PDA

View Full Version : நான் தாத்தா ஆயிட்டேன்.....

ஆதவா
10-06-2011, 04:24 AM
நேற்று அக்கா பெண்ணின் திருமண விருந்திற்குச் சென்றிருந்தேன். அப்போது ஒரு சிறுமியைக் காட்டி “இதோ பாரு தாத்தா” என்று என்னைக் காண்பித்தார்கள். நானோ சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரைச் சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன்.. உன்னைத்தான் என்றார்கள்... நான் தாத்தாவா? இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லையே.... எப்படி என்று கேட்டால், அக்காவின் அக்கா (பெரியக்கா) பேத்தியோட பெண்ணாம்..:eek::eek:... அப்படின்னா எனக்கு??? பேத்திதானே??? :eek::eek:

என்ன கொடுமைங்க இது? :confused:

அவ்வ்......

ஓவியன்
10-06-2011, 04:29 AM
வாழ்த்துகள் தாத்தா ஆதவா, கேட்க எவ்வளவு சந்தோசமாக இருக்கு. :D:D:D

நாஞ்சில் த.க.ஜெய்
10-06-2011, 04:35 AM
கல்யாணம் ஆகல ஆனா தாத்தா ஆயிட்டீங்க ..கொடுத்து வைத்தவர்தான் நீங்கள்...வாழ்த்துகள் நண்பரே !

ஆதவா
10-06-2011, 04:47 AM
வாழ்த்துகள் தாத்தா ஆதவா, கேட்க எவ்வளவு சந்தோசமாக இருக்கு. :D:D:D

கல்யாணம் ஆகல ஆனா தாத்தா ஆயிட்டீங்க ..கொடுத்து வைத்தவர்தான் நீங்கள்...வாழ்த்துகள் நண்பரே !

ரொம்பநாளைக்கு முன்னமே சித்தப்பான்னு கூப்பிட்ட பசங்களையெல்லாம் அண்ணான்னு கூப்பிடச்சொல்லி கெஞ்சினேன். சித்தப்பான்னாலே வயசானமாதிரியிருக்குமில்லையா? அதைவிடக் கொடுமை என்னன்னா, அக்காவோட பேத்திக்கு கிட்டத்தட்ட என்னோட வயசுதான்.... சொல்லமுடியாது, என்னைவிடவும் அதிகமிருக்கலாம்..>

இந்தமாதிரி நிறைய விசித்திரமான (?) உறவுகள் எனக்கு இருக்குங்க...

M.Jagadeesan
10-06-2011, 04:53 AM
தங்களைத் "தாத்தா" என்று அழைத்தால் தலையில் இடிவிழுந்தது போல இருக்குமே!

நாஞ்சில் த.க.ஜெய்
10-06-2011, 05:06 AM
இந்தமாதிரி நிறைய விசித்திரமான (?) உறவுகள் எனக்கு இருக்குங்க...
உண்மைதான் நண்பரே ! என்வயதிருக்கும் உரிமையுடன் வாடா போடா என்றழைக்கும் உறவுகள் எனக்கு சித்தப்பா அதுபோல் என் அண்ணனின் வயதையொத்த வயதிருக்கும் அவர் எனக்கு தாத்தா ...என்ன சொல்லுறது இந்த உறவுமுறைகளை பற்றி ..இந்த உறவுமுறை குழப்பம் சிறுவயதில் திருமணம் புரிதல் அல்லது மிகவும் தாமதமாக குழந்தை பிறப்பினால் நிகழ்வது ..தற்போதைய நிலையில் உங்களுக்கு இதனை தவிர்ப்பது ஒரே வழிதான் நூறடி தூரத்தில் பார்த்ததும் அப்படியே செல்ல கையில வைத்துகொண்டு அப்படியே ஹலோ ஹலோ ன்னு சொல்லிட்டு கண்ணுக்கெட்டாத தூரம் போயிட வேண்டியதுதான் ...

ஆதவா
10-06-2011, 05:25 AM

இதெல்லாம் தாத்தாக்கள் ஆரம்பித்து வைத்ததுங்க.

எங்க தாத்தாவுக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர், பாட்டிக்கு ஐந்து பேர். தாத்தாவோட தாத்தாவும் எங்க அம்மாவழி (அம்மத்தா) தாத்தாவும் பெரியப்பா, சின்னப்பா பசங்க, அவங்க ரெண்டுபேரோட அப்பா ஒருவரே... அப்பா வழி சொந்தங்கள்தான் ரொம்ப குழப்பமான சொந்தங்கள், அப்பாவோட அக்கா அதாவது என் அத்தை பையனுக்கு அப்பாவைவிடவும் வயசு ஜாஸ்தி.. என் அத்தை பேத்திக்கு அப்பறமாத்தான் நானே பிறக்கிறேன்.. தாய்மாமன் பையனான நான், அவங்களுக்கு என்ன முறைன்னே தெரியல.. தாத்தாவோட பிறந்த பெரியண்ணனுக்கு எள்ளு பேத்திதான் நான் சொன்ன,. என்னை தாத்தான்னு கூப்பிட்ட சிறுமி. அந்த சிறுமியோட அம்மா தலைமுறை வரைக்கும் உள்ள எல்லாருமே என் வயசுக்குக் கீழ இருக்கவேண்டியது.. ஆனால் இல்லை. அதற்கு ஒரே ஒரு காரணம் தான்.... அது எங்கப்பாதான் இவங்க பரம்பரைக்கே கடைசியா பிறந்த பையன்..

இன்னும் இருக்குங்க..

அன்புரசிகன்
10-06-2011, 05:32 AM
ஆதவா... உண்மை எப்போதும் கசக்கும்...

Ravee
10-06-2011, 05:46 AM
நேற்று அக்கா பெண்ணின் திருமண விருந்திற்குச் சென்றிருந்தேன். அப்போது ஒரு சிறுமியைக் காட்டி “இதோ பாரு தாத்தா” என்று என்னைக் காண்பித்தார்கள். நானோ சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரைச் சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன்.. உன்னைத்தான் என்றார்கள்... நான் தாத்தாவா? இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லையே.... எப்படி என்று கேட்டால், அக்காவின் அக்கா (பெரியக்கா) பேத்தியோட பெண்ணாம்..:eek::eek:... அப்படின்னா எனக்கு??? பேத்திதானே??? :eek::eek:

என்ன கொடுமைங்க இது? :confused:

அவ்வ்......

ஏனுங்க ஆதவா பெரியக்காவின் பேத்தியின் பொண்ணுன்னா நீங்க கொள்ளுத்தாத்தா ... முறையை மாத்திரி சொல்லுறீங்க .... :wuerg019:

அன்புரசிகன்
10-06-2011, 05:50 AM
ஏனுங்க ஆதவா பெரியக்காவின் பேத்தியின் பொண்ணுன்னா நீங்க கொள்ளுத்தாத்தா ... முறையை மாத்திரி சொல்லுறீங்க .... :wuerg019:

நீங்கள் அவருக்கு கொள்ளிவைக்கிற பிளான் போல... :lachen001:

ஆனால் அது தானே உண்மை

தாமரை
10-06-2011, 05:51 AM
எங்கப்பாவோட தாத்தாவை நான் பெரியப்பான்னு தான் கூப்பிடுவேன்.

ரவீ, நீங்க கொள்ளுதாத்தா ன்னு சொன்னது... ஆதவனுக்கு "கொல்லு" தாத்தான்னு கேட்குதாம்.

நாஞ்சில் த.க.ஜெய்
10-06-2011, 05:53 AM
எங்க தாத்தாவுக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர், பாட்டிக்கு ஐந்து பேர். தாத்தாவோட தாத்தாவும் எங்க அம்மாவழி (அம்மத்தா) தாத்தாவும் பெரியப்பா, சின்னப்பா பசங்க, அவங்க ரெண்டுபேரோட அப்பா ஒருவரே... அப்பா வழி சொந்தங்கள்தான் ரொம்ப குழப்பமான சொந்தங்கள், அப்பாவோட அக்கா அதாவது என் அத்தை பையனுக்கு அப்பாவைவிடவும் வயசு ஜாஸ்தி.. என் அத்தை பேத்திக்கு அப்பறமாத்தான் நானே பிறக்கிறேன்.. தாய்மாமன் பையனான நான், அவங்களுக்கு என்ன முறைன்னே தெரியல.. தாத்தாவோட பிறந்த பெரியண்ணனுக்கு எள்ளு பேத்திதான் நான் சொன்ன,. என்னை தாத்தான்னு கூப்பிட்ட சிறுமி. அந்த சிறுமியோட அம்மா தலைமுறை வரைக்கும் உள்ள எல்லாருமே என் வயசுக்குக் கீழ இருக்கவேண்டியது.. ஆனால் இல்லை. அதற்கு ஒரே ஒரு காரணம் தான்.... அது எங்கப்பாதான் இவங்க பரம்பரைக்கே கடைசியா பிறந்த பையன்..

இது போன்றுதான் நண்பரே தலைமுறை இடைவெளியினால் நிகழும் குழப்பங்கள் மிக அதிகம் ...தெரிந்த சொந்தகள் இவ்வளவென்றால் தெரியாத சொந்தங்கள் எவ்வளவோ என்ற சிந்தனை தோன்றுவது தவிர்க்க இயலாதது ...

Ravee
10-06-2011, 06:00 AM
எங்கப்பாவோட தாத்தாவை நான் பெரியப்பான்னு தான் கூப்பிடுவேன்.

ரவீ, நீங்க கொள்ளுதாத்தா ன்னு சொன்னது... ஆதவனுக்கு "கொல்லு" தாத்தான்னு கேட்குதாம்.

ஏன் அண்ணா அவர் கொல்லு கொல்லு ன்னு இருமுவாரோ ??? :confused:

ஆதவா
10-06-2011, 06:07 AM
ஏனுங்க ஆதவா பெரியக்காவின் பேத்தியின் பொண்ணுன்னா நீங்க கொள்ளுத்தாத்தா ... முறையை மாத்திரி சொல்லுறீங்க .... :wuerg019:

அக்காவோட பொண்ணு எனக்கு கட்டறமுறை ஆகும். அவங்க பொண்ணு அதாவது அக்காவோட பேத்திக்கு நான் சித்தப்பா (அல்லது பெரியப்பா :)) அவங்க பொண்ணு எனக்கு பேத்திதாங்க... கொள்ளுப்பேத்தி ஆக, அந்த பொண்ணுக்கு குழந்தை பிறக்கணும்!!!

அன்புரசிகன்
10-06-2011, 06:11 AM

அப்போ உங்களோட மகனை உங்க தங்கை கட்டுவாங்களா??? என்ன கொடுமை இது ஆதவா... :eek:

ஆதவா
10-06-2011, 06:13 AM
எங்கப்பாவோட தாத்தாவை நான் பெரியப்பான்னு தான் கூப்பிடுவேன்.

.

இதென்ன முறைங்க?? :confused:

ஆதவா
10-06-2011, 06:18 AM
அப்போ உங்களோட மகனை உங்க தங்கை கட்டுவாங்களா??? என்ன கொடுமை இது ஆதவா... :eek:

புரியலையே.....
பேத்தியைத் தவிர எல்லாருக்குமே என்னைவிட வயசு ஜாஸ்திங்க..

தாமரை
10-06-2011, 06:21 AM
இதென்ன முறைங்க?? :confused:

தாமரை பதில்களில் இதற்கான விளக்கம் இருக்கே!!!

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=390186&postcount=171

அன்புரசிகன்
10-06-2011, 06:33 AM
புரியலையே.....
பேத்தியைத் தவிர எல்லாருக்குமே என்னைவிட வயசு ஜாஸ்திங்க..

நானும் தமிழ்படங்களை பார்த்து குழம்பியிருக்கிறேன். மாமா மருமகளை கட்டுறது என்பது....

நீங்கள் உங்க அக்கா ஒரு கோட்டில் உள்ள உறவு.
உங்க அக்கா பொண்ணு உங்க பொண்ணு எல்லாம் அடுத்த கோடு. அதாவது நீங்க அவங்க பொண்ணுக்கு மாமா....

அந்த அக்கா பொண்ணோட பொண்ணு அடுத்த கோடு. அவுங்க பேர்த்தி முறை.

இதுல நீங்க அக்கா பொண்ணு மேல இருக்கிற ஆசையில குறுக்கால பாய்ஞ்சு முறைய கெடுக்குறீங்க.. இதுக்காக உங்கள கோர்ட்டு கேசு என்று அலைய வைக்கணும். :lachen001:

தாமரை
10-06-2011, 06:45 AM

தமிழ் நாட்டுப் பண்பாட்டின்படி....

அக்காப் பொண்ணை கல்யாணம் செய்துகொள்ளும் முதல் உரிமை தாய்மாமனுக்குத்தான்.

ஒரு கோட்டில்தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்று எங்கும் சட்டமில்லை அன்பு!!!

அன்புரசிகன்
10-06-2011, 06:56 AM
ஒரு கோட்டில்தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்று எங்கும் சட்டமில்லை அன்பு!!!
சட்டம் இல்லை தான் அண்ணா. ஆனால்............. ஏதோ ஒன்று மறுக்கிறது. அண்ணனை தங்கை திருமணம் பண்ணக்கூடாத என்று எங்கும் சட்டம் இருப்பதாக எனக்கு தெரியாது. ஆனால் ஏன் செய்வதில்லை?

சகோதரிக்கு கொடுத்த சீதனத்தை மீளப்பெறும் உத்தியாக அந்தக்காலத்தில் இதை செய்திருப்பார்கள். அதற்கு ஒரு விதியாக தாய்மாமனுக்கு தான் முதலுரிமை என்ற எழுதாத சட்டத்தை வகுத்திருப்பார்கள்.

எல்லோரும் சட்டப்படி நடப்பதில்லை. சட்டம் எல்லாவற்றையும் சரிசெய்வதில்லை. சிலவற்றை நாம் தான் பகுத்தறியவேண்டும். பிள்ளைக்கு ஒப்பானவரை திருமணம் செய்வதென்பது............ எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

நாஞ்சில் த.க.ஜெய்
10-06-2011, 07:24 AM
அக்காவோட பொண்ணு எனக்கு கட்டறமுறை ஆகும். அவங்க பொண்ணு அதாவது அக்காவோட பேத்திக்கு நான் சித்தப்பா (அல்லது பெரியப்பா :)) அவங்க பொண்ணு எனக்கு பேத்திதாங்க... கொள்ளுப்பேத்தி ஆக, அந்த பொண்ணுக்கு குழந்தை பிறக்கணும்!!!
அக்காவோட பொண்ணு உங்களுக்கு முறைபொண்ணு அதாவது நீங்க அவருக்கு தாய்மாமா..அந்த பெண்ணின் குழந்தை உங்களுக்கு பெயர்த்தி முறை தான் வரும் அதாவது நீங்க அந்த பொண்ணுக்கு தாத்தா ..அப்படி இருக்க நீங்க அந்த பொண்ணுக்கு எப்படிங்க சித்தப்பா முறை அல்லது பெரியப்பமுறை வரும் ன்னு சொல்லுறீங்க ...

அக்காப் பொண்ணை கல்யாணம் செய்துகொள்ளும் முதல் உரிமை தாய்மாமனுக்குத்தான்.

ஒரு கோட்டில்தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்று எங்கும் சட்டமில்லை அன்பு!!!
இது தவிர்க்க படவேண்டும் ...ரத்த சம்பந்தமான நெருங்கிய உறவுமுறையில் திருமண செய்வதுன்பது பிறக்கும் குழந்தைகளுக்கு அங்ககீன குறைபாட்டினை உருவாக்கும் என்று அந்த கால பெரியோர்கள் அறிந்திருப்பார்கள் ..அதனால் தான் இது போன்று எழுதபடாத சட்டங்கள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது ...

ஆதவா
10-06-2011, 08:13 AM
அக்காவோட பொண்ணு உங்களுக்கு முறைபொண்ணு அதாவது நீங்க அவருக்கு தாய்மாமா..அந்த பெண்ணின் குழந்தை உங்களுக்கு பெயர்த்தி முறை தான் வரும் அதாவது நீங்க அந்த பொண்ணுக்கு தாத்தா ..அப்படி இருக்க நீங்க அந்த பொண்ணுக்கு எப்படிங்க சித்தப்பா முறை அல்லது பெரியப்பமுறை வரும் ன்னு சொல்லுறீங்க ...

இது தவிர்க்க படவேண்டும் ...ரத்த சம்பந்தமான நெருங்கிய உறவுமுறையில் திருமண செய்வதுன்பது பிறக்கும் குழந்தைகளுக்கு அங்ககீன குறைபாட்டினை உருவாக்கும் என்று அந்த கால பெரியோர்கள் அறிந்திருப்பார்கள் ..அதனால் தான் இது போன்று எழுதபடாத சட்டங்கள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது ...

நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது என்றால்,

என் அக்காவின் பெண் எனக்கு முறைப்பெண். முறைப்பெண்ணின் மகள் என் அக்காவுக்கு பேத்தியாகிறது... அக்காவின் ஸ்தானத்தில் இருப்பதால் அக்கா பாட்டியாக இருப்பதால் அவருடைய தம்பியாகிய நான் தாத்தாவாக வாய்ப்பிருக்கிறது என்கிறீர்கள்.. இது கொஞ்சம் சிக்கலாக இருந்தாலும் அப்படி எண்ணப்படுவதில்லை. (தாமரை அண்ணா காட்டிய லிங் படிக்கவும்) ஆனால் உறவுமுறையில் அப்படி அழைக்கமாட்டார்கள்... அதேச்மயம் இன்னொன்று... வயது வித்தியாசம்...

அக்காவின் பேத்திக்கே என் வயது இருக்குமென்று சொன்னேனல்லவா?? நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், அக்காவின் பேத்தி என்னை தாத்தா என்றா அழைப்பார்கள்???

நான் முன்பு சொன்ன என் அக்காவுக்கு கிட்டத்தட்ட 60 வயதாவது இருக்கும்... அதற்கு மேலும் இருக்கலாம். என் அத்தைமார்களுக்கு (அப்பாவுடன் பிறந்தவர்கள்) குறைந்தபட்சமே 60 வயது ஆகிறது!!!

ஆதி
10-06-2011, 08:48 AM

உங்க அக்கா மகள் உங்களுக்கு முறைப்பெண்ணாக வேண்டுமானால் முதலில் நீங்கள் உங்க அக்கா பெண்ணைவிட* பெரியவராக இருக்க வேண்டும் இல்லை என்றால் முறைப்படி அவருக்கு நீங்கள் மாமா, உங்க மாமாவை(அம்மாவின் தம்பி/அண்ணன்) உங்க மகன்/மகள் தாத்தா என்று தானே கூப்பிடுவான்/ள், சித்தப்பா என்றா கூப்பிடுவான்/ள் ?

உங்க அக்கா மகளை நீங்கள் கல்யாணம் செய்தால், உங்கள் அக்கா மகள் உங்கள் அம்மாவை பாட்டி என்று கூப்பிடுவார்களா ? அத்தை என்று கூப்பிடுவார்களா ?

பாட்டி என்று தானே!, அந்த வழக்கப்படி நீங்க தாத்தா இல்லை கொள்ளுத்தாத்தா ஆகிடீங்க...

Ravee
10-06-2011, 09:06 AM
பாட்டி என்று தானே!, அந்த வழக்கப்படி நீங்க தாத்தா இல்லை கொள்ளுத்தாத்தா ஆகிடீங்க...

அட இதைத்தானே நானும் சொன்னேன் .... :confused:

தாமரை
10-06-2011, 10:05 AM
சட்டம் இல்லை தான் அண்ணா. ஆனால்............. ஏதோ ஒன்று மறுக்கிறது. அண்ணனை தங்கை திருமணம் பண்ணக்கூடாத என்று எங்கும் சட்டம் இருப்பதாக எனக்கு தெரியாது. ஆனால் ஏன் செய்வதில்லை?

சகோதரிக்கு கொடுத்த சீதனத்தை மீளப்பெறும் உத்தியாக அந்தக்காலத்தில் இதை செய்திருப்பார்கள். அதற்கு ஒரு விதியாக தாய்மாமனுக்கு தான் முதலுரிமை என்ற எழுதாத சட்டத்தை வகுத்திருப்பார்கள்.

எல்லோரும் சட்டப்படி நடப்பதில்லை. சட்டம் எல்லாவற்றையும் சரிசெய்வதில்லை. சிலவற்றை நாம் தான் பகுத்தறியவேண்டும். பிள்ளைக்கு ஒப்பானவரை திருமணம் செய்வதென்பது............ எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

இதற்கு வேறு காரணம் இருக்கிறது அன்பு.. உதாரணமாக என் தந்தையை எடுத்துக் கொள்வோம்.

அவர் தமது தாய் தந்தையரை 12 வயதிலேயே இழந்துவிட்டார். ஏழ்மையானக் குடும்பம். கூடவே ஒரு தம்பி, ஒரு தங்கை..

இவரை மணமுடித்து வாழ எந்தப் பெண் தயாராக இருப்பார் சொல்லுங்கள். கல்யாணம் என்றால் பெண்களின் கனவே அளவிட முடியாதது என்பது உங்களுக்கேத் தெரியும்.

அந்த முறையின் காரணமாகவே என் தாயை என் தந்தைக்கு மணமுடித்து வைத்தார் என் தாய் வழித் தாத்தா. இது வரதட்சணையைத் திரும்ப வாங்கும் உத்தியல்ல. உறவுகளைத் தாங்கும் உத்தி!!

எனக்கு பிள்ளைக்கு ஒப்பானவர்கள் இப்போது பேரன் பேத்தி பார்த்து இறுதி நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுடைய பேரன் பேத்திகள் எனக்கு இணையான வயதுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு வழியில் பார்த்தால் நாம் எல்லோரும் உறவுக்காரர்கள்தான். அப்படி இருந்துதான் மனித சமுதாயம் இந்த அளவிற்கு உயர்ந்து வந்துள்ளது. உறவு முறைத் திருமணத்தினால் குறையுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது என்பது அறிவியலின் பசப்புரை. அப்படிப் பார்த்தால் இடைக்காலத் தமிழகம் அங்கஹீனத் தமிழினமாக அல்லவா இருந்திருக்கும்?

பரம்பரை வியாதிகள் என்று நாம் நம்பும் பலவும் அறிவியலின் பக்க விளைவுகள். அதை மறைக்கத்தான் அறிவியல் இப்படி ஒரு பசப்புரையை பரப்பி தன்னை நல்லவனாகக் காட்டிக் கொண்டிருக்கிறது. :icon_ush::icon_ush::icon_ush:

ஏறத்தாழ எல்லோருக்கும் மத்தியில் எதாவது ஒரு உறவுமுறை இருக்கிறது. கொண்டோர் கொடுத்தோர் வகையில்.. அப்படிப் பார்க்கப் போனால் நீ எனக்கு எள்ளுதாத்தாவாக கூட இருக்கலாம். :lachen001::lachen001::lachen001:

sarcharan
10-06-2011, 11:07 AM
நேற்று அக்கா பெண்ணின் திருமண விருந்திற்குச் சென்றிருந்தேன். அப்போது ஒரு சிறுமியைக் காட்டி “இதோ பாரு தாத்தா” என்று என்னைக் காண்பித்தார்கள். நானோ சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரைச் சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன்.. உன்னைத்தான் என்றார்கள்... நான் தாத்தாவா? இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லையே.... எப்படி என்று கேட்டால், அக்காவின் அக்கா (பெரியக்கா) பேத்தியோட பெண்ணாம்..:eek::eek:... அப்படின்னா எனக்கு??? பேத்திதானே??? :eek::eek:

உடனே சின்னத்தம்பி பட கிளைமாக்ஸ் மாதிரி சந்தோசப்பட்டு குதிச்சு இருப்பீங்களே!!

அந்த பிள்ளை உங்களை "தாத்தா" (சித்தி பேக்கிரௌண்ட் வாய்ஸ்) என்று அழைத்ததா?

என்ன கொடுமைங்க இது? :confused:

அவ்வ்......

இதில் என்ன கொடுமை.. இது உண்மை அல்லவா

வாழ்த்துகள் தாத்தா ஆதவா, கேட்க எவ்வளவு சந்தோசமாக இருக்கு. :D:D:D

வாழ்த்துகள் ஆதவா தாத்தா (ஆதவாத்தா)

ஆதவா... உண்மை எப்போதும் கசக்கும்...
:lachen001:

aren
10-06-2011, 11:14 AM
விடு ஆதவா. உண்மை இப்படித்தான் பல சமயங்களில் சுடும். கண்டுகொள்ளாதீர்கள்.

Nivas.T
10-06-2011, 12:25 PM
ஏறத்தாழ எல்லோருக்கும் மத்தியில் எதாவது ஒரு உறவுமுறை இருக்கிறது. கொண்டோர் கொடுத்தோர் வகையில்.. அப்படிப் பார்க்கப் போனால் நீ எனக்கு எள்ளுதாத்தாவாக கூட இருக்கலாம். :lachen001::lachen001::lachen001:

உங்களுக்கே எள்ளுத்தாத்தா என்றால் எனக்கு எள்எள்எள்எள்ளுதாத்தாவாக இருப்பாரோ :lachen001::lachen001::lachen001::lachen001:

sarcharan
10-06-2011, 01:00 PM
இந்த நிவாசங்கிளுக்கு எப்பவுமே தமாஷ்தான்

தாமரை
10-06-2011, 01:04 PM
[QUOTE=அன்புரசிகன்;527784. பிள்ளைக்கு ஒப்பானவரை திருமணம் செய்வதென்பது............ எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.[/QUOTE]

அதுக்காக, எங்கப்பாவோட தாத்தாவோட பேத்தியோட மகளை (குறைந்த பட்சம் 40 வயது வித்தியாசம் வரும் கட்டவா முடியும்...

முன்னோர்கள் விளையாடிய விளையாட்டு.. ஒவ்வொருத்தருக்கும் இரண்டு மூன்று மனைவி பதினைந்து இருபது குழந்தைகள்... அப்படி இருக்கறப்ப, வயசுக்கேற்ற மாதிரி உறவுமுறைகளை மாற்றிக்கொள்வது இங்க சகஜம்.

ஏற்கனவே பொண்ணு கிடைக்காம சில பேர் குமுறிகிட்டு இருக்காங்க. இதில உறவு முறை சொல்லி கழிச்சா.. அப்புறம் :wuerg019::wuerg019::wuerg019:

Nivas.T
10-06-2011, 01:10 PM
இந்த நிவாசங்கிளுக்கு எப்பவுமே தமாஷ்தான்

சாரா, மாமா சொல்றீங்களா? இல்ல சித்தப்பான்னு சொல்றீங்களா? இல்ல பெரியப்பன்னு சொல்றீங்களா?:confused:

ஆங்கிலத்துல அங்கிளுக்கு இத்தன அர்த்தம் இருக்கு, :eek:

நீங்க எத சொன்னாலும் பொய்யின்னு எல்லாருக்கும் தெரியும் இருந்தாலும் ஒரு சந்தேகம் அதான் :aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

Nivas.T
10-06-2011, 01:15 PM
ஏற்கனவே பொண்ணு கிடைக்காம சில பேர் குமுறிகிட்டு இருக்காங்க. இதில உறவு முறை சொல்லி கழிச்சா.. அப்புறம் :wuerg019::wuerg019::wuerg019:

இதை நான் வழி மொழிகிறேன் :traurig001::traurig001::traurig001:

தாமரை
10-06-2011, 01:18 PM
அக்காவோட பொண்ணு எனக்கு கட்டறமுறை ஆகும். அவங்க பொண்ணு அதாவது அக்காவோட பேத்திக்கு நான் சித்தப்பா (அல்லது பெரியப்பா :)) அவங்க பொண்ணு எனக்கு பேத்திதாங்க... கொள்ளுப்பேத்தி ஆக, அந்த பொண்ணுக்கு குழந்தை பிறக்கணும்!!!

அப்போ உங்களோட மகனை உங்க தங்கை கட்டுவாங்களா??? என்ன கொடுமை இது ஆதவா... :eek:

இங்கேதான் தமிழ் சமூகத்தோட உறவு முறையைப் புரிந்து கொள்ளணும் நீங்க.

