PDA

View Full Version : கலைந்து விடு!!



lenram80
06-06-2011, 06:55 PM
கற்றுக் கொடுப்பருக்கும்
பெற்றுக் கொடுப்பவருக்கும்
பட்டம் பெற்றவருக்கே
பள்ளியில் இடம் என்றான பின்,

ஆறு லட்சத்து ஒன்று!
சென்னையின் அஞ்சல் எண் மட்டுமல்ல
பட்டிணத்தில் ஆங்கிலப் பள்ளியில்
அறிமுக வகுப்பின் கட்டணம் என்றான பின்,

அரிசி மட்டும் இலவசமாய் படுகுழியில்!
அடுப்பிலிடும் அத்தனையின் விலையும்
எமன் வசமாய் இமய மலையில்
சோறு மட்டுமே உயிர் காக்கும் சாறு என்றான பின்,

நாற்றுகளை இடுப்பில் வைத்துக்கொண்டு
நடனமாடிய விளை நிலங்கள்
தலையில் கட்டிட கரகங்களை வைத்துக்கொண்டு
விழி பிதுங்கி இப்போது விலை நிலங்கள் என்றான பின்,

உணவு, உடை, உறைவிடத்தை ஊழல் ஒளி அடிக்க
தேசியக் கொடி கூட பணம் கொடுத்தால் பறக்க
பண பலம் வறுமையின் நகம் முனையில் கறுக்க
தேர்தலன்று நேர்மை தீக்குளித்து இறக்க என்றான பின்

உன் உடல் தொட்டு நெஞ்சு முட்டி பால் குடிக்கவும்
கட்டிப் பிடித்து கை அணைத்து ஆழ் உறங்கவும்
அளவிலா ஆசையுடன் இருக்கும் உன் சேயின்
ஒரு சின்ன வேண்டுகோள் இதோ!

என்னால் நீ படப் போகும் பாடு!
தாங்காது என் பிஞ்சு நெஞ்சுக் கூடு!

வயல் வெளியில் கருகி
கூலி வேலையில் குறுகி
பசி போக்க நீரை அருகி
படுத்த அப்பனையும் வியாதி பருகி

பாசத்தில் மட்டும் பனி போல் உருகி
மிச்சத்தில் சூறாவளி சேர்த்து வைத்து சொறுகும்
நம் குடும்பத்தில் நான் தேவையா?
பறக்க முடியா மயிலுக்கு புத்தம் புது தோகையா?

கருவிலேயே என்னை
கலைத்து விடு அன்னையே!
கனவிலேயே என்னை
கலைந்து விடு அன்னையே!

கீதம்
06-06-2011, 10:25 PM
எத்தனைக் கவலையிருந்தாலும் அத்தனையும் தவிடுபொடியாகும், கருவிலேந்தி மடியில் தாங்கிய மழலையின் முன்! அல்லவா? வாழ்வதன் அர்த்தம் உணர்வாள், வறுமையிலும் வெறுமை உணராள், அந்த வறிய தாய்!

அவல நிலை உணர்த்தினாலும் அதை எழுதிய வரிகளில் மிளிரும் கவித்திறன் ரசித்தேன்.

Ravee
07-06-2011, 05:32 AM
நெஞ்சை தொடும் வரிகள்
என்றாலும் அடித்தது என்னவோ
கன்னத்தில் ....
மாற்று தேடுவதுதான்
மரண பயம் போக்கும் மருந்து ....
மரணத்தை தேடுவதில் இல்லை முடிவு

lenram80
07-06-2011, 11:50 AM
நன்றி கீதம் மற்றும் ரவி அவர்களே !!!

ஜானகி
07-06-2011, 01:38 PM
அந்த மழலையின் சிரிப்பில் தான் அவளது மூச்சிருக்கும்...அதையும் கலைக்கச் சொல்லாதே....அந்த மழலை மூலம் அவளது வாழ்வு விடியட்டுமே...

சிவா.ஜி
07-06-2011, 02:08 PM
பொட்டிலடிக்கும் உண்மைகள்....ஏழையின் அவலம் சொல்லும் வரிகள். ஆனால் அன்னைக்கென்று ஒரு குணம் உண்டு....

பால் வற்றிய நிலையிலும் குழந்தையின்
பால் வைத்த வற்றாத பாசம்.....
பால் முகத்தைப் பார்த்ததும்
பால் ஊறும் நெஞ்சம்.....

அந்த தாய்.....கருக்குழந்தைக்கு செவிமடுக்கமாட்டாள்....செல்லமே வா என கவியடுக்குவாள்.

வாழ்த்துக்கள் லெனின்.

அக்னி
07-06-2011, 03:56 PM
அழிக்கவேண்டிய முன்னால் கருக்கள்
வெளியே அரக்கர்களாய்...

ஆக்கத்திற்காய்
அழிக்கும் சக்தியாய்
வரலாம் ஒரு கரு...

அது இந்தக் கருவாயும் இருக்கலாம்...

இல்லாமை இயலாமை சொல்லிக்
கருக் களையாதீர்கள்...
இந்தப் புதுக் கருக்கள்
தீயவை களைய உருக்கொடுங்கள்...
உருவாக்கிக் கொடுங்கள்...

Nivas.T
08-06-2011, 07:37 AM
உரைக்க வைக்கும் வரிகள்
வலியின் தாக்கம் வரிகாளாய்
கனத்த மனம் கவிதையாய்

மிக அருமை
பாராட்டுகள் நண்பரே

lenram80
09-06-2011, 05:33 PM
இந்தப் புதுக் கருக்கள்
தீயவை களைய உருக்கொடுங்கள்...
உருவாக்கிக் கொடுங்கள்...

சும்மா இருக்க விட மாட்டீரா அக்னி? இப்படி சொல்லி சொல்லித் தான் 120 கோடியாகி, அதில் 100 கோடி கேடியாகி விட்டது. :-)

மாற்றம் வேண்டி நல்லது நினைத்து பதிலிட்ட உங்களுக்கு நன்றி.

lenram80
09-06-2011, 05:35 PM
பால் வற்றிய நிலையிலும் குழந்தையின்
பால் வைத்த வற்றாத பாசம்.....
பால் முகத்தைப் பார்த்ததும்
பால் ஊறும் நெஞ்சம்.....
அந்த தாய்.....கருக்குழந்தைக்கு செவிமடுக்கமாட்டாள்....செல்லமே வா என கவியடுக்குவாள்.
வாழ்த்துக்கள் லெனின்.

அன்னை அவளாகவே செய்யமாட்டாள் என்று அந்த பிஞ்சுக்கு தெரிந்து தான் அதை வேண்டுகோளாக வைக்கிறாளோ என்னவோ? நன்றி சிவாஜி.

lenram80
09-06-2011, 05:37 PM
உரைக்க வைக்கும் வரிகள்
வலியின் தாக்கம் வரிகாளாய்
கனத்த மனம் கவிதையாய்

மிக அருமை
பாராட்டுகள் நண்பரே

தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதி இப்போது இருந்தால் எந்த கான்வெண்டில் தன் பிள்ளையை சேர்த்திருப்பான்? நன்றி நிவாஸ் அவர்களே.

கலாசுரன்
16-06-2011, 11:52 AM
ரோப நல்லா இருக்கு :)

நாஞ்சில் த.க.ஜெய்
16-06-2011, 05:11 PM
இதயம் தொடும் வரிகள் அருமை ...தொடருங்கள் நண்பரே ...