PDA

View Full Version : சுட்டு விரல்



இளசு
07-04-2003, 06:49 AM
சுட்டு விரல்


மீசை நறுக்கினேன்
மூக்கு முடி நீட்டியபடி

தந்தப் பற்கள்
ஈறுகளில்தான் ரணமும் சீழும்

முகமெங்கும் பவுடர் பூச்சு
காதின் பின் அழுக்கு

மடிப்பு கலையா சட்டை
பனியன் எல்லாம் ஓட்டை

காஸ்ட்லி பேண்ட் நல்லாருக்கு
ஜட்டி தோய்ச்சு நாளாச்சு

முகமே தெரியும் ஷ�வில்
மயக்க நெடி இருக்கு சாக்ஸில்

கண்ணாடி முன் ஒத்திகை
வசனம் எனக்கு மனப்பாடம்

உள்ளத்தை திறந்து காட்டு --- உதட்டில்
உள்ளதை திறந்து காட்டு ---- உள்ளத்தில்

அதனால் என்ன,
கிளம்பி விட்டேன் வெளியே

என் சுட்டு விரலுக்கு
நிறைய வேலை இருக்கிறது.

Narathar
07-04-2003, 10:20 AM
இளசு கவிதை நல்லாத்தான் இருக்கு
அதுக்காக "சுயசரிதை"யை இப்படியெல்லாமா எழுதுவார்கள்!!!

gankrish
07-04-2003, 10:33 AM
இங்கே பம்பாயில் பாதி பேர் நீங்கள் கூறியபடி தான் இருக்கிறார்கள்.

Narathar
07-04-2003, 10:51 AM
இங்கே பம்பாயில் பாதி பேர் நீங்கள் கூறியபடி தான் இருக்கிறார்கள்.அப்போ இளசு உங்களைப்பற்றித்தானா எழுதினார்???

இளசு
07-04-2003, 05:26 PM
இளசு கவிதை நல்லாத்தான் இருக்கு
அதுக்காக "சுயசரிதை"யை இப்படியெல்லாமா எழுதுவார்கள்!!!

நாரதரே

உங்கள் "சுட்டுவிரல்" என்னை நோக்கி...... :lol:

நன்றிகள் நண்பரே!

இளசு
07-04-2003, 05:27 PM
இங்கே பம்பாயில் பாதி பேர் நீங்கள் கூறியபடி தான் இருக்கிறார்கள்.

இனிய நண்பா

உன் " சுட்டுவிரல்" ஊரில் பாதிபேரை நோக்கி :lol:

நன்றி நண்பா!

இளசு
07-04-2003, 05:29 PM
இங்கே பம்பாயில் பாதி பேர் நீங்கள் கூறியபடி தான் இருக்கிறார்கள்.அப்போ இளசு உங்களைப்பற்றித்தானா எழுதினார்???

நாரதரே
உங்கள் " சுட்டுவிரல்" என்னை நோக்கி...
இன்னொரு கை இருக்கிறதே..
ஏன் என் "சுட்டுவிரலை" வலிய இழுத்து
என் இனிய நண்பனை நோக்கி...
நாராயணா... நாராயணா.... :lol:

poo
07-04-2003, 05:40 PM
உள்ளொன்று புறமொன்று..
இப்படித்தான் ஓடுகிறது வாழ்க்கை. ஆனாலும் சுட்டுவிரல் சுட்டுவதென்னவோ அடுத்தவரின் ஓட்டைகளை மட்டுமே!!!

பாராட்டுக்கள் அண்ணா.. (இப்படியெல்லாம், கருவை எங்குதான் கண்டெடுக்கிறீர்களோ?!!)

rambal
07-04-2003, 05:42 PM
சுத்தம் சோறு போடும்..
அப்ப குழம்பு யார் ஊற்றுவார்..
என கேள்வி கேட்கும்
வினாக்கிகளுக்கு இக்கவிதை ஒரு பாடம்..
அருமையாகச் சொன்ன அண்ணனுக்கு பாராட்டுக்கள்..

இளசு
08-04-2003, 07:33 AM
சிட்டு, ராம் ...
இரு பெருங்கவிகள் பாராட்டு தேனாய் இனிக்கிறது...
கண் பனிக்க நன்றி நவில்கிறேன்,,

discreteplague
08-04-2003, 01:19 PM
ஹ்ம்ம் அருமையாக இருக்கு...

விஷ்ணு

karikaalan
08-04-2003, 01:39 PM
ஆலம்பழத்தை நசுக்கிப்பார்த்தா நல்லாவா இருக்குது? அது போலத்தான் பலரும். இந்த ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க -- "சாப்பிடறது என்னவோ கொத்துக்கடலை; ஏப்பம் மட்டும் பாதாம்பருப்பு சாப்பிட்டாப்ல". அது சரியாத்தான் இருக்குது. இளவலின் கவிதை முகத்தில் அடித்தாற்போல் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

madhuraikumaran
08-04-2003, 05:23 PM
இளசு கவிதைக்கு ஒரு ஷொட்டு !!! நாரதரோடு சுட்டு விரல் விளையாட்டு நன்று !
இன்னொரு பழமொழியும் இருக்கு இதே தோரணையில்...
"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்
உள்ளே இருப்பது ஈரும் பேனும்."

இளசு
08-04-2003, 08:17 PM
விஷ்ணுவுக்கு நன்றி
அண்ணன் கரிகாலன் கருத்தும்
நண்பன் மதுரைக்குமரன் கருத்தும் மிக அருமை...

கண்ணதாசன் சொல்வார் :
அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை..

நான் உடல் சொத்தையைச் சொல்லவில்லை...
பொதுவாகவே
குற்றம் கூறுதல் குறைத்தல் நலமே
பிடிக்காவிட்டால் விலகுதல் போதுமே..

madhuraikumaran
09-04-2003, 09:12 PM
நான் உடல் சொத்தையைச் சொல்லவில்லை...
பொதுவாகவே
குற்றம் கூறுதல் குறைத்தல் நலமே
பிடிக்காவிட்டால் விலகுதல் போதுமே..

நன்று சொன்னீர். இருந்தும், குறையிருப்பின் புறங்கூறுதல் விடுத்து அவரிடமே 'பதமாய்' எடுத்துச் சொல்லுதல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அப்படித்தானே இன்று மன்றத்தில் நாமெல்லாம் வளர முடிகிறது. ஆக குறையிருப்பின் ஆக்கபூர்வ விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு, திருத்திக் கொண்டு முன்னேறுவோம் !!!

குமரன்
10-04-2003, 01:10 AM
சுட்டும் விரலுக்கே
சுடும் உண்மை

எடுத்து சொன்ன
இளசுவிற்கு பாராட்டுக்கள்...

-குமரன்

இளசு
10-04-2003, 06:03 AM
குறையிருப்பின் புறங்கூறுதல் விடுத்து அவரிடமே 'பதமாய்'

மிக அழகான முத்தாய்ப்பு தந்தீர் நண்பரே....

இளசு
10-04-2003, 06:04 AM
சுட்டும் விரலுக்கே
சுடும் உண்மை

எடுத்து சொன்ன
இளசுவிற்கு பாராட்டுக்கள்...

-குமரன்

மிக்க நன்றி குமரன்..

gankrish
10-04-2003, 06:08 AM
இளசு, நாரதர் தன்னுடைய சுட்டு விரலை என்னை நோக்கி சுட்டி காட்டி ஒரு சர்ச்சையை தூண்ட நினைத்தார். அடை தடுத்தாட்கொண்ட நண்பா நன்றி.

Narathar
10-04-2003, 06:20 AM
இளசு, நாரதர் தன்னுடைய சுட்டு விரலை என்னை நோக்கி சுட்டி காட்டி ஒரு சர்ச்சையை தூண்ட நினைத்தார். அடை தடுத்தாட்கொண்ட நண்பா நன்றி.நானா சுட்டினேன்!! நீங்களே சுட்டிக்கொண்டீர்கள்!!!
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்போல.......
இப்போ பழி மட்டும் என் மீது நாராயனா!!!

அமரன்
02-06-2008, 03:28 PM
அருமை அண்ணா...

இவர்கள்
அதிசய மனிதர்கள்.
முதுகில்
அழுக்கு மூட்டை இருந்தும்
நிமிர்ந்து நிற்கிறார்களே!

பூமகள்
02-06-2008, 04:46 PM
நம் ஒற்றை விரல்..
அடுத்தவர் நோக்கி நீட்டுகையில்..
நமது மூன்று விரல்கள்..
நம் நெஞ்சை குறி வைத்திருக்கும்...!!

இது புரிந்தும் புரியாத விநோத ஜீவிகள்..
மீண்டும் தயாராவதென்னமோ..
மீண்டும் சுட்டுவிரல் நீட்டத்தான்..!!

அழகிய படைப்பு.. வழக்கம் போலவே...!! ;)

பெரியண்ணா இந்த கவிதை எனக்கு புரிய தாமதமாகிவிட்டது.. மன்னித்துவிடுங்கள்..! ஆயினும்..கரு அருமையோ அருமை...!
பாராட்டுகள் அண்ணா.