PDA

View Full Version : எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா



கிருஷ்ணன்
06-06-2011, 08:05 AM
நம் தாய் மொழி மட்டுமல்லாமல் மற்றுமொரு மொழியையும் கற்பது அவசியமாகிறது, அந்த வகையில் ஸ்பானிஷ் மொழியை மிக எளிதாக கற்கலாம்.
பாடம்...1
நம்மை அறிமுகம் செய்து கொள்ள ஆங்கிலத்தில் ஹலோ என்று கூறுவோம் அல்லவா,அதை ஸ்பானிஷ் மொழியில் Hola(ஓலா) என்று உச்சரிக்க வேண்டும், இங்கு "H " Silent.
"My name is" என்பதை "mi nombre es..... " (மி நோம்பரே எஸ்) என்று கூறவேண்டும்.
"What is your name" என்பதை "¿Cuál es tu nombre" (குவல் எஸ் து நோம்பரே) என்று கூற வேண்டும்,

நமது அன்றாட வாழ்வில் ,நம்மை சந்திப்பவர்களிடம் கேட்க ,பேச, பயன்படுத்தும் சொற்கள்


Where are you from?(நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?)----¿De dónde eres?(தே தோண்டே எரேஸ்?)
I am from.(நான் வந்து...)..--------Yo soy de …(யோ சோய் டே...)
What do you do?(நீ,/நீங்கள் என்ன செய்கிறீர்கள்?)----¿A qué te dedicas?( அ கே தே டெடிகாஸ்)
I am a student( நான் ஒரு மாணவன்)---Soy un estudiante(சோய் உன் எஸ்டூடிஎன்டே)
I am a teacher( நான் ஒரு ஆசிரியர் )----Soy un maestro(சோய் உன் மேஸ்ட்ரோ)
Where do you live?(நீ,/ நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?)-----¿En dónde vives?(என் டோன்தே வைவஸ்?)
How old are you?( உன்/ ,உங்கள் வயது என்ன?)----¿Cuántos años tienes?(குவாண்டோஸ் அஞ்ஞோஸ் டியன்னேஸ்?)
I am ... years old( என் வயது.....வருடங்கள்)----Yo tengo …. años.(யோ டெங்கோ அஞ்ஞோஸ்)
I don't understand, Can you repeat that( என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை, மீண்டும் கூறுகிறீர்களா?) ---No entiendo ¿Me puedes repetir eso?(நோ என்டியன்டோ .மி ப்யூடஸ் ரிபீட்டர் இசோ?)
Can you help me?(எனக்கு உதவி செய்வீர்களா?)---¿Me puedes ayudar?(மி ப்யூடஸ் அய்யுதர்?)
Please( தயவு செய்து)---Por Favor(பொர் ஃபேவர்)
Excuse me(மன்னிக்கவும்)---Disculpe(டிஸ்கூல்பே)
I am sorry( என்னை மன்னி்த்து விடுங்கள்)---Lo siento( லோ சியன்டே)
See you soon( விரைவில் சந்திக்கிறேன்)---Nos vemos pronto(நோஸ் வீமாஸ் ப்ரோன்டோ)
See you tomorrow(நாளை சந்திக்கிறேன்)---Hasta mañana(ஹஸ்தா மன்யானா)
Thank you (நன்றி)---Gracias(கிரேசியஸ்)
You are welcome!( பரவாயில்லை)--¡De nada!(தே நாதா)
Good bye( சென்று வருகிறேன்) --Adiós(அடியோஸ்)
Have a nice day( நல்ல நாளாக இருக்கட்டும்)-- Qué tengas un buen día( கே டங்காஸ் உன் ப்யூன் தியா)

அன்புரசிகன்
06-06-2011, 08:12 AM
க்ராஷ்யாஷ்... (இங்க Dora the explorer எனும் கார்ட்டூன் பர்ப்பது வழமை. அடிக்கடி சொல்வார்கள். சில வற்றை... ) :D :D :D

தெனாதா (welcome) , பாபினோஸ் (lets go) :D :D :D

தொடருங்கள்.

பாரதி
06-06-2011, 08:31 AM
:aktion033: மிகவும் அருமை நண்பரே.

இயன்றவரையில் நானும் கற்றுக்கொள்வேன். நடைமுறைப் பயிற்சிக்கு இவ்விதம் கற்பித்தல் நன்று.

எனினும் அடிப்படையில் இருந்தே கற்றுத்தர இயலுமா..?

தான் கற்றதை மற்றவருக்கும் கற்பிக்கும் உங்களுக்கு நன்றி.

ஆதி
06-06-2011, 08:39 AM
மிகவும் அற்புதமான திரி, சத்தமாய் ஒரு கைத்தட்டலும், பாராட்டுக்களும்..

தொடருங்கள் நண்பரே(Gracias por compartir), நிச்சயம் எல்லோரும் உங்களை பிந்தொடர்வோம்...

வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்.. மூத்தவர்கள் சம்மதித்தல், இதனை ஒட்டிவைக்கலாம்...

கீதம்
06-06-2011, 09:48 AM
மிகவும் நல்ல முயற்சி. பாரதி அவர்கள் சொல்வது போல் அடிப்படையிலிருந்தே கற்றுத் தந்தால் இன்னும் எளிதாகக் கற்கலாம். Gracias! Adiós.

பூமகள்
06-06-2011, 11:46 AM
நல்ல முயற்சி.. பாராட்டுகள். :)

அப்படியே.. பிரன்சு, மான்டரின் எல்லாம் கற்றுக் கொடுத்தால் உங்களுக்கு புண்ணியமா போகும்.. :icon_ush:

ஆதவா
06-06-2011, 01:51 PM
க்ராஷ்யாஷ்... (இங்க Dora the explorer எனும் கார்ட்டூன் பர்ப்பது வழமை. அடிக்கடி சொல்வார்கள். சில வற்றை... ) :D :D :D

தெனாதா (welcome) , பாபினோஸ் (lets go) :D :D :D

தொடருங்கள்.

அடிக்கடி நாமெல்லாம் குழந்தைகள் என்று நிரூபிக்கவேண்டியிருக்கிறது... இல்லையா அன்பு??:D

ஸ்பானிஷ் பாடல்கள் பல கேட்டிருக்கிறேன். எனக்குப் பொதுவாக ஆங்கிலம் சாராத மற்றமொழிகள் மீதும் அதன் ஒலிகள் மீதும் மிகுந்த ஆர்வமுண்டு. அதனால்தான் என்ன அர்த்தம் என்றே தெரியாமல் ஏதோ ஒரு உச்சரிப்பில் பாடுவது ஒருவித சந்தோஷத்தைத் தருவதாக எண்ணுகிறேன்,.. ஸ்பானிஷில் Que Me Quedes Tú பாடலும் (you stay with me) La Tortura (The Torture) உம் எனது ஃபேவரைட். ஸ்பானிஷில் படங்களும் பார்த்திருக்கிறேன். ஆனால் மொழியைக் கற்றுக் கொள்ளவேண்டுமென்ற ஆர்வமெல்லாம் சுத்தமாகக் கிடையாது. இருப்பினும் பாரதி அண்ணா சொல்வது போல ஸ்பானிஷ் மொழியை அடிப்படையிலிருந்து சொல்லித்தாருங்களேன். கற்றுக் கொள்ள வருபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.. இறுதியில் ஒரு புத்தகம் கூட தொகுக்கலாம்!!

சிவா.ஜி
06-06-2011, 02:10 PM
அமீகோ....அமீகாவெல்லாம் நினைவுக்கு வருதுங்கோ....க்ராஷியஸ் அமீகோ.

Ravee
06-06-2011, 02:31 PM
பிறப்பிடம் ஐரோப்பா என்றாலும் மத்திய அமெரிக்கா , தென் அமெரிக்காவில் பரவலாக பேசப்படும் மொழி ... பல கௌபாய் படங்களில் கேட்டு இருக்கிறேன் இந்த வார்த்தைகளை ..... :) . தெரிந்து கொண்டால் சமயத்தில் யாரையாவது கிரி கிரி அடிக்க உதவும் ... :lachen001:

கிருஷ்ணன்
07-06-2011, 08:36 AM
முதலில் எனது இந்த முயற்சியை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள்.மொழிக்கு அடிப்படை எழுத்துருக்களை அறிவது. ஸ்பானிஷ் மொழியின் எழுத்துரு ஆங்கில அகர வரிசையையே ஒத்து வருவதால் அதைப்பற்றி விளக்கவில்லை.உச்சரிப்பில் மட்டும் சிறு மாற்றம் உண்டு . அதை அவ்வப்போது விளக்குகிறேன்.
H வரும் போது --ஓ என்றும்
J--ஹ என்றும்
LL--ஜா என்றும்
உச்சரிக்க வேண்டும்.


பாடம் ---2
முதலில் நம்மை நாம் அறிமுகம் செய்தோம், இப்போது வார்த்தைகளை அறிவோம்,

யார் இவர் --who is he/she?---¿quién es? (கீயன் எஸ்),இது ஆண் பால் பெண்பால் இரண்டிற்கும் பொருந்தும்,

ஆண் என்பதை hombre(ஓம்பரே) என்று கூற வேண்டும்,
பெண்(woman)----mujer(முஹர்),
சிறுமி(girl)----- niña(நீஞ்ஞா),chica(சீகா)
சிறுவன்(boy)---- niño(நீஞ்ஞோ),chico(சீகோ)


உயரம் ,குட்டை, வயதான, இளமையான, போன்ற வார்த்தைகளை பயன்படு்த்தவும்,மற்றும் இதன் எதிர் மறைகளையும் அறியலாம்.

I am tall(நான் உயரமானவன்).---Soy alto.(சோய் ஆல்டோ)
I am short.( நான் குள்ளமானவன்)---Soy bajo.(சோய் பாஹோ)
I am young.(நான் இளமையானவன்)--Soy joven.(சோய் ஹோவன்)
I am old.(நான் வயதானவள்)---Soy anciana.(சோய் ஆன்சியானா)


alto என்பது ஆண்பாலிற்கு, alta--என்பது பெண்பாலிற்கு
bajo---ஆண்பால், baja---பெண்பால்
anciano---ஆண்பால், anciana ----பெண்பால்.
இந்த வார்த்தைகளை அவன், அவள் , நீ, நீங்கள் என்பதற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



She is......( அவள்....)---Ella es.....(ஈக்யா எஸ்...)
He is.....(அவன்......)---Él es ....(எல் எஸ்.....)
You are .....(நீ,,நீங்கள்......) --- Eres....(எரேஸ்......)

எதிர் மறையாக கூற வேண்டுமெனில் இவ்வாறு பயன் படுத்த வேண்டும்.

I am not old(நான் வயதானவள் இல்லை).----No soy anciana.(நோ சோய் ஆன்சியானா)

He is not tall.(அவன் ,அவர் உயரமில்லை)---Él no es alto.(எல் நோ எஸ் ஆல்டோ)

You are not short. (நீ,நீங்கள் குட்டையானவர் இல்லை)---No eres bajo.(நோ எரேஸ் பாஹோ)

.

The boy is not tall( அந்த சிறுவன் உயரமில்லை).---El niño no es alto.(எல் நினோ நோ எஸ் ஆல்டோ)

The man is not short.(அந்த மனிதர் குள்ளமானவர் இல்லை)----El hombre no es bajo.(எல் ஹோம்ப்ரே நோ எஸ் பாஹோ)

பாரதி
07-06-2011, 09:08 AM
நன்றி. தொடர்ந்து பாடங்களைத் தாருங்கள்.

முதல் பதிவில் சில வினாக்கள் தொடங்கும் இடத்தில் கேள்விக்குறி தலைகீழாக இருப்பதாக காட்டப்பட்டிருக்கிறது. அதற்கு என்ன பொருள்?

ஆதவா
07-06-2011, 10:21 AM
அமீகோ....அமீகாவெல்லாம் நினைவுக்கு வருதுங்கோ.....

இந்த ரெண்டு பொண்ணுங்க்ளும் யாருங்க??



J--ஹ என்றும்
LL--ஜா என்றும்
உச்சரிக்க வேண்டும்.



நானும் இத்தனை நாளா tejo வை டேஜோ என்றுதான் நினைத்துவந்தேன். இப்போத்தான் தெரியுது அது தேஹோ...

ஒரு சின்ன விண்ணப்பம்... எழுத்துருக்கள்ல கேள்விக்குறியை தலைகீழாவும், e க்கு மேல கோடும், n க்கு மேல அலைகோடும் போட்ட (ñ) எழுத்துக்களையும் அதன் உச்சரிப்பையும் சொல்லி ஆரம்பிச்சீங்கன்னா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்!!

பாரதி
15-06-2011, 03:50 PM
நினைவூட்டலுக்காக மேலெழுப்புகிறேன்.:)

நாஞ்சில் த.க.ஜெய்
15-06-2011, 04:57 PM
அருமையான தொடரினை தொடர்ந்த நண்பர் கிருஷ்ணா சுப்பாராவ் அவர்களுக்கு என் வாழ்த்து ...தொடர்ந்து மொழியினை கற்க உதவும் வகையில் பங்களிப்பினை தொடருமாறு கேட்டு கொள்கிறேன்...

innamburan
15-06-2011, 05:18 PM
Gracias(கிரேசியஸ்), திரு.சுப்பாராவ். நாம் பல மொழிகளை கற்கவேண்டும். ஒரு சமயம் கொரியா போயிருந்தபோது, அந்த மொழி வாக்கியங்களில் சிலவற்றை பயன்படுத்தியதில் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இன்றும், இங்கிலாந்ததின் நூலகங்களில், 'நல்வரவு' என்ற வாசகம்.

கிருஷ்ணன்
17-06-2011, 12:30 PM
உயிரோசை வார இணைய இதழுக்கான கட்டுரை தயாரிப்பில் இருந்தேன்.உடனடியாய் தொடராததற்கு மன்னிக்கவும்.
mañana -- n மேல் கோடு போட்டு எழுதும் போது ங்,ஞ் என்று உச்சரிப்பு வரும்.
él es un hombre--இது மாதிரி மேல் கோடு போட்டு எழுதுவது அதில் ஒரு ஸ்டெரஸ் தருவதற்கு. a,e,i,o,u உயிரெழுத்துக்கள் மேல் இவ்வாறு கோடு போடுவோம்.
Adjectives என்பது பெயர்ச்சொல்/பிரிதிபெயர்ச் சொல்லின் தன்மை, குணம், நிறம், எண்ணிக்கை ஆகியவற்றை விவரித்து கூறுவது.ஸ்பானிஷ் மொழியில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என பார்க்கலாமா?
The coin is gold(இந்த நாணயம் தங்க நிறம்.)--La moneda es dorada.(லா மொனேடா எஸ் தோர்டா)
The coin is silver.(இது வௌ்ளி நாணயம்)--La moneda es plateada.(லா மொனேடா எஸ் பிளாட்டியேடா).
The car is red.(இந்த காரின் நிறம் சிவப்பு)---El automóvil es rojo.(எல் ஆட்டோ மோவில் எஸ் ரோஹோ)

The wallet is brown.(இந்த வாலட்டின் நிறம் பழுப்பு )--La billetera es marrón.(லா பிஜேதேரா எஸ் மர்ரோன்)ஸ்பானிஷ் மொழியில் வாலட் என்பது ஆண்கள் பர்சை குறிக்கும்.
The purse is black.(இந்த பர்சின் நிறம் கறுப்பு)----La cartera es negra.(லா கரதேரா எஸ் நேக்ரா)பர்ஸ் என்பது பெண்களின் கைப்பை.
The door is blue.( இந்த கதவின் நிறம் நீலம்)---La puerta es azul.(லா ப்யூர்தா எஸ் அசூல்).
The building is yellow(இந்த கட்டிடத்தின் நிறம் மஞ்சள்).---El edificio es amarillo(எல் எடிஃபீசியோ எஸ் அமரீஜோ)
The truck is white((இந்த லாரியின் நிறம் வௌ்ளை).---El camión es blanco.(எல் கமியோன் எஸ் ப்ளாங்கோ).

The flower is purple.( இந்த பூவின் நிறம் கத்தரி நிறம்)--La flor es morada.(லா ப்ளோர் எஸ் மோராதா).
It is white(இது வௌ்ளை நிறம்)--Es blanca.(எஸ் ப்ளாங்கா).
It is orange( இது ஆரஞ்சு நிறம்)---Es anaranjada.(எஸ் அனரங்ஹடா)
The tree is green(இந்த மரத்தின் நிறம் பச்சை)----El árbol es verde. (எஸ் ஆர்போல் எஸ் வெர்தே).
It is not blue(இது நீல நிறம் இல்லை)--No es azul.(நோ எஸ் அசூல்)
It is not yellow(இது மஞ்சள் நிறம் இல்லை)--- No es de color amarillo .(நோ எஸ் தே கலோர் அமரீஜோ).

There is a new baby at our house.(எங்கள் வீட்டில் புதிதாக பிறந்த குழந்தை உள்ளது ).--Hay un nuevo bebé en casa.(ஹாய் உன் நியூவோ பேபே என் காசா).
You are my best friend. (நீ, நீங்கள் எனது உற்ற தோழர்)----Tú eres mi mejor amigo.(து எரேஸ் மி மேஜோர் அமீகோ)
Swimming is easy for a fish!( நீந்துவது மீனிற்கு எளிதானது) ---La natación es fácil para un pez! (லா நதாசியோன் எஸ் பாசில் பரா உன் பேஸ்)
The flowers smell sweet.----Las flores de olor dulce.(லா ஃப்ளோர் தே ஓலார் துல்சே.)
It tastes sour.-----Tiene un sabor amargo9டியன்னே உன் சபர் அமார்கோ.).
We feel warm.------Nos sentimos caliente.(நோஸ் சென்டிமோஸ் காலியன்தே.)
He looked angry.----------Parecía enojado.(பராசியா எனஹாதோ)
Sita is a clever girl.-----------Sita es una chica inteligente.(சீதா எஸ் உனா சீகா இன்டலிஹன்தே.)
He gave me five mangoes.----Me dio cinco mangos.(மே டியோ சீன்கோ மேங்கோஸ்.)
The boy is lazy.----------El niño es perezoso.(எல் நினோ எஸ் பெரேசோஸோ.)
I ate some rice.-----Comí un poco de arroz.(கோமி உன் போகோ தே அர்ரோஸ்.)
The hand has five fingers.---------La mano tiene cinco dedos. (லா மானோ டியன்னே சீன்கோ தேதோஸ்.)
(மேலும் கற்கலாம் )

பாரதி
17-06-2011, 02:49 PM
Disculpe.



H வரும் போது --ஓ என்றும்
J--ஹ என்றும்
LL--ஜா என்றும்
உச்சரிக்க வேண்டும்.


She is......( அவள்....)---Ella es.....(ஈக்யா எஸ்...)
He is.....(அவன்......)---Él es ....(எல் எஸ்.....)
You are .....(நீ,,நீங்கள்......) --- Eres....(எரேஸ்......)

இதில் Ella என்பதை ஈஜா என்று உச்சரிக்காமல் ஈக்யா என்றுதான் உச்சரிக்க வேண்டுமா..? அல்லது விதிவிலக்குகள் உண்டா..?

Gracias maestro.

Qué tengas un buen día.

நாஞ்சில் த.க.ஜெய்
17-06-2011, 07:50 PM
இடைவெளி சிறிது தெனினும் அறியாத ஒரு மொழியினை கற்கும் வகையில் ஒரு வாய்ப்பு ....மீண்டும் தொடரட்டும் .. ..where are you from ? தே தோன்டே எரேஸ் ?என்று வருகிறது இதில் தே மற்றும் தொன்டே ,எரேஸ் போன்ற ஒவ்வொரு சொற்களின் சரியான ஆங்கில வார்த்தைகளை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது ..இதுபோல் இதனை களைந்து தெளிவுற கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்..

கிருஷ்ணன்
22-06-2011, 01:35 PM
adverb ஆக பயன்படுத்தும் போது தே தோண்தே என்பதற்கு 1. where 2. from where என்று பொருள் தரும். Eres என்பதற்கு you are என்று பொருள்.
இந்த பாடத்தில் ஒருமை ,பன்மை அறியலாம். LL- வரும் போது ஜ, யா என்றும் உச்சரிப்பு வரும் உதாரணமாக
llave(ஜாவே)-- சாவி , Me Llamo( யாமோ)---என் பெயர்.....

ஒரு பொருளை குறிப்பது ஒருமை என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை குறிப்பது பன்மை என்றும் கூறப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆண்பால் ஒருமையை குறிக்க---un(உன்) ,பெண்பால் ஒருமையை குறிக்க---una(உனா) மற்றும்(and) என்று கூற---y(ஈ) என்றும் வழங்கப்படுகிறது.

A man ---Un hombre(உன் ஓம்ப்ரே)
We are men.--Somos hombres. (சோமாஸ் ஓம்ப்ரேஸ்)
A woman--Una mujer(உனா முஹேர்)
We are women.--Somos mujeres. (சோமாஸ் முஹேரஸ்)

a boy---un niño.(உன் நீஞ்ஞோ)
A girl --Una niña(உனா நீஞ்ஞா)
a flower--una flor(உனா ஃப்ளோர்)
a car---un automóvil(உன் ஆட்டோமோவில்)

This is a tree.---Éste es un árbol.(எஸ்தே எஸ் உன் ஆர்போல்)
These are trees.---Éstos son árboles.(எஸ்டோஸ் சொன் ஆர்போலஸ்)
These are flowers.--Éstas son flores.(எஸ்டாஸ் சொன் ஃப்ளோரஸ்)
This is a building.---Éste es un edificio.(எஸ்தே எஸ் உன் எடிபீசியோ)
These are buildings.---Éstos son edificios.(எஸ்டோஸ் சொன் எடிபீசியோஸ்)

These are not silver coins.---Éstas no son monedas plateadas.(எஸ்டாஸ் நோ சொன் மொனேடாஸ் பிளாட்டியாடஸ்)
A woman and a car.--Una mujer y un automóvil.(உனா முஹேர் ஈ உன் ஆட்டோமோவில்)
A girl and flowers.--Una niña y flores.(உனா நீஞ்ஞா ஈ ஃப்ளோரஸ்)
Boys and trees.---Niños y árboles.(நீஞ்ஞோஸ் ஈ ஆர்போலஸ்)

பாரதி
22-06-2011, 04:22 PM
கிரேசியஸ் மேஸ்ட்ரோ.
இன்னும் எனக்கு "ll" ஐயம் முழுமையாக தீரவில்லை.

கிருஷ்ணன்
25-06-2011, 02:32 PM
வணக்கம் பாரதி. தமிழில் நெல்லை தமிழ், மதுரை தமிழ், கோயமுத்தூர் தமிழ் என்று எப்படி பிராந்தியத்திற்கு பிராந்தியம் மொழியின் உச்சரிப்பு (Dialect) மாறுபடுகிறதோ அவ்வாறே ஸ்பானிஷ் மொழியிலும் நாட்டிற்கு நாடு மாறுபாடுவரும். உதாரணமாக Llave, Lllegar ,அனேகமாக இவை இரண்டிற்கு மட்டுமே "ஜ" உச்சரிப்பு ஆங்கில "J" போல் வரும். மற்றவை பொதுவாக "யா'" ஆங்கில "Y' உச்சரிப்பிலேயே வரும். உங்கள் சந்தேகமான Ella,வை ஈக்யா அல்லது எய்யா என்றே உச்சரிக்கின்றனர்.
இப்போது சந்தேகம் தீர்ந்ததா ..இன்னும் உள்ளதா.

கிருஷ்ணன்
25-06-2011, 03:03 PM
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சொற்கள்

I'm busy---- Estoy ocupada(எஸ்தோய் ஆக்குபாதோ)
I'm confused----Estoy confundida( எஸ்தோய் கன்ஃபூன்திதோ)
I am angry---Estoy enojado(எஸ்தோய் எனஹாதோ)
I'm tired-----Estoy cansada(எஸ்தோய் கன்சாடா)
I'm fine----Estoy bien(எஸ்தோய் பியன்)
I feel bad---Estoy mal(எஸ்தோய் மால்)
I'm sad-----Estoy triste(எஸ்தோய் த்ரீஸ்தே)
I'm happy----Estoy feliz(எஸ்தோய் பெலிஸ்)

உணவுப்பொருட்களுக்கான சொற்கள்

potato--la papa(லா பாபா)
Soup---La sopa(லா சோபா)
Fruit---La fruta(லா ப்ரூட்டா)
Meat---La carne(லா கார்னே)
Salad----La ensalada(லா என்சலாதா)
Vegetables---Las verduras(லாஸ் வெர்தூராஸ்)
இவை பெண் பால் சொற்கள். ஆதலால் இவைகளுக்கு முன் ஒருமைக்கு லா(La) என்றும், பன்மைக்கு லாஸ்(las) என்றும் சேர்க்கப்படுகிறது.
Nuts--- El cereal(எல் செரல்)
Chicken --El pollo(எல் போய்யோ)
Fish---El pescado(எல் பெஸ்காதா)
Cheese---El queso(எல் கீஸோ)
Water---El agua(எல் ஆக்வா)
Bread----El pan(எல் பான்)
Breads---Los panes(லோஸ் பானிஸ்)
Juice---El jugo(எல் ஹூகோ)
Tea---El té(எல் தே)
Coffee-- El café(எல் காஃபே)
Egg---El Huevo(எல் ஹூவெவோ)
Eggs---Los huevos(லோஸ் ஹூவெவோஸ்)
Rice--- El arroz(எல் அர்ரோஸ்)
Cake---El pastel(எல் பாஸ்தெல்)
Breakfast----El desayuno(எல் தேசாயூனோ)
Lunch----El almuerzo(எல் அல்முயர்சோ)
Dinner---El cena(எல் செனா)
இவை ஆண்பால் சொற்கள். இதற்கு எல்(El) ஒருமைக்கும்,,லோஸ்(Los) பன்மைக்கும் சேர்க்கப்படுகிறது.

பாரதி
25-06-2011, 05:12 PM
நன்றி. நேரப்பற்றாக்குறையால் இன்று முறையாக படிக்கவில்லை. மீண்டும் படித்த பின்னர் ஐயமிருப்பின் கேட்கிறேன். தொடருங்கள்.

கீதம்
26-06-2011, 10:34 PM
தொடர்வதற்கு நன்றி கிருஷ்ணன் அவர்களே.

சொற்களை ஆண்பால், பெண்பால் என்று எப்படிக் கண்டறிவது? ஏதாவது பொதுவான விதிகள்?

கிருஷ்ணன்
27-06-2011, 03:44 PM
ஆண்பால் சொற்கள் அறியும் விதிமுறைகள்.
-o வில் முடியும் பெயர்ச்சொற்கள், நபர்கள், (Person) ஆண்பாற் பெயர்கள், விலங்குகள், அஃறிணை பொருட்கள் ---ஆண்பால் சொற்கள்.
உதா--- el cartero(எல் கர்தேரோ) (mailman), el niño(எல் நீஞ்ஞோ) (son), el tío(எல் டியோ) (uncle), el teatro(எல் தியேட்டரோ) (theater), el dormitorio(எல் டோர்மிடோரியோ) (bedroom) (Foto,(ஃபோட்டோ) Moto,(மோட்டோ)(motor bike) Mano(மோனோ)(monkey) போன்றவை விதிவிலக்கு, இவை பெண்பாற்சொற்கள்.)
-e யில் முடிபவையும் ஆண்பால் சொற்கள்.
உதா el perfume(எல் பெர்ஃயூமே)(perfume), el estante,(எல் எஸ்தான்தே)(Shelf) el maquillaje(எல் மகியாஹே) (Make up)(பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்கள்)
மேற் குறியிட்ட சொற்கள் (accented vowel)
உதா------el colibrí,(எல் கோலிபிரி) el ají,(எல் அஹி) el ñandú (எல் யான்து)
சில மெய் எழுத்துக்கள் (consonant) (except -d, -z, and -ión)
உதா-----el arbol,(எல் ஆர்போல்)(tree) el rumor,(எல் ருமோர்)(rumor) el cojín(எல் கோஹின்)(pad)
-ma வில் முடியும் சொற்கள்
உதா----el programa,(எல் புரோக்ராமா) el drama,(எல் டிராமா) el idioma(எல் இடியாமா)

பெண்பால் சொற்கள் அறியும் விதம்
-a வில் முடிபவை.
உதா----la enfermera(லா இன்பெர்மெரா) (nurse), la profesora(லா புரொபசேரா) (teacher), la hija(லா ஹிஹா) (daughter), la rosa(லா ரோசா) (rose), la guitarra(லா கிடேர்ரா) (guitar), la piscina(லா பிஸ்சீனா) (pool)
-d, -z, or ión,ல் முடிந்தால் அவை பெண்பால் சொற்கள்.
-d la felicidad(லா பெலிசிதாத்)(Happiness) la virtud (லா வியர்துத்)(virtue) la salud (லாசலூத்)(Health)
-z la nariz(லா நாரிஸ்)(Nose) la paz(லா பஸ்)(Peace) la luz (லா லூஸ்)(Light)
-ión
la religión(லா ரிலிஹியோன்)(Religion) la canción(லா கான்சியோன்)(Song) la irritación(லா இரிதேசியோன்)(Irritation)
விதிவிலக்கு
-ma, -pa, and -ta முடியும் கிரேக்க வழி சொற்கள் ஆண்பால் சொற்களே.
பழக்கத்தின் மூலம் மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். சந்தேகம் இருப்பின் கேளுங்கள் கீதம் அவர்களே.

நாஞ்சில் த.க.ஜெய்
28-06-2011, 12:00 PM
முதலில் இதில் இன்னும் குழப்புவது வார்த்தை உச்சரிப்பு...முதலில் தெளிவு படுத்திய சில வார்த்தைகள் தவிர பலவார்த்தைகளை உச்சரிப்பது சிரமமாக உள்ளது அதன் உச்சரிப்பினை தனியாக தந்தால் நன்றாக இருக்கும் ...

கிருஷ்ணன்
29-06-2011, 02:37 PM
உச்சரிப்பினை பதிவேற்றம் செய்திருக்கிறேன் இப்போது சுலபமாயிருக்கும் தானே.

நாஞ்சில் த.க.ஜெய்
30-06-2011, 05:55 AM
மிகவும் நன்றி தோழர் .....உச்சரிப்புக்கு எளிதாக இருக்கிறது ...

கீதம்
30-06-2011, 11:16 PM
ஆண்பால் பெண்பால் சொற்கள் அறியும் முறை பற்றிய என் கேள்விக்குப் பதில் அளித்துத் தெளிவித்தமைக்கு நன்றி.

கிருஷ்ணன்
01-07-2011, 01:31 PM
இந்த பாடத்தில் prepositions எழுதும் முறை அறியலாம்.



The food is on the table.----La comida está sobre la mesa.( லா கொமிதா எஸ்தா சோபர் லா மேசா)
The flowers are on the table.----Las flores están sobre la mesa.(லாஸ் ஃப்ளோரஸ் எஸ்தான் சோபர் லா மேசா)
The managers are at the table.-----Los gerentes están en la mesa.(லாஸ் ஹெரன்தஸ் எஸ்தான் என் லா மேசா)
The coffee is on the table.----El café está sobre la mesa.(எல் காஃபே எஸ்தா சோபர் லா மேசா)
The candy is in the box.----El caramelo está en la caja.(எல் காரமிலோ எஸ்தா என் லா காஹா)

He sat on a chair.----Se sentó en una silla.( சே சென்தோ என் உன சீஜா)
The boy is in the box.----El niño está en la caja.(எல் நீனோ எஸ்தா என் லா காஹா)
The boxes are on the table.----Las cajas están sobre la mesa.(லாஸ் காஹாஸ் எஸ்தான் சோபர் லா மேசா)
I am at the door.----Estoy en la puerta.(எஸ்தோய் என் லா புஅர்தா)
I am at the building.---Estoy en el edificio.(எஸ்தோய் என் எல் எடிபீசியோ)
There is a cow in the field.---Hay una vaca en el campo.(அய் உன வாகா என் எல் காம்போ)
Is he in his room?---¿Está en su habitación?(எஸ்தா என் சு ஹாபிடேசியன்?)

The letter is under your book.-------La carta está en tu libro.(லா கார்தா எஸ்தா என் து லீப்ரோ.)
I am staying at home.------Me quedo en casa.(மி கெதோ என் காசா.)
The driver is in front of the door.----- El conductor se encuentra en frente a la puerta.(எல் கன்துக்தர் சே என்குவந்த்ரே என் பிரன்தே அ லா புஅர்தா.)


I will be there around 3 pm------Yo estaré allí a las 3 pm ( யோ எஸ்தாரே அயி அ லாஸ் திரேஸ்(3) பிஎம்மே)
I wasn't there for the past 2 year-------------Yo no estaba allí durante los últimos dos años.( யோ நோ எஸ்தாபா அயி துரந்தே லோஸ் அல்திமோஸ் தோஸ் அன்யோஸ்.)
Within this week I'll finish my work.------- Dentro de esta semana voy a terminar mi trabajo.(தேன்த்ரோ தே எஸ்தா செமானா வோய் அ தெர்மினார் மி திரபாஹோ)
During the class I can't see you.---Durante la clase no te puedo ver.(துராந்தே லா கிளாசே நோ தே புயதோ வெர்)
I usually go to school by bus.---- Yo suelo ir a la escuela en autobús.(யோ சுயலோ இர் அ லா எஸ்குஅலா என் ஆட்டோ பூஸ்)

The flower is in the garden - La flor está en el jardín ( லா ஃப்ளோர் எஸ்தா என் எல் ஹார்தின் )
in the morning--------por la mañana( போர் லா மன்யானா)
in the afternoon------por la tarde(போர் லா தார்தே)
in the evening -------por la noche(போர் லா நோச்சே)
in a box - en una caja( என் உன காஹா)
in India- en la India(என் லா இந்தியா)
in Germany - en Alemania(என் அல்மேனியா)

in my shirt pocket - en mi bolsillo de la camisa( என் மி போல்சீயோ தே லா கமிசா)
in the wallet - en la cartera -( என் லா கர்தேரா)
in a building - en un edificio(என் உன் எடிஃபீசியோ)
He is in the aeroplane- Él está en el avión .(எல் எஸ்தா என் எல் அவியோன்)

in --en el (ஆண்பாலிற்கு), en la(பெண்பாலிற்கு)




இடங்களை குறிக்க, நேரத்தை குறிக்க, இன்னும் பல இடைச் சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. வரும் பதிவில் அவற்றை காணலாம்.

பாரதி
01-07-2011, 04:06 PM
தொடரும் பாடங்களுக்கு நன்றி மேஸ்ட்ரோ.
சில பாடங்களை இன்று பதிவிறக்கிக்கொண்டேன்.
அவ்வப்போது காண உதவியாக இருக்கும்.
தொடரும் பாடங்களுக்கு மிக்க நன்றி.

Nivas.T
01-07-2011, 04:17 PM
கொஞ்சமல்ல ரொம்பவே கடினமாக உணருகிறேன்

எழுதிவைத்து படித்தால்தான் பிடிபடும் போல

முயன்று பார்கிறேன் தொடருங்கள்

நாஞ்சில் த.க.ஜெய்
05-07-2011, 08:14 AM
மேஸ்ட்ரோ ,சாய் உன் எஸ்டூடிஎன்தே நாஞ்சில்.த.க.ஜெய் ..நீங்கள் கூறியுள்ள வார்த்தைகளை கொண்டு புதிய வார்த்தைகளை அமைப்பது கடினமாக உள்ளது ..ஒரு வார்த்தையுடன் வேறொரு வார்த்தை புணரும் போது வேறொரு வார்த்தை உருவாகிறது ..ஆனால் அந்த தனிப்பட்ட வார்த்தைகளை கொண்டு வேறு வார்த்தைகளை அமைக்க முடியவில்லை ..உதாரணத்திற்கு yo என்றால் I அது போல் soy என்றால் I am ....இதனை மனனம் தான் செய்ய வேண்டுமா அல்லது இது எவ்வாறு புணருகிறது என்று ஏதேனும் விதிமுறைகள் உண்டா மேஸ்ட்ரோ ...அது போல் i am staying at home .இதன் ஸ்பானிஸ் வார்த்தை me quedo en casa .இதனை estoy quedo en casa ...என்று எழுதலாமா ?...

பாரதி
05-07-2011, 03:03 PM
i am staying at home .இதன் ஸ்பானிஸ் வார்த்தை me quedo en casa .இதனை estoy quedo en casa ...என்று எழுதலாமா ?...

மேஸ்ட்ரோ estoy என்ற சொல்லை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்துவது என்று கூறி இருக்கிறாரே?

நாஞ்சில் த.க.ஜெய்
06-07-2011, 05:39 AM
தோழர் பாரதி அவர்களே உணர்வுகளை மட்டும் வெளிபடுத்த என்று மேஸ்ட்ரோ கூறவில்லை ...உதாரணதிற்கு I am at the door என்பதனை Estoy en la puerta மற்றும் I am at the building என்பதனை Estoy en la edificio என்று மேஸ்ட்ரோ கூறுகிறார் ..இதன் அடிப்படையில் தான் அவ்வாறு எழுதலாமோ என சந்தேகம் எழுப்பினேன் ...தொடர்ந்து கலந்துரையாடலாம் தோழர் பாரதி அவர்களே ...