PDA

View Full Version : ச்ச்சீய்..!



அமரன்
09-06-2011, 07:23 PM
உன்னை
இறுகக் கட்டி இருந்தது
நீ
அணிந்திருந்த
செவ்வானச் சேலை...!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உதிர்ந்த உன் உதடு ஏந்தி
சிரித்துக் கொண்டிருந்தது
பட்டுச்சேலை..!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பட்டுக் கட்டிய நீ
நடந்து வருகையில்
இட்டுக் கட்டிப் பாடுவதாய்
எல்லாரும் சொன்னார்கள்..

எவருக்கும் தெரியவில்லை
உள்பட்டும் வெளிப்பட்டும்
முரண்பட்டு அடிபடுவதும்
வெட்கப்பட்டு
நீ அணிந்ததுவும்..

செல்வா
10-06-2011, 03:50 AM
மாப்புள்ள கல்யாணத்துக்கு தயாராயிருச்சு.....
மந்திரம் ஓத வேண்டியது தான்.

ஓவியன்
10-06-2011, 04:30 AM
மாப்புள்ள கல்யாணத்துக்கு தயாராயிருச்சு.....
மந்திரம் ஓத வேண்டியது தான்.

இதை நான் வழி மொழிகிறேன். :)

கீதம்
10-06-2011, 04:50 AM
உன்னை
இறுகக் கட்டி இருந்தது
நீ
அணிந்திருந்த
செவ்வானச் சேலை...!

உமக்கும் கொஞ்சம் இடம்விட்டு
ஒதுங்கித்தானே இருக்கிறேன்...
அப்புறமேன் என்மேல் வீண்பொறாமை?
கேட்டுச்சிரிக்கிறது செம்பட்டு!:D


உதிர்ந்த உன் உதடு ஏந்தி
சிரித்துக் கொண்டிருந்தது
பட்டுச்சேலை..!

அவள் சிந்திய சிரிப்பில்
சாபவிமோசனம் பெற்றனவோ
பட்டுப்பூச்சிகள்?:rolleyes:


பட்டுக் கட்டிய நீ
நடந்து வருகையில்
இட்டுக் கட்டிப் பாடுவதாய்
எல்லாரும் சொன்னார்கள்..

எவருக்கும் தெரியவில்லை
உள்பட்டும் வெளிப்பட்டும்
முரண்பட்டு அடிபடுவதும்
வெட்கப்பட்டு
நீ அணிந்ததுவும்..

இருபுறம் கட்டும் முரண்பட்டு கேட்டபோது
மறுபுறம் முகம் திருப்பி
முரண்பட்டு நின்றுவிட்டு...

இப்போது கவிப்பட்டுடுத்தி
அவளைக் குளிர்விக்க எண்ணமா?:)

ஆதவா
10-06-2011, 05:01 AM
ஒண்ணும் சொல்றதுக்கில்ல.....
இப்பத்திக்கி நெனப்புல இருக்கெறது சென்னையில ட்ரீட்டு மட்டுந்தான்... :D:D:D

Ravee
10-06-2011, 05:26 AM
ஒண்ணும் சொல்றதுக்கில்ல.....
இப்பத்திக்கி நெனப்புல இருக்கெறது சென்னையில ட்ரீட்டு மட்டுந்தான்... :D:D:D

இதை நான் ஆமோதிக்கிறேன் :lachen001:

Nivas.T
10-06-2011, 05:54 AM
இதைப் பாக்கும்போது அமரன் சென்னைக்கு வருவதற்கு ஏதோ ஒரு வலிமையானம காரணம் இருக்கும் போல:icon_hmm::icon_hmm:

டாய் படித்தொர பாண்டி இவரு போற பக்கமெல்லாம் ஒரு ஆளப்போடு நகைக்கடைய ஈசியா எழுதி வங்கிடலாம்டா :D:D:D

Nivas.T
10-06-2011, 06:01 AM
ஒண்ணும் சொல்றதுக்கில்ல.....
இப்பத்திக்கி நெனப்புல இருக்கெறது சென்னையில ட்ரீட்டு மட்டுந்தான்... :D:D:D


இதை நான் ஆமோதிக்கிறேன் :lachen001:

நீங்கள் எதை சாப்பிட்டாலும் அது உயிருடன் ஆகக் கடவதாக என்று சபிக்கிறேன் :sauer028::sauer028::sauer028::sauer028::sauer028:

நாஞ்சில் த.க.ஜெய்
10-06-2011, 06:02 AM
அருமையான கவிதையின் வரிகள் ...தொடருங்கள் நண்பரே...

aren
10-06-2011, 11:33 AM
நடக்கட்டும் நடக்கட்டும், ஒரு காலத்தில் நம்ம ஓவியனும் இப்படித்தான் புலம்பிக்கிட்டு இருந்தாரு. இப்போ சத்தத்தையே காணோம்.

