்சில் த.க.ஜெய்
22-06-2011, 04:35 AM
my name is jai
என் பெயர் ஜெய் உள்ளது என்று வருகிறது ..என்னவொரு அற்புத மொழிமாற்றி மிகவும் நன்றி ஆதவா அவர்களே ..இது யாருக்கு பயன்படும் என்று தான் தெரியவில்லை...

தாமரை
22-06-2011, 04:41 AM
இப்போ நீங்கள் சைனா போனால்.. இதன் விலை என்ன? சைவ உணவு வேண்டும் போன்ற எளிய உரையாடல்களை மனப்பாடம் செய்து கொண்டு அங்கு சற்று எளிதாக உலவலாம். முக்கியமாக பாம்புக்கறி கிடைக்குமா? என்று கேட்க மிக உபயோகமாக இருக்கும். :lachen001::lachen001::lachen001:

ஒலிப்பைக் கூட இணைத்திருப்பதால் இது அலைபேசி வழியாக உபயோகிக்கலாம். எனவே .. எனவே.. வாட் ஏன் ஐடியா சர்ஜி!!!..

தாமரை
22-06-2011, 09:17 AM
ஓவியரே, எனக்கும் தமிழார்வம் இருக்கின்றது. ஆனால் நான் கைகோர்த்தால் என்னவாகும் தெரியுமா...
ஆங்கிலமும் அப்புறம் அவ்வளவுதான். :D

ஆங்கிலம் அல்லது பிழையற மொழிமாற்றம் செய்யும் மொழி தெரிந்த தமிழார்வலர்கள் கைகோர்க்கட்டும்.
உங்களுக்குப் பிரிக்கத்தானே தெரியும்.. கோர்க்கத் தெரியாதே...
பூமாலை ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

ஆதவா
22-06-2011, 09:46 AM
my name is jai
என் பெயர் ஜெய் உள்ளது என்று வருகிறது ..என்னவொரு அற்புத மொழிமாற்றி மிகவும் நன்றி ஆதவா அவர்களே ..இது யாருக்கு பயன்படும் என்று தான் தெரியவில்லை...

உள்ளது தொட்டால் ஆகும்! :)

ஆதவா
22-06-2011, 09:48 AM
உங்களுக்குப் பிரிக்கத்தானே தெரியும்.. கோர்க்கத் தெரியாதே...

Pirikkattane you know .. Not korkka :D:D:D:D

ஆதி
22-06-2011, 10:30 AM
கூகுளை பொருத்தவரை இது போன்ற சேவைகளுக்கு நாமும் நம் பங்கை அளிக்க இயலும் என நினைக்கிறேன்..

அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், இணைந்து இயன்றதை செய்யலாம்...

ஆதவா
22-06-2011, 10:38 AM
கூகுளை பொருத்தவரை இது போன்ற சேவைகளுக்கு நாமும் நம் பங்கை அளிக்க இயலும் என நினைக்கிறேன்..

அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், இணைந்து இயன்றதை செய்யலாம்...

விக்கிபீடியா கட்டுரைகளை மொழிப்பெயர்ச்சி செய்தாலே போதும்.. கூகுள் ஓரளவு மொழிப் பயிற்சி செய்து தமிழாக்க வசதியைப் பெருக்கித் தரும்




You can also help improve translation quality by using Translator Toolkit for translating or by uploading your translation memories into Translator Toolkit.

http://translate.google.com/toolkit?hl=en

இதனை மொழிபெயர்ப்பு செய்து சரிசெய்தபொழுது..

நீங்கள் மொழிபெயர்ப்பு செய்ய மொழியாக்க கருவிகள் அல்லது மொழிபெயர்ப்பாளர் கருவித்தொகுதி பயன்படுத்தி உங்கள் மொழிபெயர்ப்பு நினைவுகளை பதிவேற்றி மொழிபெயர்ப்பு தரத்தை மேம்படுத்துவதற்கு உதவி முடியும்.