PDA

View Full Version : அமைதியான சுகமான இடம்



Mano.G.
16-06-2011, 03:30 AM
ஒவ்வொருவருக்கும் அவரவர் வீட்டில் அமைதியான சுகமான இடம் இருக்கும் அவைகள் யாவை ???

1) பூஜை அறை
2) தொலைகாட்சி அறை
3) வரவேற்பறை
4) வாசிக்கும் அறை
5) படுக்கை அறை
6) குளியல் அறை
7) சாப்பாட்டு அறை
8) கழிப்பறை

எதுவாக இருக்கும்?

தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும்.


மனோ.ஜி

விகடன்
16-06-2011, 03:53 AM
அமைதியான இடம்; பூஜை அறை
சுகமான இடம்; கழிப்பறை

Mano.G.
16-06-2011, 04:45 AM
அட!! அட
பதில் வரிசையில முதல் பதிலையும் கடைசி பதிலையும் புடிச்சிரிக்கீங்களே.

Ravee
16-06-2011, 06:19 AM
அமைதியான இடம்; வாசிக்கும் அறை :062802sleep_prv: (குறட்டை), படுக்கை அறை :smilie_bett:

நம்ப குறட்டை சத்தத்தில் மத்தவங்க அமைதி போய்டும் .... அதை பத்தி நமக்கு என்ன ..... நமக்கு அமைதி .... ஓ. கே

சுகமான இடம்; .... கழிப்பறை .... :D

sarcharan
16-06-2011, 08:52 AM
குளிப்பும், கழிப்பும் தான் ஒரு மனிதன் உண்மையில் (தன்னோடு மட்டும்)அனுபவிக்கும் சுகம் என்று சொல்வார்கள். -இது சரீர சுகத்திற்கு பொருந்தும்...

படுக்கையறை சுகம்தான் ஆனால் மிகச்சில நேரம் மட்டும்.

ஆத்மா, மனம் பரம இன்பம் (பேரின்பம்) பெற... தனிமையில் தெய்வத்தோடு இருக்கும் எந்த அறையும்...
ஒருவர் அந்த அறையை விட்டு வெளியே வரும்போது வருவதை பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம்...

இன்ப துன்பங்கள் எதுவாக இருந்தாலும் அதை விடுத்து சஞ்சரிக்கும் அந்த சில மணித்துளிகள் - அது ஒரு ஜீவாத்மா-பரமாத்மா (கடவுளும் மனிதனும் இணையும்) பந்தம் என்று சான்றோர் சொல்வார்கள்..

Nivas.T
16-06-2011, 11:50 AM
4 மற்றும் 6 :icon_ush:

karikaalan
17-06-2011, 11:15 AM
மனோஜி.... வணக்கம்.

அமைதியான, சுகமான இடம்....

சங்கீதம் கேட்க என்று எனது வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் அறை...

செய்தித்தாள் படிக்க (!) ஏற்பட்ட கழிவறை..

===கரிகாலன்

பாரதி
17-06-2011, 03:07 PM
அண்ணா,

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெரும்பாலான அறைகளில் அமைதி இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என தோன்றுகிறது. சுகமான இடம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

இத்தனை அறைகள் கொண்ட வீட்டை அமைதியாக கட்டி முடித்தாலே சுகமாக இருக்கும் போல இருக்கிறது அண்ணா.

நாஞ்சில் த.க.ஜெய்
17-06-2011, 05:15 PM
அமைதியான இடம்; என் கனவுகளை மேம்படுத்த உதவும் வாசிக்கும் அறை
http://www.google.co.in/imgres?imgurl=http://www.hamaraforums.com/style_emoticons/default/study.gif&imgrefurl=http://www.hamaraforums.com/index.php%3Fact%3Dlegends%26amp%3BCODE%3Demoticons%26amp%3Bs%3D&usg=__5sKVIPkOwAD1W2KUkwJMxo9GYi0=&h=39&w=68&sz=5&hl=en&start=61&sig2=ia31YSSLrTnKQOUed7lNDg&zoom=1&tbnid=9Md6rOcGarEC3M:&tbnh=39&tbnw=68&ei=fov7TZugLc7LrQfgr8DWDw&prev=/search%3Fq%3Dstudy%2Bgif%26um%3D1%26hl%3Den%26sa%3DN%26biw%3D1024%26bih%3D598%26tbm%3Disch&um=1&itbs=1&iact=rc&dur=237&page=5&ndsp=15&ved=1t:429,r:7,s:61&tx=53&ty=15&biw=1024&bih=598http://www.tamilmantram.com/vb/javascript%3Cb%3E%3C/b%3E:add_smilie%28%22:study:%22,%22smid_62%22%29சுகமான இடம் .: நான் கனவுலகில் சஞ்சரிக்கும் படுக்கை அறை :smilie_bett: