PDA

View Full Version : யாருக்கும் தெரியாம.... ஒரு தப்பு.த.ஜார்ஜ்
16-06-2011, 05:44 PM
பனிரெண்டாம் வகுப்பில் என்னருகே இருந்தவன் சாகுல்ஹமீது. அவன் வந்தால் வகுப்பே மணக்கும். வாசனையோடே வருவான். துறுதுறு பையன். சிரிச்ச மாதிரியே எப்பவும் இருப்பான்.

எங்கள் வரிசைக்கு வலதுபுறம் இருந்த வரிசை மாணவிகளுக்கானது. பாதிபேரின் பார்வை அங்கேயே உலவிக் கொண்டிருக்கும். சாகுலும் அடிக்கடி வலதுபுறம் இருந்த என்னைத்தாண்டி அங்கே பார்ப்பான். இதில் அப்படியென்ன சுவாரசியம் இருக்கிறது என்ற பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் நோக்கில்...

ஒரு நாள் எதேச்சையாக[!] நானும் திரும்பிய போதுதான் கவனித்தேன். நிர்மலா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். சாகுல் என் தோள் மீது சாய்ந்திருந்தான்.
நான் சட்டென்று வேறு யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டேன். இல்லை. முதலில் மனசு நம்ப மறுத்தது. நம்மளையா? சே.. சே.. இருக்காது என்றது. அவநம்பிக்கைக்கு பிறந்த மனசு..

பாட வேளைகளில் அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்க்க.. அட.. நம்மளையே பாக்கிறாப்பா.. என்னமோ ஒண்ண முழுங்கின மாதிரி திணறலாயிருந்தது. இதை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று குறுகுறுப்பு தோன்ற.. சாகுலின் காதில் விசயத்தைப் போட்டேன். அவன்”அப்படியா” என்று கேட்டு விட்டு அவளைப்பார்த்தான். பின் திரும்பி “ஜமாய்” என்றான்.

அன்று மதிய வேளை. வகுப்பில் ஓரிருவர் மட்டுமே இருந்தோம். அவள் எனக்கு மட்டுமே தெரியும்படியாக கையசைத்து கூப்பிட்டாள். தயங்கி தயங்கி நெருங்கினேன். அவள் சட்டென்று ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள். “ இத யாருக்கும் தெரியாம சாகுல்கிட்ட குடுத்திரு ” என்றாள்.

அக்னி
16-06-2011, 05:51 PM
"ஜார்ஜ்ஜுக்கே தெரியாம ஒரு ஆப்பு"
இப்படியும் தலைப்பு வைத்திருக்கலாம்... :lachen001:

பன்னிரண்டாம் வகுப்பில இதெல்லாம் தேவையா...
அதாவது, பன்னிரண்டாம் வகுப்பிலேயே இப்படி ஒரு ஆப்புத் தேவையா...

நாஞ்சில் த.க.ஜெய்
16-06-2011, 06:00 PM
"ஜார்ஜ்ஜுக்கே தெரியாம ஒரு ஆப்பு"
இப்படியும் தலைப்பு வைத்திருக்கலாம்... :lachen001:

பன்னிரண்டாம் வகுப்பில இதெல்லாம் தேவையா...
அதாவது, பன்னிரண்டாம் வகுப்பிலேயே இப்படி ஒரு ஆப்புத் தேவையா...

நண்பர் அக்னி கூறுவதை நான் வழிமொழிகிறேன்

கீதம்
16-06-2011, 11:13 PM
அடப்பாவமே!
ஆலையில் சிக்கிய கரும்பாக
அன்று உங்கள் மனம்
காதலின் நடுவில் பிழியப்பட்டு
கந்தலாகியிருக்குமே!

அன்புரசிகன்
17-06-2011, 12:33 AM
அதுசரி. அதுக்கு சாகுல் என்ன சொன்னார்....? :lachen001:

Ravee
17-06-2011, 09:42 AM
பாஸு... நம்புறமாதிரி ஒரு கதை சொல்லுங்க .... :eek: உங்க பெர்சனாலிட்டிக்கு முன்னால சாகுல் எல்லாம் ஒரு ஆளா .... :confused: அப்படி சாகுல போய் லுக்கு விட்ட பிகர்ன்னா அதுவும் சப்ப பிகர்தான் ....:cool: நல்லவேளை தப்ப்ச்சுட்டோம்ன்னு நெனச்சுகோங்க ... :lachen001:

த.ஜார்ஜ்
17-06-2011, 11:14 AM
"ஜார்ஜ்ஜுக்கே தெரியாம ஒரு ஆப்பு"
இப்படியும் தலைப்பு வைத்திருக்கலாம்... :lachen001:

பன்னிரண்டாம் வகுப்பில இதெல்லாம் தேவையா...
அதாவது, பன்னிரண்டாம் வகுப்பிலேயே இப்படி ஒரு ஆப்புத் தேவையா...

தலைப்பு நல்லாத்தான் இருக்கு. அதுக்காக இப்படி வெளிப்படையா என்னை பீற்றிக்கொள்வது எனக்குப் பிடிக்காது.ஹீ..ஹீ..:D

த.ஜார்ஜ்
17-06-2011, 11:17 AM
நண்பர் அக்னி கூறுவதை நான் வழிமொழிகிறேன்

ரொம்ப வழிகிறது.தயவு செய்து துடைத்துக் கொள்ளவும்.:lachen001::lachen001:

த.ஜார்ஜ்
17-06-2011, 11:24 AM
அதுசரி. அதுக்கு சாகுல் என்ன சொன்னார்....? :lachen001:

பாஸு... நம்புறமாதிரி ஒரு கதை சொல்லுங்க .... :eek: உங்க பெர்சனாலிட்டிக்கு முன்னால சாகுல் எல்லாம் ஒரு ஆளா .... :confused: அப்படி சாகுல போய் லுக்கு விட்ட பிகர்ன்னா அதுவும் சப்ப பிகர்தான் ....:cool: நல்லவேளை தப்ப்ச்சுட்டோம்ன்னு நெனச்சுகோங்க ... :lachen001:

அட .அது அவனதாம்பா பார்த்துட்டு இருந்திருக்கு. குறுக்கே நான்தானே இடஞ்ச்சலா இருந்திருக்கேன்.

அடப்பாவமே!
ஆலையில் சிக்கிய கரும்பாக
அன்று உங்கள் மனம்
காதலின் நடுவில் பிழியப்பட்டு
கந்தலாகியிருக்குமே!

பொறுங்க அவசரப்பட்டு இத காதல்னு பேர் வச்சிரவேண்டாம். [வேற ஒன்னும் சொல்றதுகில்ல]

Nivas.T
17-06-2011, 12:05 PM
விடுங்க ஜார்ஜ் :cool:

இந்தப் பொண்ணுங்கலே இப்படித்தான் எப்பவும் நம்பள நோகடிச்சுகிட்டே இருப்பாங்க:frown::redface:

இதுக்கு போய் கவலைப்பட முடியுமா சொல்லுங்க?:sprachlos020::confused:

அப்படி நான் கவலைபட்டா இந்தத்திரியில ஒரு நூறு பதிப்பு போடலாம் அவ்வளவு கத இருக்கு நம்மகிட்ட :D:D:D:D

sarcharan
17-06-2011, 01:02 PM
முகராசி சார் முகராசி! சில பேர பாத்தவுடனே கோத்துவிடணும் போல தோணும்னு சொல்வாங்க.

உங்க விசயத்துல அது உண்மையாகிடிச்சு:)

குத்துங்க எசமான் குத்துங்க! இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்

sarcharan
17-06-2011, 01:05 PM
விடுங்க ஜார்ஜ் :cool:
அப்படி நான் கவலைபட்டா இந்தத்திரியில ஒரு நூறு பதிப்பு போடலாம் அவ்வளவு கத இருக்கு நம்மகிட்ட :D:D:D:D

அப்ப ஒரு பலசரக்கு கடையே வைக்கலாம். பல சரக்கு இருக்கு போல

sarcharan
17-06-2011, 01:07 PM
நாம காதல் கடிதம் குடுக்கறத விட நமக்கு காதல் கடிதம் குடுக்கறது பெட்டருங்களா? கொஞ்சம் தெளிவாக்குங்கள்...

sarcharan
17-06-2011, 01:10 PM
பனிரெண்டாம் வகுப்பில் என்னருகே இருந்தவன் சாகுல்ஹமீது. அவன் வந்தால் வகுப்பே மணக்கும். வாசனையோடே வருவான்.

அவள் சட்டென்று ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள். “ இத யாருக்கும் தெரியாம சாகுல்கிட்ட குடுத்திரு ” என்றாள்.

பாருங்க செண்டு அடிச்சவன் செட்டில் ஆய்ட்டான்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-06-2011, 07:06 PM
ரொம்ப வழிகிறது.தயவு செய்து துடைத்துக் கொள்ளவும்.:lachen001::lachen001:

நண்பரே பல விதத்தில் வழிந்திருந்தாலும் அதனை சாமர்த்தியமாக மறைப்பது என்பது ஒரு கலை அந்த காலையில் தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் கடினம் ..அவ்வகையில் தேர்ச்சி பெற்ற என் குருவாகிய உங்களை பின் தொடர்கையில் மிகவும் மகிழ்கிறேன் ...:D:D:D

அன்புரசிகன்
18-06-2011, 12:05 AM
அட .அது அவனதாம்பா பார்த்துட்டு இருந்திருக்கு. குறுக்கே நான்தானே இடஞ்ச்சலா இருந்திருக்கேன்.

அது தெரியுது சார். நீங்கள் அந்த கடிதத்தை சாகுலுக்கு கொடுத்தபோது சாகுல் என்ன சொன்னார்...

Ravee
18-06-2011, 04:40 AM
அது தெரியுது சார். நீங்கள் அந்த கடிதத்தை சாகுலுக்கு கொடுத்தபோது சாகுல் என்ன சொன்னார்...

கொரியர் பாய் சீக்கிரம் வந்து டெலிவரி செய்யக்கூடாது என்று சொல்லி இருப்பார் .......... :lachen001:

த.ஜார்ஜ்
18-06-2011, 07:13 AM
அது தெரியுது சார். நீங்கள் அந்த கடிதத்தை சாகுலுக்கு கொடுத்தபோது சாகுல் என்ன சொன்னார்...

வேறென்ன.பச்ச புள்ளயாட்டம் அத வாங்கி பாக்கெட்டில் வைத்துவிட்டு எனக்கும் அவனுக்கும் சம்பந்தம இல்லாத மாதிரி விசிலடித்துக்கொண்டே வெளியே போனான்.நல்ல நடிகன் தெரியுமா அவன்.

த.ஜார்ஜ்
18-06-2011, 07:16 AM
விடுங்க ஜார்ஜ் :cool:

இதுக்கு போய் கவலைப்பட முடியுமா சொல்லுங்க?:sprachlos020::confused:

அப்படி நான் கவலைபட்டா இந்தத்திரியில ஒரு நூறு பதிப்பு போடலாம் அவ்வளவு கத இருக்கு நம்மகிட்ட :D:D:D:D

சரி கொஞ்சம் கஷ்டப்பட்டாவது கவலை படுங்கள். [ஒன்டிரண்டாவது கதைகள் எங்களுக்கு கிடைக்கட்டும்]
கில்லாடிய்யா நீ..!!!!!!!

த.ஜார்ஜ்
18-06-2011, 07:25 AM
முகராசி சார் முகராசி! சில பேர பாத்தவுடனே கோத்துவிடணும் போல தோணும்னு சொல்வாங்க.

உங்க விசயத்துல அது உண்மையாகிடிச்சு:)ஆமால்ல

நாம காதல் கடிதம் குடுக்கறத விட நமக்கு காதல் கடிதம் குடுக்கறது பெட்டருங்களா? கொஞ்சம் தெளிவாக்குங்கள்...

இந்த வயசில இனி உங்களுக்கு அவசியப்படுமா? இருந்தாலும்
விளக்கம் ஆதவா சொல்லித்தருவார் என்று நம்புகிறேன்.

நண்பரே பல விதத்தில் வழிந்திருந்தாலும் அதனை சாமர்த்தியமாக மறைப்பது என்பது ஒரு கலை அந்த காலையில் தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் கடினம் ..அவ்வகையில் தேர்ச்சி பெற்ற என் குருவாகிய உங்களை பின் தொடர்கையில் மிகவும் மகிழ்கிறேன் ...:D:D:D

ஒரு அடிமை சிக்கிருச்சா..!

govindh
18-06-2011, 11:51 AM
த.ஜார்ஜ் Quote:
Originally Posted by sarcharan
முகராசி சார் முகராசி! சில பேர பாத்தவுடனே கோத்துவிடணும் போல தோணும்னு சொல்வாங்க.

உங்க விசயத்துல அது உண்மையாகிடிச்சு

ஆமால்ல.....

ம்...அப்புறம்.... தூது வேலை எப்படி இருந்தது...? :smilie_abcfra:

sarcharan
20-06-2011, 06:34 AM
அது தெரியுது சார். நீங்கள் அந்த கடிதத்தை சாகுலுக்கு கொடுத்தபோது சாகுல் என்ன சொன்னார்...

நீ என் நன்பேண்டா அப்படின்னு சாகுல் சொல்லி இருப்பாரோ? :redface:

dellas
20-06-2011, 07:01 AM
ம்ம்ம்.. நல்லவேளை நீங்கள் முந்திக்கொண்டு கடிதம் எழுதிப்போகவில்லை. நிர்மலா உங்களை நிர்மூலமாய் ஆக்கி இருப்பாள்.

பென்ஸ்
20-06-2011, 04:19 PM
சரி விடுங்க ஜார்ஜ்... அப்புறம் என்ன நடந்தது....
கடிதம் கொடுத்த பலரே பிகரை கவருக்குள் வைத்த கதைகள் பல இருக்கு... நீங்க சொல்லுங்க மீதி கதையை...

நாஞ்சில் த.க.ஜெய்
20-06-2011, 05:22 PM
குருவே கடந்த கால நிகழ்வின் ஒரு பகுதியை கூறிட்டீங்க அதன் பிறகு நடந்த கதையின் தொகுப்பினை கூறவே இல்லையே அதையும் கூறினால் தானே சிஷ்ய பிள்ளைங்க உங்க அனுபவத்த கண்டு எச்சரிக்கையா எந்த வொரு தகவலையும் கையாள முடியும் ...தொடருங்கள் குருவே உங்கள் அனுபவ (ஆப்பு)களின் தொகுப்பினை...

innamburan
20-06-2011, 06:30 PM
நண்பர் ஜார்ஜ்! தொடருக.