PDA

View Full Version : ஹோட்டல் படும் பாடு!!!தாமரை
18-06-2011, 05:21 AM
வெள்ளிக் கிழமை மாலை என்றாலே எங்களுக்கு கொஞ்சம் இல்ல ரொம்பவே பிஸியான நேரம்தான். எந்த ஊருக்குப் போகணும் என்றாலும் வெள்ளிக்கிழமை மாலை அலுவலகம் முடித்து (முடிந்து அல்ல.. வேலை முடிவது இல்லை.. நாமதான் இதுபோதும் என முடிச்சுக்கணும்) வந்து சூடா ஒரு டீ சாப்பிட்டுவிட்டு கிளம்புவது பழக்கமாவே போயிருச்சி., :D:D:D

இந்த வெள்ளிக் கிழமை பயணம் போனவருடம் வரை பெரிய பிரச்சனை இல்லாம சுமுகமாவே போய்கிட்டு இருந்தது. போன வருடத்திலிருந்து ஒரு சின்ன மாற்றம்.

அதாவது அண்ணி ஒரு வேண்டுதல் போல இனிமே நான் வெள்ளிக் கிழமை அசைவம் சாப்பிட மாட்டேன் என சபதமெடுத்திட்டதால் பிரச்சனை.

அனிருத்துக்கோ ஹோட்டல் என்றால் அசைவம்தான். எப்பவாவது சரவணபவன் இந்த மாதிரி அதிக வெரைட்டி கிடைக்கிற ஹோட்டல்னா ஓ.கே.

வெள்ளிக்கிழமை இரவு ஹோட்டல் சாப்பாடு என்பது முடிவான ஒண்ணுதான். எந்த ஹோட்டல் என்றுதான் பிரச்சனை ஆரம்பமாயிடுச்சி. அசைவ ஹோட்டலுக்கு போகணும் என்று அனிருத்தும், சைவ ஹோட்டல் என அண்ணியும் மோதிக் கொள்ள நான் முழி பிதுங்க.. சுவேதாவோ மெக்டொனால்ட்ஸ் பர்கர் என சொல்ல ஆரம்பித்து விடுவாள்.

இதை எப்படிச் சமாளித்தேன்.. சமாளிக்கிறேன் என்பது கதையல்ல.

ஏற்கனவே பால் சாப்பிடுவதைப் பற்றிச் சொன்னேனே அதான் கதை.

பால் - உங்க யாருக்கும் சத்தியமா நினைவிருக்கப் போறதில்லை,

ஆனா காமத்துப்பால் என்று சொன்னா எங்கியோ படிச்ச மாதிரி இருக்கேன்னு நெருடும். ஆமாங்க காமத் ஹோட்டலில் வாங்கற பால் காமத்துப்பால்தானே.

அன்னிக்குக் கிளம்ப நேரமாயிடுச்சி. அண்ணிக்கோ நல்ல பசி.. காமத் ஹோட்டல் கண்ணில் பட அங்கே போலாங்க எனச் சொன்னார்.

நானும் அனிருத்துமோ ஆற்காடு பிரியாணி ஹோட்டலுக்குப் போகத் திட்டம் போட்டிருந்தோம்.

அந்த ஹோட்டலில் சாப்பிடக் கூடாது என்றேன் நான்..

ஏன் சாப்பிடக் கூடாது? அது ஃபேமஸ் உடுப்பி ஹோட்டல் ஆச்சே என்றால் என் உடுப்பி.. (அதாவது என்னைத் தாலியாய் தன் கழுத்தில் உடுத்தி இருப்பவள் :lachen001::lachen001::lachen001:)

அதை நான் சொல்லலை அவங்கதான் சொல்றாங்க என்றேன் நான்...
இதே.. இதே.. இதே மாதிரிதான் நெற்றியைச் சுருக்கி ஒண்ணும் புரியாமல் முழிச்சாங்க அண்ணி.. சஸ்பென்ஸை ரொம்ப நேரம் வைத்து மதியோட கதை போல பாதியில் நிறுத்தாம விளக்கினேன்..

"கா" என்று ஹிந்தியில் சொன்னால் சாப்பிடு என்று அர்த்தம்.
"மத்" என்று ஹிந்தியில் சொன்னால் வேணாம்,செய்யாதே என்று அர்த்தம்.
"காமத்" என்றால் சாப்பிடாதே என்று அர்த்தம்.

எந்த வீட்ல சாப்பிட்டாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கன்னு பாசமாச் சொல்லுவாங்க.

இவ்வளவு பெரிய ஹோட்டலைக் கட்டி அதுக்குச் சாப்பிடாதீங்க என்று பேர் வச்சிருக்கான். அங்கப் போய் சாப்பிடக் கூப்பிடறயே.. உனக்கே அடுக்குமா?

அதுக்கு மேல .. அதுக்கு மேல சொல்லறதுக்கு ஒண்ணுமில்லை. மெக்டொனால்ட்ஸ் பர்கரும் ஆற்காடு பிரியாணியும்.. புரோட்டா சைவக் குருமாவும் தான்.

இனிமே காம்த் ஹோட்டல் கண்ணில் பட்ட உங்கள் முகத்திலும் :):):) இந்த மாதிரி புன்னகை வரும்தானே..

இன்னும் ஒண்ணு மட்டும் எனக்குப் புரியலை.. இப்படி ஒரு பேரை வச்சிகிட்டு பாம்பே டெல்லின்னு எப்படி இவங்க பிராஞ்ச் ஆரம்பிச்சாங்க?

ஓஓஓ அங்க பிராஞ்சுப் பார்க்க என்னை மாதிரி யாருமில்லையோ??:icon_b::icon_b:

:wuerg019::wuerg019::wuerg019::wuerg019:

Ravee
18-06-2011, 06:26 AM
http://farm1.static.flickr.com/60/219936804_f0a329a75d.jpg

http://thm-a01.yimg.com/nimage/213a7af84037639c

:lachen001: :D :lachen001: :D :lachen001:

த.ஜார்ஜ்
18-06-2011, 07:07 AM
அந்த ஹோட்டல்ல ரொம்ப நேரமா காக்க வச்சிதான் சாப்பாடு போட்டாங்க போல... அந்த நேரத்தில இப்படியெல்லாம்தான் யோசிக்கத் தோணும்.

தாமரை
18-06-2011, 07:52 AM
அந்த ஹோட்டல்ல ரொம்ப நேரமா காக்க வச்சிதான் சாப்பாடு போட்டாங்க போல... அந்த நேரத்தில இப்படியெல்லாம்தான் யோசிக்கத் தோணும்.

அது ஆ"றி"ய பவன் ல... :lachen001::lachen001::lachen001:

Nivas.T
18-06-2011, 07:56 AM
அது ஆ"றி"ய பவன் ல... :lachen001::lachen001::lachen001:

:icon_rollout:

ஓவியன்
18-06-2011, 08:51 AM
ஆஹா உங்கள் பிரிச்சு மேயுற வேலையில இருந்து `காமத்`தும் தப்பலையா...???

எனிவே இங்கே நானிருக்கும் இடத்தில் சைவம் சாப்பிடணும்னா (அதாவது வருடத்தில் எப்பவாவது) சரவணபவனிலும் காமத் என்னுடைய முதல் தெரிவாக இருக்கும். என்னவோ தெரியலை சரவணபன் எனக்கு ஓவ்வொரு தடவையும் எதோ ஒருவகையில் பிடிக்காமலேயே போய் விடுகிறது.

தாமரை
18-06-2011, 09:22 AM
காம"ஸ்"த் என்று மாத்தினால் சூப்பரா இருக்குமில்ல

தாமரை
18-06-2011, 12:00 PM
ஆஹா உங்கள் பிரிச்சு மேயுற வேலையில இருந்து `காமத்`தும் தப்பலையா...???

எனிவே இங்கே நானிருக்கும் இடத்தில் சைவம் சாப்பிடணும்னா (அதாவது வருடத்தில் எப்பவாவது) சரவணபவனிலும் காமத் என்னுடைய முதல் தெரிவாக இருக்கும். என்னவோ தெரியலை சரவணபன் எனக்கு ஓவ்வொரு தடவையும் எதோ ஒருவகையில் பிடிக்காமலேயே போய் விடுகிறது.
அங்க போனா இட்லி, பொங்கல், வடை, தோசை, பூரின்னு இந்திய உணவு வகைகளை சாப்பிடணும். பன் எல்லாம் அங்கே கிடைக்காது. ஒருவேளை போலி சரவணபவனுக்குப் போய் மாட்டிகிட்டீங்களோ?

ஓவியன்
18-06-2011, 04:54 PM
அது என்னவோ தெரியலை நான் போகும் போது கடையின் டிஜிட்டல் பெயர்ப்பலகையிலிருந்த ‘வ’ ஒளிராமல் இருந்தமையால் இப்படியாயிற்று....

பன்னாக..........!! :)

தாமரை
20-06-2011, 04:08 AM
அது என்னவோ தெரியலை நான் போகும் போது கடையின் டிஜிட்டல் பெயர்ப்பலகையிலிருந்த ‘வ’ ஒளிராமல் இருந்தமையால் இப்படியாயிற்று....

பன்னாக..........!! :)

வ என்பதை ஒளிராமல் செய்வதற்கு அர்த்தம் வராதே என்பதல்லவா? அப்புறம் ஏன் போனீங்க?:eek::eek::eek:

வ - என்றால் கால் (1/4) அதாவது குவார்ட்டர் தீர்ந்து போயிடுச்சி என்றும் எடுத்துக்கலாம்.:rolleyes::rolleyes::rolleyes:

பென்ஸ்
20-06-2011, 04:49 AM
ஏன் சாப்பிடக் கூடாது? அது ஃபேமஸ் உடுப்பி ஹோட்டல் ஆச்சே என்றால் என் உடுப்பி.. (அதாவது என்னைத் தாலியாய் தன் கழுத்தில் உடுத்தி இருப்பவள் :lachen001::lachen001::lachen001:)

நானும் இனிம தான் கல்யாணம் ஆகனுமோன்னு நினச்சேன்...:eek::eek:

பூமகள்
20-06-2011, 05:01 AM
ஹா ஹா.... காமத் - இனி பார்த்தால் கட்டாயம் சிரிப்பு வரும்.. கூடவே தாமரை அண்ணா மற்றும் அவரின் 'உடுப்பி' விளக்கமும் நினைவு வரும்..

தாமரை
20-06-2011, 05:01 AM
நானும் இனிம தான் கல்யாணம் ஆகனுமோன்னு நினச்சேன்...:eek::eek:

இந்த உட் பீ, மே பீ, பிராபபல் பீ, பாஸிபில் பீ, இப்படி மலருக்கு மலர்தாவும் Bee யெல்லாம் நம்ம பக்கம் கிடையாதுன்னு தெரிஞ்சுமா இந்தச் சந்தேகம் உமக்கு...?

விளம்பரம்
எழுத்துப்பிழையால் மனமொடிந்தோருக்கு இவ்விடம் கருத்துடன் கட்டுப் போடப்படும்.

பூமகள்
20-06-2011, 05:09 AM
நானும் இனிம தான் கல்யாணம் ஆகனுமோன்னு நினச்சேன்...:eek::eek:

ஆமா.. இனி மேல் தானே ஆகும்.. அறுபதாம் கல்யாணம்??!!:p:icon_rollout:

தாமரை அண்ணா.. உங்களுக்கு அறுபது வயது நெருங்கற மாதிரியே சந்தேகப்படுறாரே பென்ஸ் அண்ணா.... உண்மையோ??!! :rolleyes::D:D

பென்ஸ்
20-06-2011, 05:11 AM
இந்த உட் பீ, மே பீ, பிராபபல் பீ, பாஸிபில் பீ, இப்படி மலருக்கு மலர்தாவும் Bee யெல்லாம் நம்ம பக்கம் கிடையாதுன்னு தெரிஞ்சுமா இந்தச் சந்தேகம் உமக்கு...?

விளம்பரம்
எழுத்துப்பிழையால் மனமொடிந்தோருக்கு இவ்விடம் கருத்துடன் கட்டுப் போடப்படும்.

எழுத்து பிழையை வாசித்து மனம் நொடிந்தவர்களே... உங்களுக்கு இது நல்ல வாய்ப்பு... "தாமறை" கட்டு "போடுராராம்"

தாமரை
20-06-2011, 05:16 AM
ஆமா.. இனி மேல் தானே ஆகும்.. அறுபதாம் கல்யாணம்??!!:p:icon_rollout:

தாமரை அண்ணா.. உங்களுக்கு அறுபது வயது நெருங்கற மாதிரியே சந்தேகப்படுறாரே பென்ஸ் அண்ணா.... உண்மையோ??!! :rolleyes::D:D

அவரோட எழுத்துப்பிழைகளை நீங்கள் சரியாகப் புரிஞ்சுக்கணும்.

