PDA

View Full Version : இவன் அவனில்லையோ..?த.ஜார்ஜ்
15-06-2011, 02:26 PM
எதேச்சையாய்தான் அவனைப் பார்த்தேன். இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்த போது சாலையோரத்தில் அவன். எதிர் திசையில் போய்க்கொண்டிருந்தான். பார்த்து ரொம்ப நாளாயிற்றே. இப்போது பார்த்தும் பாராமல் போனால் நல்லாயிருக்குமா?

சற்று தூரம் கடந்து பின்தான் வண்டியை ஓரங்கட்ட முடிந்தது. பார்க்க முடிகிறதூரம்தான். திரும்பிப் பார்த்தேன். நடந்து போனவன் அருகிலிருந்த பெட்டிகடையின் முன் போய் நின்றான். கண்ணில் கறுப்பு கண்ணாடி மாட்டியிருந்தான். ஆள் புசுபுசுவென்று இருந்தான். செழிப்பாய்தாய் இருக்கிறான் போலிருக்கிறது.

பாராக்கு பார்க்கிற மாதிரி நான் நின்ற பக்கம் பார்த்தான். கவனித்திருப்பான் என்று நினைத்தேன். அவன் கண்டு கொள்ளவில்லை. மறுபுறம் திரும்பி யாரையோ எதிர்பார்க்கிற மாதிரி பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு கடிகாரத்தை பார்த்தான் மழை வருகிறதா என்ற ஆர்வத்துடன் வானத்தைப் பார்த்தான். ஒருவேளை அவன் இல்லையோ...?

நான் திரும்பி அவனைப் பார்க்காமல் வண்டியின் குவி ஆடி வழியாக கவனித்தேன். இப்போது அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனேதான். சந்தேகமில்லை.

சந்தோசத்தில் நானும் அவனை நோக்கித் திரும்பினேன். அவன் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று கைபேசியை எடுத்து காதுக்கு வைத்துக் கொண்டான். விரைவாக நடந்து அருகிருந்த சந்துக்குள் புகுந்து மறைந்து காணாமல் போனான்.

எப்போதோ என்னிடம் கடனாக வாங்கிய ஆயிரம் ரூபாயை என்னைப் போலவே அவனும் மறக்க வில்லை போலிருக்கிறது.

நாஞ்சில் த.க.ஜெய்
15-06-2011, 03:16 PM
அலைபேசிய கண்டுபிச்சாலும் கண்டுபிடிச்சாங்க எதெதுக்கு பயன்படுத்துறது பாருங்க ...அருமையான ஒருபக்க கதை ....

Ravee
16-06-2011, 05:59 AM
அலைபேசிய கண்டுபிச்சாலும் கண்டுபிடிச்சாங்க எதெதுக்கு பயன்படுத்துறது பாருங்க ...அருமையான ஒருபக்க கதை ....

அட நீங்க வேற .... இது ஜார்ஜ் அண்ணனோட சொந்த அனுபவம் ....... :lachen001:

ஜார்ஜ் அண்ணா சந்துக்குள்ள போய் அடியை குடுக்காமா விட்டானா ??? ... :lachen001:

sarcharan
16-06-2011, 09:08 AM
முதல்ல கதைய படிச்சதும் நட்பு, வாழும் நிலை பற்றியதோன்னு நெனச்சேன்.

கடைசியில் ஒரு சின்ன ஈட்டிக்காரன் பாணியில் கொண்டுபோயட்டீங்க!

கதையின் கடைசி கட்டத்தை படித்ததும் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்து வைத்தேன். :)

sarcharan
16-06-2011, 09:09 AM
அட நீங்க வேற .... இது ஜார்ஜ் அண்ணனோட சொந்த அனுபவம் ....... :lachen001:

ஜார்ஜ் அண்ணா சந்துக்குள்ள போய் அடியை குடுக்காமா விட்டானா ??? ... :lachen001:

அப்ப ஜார்ஜ் அண்ணா சந்துக்குள்ள போய் அடி வாங்குரவருன்னு சொல்ல வரீங்களா...

அவரு ரொம்ப நல்லவரு....

விகடன்
16-06-2011, 09:52 AM
கடன் வாங்கியவன் அதை ஞாபகம் வைத்திருப்பது ஆச்சரியப்படவைக்கும் விடயந்தான்.

