PDA

View Full Version : நட்பு..!!பூமகள்
11-06-2011, 01:05 AM
http://1.bp.blogspot.com/-KB5oyNqs5EM/TfK-IbdrFYI/AAAAAAAACwI/4Vr4iOKdBM4/s400/friendship.jpg (http://1.bp.blogspot.com/-KB5oyNqs5EM/TfK-IbdrFYI/AAAAAAAACwI/4Vr4iOKdBM4/s1600/friendship.jpg)


தீராது பேசி
தீண்டிய நட்பொன்று..
தீயாய் பறக்கிறாள்..
காகிதத்தை இரையாக்க....

பொழுதெல்லாம் பிரியாமல்..
விழுதாகத் தொடர்ந்தவள்..
தன் வீழ்ச்சிதனை சுமந்து
தலைகாட்ட மறுக்கின்றாள்..

நகை கொடுக்கும் அமுதவாய்க்காரி..
நெஞ்செங்கும் நெருங்கியவள்..
கல்யாணம் கண்டதும்
கல்மனம் காட்டுகிறாள்..

இருந்தாலும் நீயின்றி
ஓர் நினைவும் இல்லையடி..
வாழ்க்கைச் சுழற்சியிலே
சந்திப்போமா சொல்லடி...!!

அமரன்
11-06-2011, 11:23 AM
பூமகள்!

வாழ்க்கைச் சுழற்சியிலே
சந்திப்போமா சொல்லடி...!!


சொல்லடி இல்லாத
வாழ்க்கைதான் ஏதடி
சொல்லடி வீழாத
வாயும்தான் ஏதடி..

சொல்லடி தோழி.

வார்த்தைகள் அல்ல
வாழ்ந்து கொண்டிருக்கும்
மனவானத்'தை...!!!

நீ
சிரிப்பை அடகு வைத்த
சிற்றெறும்பாய் இருக்கக் கூடும்..

நாளை
அஞ்சாத வாசம் கொள்ள
இன்று
அஞ்ஞாத வாசம் கொண்டிருக்கக் கூடும்.

ஆறுதலான அன்பு கூட
கூறு போடும் நிலையெடுத்திருக்கக் கூடும்.

தேங்கிய வெள்ளம் கடலாகும்
கப்பல் காகிதம் தேடி
ஓடும் துணிபு கொண்டிருக்கக் கூடும்.

கூடும்.. கூடும்..
கூடும் கூடும்.
எல்லாம் கூடும்..!!!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நட்புப் பின்னலில் விழுந்த விரிசல்
மானம் போன வேதனை தரும்.

சிவா.ஜி
11-06-2011, 12:59 PM
நட்பின் விலகல்...கவிதையின் கருவாய் இருந்தாலும்...சொல்லப்பட்டவை...ஈர்க்கும்படியாய் இல்லைம்மா பூ.

தன் வீழ்ச்சிதனை, கல்யாணம் கண்டதும்....எதுவும் தெளிவாய் புரியாத காரணமாய் இருக்குமோ.

வாழ்த்துக்கள் தங்கையே.

கீதம்
11-06-2011, 01:00 PM
என்ன சொல்ல?

விரக்தியில் விழுந்த சிநேகமனம் கண்டு
வேதனை கப்பிய பூமனம் ஒன்று
நெகிழும் வரிகளில் நேசமனம் சொல்ல,
அழகிய வரிகளால் அமரமனம் தேற்ற,
மகிழ்வோடு காத்திருக்கிறேன்...
பூமனம் குளிரும் நாள் பார்த்தும்,
பூமணம் தவழும் கவி பார்த்தும்!

lolluvathiyar
11-06-2011, 01:34 PM
நட்புக்காக அழகாக எழுதபட்டிருக்கும் கவிதை பிரிவை சொல்ல வரும் கவிதைக்கு முன்பு அந்த அழகான இரன்டு குழைந்த படத்தை போட்டது கவிதைக்கு மகுடம் வச்ச மாதிரி.

கல்யாணம் கண்டதும்
கல்மனம் காட்டுகிறாள்..
அது கல்மனம் அல்ல என்பதை புரியாத நட்புதான் கல்மனம்


வாழ்க்கைச் சுழற்சியிலே
சந்திப்போமா சொல்லடி...!!
ஆம் அவள் ஒரு சுழற்ச்சி முடிந்த பிறகு சந்திக்க வருவாள் அதற்குள் நீங்களும் ஒரு வாழ்கை சுழற்ச்சியில் சிக்கிவிட வாழ்த்துகிறேன்.

Ravee
11-06-2011, 02:53 PM
தோட்டத்தில் பூச்செடி ஒன்று
மணமாலைக்கு பூ ஒன்று போக
வாடும் காம்பு செடியோடு
பூவின் பிரிவிலும் குற்றம் இல்லை
காம்பின் ஏக்கத்திலும் குற்றம் இல்லை
காலம் ஒன்றே அறியும் காரணம் தனை

எப்போதோ நான் எழுதிய வரிகள்

இறப்பதற்கு ஒரு நொடி முன்
அந்த செவிலிப்பெண் சிரித்தாள் நடப்போடு
இறக்கும் போதும் பிறந்த்து புது நட்(பு)பூ

ஒருவர் போனால் பலர் இணைவார்கள் இந்த ரயில் பயணத்தில் கவலை படாதீர்கள் பூமகள்

பூமகள்
12-06-2011, 02:31 PM
@அமர்,
கூடும் கூடுகட்டி
குயிலிசைக் கவி பாடி
பூவிதழ் விரிப்பில் ஆடி
மனம் கொள்ளும் மாண்புக்கு என்னன்பு..!! :)

@சிவாஜி,

ஹ்ம்ம்.. இது பொதுக்கவிதையில்லை.. என் மனக்கவிதை.. ஆதலால் அர்த்தம் புரியாத புதிரில் நீங்கள்.. மன்னிக்கவும் அண்ணா..

என் ஆற்றாமை கவிதை புரிய வாய்ப்பில்லை தான்..

பூமகள்
12-06-2011, 02:38 PM
விமர்சித்து ஊக்குவித்த வாத்தியார் அண்ணாவுக்கும்,

ஊக்கத்தோடு காத்திருக்கும் கீதம் அக்காவுக்கும் என் நன்றிகள்.. :)

பூமகள்
12-06-2011, 02:39 PM
அருமையான கவிதை ரவி அண்ணா..

காலச் சுழற்சியில் எத்தனை நட்புகள் வந்தாலும்.. பழைய நட்பின் மணம் தனியல்லவா??!!

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் அண்ணா. :)

M.Jagadeesan
13-06-2011, 01:22 AM
முதல் எட்டு வரிகளில் உள்ள கருத்து புரியவில்லை.

நாஞ்சில் த.க.ஜெய்
13-06-2011, 06:33 AM
ஆடினோம் பாடினோம் கூடிபேசினோம்
கவலை மறந் தோம் ...
கால ஓட்டத்தில் பிரிந்தோம் சந்திக்கும்
காலம் வரு மென்றே ...
இடம் மாறி தொலைவுகள் கூடினாலும்
நினைவுகள் பின் தொடரும் ....
புதுநட்புகள் பல நம்முள் தோன்றினாலும்
முதல்நட்பு என்றும் மாறாது ..
இந்த பிரிவு நிரந்தரமல்ல மீண்டு
மீண்டும் சந்திப் போம் ...

lenram80
13-06-2011, 01:23 PM
இந்த கவிதை படித்ததும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஞாபகம் வந்தது.

http://www.youtube.com/watch?v=KuBiwRqHkNw

Nivas.T
14-06-2011, 09:11 AM
நடப்பின் பிரிவும்
அதன் வலியும்
நான் நன்கு அறிவேன்

இதற்க்கு காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்

வலியை உணர்த்தும் கவிதை பூமகள்

sarcharan
14-06-2011, 11:00 AM
"உள்ளமட்டும் நானே உசுரகூடத்தானே... " இந்த பாடல் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருது..

வாழ்த்துக்கள் பூமகள்!

கலாசுரன்
16-06-2011, 11:41 AM
அழகு.....!!!!!

த.ஜார்ஜ்
16-06-2011, 05:33 PM
எதிர்பார்ப்பில்லாத நட்பு உடைபடுவது சகிக்க முடியாததுதான் .
நம் யூகங்களுக்கு அப்பாற்ப்பட்ட காரணங்களும் இருக்க வாய்ப்புண்டு.ஆகவே தோழி.. ஆற்றாமை அகற்று.

பூமகள்
17-06-2011, 12:38 AM
நன்றிகள் ஐயா. விளங்கும் படி எழுதாமையும் என் தவறு தான்.. என்னை அறிந்தவர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்..

நன்றிகள் ஜெய்..

@லெனின்,

வைரமுத்துவின் கவிதைகள் என்னை பாதித்தவை.. இக்கவிதை மனம் தொட்டது.. நிஜம் சொல்லியது.. ஏன் தோழிமார்களுக்கு மட்டுமே இப்படியான நிலை... ??!! தோழர்களுக்கு அமைவதில்லையே..:redface:

எனக்கு முன்பே அழகாய் அவர் சொல்லிவிட்டார்... எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள் லெனின் அண்ணா. :)

என் வலி நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களெனில் என் நட்பு புரிந்விட்டதென்று பொருள்..

நன்றிகள் நிவாஸ் அண்ணா. :)

ஹா ஹா.. என் மனம் நிறைந்த பாடல் அது எப்போதும். எத்தனை முறை கேட்டாலும் மனம் குதூகளிக்கும்.

நன்றிகள் சர்சரன் அண்ணா.

நன்றிகள் கலாசுரன்.

உண்மை தான் ஜார்ஜ் அண்ணா.. நன்றிகள்.

நானும் வாழ்க்கைச் சுழற்சியில் வீழ்ந்து காணாமல் போகப் போகிறேன்.. யாரேனும் தேடி வருகிறார்களா பார்ப்போம்.. :p:icon_ush: