PDA

View Full Version : குறைவாகப் பேசுபவளே பெண்



M.Jagadeesan
10-06-2011, 01:05 PM
ஒருசமயம் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது பெண்கள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து ஓயாமல் பேச்சொலி கேட்டுக்கொண்டே இருந்தது. கூட்டத்திலிருந்த சிலர், பெண்களை நோக்கி பேசாமல் அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக்கொண்டனர். அப்போது பண்டிதமணி அவர்கள்," பெண்மணிகள் அல்லவா? அவர்கள் ஒலித்துக் கொண்டுதான் இருப்பார்கள்"என்று பதில் சொன்னார். அதன் பிறகு பெண்கள் பேசுவதை நிறுத்தி அவருடைய பேச்சை அமைதியாகக் கேட்டனர்.

பெண் ஒருத்தி ஓயாமல் பேசினால் அவளுக்கு," வாயாடி" என்ற பட்டத்தை இந்த சமுதாயம் சூட்டிவிடும். ஆனால் ஆண் ஒருவன் எவ்வளவு நேரம் பேசினாலும் அவனுக்கு, "வாயாடன்" என்ற பட்டத்தை இந்த சமுதாயம் சூட்டுவதில்லை.

"பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல்" என்பது வெற்றிவேற்கையாகும்.

பெண்ஒருத்தி பேசில் பெரும்பூமி தான்அதிரும்
பெண்இருவர் பேசில்விழும் வான்மீன்கள்_பெண்மூவர்
பேசில் அலைசுவறும் பேதையே! பெண்பலர்தாம்
பேசில்உலகு என்னாமோ பின்.

கருத்து:பெண் ஒருத்தி பேசினால் இப்பெரிய நிலவுலகம் நடுங்கும்; பெண்மக்கள் இருவர் பேசினால் விண்மீன்கள் கீழே உதிர்ந்து விழும்; பெண்மக்கள் மூவர் பேசினாலோ கடல் நீர் வற்றிவிடும்; பெண்மக்கள் பலர் பேசத் தொடங்கிவிட்டால் இந்த உலகம் என்ன ஆகுமோ?

நீதிவெண்பா: இயற்றியவர் பெயர் தெரியவில்லை.

Nivas.T
10-06-2011, 01:17 PM
இதில் எனக்கு உடன்பாடில்லை

இதை நான் ஆணாதிக்கமாகவே கருதுகிறேன்

தவறாக நினைக்க வேண்டாம்

தாமரை
10-06-2011, 01:24 PM
குறைவாகப் பேசுவது எல்லோருக்குமே நல்லது...

ஒருவேளை எழுதியவருக்கு நிறைய மனைவிகள் இருந்திருக்கலாம் நிவாஸ்.. :sprachlos020::sprachlos020::sprachlos020:

Nivas.T
10-06-2011, 01:31 PM
குறைவாகப் பேசுவது எல்லோருக்குமே நல்லது...

ஒருவேளை எழுதியவருக்கு நிறைய மனைவிகள் இருந்திருக்கலாம் நிவாஸ்.. :sprachlos020::sprachlos020::sprachlos020:

:rolleyes:

அப்படி ஒன்னு இருக்கோ?
நாம இன்னும் அதுல இறங்கல அதாண்ணா தெரியல :icon_rollout::icon_rollout:

தாமரை
10-06-2011, 01:32 PM
:rolleyes:

அப்படி ஒன்னு இருக்கோ?
நாம இன்னும் அதுல இறங்கல அதாண்ணா தெரியல :icon_rollout::icon_rollout:

நீங்க இறங்கினா நாங்க இரங்கணும்.. :lachen001::lachen001::lachen001:

sarcharan
10-06-2011, 01:47 PM
குறைவாகப் பேசுவது எல்லோருக்குமே நல்லது...

ஒருவேளை எழுதியவருக்கு நிறைய மனைவிகள் இருந்திருக்கலாம் நிவாஸ்.. :sprachlos020::sprachlos020::sprachlos020:

சிலேடை மாதிரி இருக்கே...

Nivas.T
10-06-2011, 01:53 PM
நீங்க இறங்கினா நாங்க இரங்கணும்.. :lachen001::lachen001::lachen001:

:eek::eek::eek::eek::icon_rollout::icon_rollout::icon_rollout:

அமரன்
11-06-2011, 11:32 AM
ஆண்கள் உரத்துப் பேசுவார்கள். பெண்கள் குரல் குறைத்துப் பேசுவார்கள்.. சிலர் குரைத்துப் பேசுவதும் உண்டு. நம்ம லொல்லு வாத்தியார் நினைவுக்கு வருகிறார்.

பெண்கள் பேசுவதைக் கேட்கும் ஆசை நிராசையாகிப் போனதில் பொறுமைக்குப் பேர் போன பூமியே அதிருதாம். எல்லை இல்லாத் தூரத்திலிருந்து விண்மீன்கள் அண்மித்து வருகின்றனவாம். ஊருக்குள் புகுந்து பெண்பேச்சுக் கேட கடலே ஆர்ப்பரிக்குதாம். அலையெனப் பிறந்து ஆர்ப்பாட்டம் பண்ணுதாம். அத்தனை பெருமை மிக்க, ரசனை வழிகின்ற பேச்சாம் பெண்களுடையது.

பெண் பேச்சின் பெருமை சொல்லும் வெண்பா அருமை.

சிவா.ஜி
11-06-2011, 12:54 PM
ஆஹா....பாஸ்...எப்புடி...இப்புடி....அழகான விளக்கம். இப்படியும் இருக்கலாமே....

பகிர்வுக்கு நன்றி ஜெகதீசன்.

Ravee
11-06-2011, 03:01 PM
குறைவாகப் பேசுவது எல்லோருக்குமே நல்லது...

ஒருவேளை எழுதியவருக்கு நிறைய மனைவிகள் இருந்திருக்கலாம் நிவாஸ்.. :sprachlos020::sprachlos020::sprachlos020:

பெண்ஒருத்தி பேசில் பெரும்பூமி தான்அதிரும்

அப்போ ஒரே ஒரு மனைவி இருந்திருந்தால் இந்த ஒரு வரியுடன் முடித்திருப்பாரா அண்ணா ....

இல்லை இப்படி எழுதி இருப்பாரா ... :eek:


பெண்ஒருத்தி பேசில்
பெரும்பூமிதான் அதிரும் ,
விழும் வான்மீன்கள்... அலைசுவறும்
பேதையே இனி ...... உலகு என்னாகுமோ பின்.