PDA

View Full Version : கண்ணுக்கு அணிகலன்



M.Jagadeesan
09-06-2011, 02:07 PM
மீனாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துகொண்டு இருந்தது. மீனா தன் கண்களைக் குளிர்ந்த நீரில் கழுவினாள். அப்பொழுதும் கண்ணீர் வடிவது நிற்கவில்லை. தன் கண்களை நோக்கி மீனா,

" என் அருமைக் கண்களே! ஏன் அழுதுகொண்டு இருக்கிறீர்கள்? கண்களில் தூசு ஏதும் விழுந்துவிட்டதா?" என்று கேட்டாள்.

"மீனா! ஏன் உனக்கு இந்த ஓரவஞ்சனை? நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களை மட்டும் ஏன் ஒதுக்குகிறாய்? கைகளுக்கு வளையல்களைப் பூட்டிக்கொண்டாய்; கால்களுக்கு கொலுசுகளை மாட்டிக்கொண்டாய்; இடுப்பிலே ஒட்டியாணம் அணிந்துகொண்டாய்; கால்விரல்களில் மெட்டி அணிந்துகொண்டாய்; காதிலே கம்மல்; முக்கிலே வைரமூக்குத்தி; நெற்றியிலே நெற்றிச்சுட்டி; சடையிலே ஜடைபில்லை என்றெல்லாம் அணிந்துகொண்ட நீ! கண்களில் மட்டும் எந்த ஆபரணமும் அணிந்துகொள்ளாமல் இருப்பது நியாயமாகுமா?"

இதைக்கேட்ட மீனா, கடகடவென்று சிரித்தாள்." இதுதான் உங்கள் கோபத்திற்குக் காரணமா? என் அருமைக் கண்களே! யாராவது அழகுக்கு அழகு செய்வார்களா? இயற்கையிலேயே அழகாக இருக்கும் உங்களுக்கு ஆபரணம் எதற்கு? மேலும் ஆபரணத்தை அணிந்துகொண்டால், கண்களே! நீங்கள் எவ்வாறு திறக்க இயலும்? ஐயன் திருவள்ளுவர்,

"கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்" என்று கூறியிருப்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.இரக்கத்தோடு பார்க்கின்ற பார்வைதான் கண்ணுக்கு அழகு! இதை நீங்கள் மறந்துவிடவேண்டாம்.என்னதான் பிற உறுப்புகள் நகைகளை அணிந்து மினுக்கினாலும், அவைகளைக் கண்டு ரசிப்பது கண்கள்தானே! அழகான மனைவியொருத்தி அங்கமெல்லாம் நகைகளை அணிந்திருந்தாலும், அவளுடைய கணவன் குருடனாக இருந்தால், அதனால் அவளுக்கு என்ன பயன்?

"ஆடகப் பொன்னால் அணங்கை அலங்கரித்து என்னபயன்? அந்தகனே நாயகனானால்!"
என்ற இரட்டைப் புலவர்களின் பாடலை நீ கேட்டதில்லையா? பொன் அணிகளாலே தம்மை அலங்கரித்துக் கொள்ளும் அரசர்கள், அதனை அணியாத அறிஞர்களுக்கு ஒப்பாகார். இதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்!' என்றாள் மீனா.

இதைக்கேட்ட கண்கள் அமைதி அடைந்தன. கண்களில் நீர் வடிவது நின்றது.

பொன்அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம் மற்றொவ்வார்_ மின்னும்அணி
பூணும் பிறஉறுப்புப் பொன்னே! அதுபுனையாக்
காணும்கண் ஒக்குமோ? காண்.

நன்னெறி: சிவப்பிரகாசர்.

நாஞ்சில் த.க.ஜெய்
09-06-2011, 02:17 PM
கண்கள் கேட்கும் கேள்விகளாக அதன் முக்கியத்துவம் பற்றி
புலவர்களின் மேற்கோளுடன் கூறும் கூறும் பதிவு ....அருமை

M.Jagadeesan
09-06-2011, 02:19 PM
நன்றி ஜெய்!!

sarcharan
09-06-2011, 03:40 PM
அதான் கண்ணை கண்மணி என்கின்றோமா?

M.Jagadeesan
09-06-2011, 03:45 PM
மனித உடலிலேயே மிகவும் மதிப்புமிக்க உறுப்பு கண்கள்தான்.

அமரன்
09-06-2011, 07:43 PM
இந்தப் பதிவினூடு கண்களின் மேன்மை மட்டும் தெரியவில்லை..
தம் மேன்மை அறியாமல் தாழ்மைக்கு தாள்பணிந்து நிற்போரின் நிலையும் தெரிகிறது.

நல்ல பதிவு.

M.Jagadeesan
10-06-2011, 12:53 AM
நன்றி அமரன்!

கீதம்
10-06-2011, 02:58 AM
நயனங்களின் மேன்மை தாங்கி, நயமிக்கக் கருத்தேந்திய பாடல்!

பாடலை விளக்கிய விதம் அருமை. பாராட்டுகள் ஐயா.

aren
10-06-2011, 03:02 AM
கண்ணுக்கு மை அழகு என்கிறார்களே.

இப்போ ஐப்ரோ அப்படி இப்படி என்று பல வகையான விஷயங்கள் வந்துவிட்டனவே.