Ravee
10-06-2011, 11:49 AM
நீங்கள் எதை சாப்பிட்டாலும் அது உயிருடன் ஆகக் கடவதாக என்று சபிக்கிறேன் :sauer028::sauer028::sauer028::sauer028::sauer028:

அப்படின்னா சாப்பிட்ட பாவம் வராதுன்னு சொல்லுங்க ... :lachen001: :D :lachen001:

Nivas.T
10-06-2011, 11:57 AM
அப்படின்னா சாப்பிட்ட பாவம் வராதுன்னு சொல்லுங்க ... :lachen001: :D :lachen001:
:sauer028::sauer028:
இம்ஹும் எதுக்கும் மசியிரமதிரி தெரியல
:eek:
இம் எத்தன கோழி சகப்போகுதோ? :eek::eek::icon_ush::icon_ush:

நான் இதில் இல்லாததால் இவற்றை கொலைகளாகவே கருதுமாறு தாழ்மையுடம் கேட்டுக்கொள்கிறேன் யுவராணர் :D:D:D

தாமரை
10-06-2011, 12:06 PM
பட்டுத் திருந்தினாத்தான் உண்டு:D:D:D

கீதம்
10-06-2011, 12:11 PM
பட்டதைப் பட்டுனு சொல்லிட்டீங்க.:D

தாமரை
10-06-2011, 01:00 PM
பட்டதைப் பட்டுனு சொல்லிட்டீங்க.:D

கட்டப் போறவர் பட்டுதானே ஆகணும்..:lachen001::lachen001::lachen001:

செல்வா
11-06-2011, 09:02 AM
கட்டப் போறவர் பட்டுதானே ஆகணும்..:lachen001::lachen001::lachen001:

கட்டுப்பட்டுதானே?

கட்டுப் போட்டுனு ரவியண்ணா பின்னாலிருந்து குரல் குடுக்கிறார் பாருங்க...:lachen001:

ஓவியன்
11-06-2011, 09:37 AM
கட்டப் போறவர் பட்டுதானே ஆகணும்..:lachen001::lachen001::lachen001:

அதனாலேதான் அன்னைக்கு `பட்டு` `கட்டு`வாங்களோ, சிம்போலிக்கா.... :confused:

Nivas.T
11-06-2011, 09:41 AM
பட்டுத் திருந்தினாத்தான் உண்டு:D:D:D


பட்டதைப் பட்டுனு சொல்லிட்டீங்க.:D


கட்டப் போறவர் பட்டுதானே ஆகணும்..:lachen001::lachen001::lachen001:


கட்டுப்பட்டுதானே?

கட்டுப் போட்டுனு ரவியண்ணா பின்னாலிருந்து குரல் குடுக்கிறார் பாருங்க...:lachen001:


அதனாலேதான் அன்னைக்கு `பட்டு` `கட்டு`வாங்களோ, சிம்போலிக்கா.... :confused:

:icon_rollout::icon_rollout::eek::eek::eek::confused::confused::confused:

Ravee
11-06-2011, 09:57 AM
பட்டுத் திருந்தினாத்தான் உண்டு:D:D:D

பட்டு திருந்துறதால அமருக்கும் மற்றவர்களுக்கும் என்ன லாபம் ஒண்ணும் புரியலியே .... :confused: ........... :D

அமரன்
11-06-2011, 10:59 AM

உமக்கும் கொஞ்சம் இடம்விட்டு
ஒதுங்கித்தானே இருக்கிறேன்...
அப்புறமேன் என்மேல் வீண்பொறாமை?
கேட்டுச்சிரிக்கிறது செம்பட்டு!:D
ஓ..
இதனால் தான் சொல்கிறார்களோ
கையளவு மனசு என்று:)




இருபுறம் கட்டும் முரண்பட்டு கேட்டபோது
மறுபுறம் முகம் திருப்பி
முரண்பட்டு நின்றுவிட்டு...

இப்போது கவிப்பட்டுடுத்தி
அவளைக் குளிர்விக்க எண்ணமா?:)

கவிதை கேட்டேன்
சிணுங்கல் கொடுத்தாள்
சிணுங்கல் கேட்டால்
என்னதான் கொடுப்பாள்..?

அமரன்
11-06-2011, 11:00 AM
ஏதோ.. கொஞ்ச நாளைக்கு மன்றப்பொழுது இனிதே கழியட்டும் எனக் கவிதை எழுதினால் ஆளாளுக்கு தாம் நினைச்சபடி கட்டுறாங்களே வீடு!!!!!

கீதம்
11-06-2011, 11:26 AM
சொந்தக் காசில் வாங்கிய பட்டென்றால் இப்படி கவிதை வருமா என்று தெரியவில்லை. பாட்டுதான் கிடைக்கும்.:frown:

govindh
11-06-2011, 01:03 PM
ஓர் இன்முகப் பட்டு....
உங்கள் இதயம் தொட்டு...

உருவான... கவிப் பட்டு...
நல்ல அழகுக் கட்டு...

தொடரட்டும் உங்கள் கவிப் பாட்டு...!

சிவா.ஜி
11-06-2011, 01:04 PM
பட்டுக்குப் பாட்டா.....கட்டுக்குப் பாட்டா...

முரண்பட்டு, முரண்பட்டுக்
காதல் அரண் கட்டும் காலம்
கனிகிறதோ....

அசத்துங்க பாஸ்.

lolluvathiyar
11-06-2011, 01:40 PM
கவிதை நல்லா இருக்கு சின்ன கவிதைதான் அதுக்கு அனைவருமே ப*ட்டு பட்டு சின்னதா பன்பட்டு பின்னூட்டும் போட்டிருக்காங்க. ரசிக்கும் படி இருந்துச்சு.
ஐயா அமரன் அவர்களே எனக்கு ஒரே வரி மட்டும் புரியல*

உள்பட்டும் வெளிப்பட்டும்
முரண்பட்டு அடிபடுவதும்
பட்டுல உள்பட்டு வெளிபட்டுனு ஏதாச்சும் இருக்கா எனக்கு தெரியல யாராச்சும் விளக்குங்கோ

இந்த பட்டு கவிதைக்கு
நான் வந்ததோ லேட்டு
ஆனாலும் தயங்காம சட்டுபுட்டு
தருகிறேன் ஒரு பாராட்டு

தாமரை
13-06-2011, 05:27 AM
எவருக்கும் தெரியவில்லை
உள்பட்டும் வெளிப்பட்டும்
முரண்பட்டு அடிபடுவதும்
வெட்கப்பட்டு
நீ அணிந்ததுவும்..


சேலை கட்டும் பொழுது இரண்டு சுற்றுகள் வரும் இல்லையா?

இதில் உள்சுற்றில் இருப்பதா அல்லது வெளிச்சுற்றில் இருப்பதா என்று சேலையின் இரு முனைகளும் முரண்பட்டனவாம்..

அதாவது அண்ணே, அந்தப் பொண்ணுக்கு சேலை கட்டத் தெரியாது. :lachen001::lachen001::lachen001: மாத்தி மாத்தி சுற்றிக் கொள்கிறாள்

அதனால அவள் மாற்றி மாற்றி சேலையைக் கட்டத் தெரியாம முழிக்க...

நம்ம தலைவர் கட்ட உதவறார்.

அதனால்தான் அந்தப் பெண் நாணத்தோடு சேலையை அணிகிறாள்.

எவருக்கும் தெரியலை என்பதுதான் பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் இருண்டு விடும் என்கிற கதை..


இதைப் பத்தியெல்லாம் விளக்கமாச் சொல்லணும்னா இந்தத் திரியே பண்பட்டவர் பகுதிக்குப் போய்விடும்.

தாமரை
13-06-2011, 05:37 AM
கட்டுப்பட்டுதானே?

கட்டுப் போட்டுனு ரவியண்ணா பின்னாலிருந்து குரல் குடுக்கிறார் பாருங்க...:lachen001:




பட்டு திருந்துறதால அமருக்கும் மற்றவர்களுக்கும் என்ன லாபம் ஒண்ணும் புரியலியே .... :confused: ........... :D

காசு மிச்சம் இல்லையா?

Ravee
13-06-2011, 05:58 AM
காசு மிச்சம் இல்லையா?


அட காசே இல்லை ....... அப்புறம் எங்க மிச்சம் சொச்சம் எல்லாம் ........... இவங்க பட்டு பட்டுன்னு பேசினாலே எங்க இதயம் எல்லாம் பட்டு பட்டுன்னு பட்டுப்போகுது ...... :icon_wacko:

பழனியாண்டவரே துணை ............ :innocent0002:

தாமரை
13-06-2011, 06:20 AM
உன்னை
இறுகக் கட்டி இருந்தது
நீ
அணிந்திருந்த
செவ்வானச் சேலை...!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உதிர்ந்த உன் உதடு ஏந்தி
சிரித்துக் கொண்டிருந்தது
பட்டுச்சேலை..!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பட்டுக் கட்டிய நீ
நடந்து வருகையில்
இட்டுக் கட்டிப் பாடுவதாய்
எல்லாரும் சொன்னார்கள்..

எவருக்கும் தெரியவில்லை
உள்பட்டும் வெளிப்பட்டும்
முரண்பட்டு அடிபடுவதும்
வெட்கப்பட்டு
நீ அணிந்ததுவும்..

அமரன் சேலை கட்டி விட்டார் என்பதற்கான ஆதாரங்கள்


நீ
அணிந்திருந்த
செவ்வானச் சேலை.

வானம் சிவந்திருந்தது. அதையே அவள் சேலையாய் உடுத்தி இருந்தால்.. வானம் ஏன் நாணிச் சிவந்தது எனப் புரியுதா?


உதிர்ந்த உன் உதடு ஏந்தி
சிரித்துக் கொண்டிருந்தது
பட்டுச்சேலை..!

சேலை உடுத்தும் பொழுது ஒரு முனையை வாயில் கவ்விக் கொள்வார்கள் தரையில் புரளாமல் இருக்க.. இப்ப புரியுதா எப்படி சேலை உதடுகளை எப்படிச் சுமந்தன என்று?...

பட்டுக் கட்டிய நீ
நடந்து வருகையில்
இட்டுக் கட்டிப் பாடுவதாய்
எல்லாரும் சொன்னார்கள்..
எவருக்கும் தெரியவில்லை
உள்பட்டும் வெளிப்பட்டும்
முரண்பட்டு அடிபடுவதும்
வெட்கப்பட்டு
நீ அணிந்ததுவும்..

கொசுவம் இருக்கே கொசுவம்.. அதை விசிறி மடிப்பாய் மடித்து இருப்பார்கள். அவள் நடக்கையில் அந்த விசிறி மடிப்பு இருக்கே அது உள்ளே சென்று அவள் கால்களின் படும்.. பின்னாலே வெளியே வந்து பெருமையாய் சிரிக்கும். இப்படி உள்ளே வெளியே ஆடும் சேலைக் கொசுவம் சரசரக்கும் அல்லவா.. அது அந்த மடிப்புகளுக்கு இடையேயான சண்டையாம்.


அதாவது பட்டுச் சேலை சரசரக்க நடந்து வரும் அவளைக் கண்டவர்களுக்கு அவளைக் காண்பவர்களுக்கு

இந்தப் பிண்ணனிகள் எதுவும் தெரியாததால், அமரன் பாடும் இந்தக் கவிதை இட்டு கட்டிப் பாடுவது போலத் தெரிகிறதாம்.

தாமரை
13-06-2011, 06:38 AM
அட காசே இல்லை ....... அப்புறம் எங்க மிச்சம் சொச்சம் எல்லாம் ........... இவங்க பட்டு பட்டுன்னு பேசினாலே எங்க இதயம் எல்லாம் பட்டு பட்டுன்னு பட்டுப்போகுது ...... :icon_wacko:

பழனியாண்டவரே துணை ............ :innocent0002:

நாம் கொஞ்சம் விலைஉயர்ந்த உடை அணிந்தால் உடனே பக்கத்தில் இருக்கிறவர் கடன் கேட்டுடுவாரோன்னு பயமா இருக்கும்.. அவர்களுக்கு அந்தப் பயம் இல்லை. அதான்..

பூமகள்
13-06-2011, 06:58 AM
செவ்வானம் சேலை கட்டி
வந்தது வீதியிலே... - பாடல் நினைவில் வருகிறது..:cool::mini023:

ஒன்று அமரர் பாடுவதாகக் கற்பனை பண்ணினாலும்.. அவரோடு ஆடும் அடுத்த நண்பர் யாரப்பா??!! எண்ணிக்கை கூடியிருப்பதால் கணிப்பதில் குழப்பம்... ;)

கவிச் சேலையில் மனம் லயிக்க..
அர்த்தப் போர்வை விலக்கியது ஐயப்பாடுகளை..


வேறென்ன நான் சொல்ல.. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.. :)

நாஞ்சில் த.க.ஜெய்
13-06-2011, 07:40 AM
ஒன்று அமரர் பாடுவதாகக் கற்பனை பண்ணினாலும்.. அவரோடு ஆடும் அடுத்த நண்பர் யாரப்பா??!! எண்ணிக்கை கூடியிருப்பதால் கணிப்பதில் குழப்பம்... ;)
தாமரை அங்கிளா இருக்குமோ?:confused::confused::confused:

தாமரை
13-06-2011, 08:11 AM
சொந்தக் காசில் வாங்கிய பட்டென்றால் இப்படி கவிதை வருமா என்று தெரியவில்லை. பாட்டுதான் கிடைக்கும்.:frown:

சொந்தக்காசில் வாங்கிக் கொடுக்க ஆசைதான். ஆனால் சொந்தமா அச்சடிச்சா போலீஸ் புடிச்சிக்கிறாங்களே...!!!:rolleyes::rolleyes::rolleyes:

கீதம்
13-06-2011, 08:46 AM
சொந்தக்காசில் வாங்கிக் கொடுக்க ஆசைதான். ஆனால் சொந்தமா அச்சடிச்சா போலீஸ் புடிச்சிக்கிறாங்களே...!!!:rolleyes::rolleyes::rolleyes:

இப்படிப் பேசிப் பேசியேதான் அண்ணியை ஏமாத்துறீங்க போல இருக்கு.:)

தாமரை
13-06-2011, 09:09 AM
சொந்தக் காசில் வாங்கிய பட்டென்றால் இப்படி கவிதை வருமா என்று தெரியவில்லை. பாட்டுதான் கிடைக்கும்.:frown:


இப்படிப் பேசிப் பேசியேதான் அண்ணியை ஏமாத்துறீங்க போல இருக்கு.:)

இப்படிப் பேசத் தெரியாம யாரோ முழிச்சிகிட்டு இருக்காங்க போல.. :eek::eek::eek:

Ravee
13-06-2011, 09:11 AM
அமரன் சேலை கட்டி விட்டார் என்பதற்கான ஆதாரங்கள்


நீ
அணிந்திருந்த
செவ்வானச் சேலை.

வானம் சிவந்திருந்தது. அதையே அவள் சேலையாய் உடுத்தி இருந்தால்.. வானம் ஏன் நாணிச் சிவந்தது எனப் புரியுதா?


உதிர்ந்த உன் உதடு ஏந்தி
சிரித்துக் கொண்டிருந்தது
பட்டுச்சேலை..!

சேலை உடுத்தும் பொழுது ஒரு முனையை வாயில் கவ்விக் கொள்வார்கள் தரையில் புரளாமல் இருக்க.. இப்ப புரியுதா எப்படி சேலை உதடுகளை எப்படிச் சுமந்தன என்று?...

பட்டுக் கட்டிய நீ
நடந்து வருகையில்
இட்டுக் கட்டிப் பாடுவதாய்
எல்லாரும் சொன்னார்கள்..
எவருக்கும் தெரியவில்லை
உள்பட்டும் வெளிப்பட்டும்
முரண்பட்டு அடிபடுவதும்
வெட்கப்பட்டு
நீ அணிந்ததுவும்..

கொசுவம் இருக்கே கொசுவம்.. அதை விசிறி மடிப்பாய் மடித்து இருப்பார்கள். அவள் நடக்கையில் அந்த விசிறி மடிப்பு இருக்கே அது உள்ளே சென்று அவள் கால்களின் படும்.. பின்னாலே வெளியே வந்து பெருமையாய் சிரிக்கும். இப்படி உள்ளே வெளியே ஆடும் சேலைக் கொசுவம் சரசரக்கும் அல்லவா.. அது அந்த மடிப்புகளுக்கு இடையேயான சண்டையாம்.


அதாவது பட்டுச் சேலை சரசரக்க நடந்து வரும் அவளைக் கண்டவர்களுக்கு அவளைக் காண்பவர்களுக்கு

இந்தப் பிண்ணனிகள் எதுவும் தெரியாததால், அமரன் பாடும் இந்தக் கவிதை இட்டு கட்டிப் பாடுவது போலத் தெரிகிறதாம்.

ம்ம் பட்டுக்கட்டி ,அதற்கொரு பாட்டுக்கட்டி , பின்னர் அதற்கு ஒரு மெட்டுக்கட்டி இப்போது இட்டுக்கட்டி பாடுகிறீர்கள் ..... நடத்துங்கள் நடத்துங்கள்.....:lachen001:

கீதம்
13-06-2011, 09:24 AM
இப்படிப் பேசத் தெரியாம யாரோ முழிச்சிகிட்டு இருக்காங்க போல.. :eek::eek::eek:

அதான் முன்பே சொல்லிட்டேனே.... கவிதை வராது. பாட்டுதான் கிடைக்கும்னு. :)

தாமரை
13-06-2011, 10:05 AM
சொந்தக் காசில் வாங்கிய பட்டென்றால் இப்படி கவிதை வருமா என்று தெரியவில்லை. பாட்டுதான் கிடைக்கும்.:frown:


அதான் முன்பே சொல்லிட்டேனே.... கவிதை வராது. பாட்டுதான் கிடைக்கும்னு. :)

மாமனார் நமக்குச் சொந்தம் தானே..

அப்ப அவர் காசு.. நம்ம சொந்தக் காசுதானே!!!:D:D:D

அப்பக் கவிதை வருதில்ல..

கீதம்
13-06-2011, 10:20 AM
மாமனார் நமக்குச் சொந்தம் தானே..

அப்ப அவர் காசு.. நம்ம சொந்தக் காசுதானே!!!:D:D:D

அப்பக் கவிதை வருதில்ல..

காலம் முழுக்க இவர் கவிபாட

காஞ்சிப்பட்டு மாமனார் உபயம்!:icon_b:

கடைசியில் காசித்துண்டே அவருக்கு அபயம்!:icon_p:

தாமரை
13-06-2011, 10:35 AM
காலம் முழுக்க இவர் கவிபாட

காஞ்சிப்பட்டு மாமனார் உபயம்!:icon_b:

கடைசியில் காசித்துண்டே அவருக்கு அபயம்!:icon_p:

இல்லாட்டி காசித்துண்டு நமக்கு அபயம் ஆகிடுமே...



இப்படிப் பேசிப் பேசியேதான் அண்ணியை ஏமாத்துறீங்க போல இருக்கு.:)

மது உரைக்கு மயங்கி நின்றவர்
கஞ்சிக்கும் காசி(சு)க்கும் மாறுவரோ?

தேனொழுகும் பேச்சில் மயங்கியவர் காஞ்சிப் பட்டிற்காகவும், காசு பணத்திற்காகவும் மாறிவிடுவார்களா என்ன?

மதுரை மீனாட்சியை வணங்கிய மக்கள், காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி என வேறு எந்த தெய்வத்தையும் தொழ மாட்டார்கள்

அரசியல்வாதிக்கு மக்களை தேனொழுகி பேசி மயக்கத் தெரிய வேண்டும். தன் தொண்டர்களை ஒரு விதப் போதையில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் சோற்றிற்காகவோ அல்லது காசுக்காகவோ விலை போக மாட்டார்கள். தலைவனின் பேச்சுத் திறமை கட்சியின் வலிமை..

தாமரை
14-06-2011, 04:20 AM
ஆமாம், அமரன் இதனைத் தொடர்கவிதைகளில் போட வேண்டிய அவசியம் என்ன?

இன்னும் தொடரும் படலம் முடியலையோ?

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=311371#post311371

கலைவேந்தன்
10-08-2012, 07:10 AM
ச்சீய்... இந்த கவிதை ரொம்ப அழகா இருக்கு..

கலைவேந்தன்
10-08-2012, 07:11 AM
ச்சீய்... இந்த கவிதை ரொம்ப அழகா இருக்கு..