ஒரு பெண் திருமணமாகி அடுத்த வீட்டிற்குப் போனால் அவள் அந்த வீட்டுப் பெண்ணாகிறாள். ஆனால் மணமாகாத பெண் நம்ம வீட்டுப் பெண்ணாக இருக்கிறாள்.

ஆதவாவோட மகன் ஆதவாவோட தங்கையை விட அதிக வயது உள்ளவனாக இருந்தால், அவள் அத்தை அல்லது சகோதரி என்ற ஸ்தானத்தில் இருக்கிறாளே தவிர திருமண உறவு கொள்ளும் சம்மந்தி வகையறாவைச் சேருவது இல்லை.

ஆக தந்தை வழியில் உறவு என்பதால் ஆதவாவின் தங்கையை ஆதவாவின் மகன் மணந்து கொள்ள முடியாது. அத்தை - அக்கா - தங்கை - பாட்டி என்று உறவு முறை வருகிறது அல்லவா? ஆதவாவின் மகன் அவனது அத்தையை தங்கை என அழைக்கலாம். கொஞ்சம் கஷ்டமாகத் தோன்றுகிறதா? அதை கொஞ்சம் மாற்றிச் சொல்கிறேன். ஆதவாவின் மனைவி அவன் தங்கைக்கு அண்ணி. அண்ணி என்பது அம்மா ஸ்தானம். எனவே ஆதவாவின் தங்கை ஆதவாவை தந்தையாக கருத ஆதவா மகனுக்கு சகோதரி ஆகிறாள். ஆகவே ஆதவாவின் மகன் அவளை தங்கையே என அழைப்பதில் ஒரு தவறும் இல்லை.

தந்தை வழி உறவை சகோதர உறவு என்று பங்காளிகள் ஆக்குகிறோம். தாய் வழி உறவை மாமனார் வகை என்று சம்மந்திகள் ஆக்குகிறோம்.

தாய் வழி உறவு அல்லது அயலார் உறவு இவ்வகைகளிலேய் திருமண பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.

அதாவது எந்த ஒரு திருமணத்திலும் குறைந்த பட்சம் இரு தலைமுறை ஜீன் கலப்பு இருக்கும் வகையிலேயே திருமண பந்தம் உண்டாக்கப்பட்டிருக்கிறது.

அக்காவின் கணவர் வேறு தலைமுறை ஜீன் அல்லவா? அதனால் அக்காள் மகள் நேரடி உறவு அல்ல.

ஆதவா
11-06-2011, 05:11 AM
உங்க அக்கா மகள் உங்களுக்கு முறைப்பெண்ணாக வேண்டுமானால் முதலில் நீங்கள் உங்க அக்கா பெண்ணைவிட* பெரியவராக இருக்க வேண்டும் இல்லை என்றால் முறைப்படி அவருக்கு நீங்கள் மாமா, உங்க மாமாவை(அம்மாவின் தம்பி/அண்ணன்) உங்க மகன்/மகள் தாத்தா என்று தானே கூப்பிடுவான்/ள், சித்தப்பா என்றா கூப்பிடுவான்/ள் ?

உங்க அக்கா மகளை நீங்கள் கல்யாணம் செய்தால், உங்கள் அக்கா மகள் உங்கள் அம்மாவை பாட்டி என்று கூப்பிடுவார்களா ? அத்தை என்று கூப்பிடுவார்களா ?

பாட்டி என்று தானே!, அந்த வழக்கப்படி நீங்க தாத்தா இல்லை கொள்ளுத்தாத்தா ஆகிடீங்க...

ஆதி...

எங்கள் பெரியம்மாவின் பெண் (எனக்கு அக்கா) எங்கள் தாய்மாமாவையே கட்டிக் கொண்டார்கள். (தாமரை அண்ணா கவனிக்க..) அவர்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது..
இப்போது
எங்கள் பெரியம்மா அந்த குழந்தைகளுக்கு பாட்டியாகிறார்கள். ஆனால் எங்கள் பெரியம்மாவின் அம்மா அதாவது எனது பாட்டி அந்த குழந்தைகளுக்குக் கொள்ளுப் பாட்டி கிடையாது.... அதேசமயம் எங்கள் அம்மா அந்த குழந்தைகளுக்கு அத்தை ஆகிறார்கள்..

அக்காவின் பெண் திருமணத்திற்குப் போனேனென்று சொன்னேனல்லவா? அந்த பெண்ணுக்குக் குழந்தை பிறந்தால் என்னை சித்தப்பா என்றுதான் அழைக்கும். என் அக்காவை பாட்டியென்றுதான் அழைக்கும்... கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதல்லவா? நான் சொல்லிக் கொண்டிருப்பது அக்கா பேத்தியின் குழந்தை எனும் போது நான் தாத்தா முறை..

ஆனால் யாரும் என்னை தாத்தா என்று அழைக்கமாட்டார்கள்.. அந்த குழந்தை என்னை சித்தப்பா என்றுதான் அழைக்கும்!!!

தாமரை
11-06-2011, 07:00 AM
தந்தை வழி உறவையே முன்னிறுத்தும் சமூகம் இது.

உதாரணமாக..

அப்பாவின் அண்ணனுக்கு ஒரு வீட்டில் பெண் கொண்டு வந்திருப்போம். அம்மாவின் தங்கை மகளை அதே குடும்பத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருப்பார்கள். அப்பா வகையில் பார்த்தால் அது மச்சான். அம்மா வகையில் பார்த்தால் அது சகோதரன். இப்படிப்பட்ட குழப்பமான நிலைகளில் அப்பா வகை உறவையே சொல்லுகிறோம்.

உதாரணமாக என் அக்கா மகளை கட்டியவர் எனக்குச் பங்காளி வகையில் வருகிறார். ஆனால் என் அண்ணியோ அந்தக் குடும்பத்தில் பிறந்தவர். அந்த வகையில் அவர் சம்பந்தி வகையறா.. இப்போ அவரை தம்பி / மகன் என அழைப்பதா அல்லது அண்ணி வகையில் மச்சான் / மாப்பிள்ளை என்று அழைப்பதா?

இப்படி பல உறவு முறைகளில் நீங்கள் குழம்பலாம். நாங்க தெளிவா இருக்கோம்...:lachen001::lachen001::lachen001:

அமரன்
11-06-2011, 07:24 AM
ஏற்கனவே பொண்ணு கிடைக்காம சில பேர் குமுறிகிட்டு இருக்காங்க. இதில உறவு முறை சொல்லி கழிச்சா.. அப்புறம் :wuerg019::wuerg019::wuerg019:
சிவனேன்னெ இருக்கிறவரை எதுக்கு இப்போ சிக்க வைக்குறீங்க, இந்த திரியில:). குமுறிட்டு இருக்கிறவர் உடைஞ்சிடப் போறார்.

அமரன்
11-06-2011, 07:32 AM
அன்பு..

உங்கள் யோசனை ஓட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், அந்த ஓட்டம் காரணமாக இன்று அக்காப் பெண்ணைக் கட்டிக்கொள்ளும் வழக்கம் குறைந்ததன் காரணமாகவும் மணமுறிவுகள், மணக்கசப்புகள் ஏற்படுகின்றன.

துடக்கு எப்படிப் பார்க்கப்படுதோ அப்படித்தான் அக்காப் பொண்ணைக் கட்டிக்கிறதும். என் அண்ணன் வீட்டுத் துடக்கு எனக்கும் இருக்கு. ஆனால் அக்கா வீட்டுத் துடக்கு எனக்கில்லை.. இதை நாங்கள் ரத்தத் துடக்கு என்கிறோம். அறிவியல் சொல்லும் ரத்த சொந்தக் கல்யாணம் இதுக்குப் பொருந்தாது என்பதைத்தான் அப்படிச் சொன்னார்களோ எங்கள் முன்னோர்கள்?

ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி தாய்மாமன் உறவு மிகவும் புனிதமாகவும் முக்கியமானதுமாக நாம் பார்த்துப் பழகியதாலும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கேரளத்தில் எங்களை ஒத்த தாய்மாமன் உறவு உள்ளதாக நினைக்கி|றேன்.

அமரன்
11-06-2011, 07:42 AM
ரொம்பநாளைக்கு முன்னமே சித்தப்பான்னு கூப்பிட்ட பசங்களையெல்லாம் அண்ணான்னு கூப்பிடச்சொல்லி கெஞ்சினேன். சித்தப்பான்னாலே வயசானமாதிரியிருக்குமில்லையா? அதைவிடக் கொடுமை என்னன்னா, அக்காவோட பேத்திக்கு கிட்டத்தட்ட என்னோட வயசுதான்.... சொல்லமுடியாது, என்னைவிடவும் அதிகமிருக்கலாம்..>

இந்தமாதிரி நிறைய விசித்திரமான (?) உறவுகள் எனக்கு இருக்குங்க...

ஹஹ்ஹ்ஹ்ஹா..

இதுவரை என்னை எல்லாரும் அதிகபட்சம் அண்ணா என்றே அழைத்தார்கள். ஆனால் அண்மைக்காலமாக சித்தப்பா என்று அழைக்கவும் துவங்கி விட்டார்கள். மாமா என்றும் அழைக்கத் துவங்கி விட்டார்கள். அப்பத்தான் பொறி தட்டியது வயசு ஏறிக்கொண்டு போவது.

அதற்குப் பிறகு பல மாற்றங்கள். இன்னொரு தட்டில் காலடி வைத்த உணர்வலைகள். சிந்தனையிலும் செயலிலும் பக்குவம் கூடியதாகவும் கவனிப்பு..

எனவே உறவு முறை சொல்லி அழைக்கும் போது வயசைக் காட்டி, நாகரிக கருதி தடுக்காதீங்க ஆதவா.

தாத்தா என்று கூப்பிட்டாலும் தங்கமாக மின்னிடுங்க. :)

ஆதவா
11-06-2011, 07:57 AM

அமரன்.... நான் சொன்னது ஐந்தாறு வருஷங்களுக்கு முன்னமே...
எங்கள் பெரியண்ணன் மகன் என்னை சித்தப்பா என்றழைக்கவேண்டும்.. ஆனால் இப்பொழுது அண்ணன் என்றுதான் அழைக்கிறான். (கல்யாணத்திற்குச் சென்றேனென்றேனல்லவா? அந்த அக்காவின் அண்ணன் தான் இவர்.)

இப்பல்லாம் யாரும் நம்மை என்ன அழைத்தாலும் கவலைப்படுவதில்லை. என்றாலும் சித்தப்பா என்ற முறைவரை வந்து நிற்கிறது.. இனி அடுத்து பெரியப்பா, தாத்தா எல்லாம் இருக்கின்றன.

செல்வா
11-06-2011, 09:12 AM
அக்காள் மகளைத் திருமணம் செய்தால் மட்டுமே அப்பா என்று அழைக்க முடியும் இல்லை என்றால் மாமா தான். சித்தப்பா பெரியப்பா என்று அழைப்பதில்லை.
மாமன் மகனுக்கே அந்த முறை (பெரியப்பா அல்லது சித்தப்பா) வரும்.

Ravee
11-06-2011, 09:19 AM
அமரன்.... நான் சொன்னது ஐந்தாறு வருஷங்களுக்கு முன்னமே...
எங்கள் பெரியண்ணன் மகன் என்னை சித்தப்பா என்றழைக்கவேண்டும்.. ஆனால் இப்பொழுது அண்ணன் என்றுதான் அழைக்கிறான். (கல்யாணத்திற்குச் சென்றேனென்றேனல்லவா? அந்த அக்காவின் அண்ணன் தான் இவர்.)

இப்பல்லாம் யாரும் நம்மை என்ன அழைத்தாலும் கவலைப்படுவதில்லை. என்றாலும் சித்தப்பா என்ற முறைவரை வந்து நிற்கிறது.. இனி அடுத்து பெரியப்பா, தாத்தா எல்லாம் இருக்கின்றன.

டேய் ஆதவா ... டேய் ரவி என்று ஒருமையில் அழைக்காமல் எப்படியோ ஒரு முறை வைத்து அழைத்தால் சரி ...

ஆதவா
11-06-2011, 11:04 AM
அக்காள் மகளைத் திருமணம் செய்தால் மட்டுமே அப்பா என்று அழைக்க முடியும் இல்லை என்றால் மாமா தான். சித்தப்பா பெரியப்பா என்று அழைப்பதில்லை.
மாமன் மகனுக்கே அந்த முறை (பெரியப்பா அல்லது சித்தப்பா) வரும்.

???
என் அக்காவின் பேத்தி என்னை மாமா என்று அழைக்குமா??? அப்படியெனில் என் மகன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமா??
வாய்ப்பே இல்லைங்க.. அக்காவோட மகளைக் கட்டியிருப்பவர் எனக்கு பங்காளி (அல்லது சகலை) சகலையோட பையன் என் பையன் முறைதான்.. அந்த குழந்தை என்னை மாமா என்று அழைக்க வாய்ப்பே இல்லைங்க. சப்போஸ் இப்படி யோசிச்சுப் பாருங்க.. அக்கா மகளை என் தம்பி கட்டியிருந்தா?? நான் பெரியப்பா ஆகமாட்டேனா?

டேய் ஆதவா ... டேய் ரவி என்று ஒருமையில் அழைக்காமல் எப்படியோ ஒரு முறை வைத்து அழைத்தால் சரி ...

டேய் ஆதவான்னு என்னைக் கூப்பிட்டா சரி,, உங்களையும் ஏங்க கூப்பிடணும்!?? :lachen001::lachen001:

அமரன்
11-06-2011, 11:05 AM
டேய் ஆதவா ... டேய் ரவி என்று ஒருமையில் அழைக்காமல் எப்படியோ ஒரு முறை வைத்து அழைத்தால் சரி ...

டேய் வேண்டாம்கிறீங்க. ஆனால் முறைவைச்சுக் கூப்பிட வேணும்கிறீங்க.. உங்க பேரை மட்டும் சொல்ல மாட்டேன்.. மத்தபடி அது, இது என்று எல்லாப்படியும் கூப்பிடுவேன்கிறாப் போலவா:)

சிவா.ஜி
11-06-2011, 01:13 PM
இதெல்லாம் என்ன ஆதவா....நான் அஞ்சாப்பு படிக்கும்போதே தாத்தாவாகிட்டேன். என் பெரியப்பாவின் மகனின் மகனுக்கு குழந்தை பிறந்தபோது நான் அஞ்சாப்பு.....

இப்ப அந்தக் குழந்தைக்கே ஒரு குழந்தை...நான் கொள்ளுத்தாத்தா.....

ஆனா எங்க ஊர்ல உள்ள சின்னப் பசங்களுக்கு ஒரு நல்லப்(?) பழக்கம்....எவ்ளோ வயசானவங்கன்னாலும்...அண்ணான்னுதான் கூப்புடுவாங்க....அதைக் கேட்டு ஏதோ ஒரு ஆறுதல்...ஹீம்....

lolluvathiyar
11-06-2011, 01:52 PM
தாத்தாவான ஆதவாவுக்கு வாழ்த்துக்கள் சீக்கிரம் பார்ட்டிக்கு ரெடி பன்னுங்க

ஏறத்தாழ எல்லோருக்கும் மத்தியில் எதாவது ஒரு உறவுமுறை இருக்கிறது.
ஆம் சொல்ல முடியாது லிங்க் போட்டுகிட்டே போன ஆதவாவுக்கு நான் கொள்ளுபேரனாக கூட இருக்கலாம். கொள்ளு பேரனுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று எங்கோ ஒரு சட்டம் இருக்காமே ஆதவா உங்க சொத்தில் எனக்கு ஒரு பங்கு பிரிச்சு வையுங்கோ.

Ravee
11-06-2011, 02:36 PM
தாத்தாவான ஆதவாவுக்கு வாழ்த்துக்கள் சீக்கிரம் பார்ட்டிக்கு ரெடி பன்னுங்க

ஆதவாவிற்கு........... பார்ட்டிக்கு பார்ட்டியை ரெடி பண்ணனுமா ? .... இல்லை பாட்டியை ரெடி பண்ணனுமா ? ........ மன்றத்து மக்களின் விளக்கமான பதில் தேவை .... :confused:

அமரன்
11-06-2011, 03:07 PM
ஆதவாவிற்கு........... பார்ட்டிக்கு பார்ட்டியை ரெடி பண்ணனுமா ? .... இல்லை பாட்டியை ரெடி பண்ணனுமா ? ........ மன்றத்து மக்களின் விளக்கமான பதில் தேவை .... :confused:

லிஸ்டுல ஆதவா ஜூனியர். சீனியர்ஸ் கோச்சுக்கப் போறாங்க ரவீண்ணா.

Ravee
11-06-2011, 03:26 PM
லிஸ்டுல ஆதவா ஜூனியர். சீனியர்ஸ் கோச்சுக்கப் போறாங்க ரவீண்ணா.

ஆதவாவிற்கு இளநரையேறும் பருவம் ...சீனியருக்கு முன் தலையேறும் பருவம் ..... இன்னுமா காத்திருக்க சொல்லுறீங்க .... பாவங்க ஆதவா..... :rolleyes: