PDA

View Full Version : இறுதியாய் ஒரு ஒப்பாரி.....Nivas.T
11-06-2011, 12:20 PM
இன்று என்னை விட்டு பிரிந்துவிட்ட என் நண்பனுக்காக இறுதியாய் ஒரு ஒப்பாரி

போய்வா நண்பனே போய்வா
என்னை மட்டும் விட்டுவிட்டு
போகத்துனிந்தவானே போய்வா
நீ போய்வா

நீ வரப்போவதில்லை என்றுணர்ந்தாலும்
அற்ப ஆசையில் சொல்கிறேன்
போய்வா நண்பனே நீ போய்வா

கண்களில் வழியும் கண்ணீரோடு
இறுதியாய் உன்னை காண முடியாமல்
கண்ட்டுண்டவன் சொல்கிறேன்
போய்வா நீ போய்வா நண்பனே

கனத்துப்போன இதயம் இங்கே
மரத்துப்போன போதிலும்
உன் நினைவுகள் நீத்துப்போகாது
என் நண்பனே நீ போய்வா

என் சுமைகளை இறக்கிவிட்டு
நீயே சுமையாகிப் போனாய்
உன்னை சுமக்க முடியாமல்
சுருங்கிக் கிடக்கிறேன் நண்பனே
போய்வா நீ போய்வா

கடல் கடந்து இருந்தாலும்
கண்ணீரை நிறுத்த முடியவில்லை
பறந்து வந்துவிட துடித்தாலும்
காலம் தடையினை எடுக்கவில்லை
நீ போய்வா நண்பனே நீ போய்வா

உன் இறுதிப் பயணத்தில் இல்லாமல் போன
இந்தப் பாவி பாடுகிறேன் உனக்காக
ஒரு பாடல் போய்வா நண்பனே
நீ போய்வா

உலகம் சொல்லித்தந்தவானே
நீ சொல்லாமல் கொள்ளாமல்
போனதேன் நண்பனே
போய்வா நீ போய்வா

துயரத்தை பகிர்ந்தவானே
துக்கத்தை துடைத்தவனே
நீயே துயரமாகி துக்கம் தந்து
போனாயே நண்பனே போய்வா நீ போய்வா

நாளை எனக்காய் நாள்வரும்
எனக்காக நீ காத்திரு
அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்
இப்பொழுது நீ போய்வா
என் நண்பனே நீ போய்வா

சிவா.ஜி
11-06-2011, 12:45 PM
நண்பருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கீதம்
11-06-2011, 01:04 PM
நட்பின் மரணமே நம்மை வேதனைக்காளாக்கும்போது நண்பனின் மரணம் பற்றி என்ன சொல்வது? நண்பனின் இனிய நினைவுகள் என்றும் உங்களுக்குத் துணையாயிருக்கட்டும், நிவாஸ்.

M.Jagadeesan
11-06-2011, 01:40 PM
நண்பனைப் பிரிந்து வாடும் நிவாஸின் கவிதை உருக்கமாக உள்ளது.

Ravee
11-06-2011, 02:40 PM
நண்பர் எந்த சூழ்நிலையில் உங்களை பிரிந்தார் நிவாஸ் .... அவரின் பிரிவின் வலியை பகிர்ந்துகொள்கிறோம் நாங்கள்

அமரன்
11-06-2011, 03:12 PM
இறப்பு யதார்த்தம் என்றாலும் அது தரும் இழப்பின் தாக்கம் அதிகம்.

கடல் கடந்தவன் இழப்பு சொல்லொணாத் துயரில் உழல விடும். கடல்கடந்தபின் இதேபோல் பல கவிதைகள் எழுதியவன் என்பதால் அதீதமாகவே உணர்கிறேன் உங்கள் தாக்கத்தை.

அமரன்
11-06-2011, 03:16 PM
நட்பின் மரணமே நம்மை வேதனைக்காளாக்கும்போது நண்பனின் மரணம் பற்றி என்ன சொல்வது? நண்பனின் இனிய நினைவுகள் என்றும் உங்களுக்குத் துணையாயிருக்கட்டும், நிவாஸ்.

அக்கா.. நட்புக்கு இறப்பில்லைக்கா.

நிரன்
11-06-2011, 07:15 PM
உடல் மறைந்தாலும், உணர்வுகள் மறையப்போவதில்லை.

கீதம்
12-06-2011, 01:27 AM
அக்கா.. நட்புக்கு இறப்பில்லைக்கா.நட்புப் பின்னலில் விழுந்த விரிசல்
மானம் போன வேதனை தரும்.


மானம் போனால் உயிர் போனமாதிரிதானே, அமரன்?:frown:

Nivas.T
12-06-2011, 09:21 AM
ஆறுதல் கூறிய அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்

Nivas.T
12-06-2011, 09:34 AM
எலும்பு புற்றுநோய் - அவனுக்கு, கடந்த இரண்டு வருடங்களாக தலைவலி, உடல்வலி , சுரம் இருந்துள்ளது, யாரிடமும் சொல்லாமலும்? அதனை ஒரு பெரிய பிரச்சனையாக எண்ணாமலும் அலட்ச்சியமாக விட்டுவிட்டான்.
இன்று எங்களை மீளா துயத்தில் ஆழ்த்திவிட்டான்.

சென்னையில் நானும் அவனும் வேலை தேடி அலையாத இடமே இல்லை எனல்லாம். ஐந்து நாட்கள் முன்பு புதிதாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்ததை அலைபேசியில் கூறி மகிழ்ச்சியாய் பேசிக்கொண்டிருந்தான்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சித்தூர் அவனது சொந்த ஊர். ஆனாலும் தமிழ் அழகாக பேசுவான். நான் இங்கு வரும்பொழுது என்னுடன் இருந்து வழியனுப்பி வைத்தவனின் இறுதி பயணத்தில் நான் இல்லாமல் போனது நான் செய்த பாவம். என் வாழ்வில் ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டேன்.

govindh
12-06-2011, 12:40 PM
ஆழ்ந்த இரங்கல்கள்...

நாஞ்சில் த.க.ஜெய்
12-06-2011, 02:59 PM
நண்பரை இழந்து வாடும் எம் நண்பருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ...

பாரதி
12-06-2011, 03:55 PM
வருந்துகிறேன் நிவாஸ்.
பிரிவின் துயரை புரிந்து கொள்ள முடிகிறது.

காலம் உங்களுக்கு ஆறுதலை வழங்கட்டும்.

நண்பர் இயற்கை அடைந்ததை நினைவூட்டும் விதமாக
உலகம் சொல்லித்தந்த வானே
துயரத்தை பகிர்ந்த வானே
என்று அமைந்திருப்பதை என்னென்று சொல்வது.

த.ஜார்ஜ்
12-06-2011, 05:08 PM
உங்கள் துயரில் பங்கு கொள்கிறேன் நிவாஸ்!

Nivas.T
14-06-2011, 09:08 AM
எனது துக்கத்தை பகிர்ந்து கொண்ட அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் என் நன்றிகள்