PDA

View Full Version : நானென்னை தொலைத்துவிடும்படி



கலாசுரன்
17-06-2011, 04:22 AM
*
ஒய்யார நடைகொண்ட
சொல்லொன்றை அடிக்கடி
உச்சாடனம் செய்கிறாய்
நானென்னை தொலைத்துவிடும்படி

என்னை நானே சுதந்தரித்துக்கொள்ள
காதுகளை அறுத்து
லட்சியமற்றதொரு தொலைவில்
ஓங்கி எறிந்துவிட்டு
புறப்பட்டுச் செல்கிறேன்

பார்வையில் படும் அனைவரும்
உதடுகளை மட்டும்
அசைத்துக் கொண்டிருக்கிறார்கள்
கண்கள் கூசுகின்றன..
*
***
கலாசுரன்

நாஞ்சில் த.க.ஜெய்
17-06-2011, 07:13 AM
அழகான கவிதை ...ஆனால் கூற வரும் கருத்துதான் என்னவென்று புரியவில்லை...தொடருங்கள் கலாசுரன் அவர்களே ...

கலாசுரன்
02-07-2011, 08:09 AM
நன்றி ஜெய் ..[:)]

கௌதமன்
02-07-2011, 01:06 PM
*
ஒய்யார நடைகொண்ட
சொல்லொன்றை அடிக்கடி
உச்சாடனம் செய்கிறாய்
நானென்னை தொலைத்துவிடும்படி

என்னை நானே சுதந்தரித்துக்கொள்ள
காதுகளை அறுத்து
லட்சியமற்றதொரு தொலைவில்
ஓங்கி எறிந்துவிட்டு
புறப்பட்டுச் செல்கிறேன்

பார்வையில் படும் அனைவரும்
உதடுகளை மட்டும்
அசைத்துக் கொண்டிருக்கிறார்கள்
கண்கள் கூசுகின்றன..
*
***
கலாசுரன்

கண்களையும் களைந்து விடலாம் தான்
கனவை களைய முடியாதே!
தூக்கத்தை தொலைக்க முடியுமென்றால்
அது கூட சாத்தியம்தான்
ஆனால் இதையெல்லாம் செய்யலாமோ
என்று எண்ணுகையில்
தொலைந்தாலும் பரவாயில்லையென
உள்மனம் இழந்தக் காதுகளை தேடச்சொல்கிறது

Nivas.T
02-07-2011, 01:19 PM
மிக அருமை கலாசுரன்
பாராட்டுகள்
தொடருங்கள்

M.Jagadeesan
02-07-2011, 03:11 PM
சின்னக் கவிதையானாலும்
என்ன சொல்ல வருகிறீர்கள்?
என்பது என்
சின்ன புத்திக்கு
சிறிதும் எட்டவில்லை.

கலாசுரன்
29-11-2011, 05:34 AM
கண்களையும் களைந்து விடலாம் தான்
கனவை களைய முடியாதே!
தூக்கத்தை தொலைக்க முடியுமென்றால்
அது கூட சாத்தியம்தான்
ஆனால் இதையெல்லாம் செய்யலாமோ
என்று எண்ணுகையில்
தொலைந்தாலும் பரவாயில்லையென
உள்மனம் இழந்தக் காதுகளை தேடச்சொல்கிறது

கூர்ந்த உங்கள் அவதாநிப்பிர்க்கும் இந்த விமர்சனத்திற்கும் மிக்க நன்றி.. :)

கலாசுரன்
29-11-2011, 05:35 AM
மிக அருமை கலாசுரன்
பாராட்டுகள்
தொடருங்கள்

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி..

கலாசுரன்
29-11-2011, 05:37 AM
சின்னக் கவிதையானாலும்
என்ன சொல்ல வருகிறீர்கள்?
என்பது என்
சின்ன புத்திக்கு
சிறிதும் எட்டவில்லை.

கவிதையில் தொடர்ந்து பயணிக்கும் பட்சத்தில் உங்களுக்கு அது கைகூடும்

அதற்கு எனது வாழ்த்துக்கள்.