Nivas.T
16-06-2011, 11:48 AM
கடைசிவரை அவன் மறக்காமலே இருக்கட்டும் :D

நாஞ்சில் த.க.ஜெய்
16-06-2011, 05:33 PM
அட நீங்க வேற .... இது ஜார்ஜ் அண்ணனோட சொந்த அனுபவம் ....... :lachen001:

ஜார்ஜ் அண்ணா சந்துக்குள்ள போய் அடியை குடுக்காமா விட்டானா ??? ... :lachen001:
நண்பர் ஜார்ஜ் அவர்களே நீங்கள் வந்து பதிலிட்டு உண்மை நிலையினை எடுத்தியம்ப வேண்டும் ...இல்லைஎன்றால் சன் பிச்சர் தயாரிப்பில் வெளிவரும் இத்திரைப்படம் மன்றத்து மக்களால் வெற்றிபெற்று குறைந்த பட்சம் இருபது நாட்களாவது ஓடும் என்பது உறுதி ...
:D:D:D

த.ஜார்ஜ்
16-06-2011, 05:42 PM
ஒரு ஆயிரம் ருபாய் எங்கள் நட்பை.. இப்படி சந்துக்குள் ஒடோட விரட்டுகிற.. அளவுக்கு கொண்டுவந்து விட்ட கதையை..
பின்தொடர்த்து வந்த ஜெய்,சரசரன்,ரவி,விகடன் நிவாஸ் ... நன்றி [ஒரு ஆயிரம் ருபாய் கடன் கிடைக்குமா?]

நாஞ்சில் த.க.ஜெய்
16-06-2011, 05:57 PM
மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கிறத பார்த்தா நண்பர் ரவி கூறுவதுபோல் இது ஜார்ஜ் அண்ணனின் சொந்த கதை தானோ..

கீதம்
16-06-2011, 11:05 PM
நீங்கள் நின்று நிதானித்து அவன்தானோ என்று யோசித்ததைப் போலவே அவரும் நின்று நிதானித்து யோசித்திருக்கிறார் பாருங்கள்! சரியான எத்தன்தான்! :)

பாரதி
17-06-2011, 09:05 AM
அவரும் நீங்களோ என்ற ஐயத்தில் பார்த்து விட்டு, பின்னர் நீங்கள் இல்லை என்று நடையை கட்டி இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறதே... ஏனெனில் அவர் உங்கள் நண்பரல்லவா..?:lachen001:

Ravee
17-06-2011, 10:13 AM
ஒரு ஆயிரம் ருபாய் எங்கள் நட்பை.. இப்படி சந்துக்குள் ஒடோட விரட்டுகிற.. அளவுக்கு கொண்டுவந்து விட்ட கதையை..
பின்தொடர்த்து வந்த ஜெய்,சரசரன்,ரவி,விகடன் நிவாஸ் ... நன்றி [ஒரு ஆயிரம் ருபாய் கடன் கிடைக்குமா?]:eek: :eek: :eek:................

Ravee
17-06-2011, 10:15 AM
மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கிறதா பார்த்தா நண்பர் ரவி கூறுவதுபோல் இது ஜார்ஜ் அண்ணனின் சொந்த கதை தானோ..

அதே அதேதான் ............. :lachen001:

த.ஜார்ஜ்
17-06-2011, 11:35 AM
மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கிறத பார்த்தா நண்பர் ரவி கூறுவதுபோல் இது ஜார்ஜ் அண்ணனின் சொந்த கதை தானோ..
இப்படி அவ நம்பிக்கையோடு இருக்கக் கூடாது ஜெய்.

நீங்கள் நின்று நிதானித்து அவன்தானோ என்று யோசித்ததைப் போலவே அவரும் நின்று நிதானித்து யோசித்திருக்கிறார் பாருங்கள்! சரியான எத்தன்தான்! :)
அவரும் நீங்களோ என்ற ஐயத்தில் பார்த்து விட்டு, பின்னர் நீங்கள் இல்லை என்று நடையை கட்டி இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறதே... ஏனெனில் அவர் உங்கள் நண்பரல்லவா..?:lachen001:
இருக்கலாம் பாரதி. பணம் கிடைத்தால் அவன் தந்து விடுவான்.ரொம்ப நல்லவந்தான். ஓராண்டுக்கும் மேலாக அவனுக்கு பணம் கிடைக்க வில்லை. பாவன் அவன்.என்ன செய்வான்.
அதே அதேதான் ............. :lachen001:

சந்தோசம்தான்

dellas
20-06-2011, 07:04 AM
அட, பாம்பின்கால் பாம்பறியும்..