PDA

View Full Version : பொழுது போகவில்லையா ??



ஆதி
09-06-2011, 06:53 AM
பொழுது போகவில்லையா ??

பிரச்சனையில்லை..

தங்களின் அலை பேசியை எடுத்து நான் சொல்லும் குறுஞ்செய்தியை தட்டுங்கள்..

லவ் யூ டூ...

இதை உங்கள் மனைவிக்கு அனுப்பி வையுங்கள்...

உங்கள் பொழுது சும்மா குதுகலமா கழியும்...

தாமரை
09-06-2011, 07:14 AM
பொழுது போகவில்லையா ??

பிரச்சனையில்லை..

தங்களின் அலை பேசியை எடுத்து நான் சொல்லும் குறுஞ்செய்தியை தட்டுங்கள்..

லவ் யூ டூ...

இதை உங்கள் மனைவிக்கு அனுப்பி வையுங்கள்...

உங்கள் பொழுது சும்மா குதுகலமா கழியும்...


என்னய்யா பாவம் பண்ணினாங்க நம்ம மக்கள்..

லவ் யூ டூ (Love you two) என்றால்

1. உங்க ரெண்டு பேரையும் நேசிக்கிறேன் என்று அர்த்தம். யார் அந்த ரெண்டாவது ஆள்? என்று கேட்டு பின்னிட மாட்டாங்களா?

லவ் யூ டூ (Love you too) என்றால்

உன்னையும் காதலிக்கிறேன் என்று அர்த்தம்... அப்படின்னா இன்னும் யார் யாரைக் காதலிக்கிறீங்க என்று குதறிட மாட்டாங்களா?

லவ் யூ டு (Love you to)

அப்படின்னா என்னத்தை எதிர்பார்க்கறீங்க என்று காதைத்திருகிறுவாங்க..

லவ் யூ டு (Love you do )

என்றால் இன்னும் மோசம்.. இதுவரை இந்தாளை கட்டிகிட்டு என்ன பிரயோசனம் என புதுசா யாரையாவது லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா?


அதனால அதிக வார்த்தைகள் வேணாம்.. லவ் யூ போதும். எல்லோருக்கும் அதையே ஃபார்வர்டும் பண்ணிக்கலாம்.. பேச்சைக் குறைங்கய்யா!!!:icon_b:

("நீங்க இவ்வளவு வெட்டியா இருக்கீங்க"ன்னு எனக்குத் தெரியாமப் போயிடுச்சின்னு நீங்க நினைக்கறது எனக்குக் கேட்குது.)

அன்புரசிகன்
09-06-2011, 07:18 AM
அப்போ கணவனுக்கு அனுப்பக்கூடாதா???

ஆதி
09-06-2011, 07:37 AM
அப்போ கணவனுக்கு அனுப்பக்கூடாதா???

தாராளமா அனுப்பலாம்...

பட் ரியாக்சன் கம்பியா இருக்கும்...

//லவ் யூ டூ (Love you too) என்றால்//

இந்த டூ... முயன்றுத்தான் பாருங்க... :D :D :D

அன்புரசிகன்
09-06-2011, 07:50 AM
தாராளமா அனுப்பலாம்...

பட் ரியாக்சன் கம்பியா இருக்கும்...


ஏன்????

aren
09-06-2011, 07:53 AM
ரொம்பத்தான் எல்லோரும் வெட்டியா இருக்கீங்க, இதைப் படித்த என்னையும் சேர்த்துதான்.

ஆதி
09-06-2011, 07:57 AM
சம்பந்தமே இல்லாம...

திடீர் என்று உங்க மனைவிக்கு "லவ் யூ டூ(too)" என்று அனுப்பினால்.. உங்க மேல சந்தேகம் வரும், உட*னே ஃபோனும் வ*ரும், அப்புற*ம் பொழுத* போக*லை என்று யோசிக்க* மாட்டீங்க*, இன்னிக்கு வீட்டுக்கே போக*லை என்று முடிவு ப*ண்ணிடுவிங்க*...

கணவனுக்கு அனுப்பினால், இலக்கணப்பிழையா இருக்கும் என்று கண்டுக்காம இருக்க, வாய்ப்பிருக்கு...

விகடன்
09-06-2011, 08:28 AM
இதெல்லாம் திருமணமானவங்களுக்குத்தானே சரிவரும்!

நம்மள மாதிரி ஆக்களுக்கு...

தாமரை
09-06-2011, 08:40 AM
இதெல்லாம் திருமணமானவங்களுக்குத்தானே சரிவரும்!

நம்மள மாதிரி ஆக்களுக்கு...

ஆதன் மட்டுமென்ன திருமணமானவரா?

திருமணமாகாதவர்கள், திருமணமானவர்களை இப்படித் தூண்டிவிட்டுக் குளிர்காயலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்காரே!!;););)

கீதம்
09-06-2011, 09:05 AM
தப்பியோ.. தவறியோ...
போகவேண்டிய இடத்துக்கு
சரியாகப் போய்விட்டதாம்
இதுபோலொரு குறுஞ்செய்தி
ஆதனின் அலைபேசியிலிருந்து!
தாம் பெற்றதை வையகம் பெற
அழைக்கிறார் அதை மன்றில் எழுதி!
ஆகவே மணமானவர்களே,
அறிவீர் இது ஒரு சதி!
அறியாள் உங்கள் சதி!
அனுப்பினால் உம் கதி?
அதோகதி!:)

தாமரை
09-06-2011, 11:18 AM
தப்பியோ.. தவறியோ...
போகவேண்டிய இடத்துக்கு
சரியாகப் போய்விட்டதாம்
இதுபோலொரு குறுஞ்செய்தி
ஆதனின் அலைபேசியிலிருந்து!
தாம் பெற்றதை வையகம் பெற
அழைக்கிறார் அதை மன்றில் எழுதி!
ஆகவே மணமானவர்களே,
அறிவீர் இது ஒரு சதி!
அறியாள் உங்கள் சதி!
அனுப்பினால் உம் கதி?
அதோகதி!:)

சதி பதி கதி விதி
பதி கதி விதி சதி
கதி விதி சதி பதி
விதி சதி பதி கதி

:icon_b::icon_b::icon_b::icon_b:

Nivas.T
09-06-2011, 12:18 PM
என்ன கொடும சரவணன் இது???:D:D:D:D:D

தாமரை
09-06-2011, 12:49 PM
சதி பதி கதி விதி
பதி கதி விதி சதி
கதி விதி சதி பதி
விதி சதி பதி கதி

:icon_b::icon_b::icon_b::icon_b:

சதி செய்யும் பதியின் கதி விதியின் வசப்பட்டது
ஆனால்
பதியின் கதியை விதிப்பவள் சதி(மனைவி)யானால்
(கணவனின்)கதி விதியின் சதி என மனதில்பதி
எனவே
விதி யின் சதிதான் பதியின் கதியாகும்

இப்படி விரித்துப் பொருள் சொன்னாலும்...

மேலிருந்து கீழாக குறுக்கு வாட்டில் பார்க்க

சதி கதி சதி கதி

அதாவது தலை குனியும் கணவனுக்கு சதியே(மனைவியே) சரணம்.. சதியே(மனைவியே) சரணம்

கீழிருந்து மேலே குறுக்கு வாட்டில் பார்க்க..

விதி விதி விதி விதி

அதாவது அடங்க மறுக்கும் கணவனுக்கு எல்லாம் அவன் தலைவிதி

Nivas.T
09-06-2011, 12:53 PM
சத்தியமா இப்ப எனக்கு மயக்கம் வரல :mini023::mini023::mini023::mini023:

நாஞ்சில் த.க.ஜெய்
09-06-2011, 01:58 PM
சதி பதி கதி விதி
பதி கதி விதி சதி
கதி விதி சதி பதி
விதி சதி பதி கதி

மொத்தத்தில் சிவராத்திரி ...

சிவா.ஜி
09-06-2011, 02:05 PM
தாமரையோட சதி...பதிக்கு....விளக்க உரை எழுத உக்காந்தா.....மதராஸப்பட்டிணத்துல வர்ற பாட்டு மாதிரி

இதைப் படிக்குமுன் நேரம் போக வில்லையே
படித்தபின் நேரம் போதவில்லையே

(இருக்கிற ஒண்ணு ரெண்டையும் பிச்சிக்கறதுக்குத்தான்.....)

தாமரை
09-06-2011, 03:23 PM
தாமரையோட சதி...பதிக்கு....விளக்க உரை எழுத உக்காந்தா.....மதராஸப்பட்டிணத்துல வர்ற பாட்டு மாதிரி

இதைப் படிக்குமுன் நேரம் போக வில்லையே
படித்தபின் நேரம் போதவில்லையே

(இருக்கிற ஒண்ணு ரெண்டையும் பிச்சிக்கறதுக்குத்தான்.....)

இதைத்தான் போறாத காலம்னு சொல்லுவாங்க..:lachen001::lachen001::lachen001::lachen001:

sarcharan
09-06-2011, 03:27 PM
உணமையிலேயே என்ன கொடும சரவணன் இது???

sarcharan
09-06-2011, 03:28 PM
பொழுது போகாத பொம்முக்கள் இந்த மன்றத்துல நிறைய இருக்காங்க போல..

lenram80
09-06-2011, 06:06 PM
சதி கதி சதி கதி

அதாவது தலை குனியும் கணவனுக்கு சதியே(மனைவியே) சரணம்.. சதியே(மனைவியே) சரணம்

கீழிருந்து மேலே குறுக்கு வாட்டில் பார்க்க..

விதி விதி விதி விதி

அதாவது அடங்க மறுக்கும் கணவனுக்கு எல்லாம் அவன் தலைவிதி

பயங்கர கறுப்பா இருந்தா சதி கதி சதி கதி ன்னு சொல்லலாம்.
ஆனா.. கறுப்பா பயங்கரமா இருந்தா விதி விதி விதி விதி ன்னு தானே சொல்லனும்

அமரன்
09-06-2011, 06:57 PM
ஏன்.. ஏன்...ஏன்...

டூ விட்டால் என்ன செய்யுறது?

aren
10-06-2011, 02:28 AM
ஏன்.. ஏன்...ஏன்...

டூ விட்டால் என்ன செய்யுறது?

முயற்சி திருவிணையாக்கம்.

முயற்சி செய்துபாருங்கள்.

அன்புரசிகன்
10-06-2011, 02:40 AM
முயற்சி திருவிணையாக்கம்.

முயற்சி செய்துபாருங்கள்.

அதுக்குத்தானே இந்தியா போறார். அங்கு sms அனுப்புவது மலிவாமே. உண்மையா??? :)

aren
10-06-2011, 03:03 AM
அதுக்குத்தானே இந்தியா போறார். அங்கு sms அனுப்புவது மலிவாமே. உண்மையா??? :)

மிஸ்டு கால்ன்னு ஒன்னு இருக்கு, அதைக் கண்டுபிடித்தது இந்தியாதான். அதுதான் மிகவும் மலிவானது.

Nivas.T
10-06-2011, 05:26 AM
அதுக்குத்தானே இந்தியா போறார். அங்கு sms அனுப்புவது மலிவாமே. உண்மையா??? :)

மலிவு இல்லீங்க அன்பு இலவசம் :D:D:D:D

தாமரை
10-06-2011, 05:46 AM
ஏன்.. ஏன்...ஏன்...

டூ விட்டால் என்ன செய்யுறது?

வேணும்னா இந்தக் கதையைச் சொல்லுங்க.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=391302#post391302

அப்புறம் பாருங்க... உங்களுக்கு நேரம் போதாது..

அன்புரசிகன்
10-06-2011, 05:53 AM
வேணும்னா இந்தக் கதையைச் சொல்லுங்க.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=391302#post391302

அப்புறம் பாருங்க... உங்களுக்கு நேரம் போதாது..

ஆமா.. வைத்தியசாலைக்கு போய்வாறத்துக்கே நேரம் போய்டும். :)

Ravee
10-06-2011, 05:53 AM
சதி பதி கதி விதி
பதி கதி விதி சதி
கதி விதி சதி பதி
விதி சதி பதி கதி

:icon_b::icon_b::icon_b::icon_b:


தப்பியோ.. தவறியோ...
போகவேண்டிய இடத்துக்கு
சரியாகப் போய்விட்டதாம்
இதுபோலொரு குறுஞ்செய்தி
ஆதனின் அலைபேசியிலிருந்து!
தாம் பெற்றதை வையகம் பெற
அழைக்கிறார் அதை மன்றில் எழுதி!
ஆகவே மணமானவர்களே,
அறிவீர் இது ஒரு சதி!
அறியாள் உங்கள் சதி!
அனுப்பினால் உம் கதி?
அதோகதி!:)


ம்ம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இங்க கும்மி அடிச்சா அப்புறம் சதி வந்து எங்க வாய்க்கு பிளாஸ்திரி போடா வேண்டாம் ... நாங்களே போட்டுக்குறோம் .... :sauer028: :traurig001:

தாமரை
10-06-2011, 06:14 AM
சதி பதி கதி விதி
பதி கதி விதி சதி
கதி விதி சதி பதி
விதி சதி பதி கதி

:icon_b::icon_b::icon_b::icon_b:

இப்ப கலர் கலரா இருக்கில்ல.. இதையும் புரிஞ்சிக்குங்க..

சதி - இது மிகப் பெரிய சதித் திட்டம்.

Love you too - அப்படின்னு எஸ்.எம்.எஸ் எதுக்கு அனுப்புவோம்? யாராவது Love you என்று மெஸேஜ் அனுப்பினா பதில் அனுப்பத்தானே. (வழக்கமா பெண்கள்தான் இந்த மெஸேஜ் அனுப்புவாங்க..) அப்ப மனுஷனுக்கு வேற ராங் கனெக்ஷன் இருக்கு, யாரோ லவ் யூ ன்னு மெஸேஜ் அனுப்பி இருக்காங்க. மனுஷன் அவங்களுக்கு அனுப்ப வேண்டிய மெஸேஜை தப்பா அனுப்பி மாட்டிகிட்டார் என்று மனைவி நினைத்துக் கொண்டு தன்னுடைய பல்முனைத் தாக்குதலை ஆரம்பிக்கணும் என்பது ஆதனின் சதி.

பதி - பதி .. கணவரே இதைக் கவனத்தில் பதியுங்கள்..

கதி கதி கதி


நமது பாதை
நமது வேகம்
நமது அடைக்கலம் அனைத்தும்



விதி விதி விதி விதி

முன்பே தீர்மானிக்கப்பட்டு, சொல்லப்பட்டு, அறியப்பட்ட நம் தலைவிதிதான்.

சதி சதி சதி

சதியே உருவான சதியாம் மனைவிக்குச் சதி செய்தால்..

பதி பதி

பதி(கணவன்), ஊரே

கதி

கதி!!!ன்னு ஊர்சுத்தி பிச்சை எடுக்க வேண்டியதுதான்

தாமரை
10-06-2011, 06:27 AM
ம்ம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இங்க கும்மி அடிச்சா அப்புறம் சதி வந்து எங்க வாய்க்கு பிளாஸ்திரி போடா வேண்டாம் ... நாங்களே போட்டுக்குறோம் .... :sauer028: :traurig001:

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்...:lachen001::lachen001::lachen001: