PDA

View Full Version : மரண அழைப்பிதல்



inban
17-06-2011, 05:30 PM
நீ வரத்தான் வேண்டும்

உன் மௌனப் பூட்டு
என் பாடைக்கு பக்கத்திலேனும்
திறவுபட வேண்டும்

இத்துனை நாள்
வெறுப்பை வுமிழ்ந்த கண்கள்
காதலை வேண்டாம்
கருணையை யாவது
கட்டாயம் கூற வேண்டும்

இதழ்களின் சொத்தென்று
எண்ணியிருத்த கன்னங்களின் மேலே
கண்ணீர் காய்ந்து மிளிர வேண்டும்

கட்டாயம்
நீ வரத்தான் வேண்டும்!
வந்து நீ அழ வேண்டும்!

துக்கத்தினால்
இல்லாவிட்டாலும் கூட ....
நீ அழத்தான் வேண்டும்

என் கடைசி செல்லும்
உன் கண்ணீர் துளியின்
வெப்பம் பட்டே
கருக வேண்டும்

கண்ணே!
வந்துவிடு கண்ணே!
வாழத்தான் வரவில்லை
போகவாவது....

நீ வரவில்லைஎன்றால்
இந்த இமைகள்
என் விழிகளைப் போர்த்தாது.
எந்த விசமானாலும்
என்தேகம் மரிக்காது

கண்ணே !
வந்துவிடு கண்ணே!

வந்த பினால்
நான் யாசித்துக்கிடந்த
உனக்கு உடன்பாடில்லாத
நீ சொல்லாமல் போன
அந்த ஒரு வார்த்தையை சொல்லி
கதறி விடாதே

நீட்டிக்கிடக்கும்
இந்த சவம் கூட
நிமிர்ந்து எழுந்துவிடும்
உனக்கு மீண்டும் உபத்திரமாகும்.