இனிம என்பது இனிமை என்பதோட வட்டார வழக்கு. அதாவது அவர் சொல்றார் இனிமைதான் கல்யாணம் ஆகும்.

உடுப்பி ஹோட்டல் சாம்பார் ரசம் இதிலெல்லாம் கூட வெல்லம் அல்லது சர்க்கரை சேர்ப்பார்கள். அந்த மாதிரி நம்ம வாழ்க்கையில் இனிமையைச் சேர்ப்பவள் மனைவி.. (ஹையோ ஹையோ,, இதுக்கு உங்களால எதிர்ப்பு சொல்லவே முடியாது.:lachen001::lachen001::lachen001:..) அதனால மனைவியை உடுப்பின்னு சொல்றனோன்னு நினைச்சுட்டார்.

அப்புறம் இன்னொரு கேள்வி.. அறுபதாம் கல்யாணத்திற்கு வேற பொண்ணு பார்க்கிற சான்ஸ் இருக்கா என்ன, உட் பீ ன்னு சொல்ல?

உங்கள் ஹவர்(அதாங்க நேரம்) சரியில்ல. உங்களவருக்கு இதைக் கொஞ்சம் சொல்லிக் கொடுப்பமா?

த.ஜார்ஜ்
20-06-2011, 05:37 AM
அது ஆ"றி"ய பவன் ல... :lachen001::lachen001::lachen001:

எங்கள் ஊரில் ஆரியபவனில் ஆறாமலே கிடைக்கிறது.[ பெயரை மாற்ற வேண்டும்...!]

தாமரை
20-06-2011, 05:40 AM
எங்கள் ஊரில் ஆரியபவனில் ஆறாமலே கிடைக்கிறது.[ பெயரை மாற்ற வேண்டும்...!]

ஆ(ச்ச)ர்ய பவன் என்று மாத்திடச் சொல்லுங்க!!!:lachen001::lachen001::lachen001:

Ravee
20-06-2011, 06:22 AM
அது ஃபேமஸ் உடுப்பி ஹோட்டல் ஆச்சே என்றால் என் உடுப்பி.. (அதாவது என்னைத் தாலியாய் தன் கழுத்தில் உடுத்தி இருப்பவள் )

ஒரு சந்தேகம் .... பார்வதி கழுத்தில் தாலியாய் இருப்பது பரமசிவன் என்றால் பரமசிவன் கழுத்தில் பாம்பாய் இருப்பது ..... :confused:

அது பார்வதியாய் இருக்காது பார் விதியாய் இருக்குமோ ... :lachen001: :D :lachen001:

தாமரை
20-06-2011, 06:44 AM

பார் விதி - உலக விதி அதாவது உலக நியதி... அதேதான்...
உமக்குப் புராணமே தெரியலை ஓய்..
http://aboutshiva.com/images/Lord_shiva.jpg
பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு என்பது ஆணவம் ஆகும்.

அடங்கிய ஆணவம் தான் பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு...
இப்போ கண்ணதாசனின் பாட்டிற்கு அர்த்தம் தானே புரியுமே..

பரமசிவனின் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா?

அதாவது ஆணவம் கேட்டது என்று பொருள்..

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது.

ஆணவம் கூட இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் நலமாக இருக்கும்.
கருடன் என்றால் கூரிய தொலை நோக்குப் பார்வை என்று பொருள். அதாவது ஆணவம் கூட நமக்கு ஆபரணமே.. சில சமயம் நாம் அதை அணிய வேண்டியதாக இருக்கிறது.
இதைத் தான் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள் சொல்லுகிறார்கள்.
ரொம்ப நாளைக்கு முன்னால் நான் எழுதி ஆதவனுக்குப் பிடித்த கவிதை...

அவள் கழுத்தில் கயிறுகட்டி
அவன் போட்டுக் கொண்டான் தூக்கு
திருமணம்!!!

தலைக்கேறும் ஆணவம் (நான் ஆத்தாக்களைச் சொல்லலைங்க)
ஆண்களுக்கு திருமணத்திற்குப் பின்
பல்பிடுங்கப்பட்டு வெறும் ஆபரணமாய் போய்விடுகிறது..

ஹி ஹி