PDA

View Full Version : தீபாவளிக்கு வரச்சொல்லி



M.Jagadeesan
20-06-2011, 03:43 PM
" போன்ல யாருங்க?" ஜானகி, தன் கணவன் சீதாராமனைப் பார்த்துக் கேட்டாள்.

" உன்னோட அப்பாதான் பேசுனாரு!"

" என்னவாம்?"

" உன்னையும் என்னையும் இந்த தீபாவளிக்கு வரச்சொல்லி உங்க அப்பா கூப்பிட்டிருக்காரு!"

" நீங்க என்ன சொன்னீங்க?"

" யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன்"

" இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? ரெண்டு பேரும் வர்றோம்னு சொல்லவேண்டியதுதானே?"

" அதுக்கில்ல ஜானு! இந்த தீபாவளிக்கு நம்ம பொண்ணு மாப்பிள்ளைய அழைக்கலாம்னு நினச்சுகிட்டு இருந்தேன். அதான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டேன்."

மீண்டும் செல்போன் ஒலித்தது. சீதாராமன் போனை எடுத்தார்.

"ஹலோ!"

" நான் தான் பேசறேன் மாப்பிள்ளை!"

" சொல்லுங்க மாமா!"

" இந்த தீபாவளிக்கு நீங்க ரெண்டு பேரும் வரவேண்டாம் மாப்பிள்ளை!"

" ஏன் மாமா?"

" சொல்றதுக்கே கொஞ்சம் சங்கடமா இருக்கு மாப்பிள்ள!"

" சும்மா சொல்லுங்க மாமா!"

" அது ஒன்னுமில்ல மாப்பிள்ள! இந்த தீபாவளிக்கு வரச்சொல்லி எங்க ரெண்டு பேரையும் என் மாமனார் கூப்பிட்டிருக்கார். அதான்!"

பென்ஸ்
20-06-2011, 04:11 PM
இது யதார்த்தமா தெரியலையே ஜகதீசன்...
தன் அபிமானம்... தன் மகளின் வருகிறாள் என்று வரும் போது மனைவியும் மாமனாரும் தூரம் அல்லவா...???
எதாவது உள் குத்து இல்லையே..!!!:redface:

Nivas.T
20-06-2011, 04:33 PM
ஆஹா நல்ல மாமனார் மருமகன்கள்

மிக அருமை

நாஞ்சில் த.க.ஜெய்
20-06-2011, 05:06 PM
அது எப்படி தன மகளை தனது மருமகனுடன் தன வீட்டிற்க்கு முறையாக அழைக்கும் பண்பினை அறிந்த அந்த பெண்ணின் தாத்தாவின் பண்பு அந்த பெண்ணின் தந்தைக்கு இல்லாது போனது எப்படி ..மற்றொன்று இவ்வாறு முகத்திலடித்தார் போல் நீங்கள் வரவேண்டாம் என்று கூறுவதை விட தாங்களும் தங்கள் தாத்தாவின் வீட்டிற்கு வாருங்கள் ஒன்றிணைந்து கொண்டாடலாம் என்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ... இது நடைமுறைக்கு பொருந்திவரும் கதையாக தெரியவில்லையே ..ஐயா..

innamburan
20-06-2011, 06:37 PM
எதற்கு வம்பு, தாத்தா பாட்டிகளோடு? நான் மெளனம்!

Ravee
20-06-2011, 09:53 PM
இது நகைசுவைக்காக எழுதப்பட்டு இருக்கலாம். ஆனால், விருதுநகரில் பல பெரிய குடும்பங்களில் இன்றும் வீட்டு மாப்பிளைகளை அழைத்து மரியாதை செய்யும் வழக்கம் உள்ளது .... மாப்பிளைகளின் வயதுக்கு வரம்பில்லை... மாமனார் உயிரோடு இருப்பது மட்டுமே முக்கியம் இங்கு..... இன்னமும் மாமனார் கையால் புது ஆடை பெறுபவர்களில் என் உறவுகாரரும் ஒருவர்.அவரின் வயது 65 .

கீதம்
21-06-2011, 01:06 AM
ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைகள் கொண்டாடும் தீபாவளி! நினைக்கவே இனிப்பாக உள்ளது. கதை ரசிக்கும் விதமாய் உள்ளது ஐயா.

M.Jagadeesan
21-06-2011, 02:36 AM
பின்னூட்டமிட்ட பென்ஸ், நிவாஸ், ஜெய், ரவி, கீதம், இன்னம்புரன் ஆகியோருக்கு நன்றி!

sarcharan
28-06-2011, 09:00 AM
இப்படியே போனால்... இவர்களில் ஒருவர் ஆதாம் ஏவாள் வீட்டுக்கு தீபாவளிக்கு போவது உறுதி போல..

M.Jagadeesan
28-06-2011, 09:23 AM
அதுவரையில் எல்லோரும் உயிருடன் இருக்கவேண்டுமே!:lachen001:

aren
28-07-2011, 08:12 AM
ஒரு மாறுதலுக்காக மாமனாரை இவர் வீட்டிற்கு வரச்சொல்லியிருந்தால் தன் பெண் மற்றும் மாப்பிள்ளையுடன் அருமையாக தீபாவளியைக் கொண்டாடியிருக்கலாமே.

கொஞ்சம் யோசித்து செய்திருந்தால் இவருக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கும் அனைவரும் சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடியிருக்கலாம்.