PDA

View Full Version : ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும்mgandhi
16-06-2011, 05:32 PM
ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும்: இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கக் கூடியது.


An apple a day keeps the doctor away...இப்படி ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது தினசரி ஒரு ஆப்பிள் பழத்தை உண்ணுவதன் மூலம் வைத்தியர்களை நம் அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கலாம். அதாவது நோய்கள் இன்றி வாழலாம். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் புது விடயம் என்னவென்றால் இந்த ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும் என்பது தான்.

ஆப்பிள் பழத்தின் தோலில் காணப்படும் மெழுகுத் தன்மை கொண்ட பளபளப்பும், அதனோடு இணைந்த இரசாயனமும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் பழத் தோலில் காணப்படுவது அர்சோலிக் அமிலமாகும். இது தசைகளை ஆரோக்கியமாகக் கட்டி எழுப்பக்கூடியது. இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கக் கூடியது.

இதன் ஒட்டுமொத்த அர்த்தம் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் மனிதனது சுகாதாரம் வியக்கத்தக்க ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கும் என்பது தான்.அர்சோலிக் அமிலமானது மிகவும் சுவாரஸ்யமான ஒரு இயற்கை மூலப் பொருள் என்று இந்த ஆய்வை நடத்தியுள்ள டாக்டர். கிறிஸ்டோபர் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.ஆப்பிள் தோல்களில் காணப்படும் இது இயல்பான ஒரு ஆகாரமாகவும் உள்ளது என்று கூறும் டாக்டர் ஆடம்ஸ் உடலில் ஹார்மோன்களின் தாக்கம் பற்றி ஆராயும் ஒரு அமெரிக்க நிபுணராவார்.

முதுமை அடைகின்றபோது தசைகள் சோர்வடைவது அல்லது நலிவடைவது ஒரு பொதுவான பிரச்சினையாகும். வயதான காலத்தில் இது பல நோய்களுக்கும் காரணமாகின்றது. இதற்கு குறிப்பாக மருந்துகளும் கிடையாது.இதற்கு மாற்று வழி தான் என்ன என்று லோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ஆடம்ஸ் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்தபோதுதான் ஆப்பிள் பழம் மற்றும் அதன் தோல் என்பனவற்றின் மகிமை உணரப்பட்டுள்ளது.எனவே ஆப்பிள் தோளை இனி சீவி எறிய வேண்டாம், அதை அப்படியே தோலுடன் சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு இந்த ஆய்வாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். [/COLOR]

நாஞ்சில் த.க.ஜெய்
16-06-2011, 05:50 PM
ஆப்பிள் பழ தோலில் உள்ள மெழுகு இயறகையானதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கூறும் உண்மைகள் உதவும் ..ஆனால் அவை செயற்கையானதாக இருப்பின் அவை எவ்வாறு நன்மை செய்யும் என நம்ப முடியும் நண்பரே...

கீதம்
16-06-2011, 11:23 PM
இரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகளின் பாதிப்பு பழங்களின் தோலில் அதிகமாகக் காணப்படுவதால் நன்கு கழுவிச் சுத்தம் செய்தபின்னரே தோலுடன் சாப்பிடவேண்டும். சில இரசாயனங்கள் எத்தனை முறைக் கழுவினாலும் போகாது. அந்தச் சமயத்தில் பழங்களை கொஞ்சநேரம் (பத்து நிமிடம் போல்) தண்ணீரில் ஊறவைத்துவிட்டுப் பின் கழுவி உண்டால் ஓரளவு தடுக்கலாம். திராட்சைக்கும் இது பொருந்தும். குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது குழந்தை மருத்துவர் ஒருவர் சொன்ன அறிவுரை இது!

உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் முதலில் தோல் நீக்கிவிடாமல் நன்கு கழுவி விட்டு தோலுடன் வேகவைத்து பின் தோலை மட்டும் உரித்து எடுத்தால் தோலுக்கடியிலுள்ள சத்து வீணாகாது என்றும் எங்கோ படித்த நினைவு.

பகிர்வுக்கு நன்றி மோகன் காந்தி அவர்களே.

aren
17-06-2011, 03:43 AM
ஆனால் தினமும் ஆப்பிளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் போர் அடித்துவிடுகிறது. இருந்தாலும் மருத்துவத்தன்மை இருப்பதால் சாப்பிடலாமே.

sarcharan
17-06-2011, 06:55 AM
கிளமர் ஆக இருக்க பெண்கள் தான் வாக்சிங் செய்வாங்க.. இப்போ ஆப்பிள்களும்!:redface:

கிருஷ்ணன்
17-06-2011, 01:23 PM
இம்மாதிரி தோலுடன் சாப்பிடுவது வாழை பழத்திற்கும் பொருந்தும்.வாழை பழ தொலியில் அதிகளவு நார் சத்து, விட்டமின் சி இருக்கிறது என்றும், இது பல அபாயகரமான நோய்களிலிருந்து காக்கும் ஆற்றல் கொண்டது எனவும் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. என்ன.....சாப்பிடுவது கொஞ்சம் சிரமம் தான். இருந்தாலும் முயற்சிக்கலாமே

பாரதி
17-06-2011, 02:29 PM
இதைப்படித்ததும் எனக்கு சிறுவயதில் படித்த கதை நினைவுக்கு வருகிறது. ஆப்பிள் தோலை சீவிக்கொண்டிருந்த பழம் பெரும் விடுதலைப் போராட்டத்தலைவர் ஒருவரிடம், இப்படித்தான் தோலில் பல சத்துக்கள் நிறைந்திருக்கிறது என அவரது நண்பர் கூறினாராம். தோலை முழுமையாக சீவும் வரை பொறுமையாக இருந்த அந்த தலைவர் அந்ததோலை எல்லாம் அவரது நண்பரிடம் நீட்டி எல்லா சத்தையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்றாராம்!

இயற்கையான முறையில் வளர்ந்த / வளர்க்கப்பட்ட தாவரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் பழங்கள், காய்கறிகளை அப்படியே உண்பது நல்லதே.:)

ரங்கராஜன்
24-06-2011, 04:37 AM
An apple a day keeps the doctor away...

ஆனா அது பொம்பளை டாக்டரா இருந்தா, ஆப்பிள் தோட்டத்தையே தூரம் வைக்கலாமே.... :lachen001::lachen001::lachen001:

sarcharan
11-07-2011, 02:04 PM
An apple a day keeps the doctor away...

ஆனா அது பொம்பளை டாக்டரா இருந்தா, ஆப்பிள் தோட்டத்தையே தூரம் வைக்கலாமே.... :lachen001::lachen001::lachen001:


ஹீ ஹீ.. அடியேன் கமல் ரசிகன்!:aetsch013::mini023:

vseenu
05-10-2011, 05:02 PM
ஆப்பிள் பழங்களை தோலுடன் உண்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்கியமைக்கு நன்றி

kulandaivel
07-10-2011, 11:56 AM
நார் சத்து இரண்டு வகைப்படும்
கரையும் நார்
கரை யாத நார்
ஓட்ஸ் போன்றவை முதல் வகை
வாழை தண்டு இரண்டாம் வகை
குடல் உட்புறம் சீரணமான உணவு நகர்வதற்கு மேல் கூறியவை நன்று.

நார் நார் ஆக பிரித்ததை கேட்டதற்க்கு நன்றி

அன்புடன்,
குழந்தைவேல் .